Tamil Nadu news today live updates Chennai weather : தமிழகம் மற்றும் புதுவையின் கடற்கரையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தஞ்சை, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் போக்குவரத்து பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. 15 நாட்கள் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.
விண்ணை முட்டிய வெங்காய விலை
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, Tamil Nadu politics, traffic, rain updates இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
Tamil Nadu news today updates : டி20 கிரிக்கெட் போட்டி : இந்தியா 2Vs வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளுக்கு மேற்கிந்திய தீவு அணியில் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறார். முதல் போட்டி வருகிற 6ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது போட்டி மும்பையில் 11ம் தேதி நடைபெற உள்ள்ளது.
சென்னையின் நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், பாண்டி பஜார், தேனாம்பேட்டை , அண்ணாசாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடவுள்களுக்கு பவர் இருப்பது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. ரஜினியின் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை. அரசியலுக்கு வந்தால் கொள்கையை விட்டுத் தரக் கூடாது என ரஜினியிடம் கூறியிருக்கிறேன். நான் இந்த மேடையில் நிற்பது சூப்பர் ச்டாருக்காக அல்ல. சூப்பர் மனிதனுக்காக என்று வேலூர் ரஜினி மக்கள் மன்ற நலத்திட்டம் வழங்கும் விழாவில் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த தேசிய மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தகவல்
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருந்த சாத் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை அதிபர் கூறுவது ஏமாற்றுவேலை, இலங்கைக்கு நிதி அளிக்கும் பிரதமர் மோடியின் செயல் கண்டிக்கத்தக்கது – வைகோ
உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தலைமையிலான அணி தயாராக உள்ளது, ஆளும் அரசுதான் வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் இருக்கிறது
பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – டிசம்பர் 2-ம் தேதி விசாரணை
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில், ராணுவ வீரர்கள் 2 பேர் சிக்கித் தவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர், 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். கடந்த வாரம் நிகழ்ந்த பனி சரிவில் சிக்கி 4 வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வீராணம் ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5650 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 350 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளான வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, கல்யாணிபட்டி போன்ற ஊர்களில் மல்லிகை பூ விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை மாத முகூர்த்த நாள் என்பதால், ஒரு கிலோ மல்லிகைப்பூ 3000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இதேபோல் திண்டுக்கல் பூ சந்தையிலும் ஒரு கிலோ மல்லிகைப்பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
தொழில்துறையினரின் குறைகளை தீர்ப்பதற்கான ‘தொழில் நண்பன்’ என்ற இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி
புட்வேர் துறையில் ரூ.175 கோடி முதலீட்டில் 3ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் க்ரோத் லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
கட்டுமான கருவிகள் உற்பத்தி துறையில் ரூ.98 கோடி மதிப்பில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எஸ்என்எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.503.6 கோடி மதிப்பில் 330 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மிட்சுபா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எரிசக்தி உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.250 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.604 கோடியில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பிஒய்டி இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
வெளிநாட்டு பயணத்தின்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 3 அமெரிக்க நிறுவனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பேப்பர் போர்டு உற்பத்தியில் ரூ.515 கோடியில், 250 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஐடிசி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னையில் நடைபெற்று வரும் முதலீடு மற்றும் தொழில் திறன் மேம்பாடு மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.2,892 கோடி மூதலீட்டில், 19,771 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சென்னையில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 9 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
திருச்செங்கோட்டில் அரசுப்பள்ளிகளில் தேர்வு வினாத்தாள்களுக்காக மாணவர்களிடம் தலா 60 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை கண்டித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்ஸு ஆலோசனை
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது
500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை திமுக எதிர்க்கவில்லை, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும் – மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பெற்ற தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் 3 விருதுகள் வழங்கப்பட்டது
டெல்லியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்
பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா.
முன்னதாக ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நமீதா, தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
கடலூரில் கனமழை காரணமாக பெரிய பட்டு – பூச்சி மேடு இடையேயான தரைப்பாலம் உடைப்பு, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியா ஓய்வுபெற்றதை அடுத்து புதிய செயலாளராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய செயலாளரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் எஸ்.கே.பிரபாகரனை நேரில் சந்தித்து, டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பணிநிரந்தரம் கோரி குடிநீர் வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் பணிநிரந்தரம் கோர முடியாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டதால் அரசு ஆணை தனக்கு பொருந்தாது” எனக் குறிப்பிட்டுள்ளார். வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததன் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.
சத்ரபதி சிவாஜி பெயராலும், எனது பெற்றோர் பெயராலும் பதவியேற்றேன், இது தவறு என்றால் மீண்டும் இதையே செய்வேன் என மஹாராஷ்டிரா சட்டசபையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் திருவள்ளூரில் தனியார் ஹோட்டலில் மாநில பாஜக நிர்வாகிகளுடன், தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மகாராஷ்டிரா- நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 169 வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் தொடங்கிய நிலையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக உறுப்பினர் அமைதியாக இருக்குமாறு இடைக்கால சபாநாயகர் அறிவுறுத்தினார். சட்டப்பேரவை விதிகளின் படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டு.
சிறப்பு கூட்டத்தொடர் விதிகளின்படி கூட்டப்படவில்லை என தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு சுமத்தியதை தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா சட்டசபையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசி வருகிறார். ”இந்த சட்டசபை, விதிகளின் படி கூடவில்லை. அவைக்கு முன் தேசிய கீதம் கூட பாடப்படவில்லை . இது விதிக்கு முரணானது” என்றார் பட்னாவிஸ்
ஜனநாயகத்தின் மாண்பையும் மாநிலத்தின் நலன்களையும் பாதுகாப்பதற்கான புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது மராட்டிய உறவு என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
போக்குவரத்துத்துறை ஆணையராக ஜவஹர் ஐஏஎஸ்., பொள்ளாச்சி துணை ஆட்சியராக வைத்தியநாதன் ஐஏஎஸ்., உள்துறை துணை செயலராக ரவிசந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் உத்தவ் மரியாதை செலுத்தினார்
தமிழகத்தில் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளில் முதன்மைச் செயலாளராக இருந்தவர். பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர்.
இன்று பிற்பகல் 2 மணி அளவில் மராட்டிய சட்டமன்றம் கூடுகிறது. அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகராக இருக்கும் என்சிபி-யின் எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் முன்னிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நாங்கள் எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மூன்று சதங்கள் அடித்து சாதனை
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 27.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினரின் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தி வந்தனர். சோதனை முடிவில் ரூ. 79 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுதும், ரூ. 440 கோடி மதிப்பிலான போலி ரசீதுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோய் தொற்றுள்ளவர்களுக்கு சம உரிமை அளித்து அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இறந்து போனவர்கள் எத்தனை பேர் என கேள்வி எழுப்பியுள்ளது மனித உரிமை ஆணையம். தமிழக மருத்துவ கல்வி இயக்குநர், மனநல காப்பக இயக்குநர் ஆகியோர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி அலுவலகம் திறப்பதற்காக சென்னை வந்துள்ளார் பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா. அவர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி
மகாராஷ்ட்ரா – விஞ்சூர் அருகே அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தில் இருந்து ஜீப் கீழே உள்ள ஆற்றில் விழுந்து விபத்து. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராச்ட்ராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து துணை முதல்வராக தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவரும், சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரும் பொறுப்பேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நானா படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்காயம் வாங்கிச் சென்றனர். தகராறு ஏற்படாமல் தடுக்கும் வண்ணத்தில் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயம் விற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்ற காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டு இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகின்ற நிலையில் பாஜக தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளையும், இந்தியாவில் அவர்கள் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்தும் ட்வீட் செய்து வருகின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பிற்காக தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.