Advertisment

Tamil Nadu news updates : அமித் ஷாவை கண்டு திமுக பயப்படுகிறது - அமைச்சர் பாண்டியராஜன்

Tamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news updates : தமிழகத்தில், 30 ஆயிரம் நீர்நிலைகளை மேம்படுத்த, முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நீர்நிலைகளை துார்வாரி, கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளை செய்வதற்காக, 1,250 கோடி ரூபாயை ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 21 ஆயிரத்து, 609 சிறு பாசன ஏரிகள்; 48 ஆயிரத்து, 758 குட்டைகள் மற்றும் ஊரணிகள் உள்ளன.முதல்வர் அறிவித்த திட்டத்தில், முதல் கட்டமாக, 5,000 சிறு பாசன ஏரிகள்; 25 ஆயிரம் குட்டைகள் மற்றும் ஊரணிகளை, மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.நீர்நிலைகளை தேர்வு செய்ய, மாவட்ட கலெக்டர் தலை மையில் குழு அமைக்கப் படும். இக்குழுவில் திட்ட இயக்குனர், ஒருங்கிணைப் பாளராக செயல்படுவார்.

Advertisment

தமிழகத்தின் பலபகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

இந்திய ராணுவ வலிமையின் சின்னமாக, கார்கில் போர் வெற்றி உள்ளது,'' சில நாடுகள், நேரடியாக போரிட தைரியம் இல்லமல், பயங்கரவாதம் என்ற பெயரில், மறை முக போரில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு எதிராக,உலக நாடுகள்,ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்துள்ளது.இந்தியராணுவத்தின் வலிமைக்கான சின்னமாக, கார்கில் போர் வெற்றி திகழ்கிறது. இது, நமது ராணுவ வீரர்களின் தியாகம், உறுதிக்கு கிடைத்த வெற்றி.கார்கில் வெற்றி, ஒட்டு மொத்த தேசத்துக்கும், பெரும் ஊக்க சக்தியாக அமைந்தது. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த வெற்றி என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு : நெடுந்தீவு அருகே அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டியதாக கூறி கைது செய்த மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமில் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.



























Highlights

    17:54 (IST)28 Jul 2019

    அமித் ஷாவை கண்டு திமுக பயப்படுகிறது – அமைச்சர் பாண்டியராஜன்

    எந்த வழக்கு எங்கே பாயும் என்கிற பயத்தில் உள்ள தி.மு.க.  தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது என்று வேலூரில்  பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறினார்.

    15:56 (IST)28 Jul 2019

    சென்னை – சேலம் ரயில் இன்றும், நாளையும் ரத்து

    இன்று (28ம் தேதி)  இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் ரத்து.

    நாளை (29ம் தேதி) இரவு 9.20 மணிக்கு புறப்படும் சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15:07 (IST)28 Jul 2019

    சபாநாயகரின் முடிவை நான் வரவேற்கிறேன் - சித்தராமையா

    பதவி மற்றும் அதிகாரம் என்பது என்றும் நிலையானது கிடையாது. சபாநாயகரின் இன்றைய தீர்ப்பு சந்தர்ப்ப அரசியல்வாதிகளுக்கு ஒரு சம்மட்டி அடி, சபாநாயகரின் முடிவை நான் வரவேற்கிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    14:19 (IST)28 Jul 2019

    அத்திவரதர் தரிசனம் – ஆகஸ்ட் 1 முதல் புதிய நடைமுறை

    காஞ்சிபுரத்தில் மதியம் 1 மணி வரை அத்திவரதரை 1.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் . இன்று (ஜூலை 28ம் தேதி)  அத்திவரதரை தரிசிக்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 33 பக்தர்கள் மயக்கமடைந்தனர் ஆகஸ்ட் 1 முதல் 20,000 பக்தர்களை நிறுத்தி வைத்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

    13:57 (IST)28 Jul 2019

    வடபழனி பேருந்து பணிமனை விபத்து : டிரைவர் மீது வழக்குப்பதிவு

    சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து, பணிமனை ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பணியின்போது அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    13:20 (IST)28 Jul 2019

    அத்திவரதர் தரிசனம் – கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம்

    காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்ததால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது. . அவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    12:48 (IST)28 Jul 2019

    கர்நாடகா : 14 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி

    கர்நாடகாவில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நிகழ்வு அடுத்தடுத்து அரங்கேறி வருவதால், அங்கு அர்சியல் பரபரப்பு நிலவி வருகிறது.  காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 11 பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 3 பேர் என  14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஏற்கனவே, 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் 2023 மே 15 வரை தேர்தலில் போட்டியிட முடியாது . நாளை பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

    12:24 (IST)28 Jul 2019

    புதிய கல்விக்கொள்கையால் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு - திருச்சி சிவா

    புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தான் பாதிக்கப்படுவர். புதிய தேசிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வராமல் இருக்க எல்லா முயற்சியையும் மேற்கொள்வோம் என்று திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

    12:03 (IST)28 Jul 2019

    Mann ki baat : வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மத்திய அரசு உதவி – மோடி

    இந்தியாவின் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு போதுமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக, பிரதமர் மோடி, மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

    11:34 (IST)28 Jul 2019

    Mann ki baat : சந்திராயன் 2 - ஒட்டுமொத்த இந்தியர்களின் வெற்றி

    சந்திராயன் 2, ஒட்டுமொத்த இந்தியர்களின் வெற்றி. இதன் மூலம், அனுப்பப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர், நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் நாளுக்காக, ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி , மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

    11:24 (IST)28 Jul 2019

    Mann ki baat : மேகாலயா, ஹரியானா மக்களுக்கு பாராட்டு

    புதிதாக நீர்க்கொள்கை வகுத்த மேகாலயா அரசுக்கும், குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்து சாதித்த ஹரியானா விவசாயிகளுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

    11:15 (IST)28 Jul 2019

    Mann ki baat : நீர் பாதுகாப்பை வலியுறுத்தி பின்பற்றுங்கள் : மோடி வேண்டுகோள்

    இந்தியாவில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்களில், நீர் பாதுகாப்பு குறித்த விசயத்தை நாம் ஏன் பேசுபொருளாக வைப்பதில்லை. நீர் பாதுகாப்பை, மக்களாகிய நாம் மக்களுக்கு வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது, அதை பின்பற்றவும் செய்யவேண்டும் என்று மான் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    10:50 (IST)28 Jul 2019

    சென்னை பேருந்து பணிமனையில் விபத்து - 2 ஊழியர்கள் பலி

    சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து, பணிமனை ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    வேலைநிறுத்தம் : வடபழனி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பேருந்துகள் தரமாக இல்லை என எதிர்ப்பு தெரிவித்து, பணிமனை ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    10:30 (IST)28 Jul 2019

    இன்று 11 மணிக்கு பிரதமர் மோடியின் மான் கி பாத் உரை

    பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் ( மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ரேடியோவின் மூலம் மக்களுடன் பேசிவருகிறார். அந்த வகையில், இன்று அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. 

    10:29 (IST)28 Jul 2019

    நீல நிற பட்டாடையில் அத்திவரதர்

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் இன்று( ஜூலை 28) இளம் நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார். 27 ஆம் நாளாpublive-imageன நேற்று அத்திவரதரை சுமார் 2.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று சுவாமியை தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    10:27 (IST)28 Jul 2019

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.96 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.90 காசுகளாகவும் உள்ளது. 

    Tamil Nadu Assembly Latest News Updates: காங். தலைமையிலான குஜராத் சட்டசபை 1993 ஜனவரி 6ல் 12மணி நேரம் 8 நிமிடங்களுக்கு கூடி விவாதம் நடத்தியது. இந்த சாதனையை பா.ஜ. தலைமையிலான குஜராத் சட்டசபை முறியடித்துள்ளது.நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு குஜராத் சட்டசபை கூட்டம் துவங்கி நேற்று அதிகாலை 12:09 மணிக்கு நிறைவடைந்தது. ஒரே நாளில் இடைவேளை நேரங்களை கழித்து 12மணி நேரம்9 நிமிடங்களுக்கு கூடி குஜராத் சட்டசபை புதிய சாதனை படைத்துள்ளது. இதற்காக உறுப்பினர்கள் அனைவரையும் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி பாராட்டினார்.
    Tamil Nadu Rain In Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment