தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்

Petrol Diesel Price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ. 77.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.71.24. 

By: Oct 4, 2019, 7:23:45 AM

Tamil Nadu news today updates : திருச்சியில் இயங்கி வந்த பிரபலமான தங்க நகைக்கடையில் 1ம் தேதி 13 கோடி ரூபாய் பெருமானம் உள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தனிப்படை வைத்து தேடிவருகிறது. புதுக்கோட்டையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் லலிதா தங்க நகைக்கடை கொள்ளைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தற்போது காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை… தனிப்படை வைத்து தேடும் காவல்துறை

வராக நதியில் வெள்ளப்பெருக்கு :

தேனி சோத்துப்பாறை அணை தன்னுடைய முழுக்கொள்ளளாவை எட்டியதால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேனி வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரையருகே இருப்பவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு

சென்னை தாம்பரம் மெப்ஸ், ஐ.ஆர்.டி தரமணி, மாதவரம், பூந்தமல்லி பேருந்து மையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 23ம் தேதி முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.

Live Blog
Tamil Nadu News Today Updates : Chennai weather, Traffic, Train times, Petrol Diesel Price : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இந்த பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
22:25 (IST)03 Oct 2019
தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன் - கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பேசுகையில்: பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன். பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவது, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

22:01 (IST)03 Oct 2019
உயர் நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 முதல் அக்டோபர் 13 வரை தசரா பண்டிகை விடுமுறை

உயர் நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 முதல் அக்டோபர் 13 வரை தசரா பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகை விடுமுறையையொட்டி உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை 7 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

21:58 (IST)03 Oct 2019
விதிமீறல் பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

பேனர் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்: விதிமீறல் பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

21:14 (IST)03 Oct 2019
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியனம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

20:45 (IST)03 Oct 2019
சுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி கேட்கும் முதல்வர் - மு.க.ஸ்டாலின் வருத்தம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில: பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்கச் சென்றுள்ளார் முதல்வர்.பேனர் வைக்க காட்டும் வேகத்தையும், அக்கறையையும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.

20:15 (IST)03 Oct 2019
சட்டசபையில் யார் கேள்வி கேட்டாலும், கேள்வியையே பதிலாக தருபவர் புன்னகை மன்னன் செல்லூர் ராஜூ - துணை முதல்வர் ஓ.பி.எஸ்

செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இந்த உலகில் தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதிலும், அந்த தவரை செய்யாமல் இருப்பதே மிகவும் நேரமையான விஷயம். சட்டசபையில் யார் கேள்வி கேட்டாலும், கேள்வியையே பதிலாக தருபவர் புன்னகை மன்னன் செல்லூர் ராஜூ என்று தெரிவித்துள்ளார்.

19:46 (IST)03 Oct 2019
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், டி.என்.பி.எல் நம்பகத்தன்மையை காக்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது என்றும் அதன் செயலர் தெரிவித்துள்ளார்.

19:13 (IST)03 Oct 2019
பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது - கிரண்பேடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

18:19 (IST)03 Oct 2019
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வழக்கு விசாரணைக்காக டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது கவிஞர் வைரமுத்து ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து: “சிதம்பரத்தின் உடல் எடை குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை. சிதம்பரத்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

18:13 (IST)03 Oct 2019
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு

தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

17:42 (IST)03 Oct 2019
ஜே.என்.யு-வில் இந்திய மாணவர் சங்கம் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் இடையே மோதல்

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 370வது பிரிவு கருத்தரங்கம் நடைபெற்றபோது அகில இந்திய மாணவர் சங்கம் (ஏ.ஐ.எஸ்.ஏ) மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது.

17:14 (IST)03 Oct 2019
டிஜிட்டல் சக்ரா

காந்தியின் சொற்களை எவ்வாறு அடுத்த தலைமுரையினருக்கு எடுத்து செல்வது ? என்ற கேள்வுக்கு பதில் தேட  சிந்தனையாளர்களையும், தொழில்முனைவோரையும் , தொழில்நுட்பத் தலைவர்களையும் நான் அழைக்கின்றேன் என்று மகாத்மா காந்தி பற்றி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். 

மேலும், படிக்க இந்தியாவிற்கும், உலகத்திற்கும் காந்தி ஏன் தேவைப்படுகிறார்- நரேந்திர மோடி

அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று டிஜிட்டல் சக்ரா வெளியிட்டுள்ளார். இதன் மூலம், மத்திய அரசாங்க நிறுவனமான என்ஐசி நிர்வகிக்கும் அனைத்து வெப்சைட் களிலும் காந்தி குறித்த தகவல்களை, பொன்மொழிகளை வெளிபடுத்தவது தான்  இந்த டிஜிட்டல் சக்ரா

   

16:17 (IST)03 Oct 2019
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு:

வரும் அக்டோபர் 21 ம் தேதி நடக்க விருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடயுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்கள் இருப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மக்கள் நிதி மையம், அமமுக கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

15:47 (IST)03 Oct 2019
நீதிமன்ற காவல் - ஆனால் வீட்டு உணவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்.17 வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி உயர்நீதிமன்றம் . நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டிறிந்தாலும்  வீட்டு உணவை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.  இந்நிலையில் ஜாமீன்கேட்டு  உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார் ப.சிதம்பரம் . மனு மீதான விசாரணை குறித்து இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நாளை முடிவு செய்வார் என்று நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.     

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  கடந்த ஆகஸ்ட் 21 டெல்லி யில் உள்ள தனது இல்லத்தில் சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது .   

15:00 (IST)03 Oct 2019
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

கத்ரா ரயில் நிலையம் வழியாக ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்துடன் டெல்லியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் துவக்க விழாவில் பேசிய அமித் ஷா,  அடுத்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக விளங்கும்  என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 

14:47 (IST)03 Oct 2019
மயங்க் அகர்வால் - இரட்டை சதம்

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது . இந்த போட்டியில் முதல் செய்து வரும் இந்திய அணி 450 ரன்கள் எடுத்து ஐந்து விகெட்டுகளை இழந்துள்ளது. 

இதில், இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய  மயங்க் அகர்வால் 371 பந்துகளை எதிர்கொண்டு 215 ரன்களை விளாசினார். இதில் 23 பௌண்டரிகளும், ஆறு சிக்சர்களும் அடங்கும். இது  மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

14:09 (IST)03 Oct 2019
நீட் ஆள்மாறாட்டம் - ஸ்டாலின் கருத்து

தேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டறியபட்து. இதில்,  வடமாநிலத்தை சேர்ந்த ரஷ்வி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலம் போன்றோர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக தமிழக தனிப்படை கண்டறிந்துள்ளது.  இந்நிலையில், திமுக தலைவர் நீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிமாநில தரகர்களுக்கும்  இந்த முறைகேட்டில்  தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றுவதே சிறந்தது என்ற தனது கருத்தை தெரிவித்தார்.   

13:57 (IST)03 Oct 2019
மூத்த குடிமக்களுக்கான  சர்வதேச தினம்:

மூத்த குடிமக்களுக்கான  சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் டெல்லியில் ‘walkthan ’ நடைபெற்றது . இந் நிகழ்ச்சியை  மத்திய சமூக நீதி அமைச்சர்  தவர்சந்த் கெஹ்லோட் கொடியசைத்து துவங்கி வைத்தார்.  மூத்த குடிமக்களின் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் முதியோருக்கான கண்ணியத்தை சமூகத்தில் நிலைநாட்ட  இந்நிகழ்ச்சி முன்வருகிறது.    

12:58 (IST)03 Oct 2019
திறந்தவெளி கழிப்பிடம் இல்லா இந்தியா - தயாநிதிமாறன் வரவேற்பு

தூய்மை இந்தியா திட்டத்தின் நீட்சியாக இந்தியா முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமற்ற சூழலை உருவாக்கும் முயற்சியை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பினை வரவேற்று பேசினார் தயாநிதிமாறன். ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தயாநிதி மாறன்.

12:56 (IST)03 Oct 2019
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : மனுக்களை திரும்பப் பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் ரகுராமன் மற்றும் ராஜா என்ற சுயேட்சை வேட்பாளர்கள். இன்று தான் வேட்புமனுக்களை திரும்பப் பெற இறுதி நாள் என்பதால் அவ்விரு நபர்களும் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

12:46 (IST)03 Oct 2019
சீன அதிபர் ஜின்பிங் வருகையை ஒட்டி பேனர்கள் வைக்கலாம் - உயர் நீதிமன்றம் அனுமதி

சீன அதிபர் ஜின்பிங் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் வரையில் 16 இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி கோரி கொடுக்கப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. விதிமுறைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி. 

12:38 (IST)03 Oct 2019
டெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுமா?

மோடி மற்றும் ஜின்பிங் வருகையை ஒட்டி பேனர் வைப்பது தொடர்பாக வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர்கள் வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, பேனர் பிரிண்டர்ஸ் சங்கம் தரப்பு பதில் அளித்துள்ளது. தங்கள் பதிலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

12:08 (IST)03 Oct 2019
நீட் ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகர்கள் பெயர் அறிவிப்பு

தேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டறியபட்ட பின்பு நீட் நுழைவுத் தேர்வு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த ரஷ்வி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலம் போன்றோர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

12:05 (IST)03 Oct 2019
பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்காக பேனர்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவரும் அடுத்த வாரம் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது அவ்விரு நபர்களையும் வரவேற்கும் விதமாக பேனர் வைக்க அனுமதி தர வேண்டும் என மத்திய மாநில அரசு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் வரை பேனர்கள் வைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் வாதம்

11:58 (IST)03 Oct 2019
ஒரே நாடு கொள்கை எடுபடாது - நாராயணசாமி

பிரதமர் மோடியின் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்ற குறிக்கோள் ஒருபோதும் எடுபடாது என மதுரையில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு. காந்தி உயிரோடு இருந்திருந்தால் மோடியின் ஆட்சியை பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார் என்றும் பேச்சு.

11:47 (IST)03 Oct 2019
விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழு

விக்கிரவாண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட இருப்பதை முன்னிட்டு பணிக்குழு கூடுதல் மேற்பார்வையாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும்  தற்போதைய பொருளாளர் ஜெ.ராமச்சந்திரன் இருவரையும் நியமித்து அறிவித்துள்ள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

11:27 (IST)03 Oct 2019
தங்கம் விலை விபரம்

கடந்து சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை சவரனுக்கு தற்போது ரூ. 240 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3636க்கும், ஒரு சவரன் ரூ. 29 ஆயிரத்து 088க்கும் விற்பனையாகி வருகிறது.

11:25 (IST)03 Oct 2019
ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

11:22 (IST)03 Oct 2019
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியில் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. வருகின்ற 21ம் தேதி அன்று இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டது. விக்கிரவாண்டியில் 15 மனுக்களும், நாங்குநேரியில் 24 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வாபஸ் பெறுவதற்கு இன்று தான் இறுதி நாள். இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியில் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி அறிவிக்கப்படும்.

 

11:08 (IST)03 Oct 2019
டெல்லி ஜம்மு காஷ்மீருக்கு இடையே விரைவு ரயில் சேவை

டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரின் கட்ரா நகருக்கு இடையேயான ரயில் சேவையை துவங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த பாரத் விரைவு ரயில் சேவையை துவங்கி வைக்கும் விழாவில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் அருகில் இருந்தார்.

10:59 (IST)03 Oct 2019
ராதாபுரம் இடைத்தேர்தல் விவகாரம்

சென்னை உயர் நீதிமன்றம் ராதாபுரம் இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ண உத்தரவிடப்பட்ட நிலையில், ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் இருந்த தபால் வாக்குப் பெட்டிகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை வந்தது.

10:57 (IST)03 Oct 2019
குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் காவலில் சரண்

சிதம்பரம் பகுதியில் அமைந்திருக்கும் மிராளூரில் வசிப்பவர் சத்யவதி. குடும்பத்தகராறு காரணமாக தன்னுடைய மூன்று பெண்குழந்தைகளையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் தாயார் சரண் அடைந்துள்ளார்.

10:56 (IST)03 Oct 2019
பாதுகாப்பு வளையத்தில் டெல்லி

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருப்பதால் டெல்லியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

10:54 (IST)03 Oct 2019
புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வலுக்கும் சந்தேகம்

புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள் 6 பேருக்கும் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறை தகவல் அளித்தது. ஆனால் அவர்கள் மீது 8 வழக்குகள் உள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் கேரளாவில் வங்கி கொள்ளை ஒன்றில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை விசாரிக்க கேரளாவில் இருந்து காவல்துறையினர் விரைந்து வருகின்றனர்.

10:48 (IST)03 Oct 2019
நெல்லை கொள்ளை விவகாரம் - பிடிப்பட்ட கொள்ளையன்

நெல்லை தம்பதியினர் வீட்டில் நடைபெற கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கு முன்பு நெல்லையில், ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் முதியவர் ஒருவரை தாக்கி கொள்ளையில் ஈடுபட முயன்றார்கள். ஆனால் அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து கொள்ளையர்களை அடித்து துரத்தினர். தற்போது தனிப்படை காவல்துறையினர் அந்த கொள்ளையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:31 (IST)03 Oct 2019
இடைத்தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுவையில் காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளா நிலையில் வேட்பாளர்கள் தங்களின் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். புதுவை காமராஜர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் பிரவீனா தமிழ்வாணன் தன்னுடைய பிரச்சாரத்தை நேற்று ஆரம்பித்தார். தொகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து கேட்டார் அவர்.

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுடன் மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணி முறித்துக் கொள்ளப்பட்டதாக அவர் அறிவித்தார்.

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளார் நாராயணன் நேற்று களக்காடு பகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

10:26 (IST)03 Oct 2019
நடிகர் சங்க தேர்தல் மீதான வழக்கு

ஜூன் மாதம் 23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. விஷால், நடிகர் கார்த்தி, நாசர் ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்கியராஜ், ஐசரிக் கணேசம் ஆகியோர் அடங்கிய சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முடிவுகளை அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. பதிவான வாக்குகளை என்று எண்ணுவது தொடர்பாகவும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தொடர்பாகவும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:15 (IST)03 Oct 2019
எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அமைந்திருக்கும்  காங்கேசன் கடற்படை முகாமில் இலங்கை கடற்படையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

10:07 (IST)03 Oct 2019
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

இன்று மாலை 06:30 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

10:07 (IST)03 Oct 2019
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு

டெங்கு காய்ச்சல் தொடர்ந்து தமிழகத்தில் பரவி வரும் நிலையில் காய்ச்சல் அறிகுறியுடன் 4 பேரும், சாதாரண காய்ச்சலால் 60 பேரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

நவராத்திரி விழாவில் பங்கேற்ற மோடி

Tamil Nadu News Today Updates : குஜராத் மாநிலம் போர்பந்தரில் அமைந்திருந்த காந்தி நினைவிடத்திற்கு நேற்று சென்ற மோடி, பிறகு அகமதாபாத் நகரில் அமைந்திருக்கும் ஜி.எம்.டி.சி மைதானத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்று கர்பா ஆரத்தியில் கலந்து கொண்டார்.

Web Title:Tamil nadu news today live updates chennai weather tn politics vaigai river flood bihar flood pm narendra modi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X