Advertisment

News today updates : சமூக தளங்களில் பரவும் குமாரசாமியின் ராஜினாமா கடிதம் போலியானது - கர்நாடக முதல்வர் அலுவலகம்

Petrol Diesel Price in Chennai : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 76.18 ஆகும். டீசல் ரூ. 69.96க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest News today updates

Latest News today updates

Tamil Nadu news today live updates : காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. தமிழகம், கேரளம், மற்றும் கர்நாடகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 4,800 ஆயிரம் கன அடி நீரும், கபினியில் இருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

Advertisment

Chennai Rains

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை வரை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை, தேனி, நீலகிரி, மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நேற்று நல்ல கனமழை பெய்துள்ளது.  மேலும் படிக்க : இன்றைய வானிலை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை

Pro Kabaddi League

தற்போது நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்று தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி. 7வது ப்ரோ கபடி லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் 39க்கு 26 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ராகுல் சௌத்ரி 12 புள்ளிகளை குவித்தார். நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் குஜராத் ஃபார்ட்சூன் ஜெயிண்ட்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services, Cauvery Water, ISRO, Chandrayaan 2 launch - இந்தியா மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    21:28 (IST)22 Jul 2019

    குமாரசாமியின் ராஜினாமா கடிதம் போலி

    சமூக வலைதளங்களில் பரவிய குமாரசாமியின் ராஜினாமா கடிதம் போலியானது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    20:56 (IST)22 Jul 2019

    கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா?

    கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிட்டு, ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு குமாரசாமி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    20:46 (IST)22 Jul 2019

    தற்கொலை முயற்சிகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சிகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ஒரே நாளில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 8 பேர் கைதான நிலையில் ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    20:27 (IST)22 Jul 2019

    சயான் மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

    தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோடநாடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சயான் தொடர்ந்த மனுவுக்கு, 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    19:41 (IST)22 Jul 2019

    சார் ஆட்சியர் அலுவலகத்தில் நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் ஜப்தி

    திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

    வாணியம்பாடியை சேர்ந்த ஐதர் அலி(68) என்பவருக்கு சொந்தமான இடத்தை 1979 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக எடுத்த நிலத்தில் அவருக்கு தர வேண்டிய நிலுவை தொகை 54 ஆயிரத்தை பெற்றுத்தர தொடர்ந்த வழக்கில் வேலூர் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஜீப் மற்றும் நாற்காலி மின்விசிறி பீரோ உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து வாதியிடம் ஒப்படைக்குமாறு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முதல்கட்டமாக 20 நாற்காலிகள் மற்றும் 4 மின்விசிறிகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

    19:22 (IST)22 Jul 2019

    யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம் - அமைச்சர் ஜெயக்குமார்

    'புதிய மொழி கொள்கைக்கு நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, நடிகர்கள் ஆதரவு தெரிவித்திருக்க ஜனநாயகப்படி அவர்களுக்கு உரிமை உண்டு' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக நல்ல திட்டங்களை மட்டுமே ஏற்கும் என்றும், மக்கள் விரும்பாத திட்டங்களை ஏற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

    18:54 (IST)22 Jul 2019

    வெளியானது டாணா டீசர்

    யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், யோகிபாபு, நந்திதா ஆகியோர் நடித்திருக்கும் டாணா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்துக்கு முதலில் டாணா என்றே பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    18:25 (IST)22 Jul 2019

    மழைநீர் சேகரிப்பு குறித்து நீதிபதிகள் கேள்வி

    மழைநீர் சேகரிப்பு குறித்து தமிழக அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, தேங்கிய மழைநீர் வடிந்து விட்டதை ஆய்வு செய்ய என்னுடன் அதிகாரிகள் வருவார்களா ? என்றும், மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை ஏன் நியமிக்க கூடாது ? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    17:49 (IST)22 Jul 2019

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்கள் எனவும், சந்திரயான் 2 வெற்றி இளைஞர்களிடையே விண்வெளி ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை தூண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    17:40 (IST)22 Jul 2019

    வைகோ - சுப்பிரமணிய சாமி சந்திப்பு

    இந்தி எதிர்ப்புக் கருத்துக்களுக்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை  ரத்து செய்யுமாறு  இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்குக் கடிதம் எழுதினார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. இந்நிலையில் இன்று வைகோவும் சாமியும் சந்தித்துள்ளனர். 

    வைகோ - சுப்பிரமணிய சாமி சந்திப்பு
    வைகோ - சுப்பிரமணிய சாமி சந்திப்பு

    17:22 (IST)22 Jul 2019

    உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

    மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன?  எனவும், போதை நபர்களின் தொல்லைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனவும்,  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

    17:08 (IST)22 Jul 2019

    ஜெயலலிதாவின் சொத்து எவ்வளவு?

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன?  என்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    16:31 (IST)22 Jul 2019

    நீட் தேர்வை மாணவர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர்

    அரசியல் செய்வதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கெயில், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து வருகின்றனர் எனவும்,  நீட் தேர்வை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர், ஆனால் எதிர்க்கட்சியினர் நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்  என்றும்  தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்

    16:15 (IST)22 Jul 2019

    குடியரசுத் தலைவர் வாழ்த்து

    சந்திரயான்-2 வெற்றியின் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடைய வாழ்த்து என இஸ்ரோ குழுவினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    15:41 (IST)22 Jul 2019

    Chandrayaan 2: மோடி வாழ்த்து

    இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவினர். 48 நாட்களில் நிலவில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புராஜெக்ட்டில் பலரின் உழைப்பு அடங்கியுள்ளது. இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த அத்துனை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  அதோடு, சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம். நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள சந்திரயான்-2 தனித்தன்மை வாய்ந்தது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    15:16 (IST)22 Jul 2019

    டெல்லியில் அமித் ஷா - பன்னீர் செல்வம் சந்திப்பு

    இன்று காலை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக சந்தித்தாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    publive-image

    14:52 (IST)22 Jul 2019

    Chandrayaan 2 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2

    இஸ்ரோ தன்னுடைய சந்திரயான் 2வின் பயணத்தை தற்போது துவங்கி வைத்துள்ளது. 48 நாட்களில் இந்த ராக்கெட் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க

    14:26 (IST)22 Jul 2019

    Vellore Lok Sabha elections - 2019

    வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற 05ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.  மேலும் வேலூரில் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

    14:20 (IST)22 Jul 2019

    சந்திரயான் 2 - லைவ் டெலிகாஸ்ட் !

    இன்னும் சிறிது நேரத்தில் விண்ணில் பாய இருக்கும் சந்திரயான் 2 செயற்கைகோளை லைவ் டெலிகாஸ்ட்டில் பார்க்க 

    12:14 (IST)22 Jul 2019

    அத்தி வரதர்

    அத்தி வரதர் எழுந்தருளியுள்ள காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிவதால் பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர், மற்றும் பிஸ்கட் போன்றவைகளை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் முகாம்கள், மருத்துவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை குப்பைகள் சுத்தம் செய்யப்படுகிறது மற்றும் பக்தர்களுக்கு கூடுதலாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

    12:03 (IST)22 Jul 2019

    திருச்சி கொலை குற்றவாளிகள் ஆலங்குடியில் கைது

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பட்டாகத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இருவரை தனிப்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    11:52 (IST)22 Jul 2019

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் - குமாரசாமி

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என சபாநாயகரிடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    11:19 (IST)22 Jul 2019

    அத்தி வரதரை மீண்டும் குளத்துக்குள் வைக்க கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

    காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் எழுந்தருளியுள்ளார் அத்தி வரதர். 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் முடிவுற்றால் உடனே மீண்டும் அத்தி வரதர் சிலை குளத்திற்குள் வைக்கப்படும். திருப்பதி கோவிலுக்கு கிடைக்கும் புகழைப் போன்று அத்தி வரதரும் இந்தியா முழுவதும் போற்றப்படுவதால் அத்தி வரதரை மீண்டும் குளத்துக்குள் வைக்க கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்துள்ளார்.

    10:51 (IST)22 Jul 2019

    Karnataka Crisis

    கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.  அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உடனே தன்னை வந்து சந்திக்கும்  படி கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார். 

    10:16 (IST)22 Jul 2019

    பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியுள்ளது தமிழகம் - வைகோ

    தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பேச்சு. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி நதி அடியோடு பாழாகிவிடும் என்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம் மெதுவாக பாலைவனமாக மாறிவிடும் என்றும், அணுக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதன் மூலம் 100 அணு குண்டுகள் வெடிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    10:02 (IST)22 Jul 2019

    புதுச்சேரியில் சிறப்பு சட்டமன்ற கூட்டம்

    ஹைட்ரோ கார்பன், நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழி கொள்கையை கைவிடுதல் குறித்த பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி தீர்மானங்கள் இன்று புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றம்.

    09:53 (IST)22 Jul 2019

    மழை நீர் சேகரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட வேண்டும் - எஸ்.பி. வேலுமணி

    தென்கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட சென்னையில் அதிகமாக மழை பொழிவை தருகிறது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை தான் எப்போதும் சென்னைக்கான நீர் ஆதாரத்தை உருவாக்கும். இன்று எஸ்.பி. வேலுமணி மக்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே பொதுமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் ஒரு குழுவோ, அமைப்போ, அரசோ தனித்து நின்று மழைநீர் சேகரிப்பை முழுமையாக வெற்றி கரமாக செய்து முடிக்க இயலாது எனவே அனைவரும் இணைந்து மழைநீரை சேமிப்பது தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

    09:42 (IST)22 Jul 2019

    கோவை செய்திகள் : நகைகள் கொள்ளை

    கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ரமேஷ்குமார் என்பவரின் வீட்டில் 167 பவுன் நகை கொள்ளை. உறவினர்களை சந்திக்க கேரளா சென்ற போது திருடர்கள் கை வரிசை

    09:11 (IST)22 Jul 2019

    சந்திரயான் 2 - இன்று மதியம் 02:43க்கு விண்ணில் ஏவப்படுகிறது

    ஜூலை 15ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்ட சந்திரயான்  2 திட்டம் இன்று மீண்டும் விண்ணில் ஏவ தயாராகி வருகிறது. நேற்று மாலை 06:43 மணி அளவில் 20 மணி நேர கவுண்ட்டவுன் துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

    08:54 (IST)22 Jul 2019

    கர்நாடக அரசு : நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது ? (2/2)

    இன்று இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு குமாரசாமி அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்.

    08:50 (IST)22 Jul 2019

    கர்நாடக அரசு : நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது ? (1/2)

    ஜூலை 6ம் தேதி கர்நாடகாவின் 16 எம்.எல்.ஏக்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளித்தனர். அதனை தொடர்ந்து சபாநாயகர் விரைவில் முடிவெடுக்க வற்புறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 17ம் தேதி தீர்ப்பு வெளியிட்ட தலைமை நீதிபதி அமர்வு, சபாநாயகரை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கும்படி வற்புறுத்த இயலாது என்று கூறினார்.

    18-ம் தேதி முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீதான விவாதம், 19-ம் தேதி இரவு வரை தொடர்ந்தது. அமளிகள் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.  இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடுகிறது. இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Tamil Nadu news today updates : நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளாராக தமிழகத்தை  சேர்ந்த டி. ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கமும், கேரளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்வியை உறுதி செய்தன. நாடாளுமன்றத்தில் மக்களவையில் வெறும் 5 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் நால்வரும், கேரளத்தை சேர்ந்தவர் ஒருவரும் தான் இன்று இக்கட்சியின் பலமாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறது. இது போன்ற மிகவும் இக்கட்டான சூழலில் டி.ராஜா தலைமை பொறுப்பேற்றிருக்கிறார்.

    இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க : 

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment