Advertisment

Tamil Nadu News today updates : 2020ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு அட்டவணை வெளியீடு

Chennai Petrol Diesel Price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 16 பைசாக்கள் அதிகரித்து ரூ. 70.13க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News today updates : 2020ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு அட்டவணை வெளியீடு

Tamil Nadu Breaking News today updates : இந்தியா முழுவதும் நாடு தழுவிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கும் எதிராக தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுவரை குடிமக்கள் பதிவேட்டிற்கு 11 மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

Advertisment

Indian Premier League

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள், தங்கள் அணிக்கான வீரர்களை ஏலத்தில் எடுப்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும். நேற்று கிரிக்கெட் வீரர்கள் இந்த ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் எடுத்தனர். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க : IPL 2020 Auction: அதிக தொகைக்கு விலை போன பேட் கம்மின்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸின் ராஜதந்திரம்

 ஜார்கண்ட் தேர்தல்

81 சட்டமன்ற இடங்களை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டமாக நடைபெறும் தேர்தலில் ஏற்கனவே நான்கு கட்டங்களில் தேர்தல்கள் முடிவுற்றது. கடைசி மற்றும் இந்தாம் கட்ட தேர்தல் இன்று 16 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற 23ம் தேதி வெளியிடப்படும்.

தமிழகங்களில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்த ஒரு வீடியோ

Live Blog

tamil nadu news today updates TN politics, Chennai weather, Tamil News : இன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























21:05 (IST)20 Dec 2019










































2020ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில், 2020ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புக்கான திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனவரியில் குரூப்-1, மே மாதம் குரூப்-2, செப்டம்பரில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் அட்டவனையில் இடம்பெற்றுள்ளது.

20:25 (IST)20 Dec 2019










































இந்திய அரசு மீது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா? - நிர்மலா சீதாராமன் கேள்வி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: இந்திய அரசு மீது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா? உள்நாட்டு விவகாரத்தில் 3ஆம் நபரே சர்வதேச அமைப்போ தலையிட நாங்கள் விம்பவில்லை. முற்றிலும் உள்நாட்டைச் சேர்ந்த விவகாரத்திற்கு ஐ.நா. தலையிட வேண்டும் என்கிறார் மம்தா பானர்ஜி என்று கூறியுள்ளார்.

18:58 (IST)20 Dec 2019










































கனமழை

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

18:57 (IST)20 Dec 2019










































குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு

ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு - சோனியா காந்தி

போராடும் மக்கள் மீதான வன்முறைகளை அரசு கைவிட வேண்டும் - சோனியா காந்தி

18:16 (IST)20 Dec 2019










































பாஜகவால் மட்டும்தான் பாதுகாப்பு தர முடியும்

இஸ்லாமியர்களுக்கு பாஜகவால் மட்டும்தான் பாதுகாப்பு தர முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

18:04 (IST)20 Dec 2019










































4 பேர் விடுதலை

ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு : ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேர் விடுதலை - சென்னை சிறப்பு நீதிமன்றம்

18:04 (IST)20 Dec 2019










































ரோஜா பூக்கள் கொடுத்து அமைதி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் ஜாமியா பல்கலை. மாணவர்கள், காவலர்களுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து அமைதி பேரணி

17:34 (IST)20 Dec 2019










































நில அதிர்வு

டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது

17:33 (IST)20 Dec 2019










































குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2008இல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு

குற்றவாளிகள் முகமது சயீப், முகமது சர்வார் ஆஷ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமானுக்கு ஆகியோருக்கு தண்டனை விவரத்தை அறிவித்தது ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம்

17:23 (IST)20 Dec 2019










































பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

"குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்"

பரிந்துரைகளை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

17:22 (IST)20 Dec 2019










































வழக்கறிஞர்கள் உடனிருக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கும் வரை வழக்கறிஞர்கள் உடனிருக்க அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

17:21 (IST)20 Dec 2019










































27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது

"உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது"

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்.

மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

16:08 (IST)20 Dec 2019










































மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

16:00 (IST)20 Dec 2019










































பீகாரில் என்ஆர்சி அமல் இல்லை

பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு ( என்ஆர்சி) அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

15:46 (IST)20 Dec 2019










































போராட்டத்தின் பின்னணியில் திமுக – ஹெச்.ராஜா

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுக தூண்டிவருவதாக பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

14:37 (IST)20 Dec 2019










































மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17 பேர் பலி - சிவசுப்பிரமணியனுக்கு ஜாமின்

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, அதன் உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மறுஉத்தரவு வரும்வரை மதுரையில் தங்கி மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

14:30 (IST)20 Dec 2019










































குல்தீப் செங்காருக்கு அபராதத்துடன் ஆயுள் தண்டனை

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளியும், பா.ஜ., பிரமுகருமான குல்தீப் செங்காருக்கு, டில்லி தீஜ் அசாரி நீதிமன்றம் ரூ.25 லட்சம் அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

14:10 (IST)20 Dec 2019










































ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளைமுதல் ஜன.1 வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

12:24 (IST)20 Dec 2019










































திருமாவளவன் மீது வழக்கு

எம்.பி. திருமாவளவன், நடிகர் சித்தார்த், மற்றும் பாடகர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

11:48 (IST)20 Dec 2019










































நித்தியானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பிடதி ஆசிரமத்தில் முருகானந்தம் என்பவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய தாய் வழக்கு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

11:45 (IST)20 Dec 2019










































உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பொங்கல் பரிசு - இன்று மதியம் விசாராணை

27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசினை வழங்க வேண்டுமா என்று தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.

11:42 (IST)20 Dec 2019










































சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.48 அதிகரித்து, ரூ. 29,080க்கு விற்பனையாகி வருகிறது.

11:32 (IST)20 Dec 2019










































ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

அமெரிக்காவில் அமைந்திருக்கும் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

11:29 (IST)20 Dec 2019










































தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து

உரிய கல்வித்தகுதி இல்லை என்று கூறி பேராசியர் ரவீந்திரன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து அறிவித்தார்.

11:11 (IST)20 Dec 2019










































தூய காற்று திட்டத்தை செயல்படுத்துங்கள் - முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10:51 (IST)20 Dec 2019










































உயர் நீதிமன்றங்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டது. அவசர வழக்குகளை 27ம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும் டிசம்பர் 30ம் தேதிக்குள் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10:45 (IST)20 Dec 2019










































கோவையில் கடையடைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை பகுதிகளில் கடைகள் அடைப்பு

10:44 (IST)20 Dec 2019










































இயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி, அசாம்

டெல்லியில் நேற்று போராட்டங்கள் காரணமாக 19 மெட்ரோக்கள் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் மெட்ரோ சேவைகள் சீராக நடைபெற்று வருகிறது. அசாமில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் சீராக்கப்பட்டது.

10:42 (IST)20 Dec 2019










































நெல்லை மேலப்பாளையம் பகுதியில் கடையடைப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் உலமாக்கள் சபை சார்பாக ஒரு நாள் கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்த அந்த பகுதியில் இருக்கும் 800 ஆட்டோக்கள் மற்றும் வேன்கள் இயக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று உரையாற்ற உள்ளார்.

10:15 (IST)20 Dec 2019










































சி.ஏ.ஏவால் நம்முடைய மொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - அசாம் மாநில முதல்வர்

அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்றும் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் அசாம் மக்களின் அடையாளத்துக்கோ, மொழிக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் அறிவித்துள்ளார்.

10:01 (IST)20 Dec 2019










































சேலம் அருகே 3ம் நம்பர் லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 3ம் எண் லாட்டரி டிக்கெட்கள் விற்பனை செய்த 7 பேரிடம் இருந்து ரூ.67 ஆயிரம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தது காவல்துறை.

09:50 (IST)20 Dec 2019










































டெங்கு காய்ச்சலால் சிறுவன் மரணம்

மதுரை திருமங்கலம் அருகே மாசவநத்தம் என்ற பகுதி உள்ளது. அங்கே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கதிர்வேலன் உயிரிழந்துள்ளார்.

09:41 (IST)20 Dec 2019










































பெங்களூருவில் 35 வயதான பெண் நடத்துனர் மீது ஆசிட் வீச்சு

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் நடத்துனராக பணியாற்றும் பெண் ஒருவர் மீது 2 நபர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

09:18 (IST)20 Dec 2019










































தூத்துக்குடியில் 1007 நபர்கள் போட்டியின்றி தேர்வு - சந்தீப் நந்தூரி

நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவி உட்பட 1007 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு.

08:59 (IST)20 Dec 2019










































ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ரேசன் கார்டுகள்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான ரேசன் கார்டினை விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் வெறும் 6 மாநிலங்களில் மட்டுமே இந்த ரேசன் கார்ட்கள் வர உள்ளது. 

08:56 (IST)20 Dec 2019










































இறக்குமதி செய்யப்படும் வெங்காயம்

துருக்கியில் இருந்து 42,500 டன் வெங்காயம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. ஆரம்ப கட்டமாக அதில் 12,500 டன் வெங்காயம் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வார இறுதிக்குள் அந்த வெங்காயம் ஆந்திரா மற்றும் டெல்லி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

08:12 (IST)20 Dec 2019










































எஸ். ஜெய்சங்கர் கனடா பயணம்

கனடா சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந்நாட்டின் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ரான்கோயிஸ் பிலிப்பியையும், வர்த்தக அமைச்சர் மேரி உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.

08:08 (IST)20 Dec 2019










































ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் முன்பு செருப்புகளை வைத்து போராட்டம்

நேற்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐ.ஐ.எம். மாணவர்கள் கல்லூரி நுழைவாயிலின் முன்பு செருப்புகளை வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

08:03 (IST)20 Dec 2019










































பவானி சாகர் அணையின் நீர்மட்டம்

ஈரோடு பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாகும். நீர் இருப்பு 32.5 டி.எம்.சி. நீர்வரத்து 2142 கன அடியாகவும், வெளியேற்றம் 2200 கன அடியாகவும் உள்ளது.

tamil nadu news today updates : என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான சேவைகள் பாதிப்படைந்தது. 19 இண்டிகோ விமானங்கள் நேற்று தங்களின் சேவையை ரத்து செய்தது.  இது தொடர்பான முழுமையான செய்தியை படிக்க
Tamil Nadu India Jharkhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment