Advertisment

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

புத்தம்புது செய்திகளை உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayodhya case, Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live

ayodhya case, Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live

Tamil Nadu news today live updates: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் டி20 போட்டி இன்று  தரம்சாலாவில் தொடங்குகிறது.  இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இந்த மூன்று இடம் டி20யில் விளையாட இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயாவின் பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஐ தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்ற விஸ்வேஸ்வரயா செப்டம்பர் 15, 1861 அன்று கர்நாடகாவில் முடேனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலை (பி.ஏ) படிப்பும், புனேவில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், செய்திகளுக்கு இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.

 

 

 

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள்,தங்கம்மற்றும் பெட்ரோல் போன்ற அன்றாட விலை நிலவரங்களை இங்கே காணலாம்.  



























Highlights

    22:15 (IST)15 Sep 2019

    4 படம் ஓடிவிட்டால் முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள் இன்றைய நடிகர்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ: 4 படம் ஓடிவிட்டால் முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள் இன்றைய நடிகர்கள். புற்றீசல் போல, நடிகர்கள் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அமித்ஷா இந்தி பேசும் மக்களை கவரும் வகையில்தான் இந்தியை ஆதரித்து பேசி உள்ளார் என்று கூறினார்.

    21:53 (IST)15 Sep 2019

    நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதி - அமைச்சர் செங்கோட்டையன்

    செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதி உறுதி என்று தெரிவித்தார்.

    21:31 (IST)15 Sep 2019

    கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். திமுகவின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது. திமுகவின் சாதனைக்கு டைடல் பார்க் ஒன்றே போதும். கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று கூறினார்.

    20:46 (IST)15 Sep 2019

    பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருடன் மநீம தலைவர் கமல் ஹாசன் சந்திப்பு

    மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர் “பேனர் கலாசாரத்தை ஒழியுங்கள். அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். அதற்கு மநீம துணை நிற்கும். பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது.” என்று கூறினார்.

    20:23 (IST)15 Sep 2019

    இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்: இந்தி குறித்த மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியதுபோல் உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கு தாய்மொழி இந்தி அல்ல; பிறகு எதற்காக இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    20:02 (IST)15 Sep 2019

    அமித்ஷாவின் குரலுக்கு எதிர்ப்பு; இது சிறுத்தைகள் கூட்டம் - திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசம்

    அமித்ஷாவின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை இந்த மாநாட்டிற்கு உள்ளது. மிரட்டிப் பார்க்கிறார்களா? இது சிறுத்தைகள் கூட்டம் என திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசம்.

    20:00 (IST)15 Sep 2019

    திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

    திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்: விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி; இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது என்று கூறினார்.

    19:27 (IST)15 Sep 2019

    நிபந்தனைகளுடன் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது  தமிழக அரசு - அமைச்சர் காமராஜ்

    செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்: நிபந்தனைகளுடன் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. விலையில்லா அரிசி வழங்க தடைவிதிக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு சராசரியாக அரிசியை தரவேண்டும். பழைய விலையிலேயே தமிழகத்திற்கு அரிசி வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    19:08 (IST)15 Sep 2019

    ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

    ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    18:04 (IST)15 Sep 2019

    வீட்டு விஷேசங்களில் மரக்கன்றுகளை வழங்கினால், நாடு சோலை வனமாகும் - முதல்வர் பழனிசாமி

    காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் முதலவர் பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம், ஜகி வாசுதேவ் பங்கேற்றனர். ஆண்மிக தலைவர் ஜகி வாசுதேவ் ஒருங்கிணைத்துவரும் காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அரசு தமிழகம் முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, பராமரித்து வருகிறது. காவிரி படுகையில் மண் அரிப்பை தடுக்க மரங்கள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வீட்டு விஷேசங்களில் மரக்கன்றுகளை வழங்கினால், நாடு சோலை வனமாகும் என்று கூறினார்.

    17:42 (IST)15 Sep 2019

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி தேசிய மொழி என அழைக்கவில்லை - கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான்

    கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் அனைத்து மொழிகளுமே முக்கியத்துவமானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி தேசிய மொழி என அழைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

    17:37 (IST)15 Sep 2019

    பாஜகவின் சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துள்ளது - ஜோதிராதித்யா சிந்தியா

    செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா: பாஜகவின் சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துள்ளது. அதே நேரத்தில் பாஜக அவர்களின் சித்தாந்த திட்டங்களை நிறைவேற்ற வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

    17:12 (IST)15 Sep 2019

    முதல் நாளில் எதிர்பார்த்ததைவிட் அதிக உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் - உதநிதி ஸ்டாலின்

    செய்தியாளர்களிளிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்: “நேற்று தொடங்கிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில், எதிர்பார்த்ததை விட அதிக உறுப்பினர்களை சேர்த்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

    16:34 (IST)15 Sep 2019

    கோதாவரி ஆற்றில் சோகம்:

    ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 60 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 60 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 27 பேரை மீட்பு படையினர் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 33 பேர் நீரில் மூழ்கினரா? என்ற கோணத்தில் தேசிய பேரிட மீட்புப் படையினர் 2 குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர்.

    நான்கு பேர்கள் மரணம் அடைந்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.  

    16:20 (IST)15 Sep 2019

    பிரியங்கா காந்தி கடும் கண்டனம்:

    தொழிலாளர் நலத் துறை  மத்திய இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார்  கூறிய கருத்துக்கு பிரியங்கா காந்தி தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். 

    அவர் கூறுகையில் ," உங்கள் ஆட்சி வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. உங்களின் தவறுதலான பொருளாதார கொள்கைகளினால் இளைங்கர்களுக்கான  வேலை வாய்ப்பு அழிந்து கொண்டிருக்கிறது. வாடா மாநில மக்களை குறை சொல்லி உண்மையை மறைக்க பார்க்காதீர்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.   

    16:13 (IST)15 Sep 2019

    இந்தியா தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கருத்து:

    இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்க வில்லை, வேலை வாய்ப்பு இல்லை என்ற வாதம்  தவறானது என்றும், மாறாக இருக்கும் வேலைகளுக்கு தேவையான திறமையை நார்த் இந்தியன் இளைஞர்கள் கொள்ளவில்லை என்று இந்தியாவின்  தொழிலாளர் நலத் துறை  மத்திய இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார் 

     

    15:53 (IST)15 Sep 2019

    நளினி சிறைக்கு திரும்புகிறார்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15 தேதி வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதால் இன்று மாலை மீண்டும் சிறைக்கு திரும்புகிறார். மகளின் திருமணத்திற்காக செப்டம்பர் 15 வரை பரோல் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.  இன்று மாலைக்குள் நளினியை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் தயாராகிவருகிறார்கள்.

    15:49 (IST)15 Sep 2019

    2,050 தடவை எல்லை அத்துமீறல் செய்துள்ளது பாகிஸ்தான்

    பாகிஸ்தான் இராணுவம் இந்த ஆண்டு மட்டும் 2,050 க்கும் மேற்பட்ட தடவை எல்லையில் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளதாகவும் , இதனால் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.   2003 ல் போடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் கடைபிடித்தால் மட்டுமே எல்லையில்  அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளது 

    15:39 (IST)15 Sep 2019

    பேனர் வழக்கு: கவுன்சிலர் ஜெயகோபால் மீது எஃப்.ஐ.ஆர்

    செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பேனர்  விழுந்ததை அடுத்து 22 வயது சுபாஷ்ரீ மரணம் அடைந்தார். இந்த நிலையில், பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை சென்னை போலீசார் எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது .  

    14:29 (IST)15 Sep 2019

    ஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு

    ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.460-ல் இருந்து ரூ.495 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவின் நெய் ஒரு லிட்டர் ரூ.35 உயர்வு கண்டுள்ளது. ஆவின் வெண்ணெய் அரை கிலோ ரூ.230-ல் இருந்து ரூ.240 ஆக உயர்வு கண்டுள்ளது. ஆவின் தயிர் 1 லிட்டர் ரூ.25-ல் இருந்து ரூ.27 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் பால்கோவா கிலோவுக்கு ரூ.20 உயர்வு கண்டுள்ளது

    13:57 (IST)15 Sep 2019

    5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும்

    5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்த நிகழ்வு, உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    13:05 (IST)15 Sep 2019

    5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்பபெற வேண்டும் – ஸ்டாலின்

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேணடும் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த பொதுத்தேர்வால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள். கல்வி இடைநிற்றல் நிகழ வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    12:13 (IST)15 Sep 2019

    ஒரே நாடு, ஒரே மொழி திட்டம் இந்தியாவை துண்டாக்க வழிவகுக்கும் – திருமாவளவன்

    ஒரே நாடு, ஒரே மொழி என்பதெல்லாம் பாஜகவின் நீண்ட நாளைய கனவு. இது இந்தியாவை துண்டாக்க வழிவகுக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    அடித்தட்டு, ஏழை எளிய மக்களுக்கு கல்வி சென்று சேர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    11:42 (IST)15 Sep 2019

    பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் உதயகுமார்

    பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது,  புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

    10:29 (IST)15 Sep 2019

    மறைமலை அடிகள் சீமான் ட்வீட்

    புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தவர் மறைமலை அடிகள். சிறப்பாக தனிதமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். அன்னாரின் நினைவு நாள் இன்று தமிழக மக்களால் நினைவு கூறப்படுகிறது.  அன்னாரின், நினைவு நாளையடுத்து சீமான் இவ்வாறாக ட்வீட் செய்துள்ளார்.   

    10:18 (IST)15 Sep 2019

    மதிமுக மாநாட்டில் உரையாற்றி வருகிறார் ஸ்டாலின்

    அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதிமுக வின் சிறப்பு மாநாடு நடந்து வருகிறது . இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட ஸ்டாலின்," ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வைகோ  பக்க பலமாய் இருந்து வருகிறார்" என்று தெரிவித்தார். 

    10:12 (IST)15 Sep 2019

    தமிழக அரசு சார்பில் பேறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்கள். இன்று தமிழகம் முழுவதும் மாலையில்  சிறப்பு பொதுக் கூட்டம் நடத்தி அண்ணாவின் வரலாறுகளையும், தற்போதைய அரசின் சாதனைகளையும் விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.    

    10:02 (IST)15 Sep 2019

    ஏடிஎஸ்பி இளங்கோ பதில்:

    காவல்துறையில் சிறப்பாக பணி யாற்றுபவர்களுக்கு ஆண்டுத் தோறும் அண்ணா விருது வழங்குவது வழக்கம். அதே போல், இந்த வருட அண்ணா விருதில் இளங்கோ வும் இடம் பெற்றுள்ளார். இவர், ராமநாதபுர மாவட்டக் கடலோர பாதுகாப்புக் குழும  ஏ.டி.எஸ்.பி யாக பணி ஆற்றுகிறார். இளங்கோ ACR அறிக்கையில் திறமையற்ற அதிகாரி என்று பெயர் வாங்கியுள்ளதாகவும், அவருக்கு அண்ணா விருது வழங்குவது தனக்கு வியப்பாகவும் உள்ளது என்று சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், என்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் எனது விருதைப்  எதிர்க்கிறார் பொன்.மாணிக்கவேல் என்று செய்தியாளர்களிடம் தற்போது தெரிவித்துள்ளார்.  

    09:45 (IST)15 Sep 2019

    10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மாற்றம் - ஆசிரியர்கள் எதிர்ப்பு

    10,  11, 12 -ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு மொழிப்பாடங்களில் இருந்த இரண்டு தாள்கள் ஒரே தேர்வாக மாற்றி அமைத்திருந்தது தமிழக அரசு.  இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் தாக்கத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. மொழித்தாழ்களின் முக்கியத்துவத்தை குறைப்பதாகவும், வாழ்க்கைமுறைக் கல்வி மறைந்து போவதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்படுகின்றன. 

    09:32 (IST)15 Sep 2019

    முப்பெரும் விழா நடத்தும் விஜயகாந்த்

    தேசிய முற்போக்கு திராவிட கழகம்  ஆரம்பித்து  15வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு முப்பெரும் விழா இன்று திருப்பூர் காங்கேயம் சாலையில் சிறப்பாக நடை பெற இருக்கிறது. இதற்காக, திருப்பூர் சென்ற விஜயகாந்திற்கு தொண்டர்கள் வழிநெடுகிலும்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

    09:23 (IST)15 Sep 2019

    அண்ணா பிறந்த நாள்:

    பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை அடுத்து திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின்அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   

    08:57 (IST)15 Sep 2019

    நடிகர் விவேக் பாராட்டு

    பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவு பற்றிய விழிப்புணர்வை ஏறப்படுத்துவதற்காக சென்னைத் தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழா நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று நடிகர் விவேக் அவ்விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

    08:45 (IST)15 Sep 2019

    நரேந்திர மோடி வாழ்த்து

    விடாமுயற்சி மற்றும் உறுதி என்ற வார்த்தையின் அர்த்தமாக பொறியாளர்கள் திகழ்கிறார்கள். அவர்களின் அறிவு பசியால் தான் மனித வளர்ச்சி முழுமையைத் தேட முடியும் . இந்நாளில் அனைத்து பொறியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu news today live updates: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புப் பலனை நுகர்வோருக்கு வழங்கவது குறித்து  வரும் 19ம் தேதி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்திக்க விருப்பதாகவும், வங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.

    ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில்  அல்கொய்தா வாரிசும் ஒசாமா பின்லேடனின் மகனுமான ஹம்சா பின்லேடன் அமெரிக்காவின் தாக்குதளால் இறந்தார் என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது .

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment