Advertisment

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 76.14க்கு விற்பனையாகிறது. அதே போன்று ஒரு லிட்டர் டீசல் ரூ. 70.20க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
\Modi-Xi Jinping Mamallapuram summit, Day 2

Tamil Nadu news today live updates : இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  சென்னையின் மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, நந்தனம், டிநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் சிறிது நாட்களே இருக்கின்ற நிலையில், சாக்கடை கழிவுகள் தேங்குவதை தடுக்க, பள்ளங்களில் நீர் சேர்வதை தடுக்க மாநகராட்சி பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

சீன அதிபர் வருகை

முறைசாரா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த சீன அதிபர் இரண்டு நாட்கள் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தன்னுடைய நேரத்தை செலவு செய்தார். பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சீனாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு வருடத்துக்குள் அவர் நிச்சயமாக சீனா செல்ல வாய்ப்புகள் உள்ளது. சீனா பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க : தீபாவளி சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு எப்போது ?

 மோடி - ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

Live Blog

Tamil Nadu news today live updates : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:43 (IST)13 Oct 2019

    முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள்; நானும் வந்து மக்களின் முன்பு நிற்கிறேன் மக்கள் யாரை முதல்வராக்குகிறார்கள் என்று பார்ப்போம் - முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

    20:47 (IST)13 Oct 2019

    மதுரையில் கனமழை

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று (அக்.,13) மாலையில் நல்ல மழை பெய்தது. மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    20:33 (IST)13 Oct 2019

    நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி

    வசந்தகுமாரின் பேராசையால்தான் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். நாங்குநேரி எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார். இதையடுத்து நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும் அதிமுக சார்பில் நாராயணனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    19:51 (IST)13 Oct 2019

    ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது – துணைமுதல்வர் பன்னீர்செல்வம்

    ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது; அவருக்கு யோகம் இல்லை கல்விக்காக தமிழகத்தை போல் எந்த மாநிலங்களிலும் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியதில்லை என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசார கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

    19:21 (IST)13 Oct 2019

    இன்ஸ்டாகிராமில் டிரம்ப்பை முந்திய மோடி

    இன்ஸ்டாகிராமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் டிரம்பை 14.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஒபாமாவை 24.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது.

    18:52 (IST)13 Oct 2019

    விலைவாசியை அரசு கட்டுப்படுத்தவில்லை – ஸ்டாலின்

    விக்கிரவாண்டிதொகுதி  திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சி தலைவர் ஸ்டாலின், பால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாகவும், மின் இணைப்பு கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார். 

    17:34 (IST)13 Oct 2019

    செம்மொழி ஆய்வு மைய நிதியை குறைத்தது ஏன்? – கே.எஸ்.அழகிரி

    செம்மொழி ஆய்வு மையத்திற்கு வழங்கும் நிதியை  மத்திய அரசு குறைத்தது ஏன்? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். மாமல்லபுரத்தில் நிகழ்ந்த இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வரவேற்பதாக  தெரிவித்துள்ள அவர் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் மத்திய அரசு தமிழகத்தையும், தமிழ் மக்களையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். 

    17:33 (IST)13 Oct 2019

    செம்மொழி ஆய்வு மைய நிதியை குறைத்தது ஏன்? – கே.எஸ்.அழகிரி

    செம்மொழி ஆய்வு மையத்திற்கு வழங்கும் நிதியை  மத்திய அரசு குறைத்தது ஏன்? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். மாமல்லபுரத்தில் நிகழ்ந்த இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வரவேற்பதாக  தெரிவித்துள்ள அவர் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் மத்திய அரசு தமிழகத்தையும், தமிழ் மக்களையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். 

    16:43 (IST)13 Oct 2019

    நீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

    நாமக்கல் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனம், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது. நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது தவிர கணக்கில் வராத 150 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி தாளாளர், இயக்குநர்கள் மற்றும் அவரது உறவினர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    16:40 (IST)13 Oct 2019

    ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் – பிரதமர் மோடி

    ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம். காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாள்தோறும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றன.  370வது பிரிவை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    15:44 (IST)13 Oct 2019

    இந்தியா அபார வெற்றி

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். 5 விக்கெட் இழப்பிற்கு 605 ரன்கள் என்ற இமாலய இலக்கை முதல் இன்னிங்க்ஸில்  நிர்ணயித்தது  இந்தியா அணி. பிறகு முதல் இன்னிங்க்ஸ் களம்இறங்கிய  தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு சுருண்டது . பாலோ ஆன் கொடுத்து தென்னாப்பிரிக்கா வை  மீண்டும் பேட்டிங் செய்ய இந்திய அணி பணித்தது . இன்று இரண்டாவது இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 189 ரன்கள் மட்டுமே சேர்த்தது . ஆட்ட நாயகன் விருதை விராத் கோலி தட்டி சென்றார். 

    15:20 (IST)13 Oct 2019

    மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம்

    பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதியில் தாய்லாந்தின் சுதாமத் ரக்சாத்தை வீழ்த்தி இந்தியாவின் மஞ்சு ராணி இறுதி போட்டிக்கு  தகுது பெற்றார். இன்று நடந்த இறுதி போட்டியில், ரஷிய வீராங்கனையை எதிர் கொண்டார். இந்த போட்டியில் 1-4 என்ற பயுள்ளிக் கணக்கில் ரஷ்யாவின் ஏக்தாரினாவிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். இதனால், தங்கப்பதக்கத்தை அடிப்பார்  என்று நம்பியிருந்த மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கத்தோடு போட்டியை விட்டு வெளியேறினார்.

    14:40 (IST)13 Oct 2019

    அமைச்சர் ஜெயகுமார் பதில்

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல்  வருவதை ஒட்டி திமுக, அதிமுக இடையில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் , எடப்பாடி பழனிசாமி மக்காளால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல, ஜெ.வின் மறைவால் , விபத்தாக முதல்வர் ஆனவர்.  மேலும்,  முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக போட்டியிட தயாரா ?  என்று கேள்வியையும் எழுப்பினார் ஸ்டாலின். இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கான  பிரச்சனைகளை சரி செய்யாமல் கோட்டை விட்டார் , இனி கோட்டை பக்கமே அவரால் வரமுடியாது  என்று தெரிவித்தார். 

    13:57 (IST)13 Oct 2019

    டிடிவி தினகரன் பதில்

    வரவிருக்கும் நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாமல் ஒதுங்கியது.  உட்கட்சி பூசலும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 'ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு சின்னங்களை மக்களிடம் கொண்டு போவதால், கட்சியின் ஸ்திரத்தன்மை குழைந்து போகின்றது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நிலையான அங்கிகாரம் கிடைத்தவுடன் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும்' என்று தெரிவித்துள்ளார்.

    13:10 (IST)13 Oct 2019

    டெங்கு காய்ச்சல் - பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை 

    சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நடத்திய ஆய்வில் -  தர்மபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை  ஆகிய மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு , குறிப்பாக அரசு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  சுற்றறிக்கை  அனுப்பியிருக்கிறது.  

    12:48 (IST)13 Oct 2019

    5 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை

    கோபிச்செட்டிபளையம் பகுதியில் நேற்று இரவு 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இரவில் பெய்த இந்த கனமழையால ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மொத்தமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் கிரீப்பள்ளம் ஓடை, தடப்பள்ளி வாய்க்கால்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    12:24 (IST)13 Oct 2019

    அனைத்து காவலர்களுக்கும் வாழ்த்துகளை கூறிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்

    முதல்வரிடம் வாழ்த்துகளைப் பெற்ற காவல் ஆணையர் விஸ்வநாதன், இந்த இரண்டு நாட்கள் அயராது பாடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் வாக்கி டாக்கி மூலம் வாழ்த்துகளை பதிவு செய்தார்.

    12:22 (IST)13 Oct 2019

    சிறப்பான பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை நேரில் அழைத்து வாழ்த்து

    பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பிற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் 11 மற்றும் 12 தேதிகளில் இருநாட்டு முறைசாரா மாநாட்டில் பங்கேற்றனர். இந்நிகழ்வு தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் செய்து முடித்தனர் அரசு அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. திரிபாதி, காஞ்சிபுர ஆட்சியர் பொன்னையா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோரை நேரில் அழைத்து வாழ்த்துகளை கூறினார் முதல்வர்.

    11:54 (IST)13 Oct 2019

    திமுகவில் இளம்பெண்கள் பாசறை

    திமுக இளைஞரணியில் புதிதாக உருவாகிறது இளம்பெண்கள் பாசறை. திமுக இளைஞரணி செயலாளராக முக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அந்த இளைஞரணியில் புதிதாக இளம் பெண்கள் பேரவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்கனவே இளம்பெண்கள் பாசறை இருப்பது குறிப்பிடத்தக்கது.

    11:26 (IST)13 Oct 2019

    தமிழ்நாட்டில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பை பின்பற்ற வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

    தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் தேதியில் இருந்து ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    11:07 (IST)13 Oct 2019

    இடைத்தேர்தல் பிரச்சாரம்

    இன்று விக்கிரவாண்டியில் முக ஸ்டாலினும், நாங்குநேரியில் முக ஸ்டாலினும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் ஹைலைட்ஸ் இதோ உங்களுக்காக 

    10:55 (IST)13 Oct 2019

    பள்ளி மாணவர்களுக்கு டெங்கு

    சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு.

    10:26 (IST)13 Oct 2019

    பவானி ஆற்றில் வெள்ளம்

    பவானி சாகர் அணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தால் ஈரோட்டின் கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    10:20 (IST)13 Oct 2019

    கள்ள நோட்டு அச்சிட்டவர்கள் கோவையில் கைது

    கோவையின் இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    10:20 (IST)13 Oct 2019

    பெங்களூரு விரைந்த தமிழக காவல்துறை

    திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் கோர்டில் ஆஜரானார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு செய்திருப்பதால் கர்நாடகாவிற்கு செல்கிறது தனிப்படை.

    10:20 (IST)13 Oct 2019

    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

    தமிழகத்தின் வடக்கு கடற்கரை மாவட்டங்களுக்கு மழையைத் தரும் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் துவங்க இருப்பதால் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார். மேலும் 4399 பகுதிகள் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    09:44 (IST)13 Oct 2019

    தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் எப்போது வெளியீடு?

    தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வருகின்ற நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்யவதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    09:18 (IST)13 Oct 2019

    இமயமலை செல்கிறார் ரஜினி

    ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்று இமயமலை செல்கிறார் ரஜினி காந்த். கேதர் நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களில் தங்க திட்டுமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை உத்திரகாண்ட் டெராடூன் சென்ற அவர் அங்கிருந்து காரில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்.

    09:15 (IST)13 Oct 2019

    ஜம்மு காஷ்மீரில் து<ப்பாக்கிச் சூடு

    ஜம்மு காஷ்மீரின் ஹிரா நகர் அருகே மக்கள் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி உள்நுழைந்து துப்பாக்கிச் சூடு செய்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    Tamil Nadu news today live updates : Bigil trailer  இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை சுமார் 1.4 மில்லியன் மக்கள் அந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர்.  வெறித்தனம் காட்டிய பிகில் ட்ரெய்லர்

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 95.70 அடியாக உள்ளது. நீர் இருப்பு 25.4 டி.எம்.சி மற்றும் நீர் வரத்து 3466 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2300 கன அடியாக உள்ளது. பவானி சாகர் அணையின் பாசனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது.

    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment