Advertisment

Tamil Nadu News Today : விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்

TN Latest News Updates: தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கே காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today : விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்

Tamil News Today Live Updates: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்று உள்ளனர். 2 மருத்துவ நிபுணர்களும் உள்ளனர்.T

3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today : கொரோனா வைரஸ் அப்டேட் உட்பட தமிழகத்தின் முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இங்கே



























Highlights

    21:43 (IST)09 Jul 2020

    விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்

    விருத்தாசலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை தமிழரசன் உயிரிழந்தார்.

    21:25 (IST)09 Jul 2020

    தூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை

    தூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    20:24 (IST)09 Jul 2020

    கேரள தங்கக் கடத்தல்: என்.ஐ.ஏ. விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி

    கேரளாவில் தங்கக் கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசார்இக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    19:14 (IST)09 Jul 2020

    சென்னையில் இன்று 1,216 பேருக்கு கொரோனா; 2,700 பேர் டிஸ்சார்ஜ்

    சென்னையில் மட்டும் இன்று 1,216 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 2700 பேர் குணமடைந்தனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் 23 உயிரிழந்தனர்.

    18:33 (IST)09 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:04 (IST)09 Jul 2020

    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

    17:59 (IST)09 Jul 2020

    நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி; ரூ.5 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

    அண்மையில் நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் என்.எல்.சி.க்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    17:13 (IST)09 Jul 2020

    கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன்

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    17:01 (IST)09 Jul 2020

    கள்ளக்குறிச்சியில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,435 ஆக அதிகரித்துள்ளது.

    16:59 (IST)09 Jul 2020

    தலைமைச் செயலகத்தில் மத்திய சுகாதாரக்குழுவினர் தலைமைச்செயலாளருடன் ஆலோசனை

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர், தலைமைச் செயலகத்தில் மத்திய சுகாதாரக்குழுவினர் தலைமைச்செயலாளருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    16:38 (IST)09 Jul 2020

    சொத்துவரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க - ஸ்டாலின் வலியுறுத்தல்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துவரி வசூலை 6 மாதங்களுக்காவது சென்னை மாநகராட்சி தள்ளிவைக்க வேண்டும். மக்கள் வேலை, தொழில் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். வருவாயைக் காரணம் காட்டி சொத்துவரியை செலுத்த மாநகராட்சி கெடுபிடி காட்டுவதை ஏற்க முடியாது. சொத்துவரி செலுத்துங்கள் என எச்சரிப்பது மனிதநேயமற்றது” என்று அறிவித்துள்ளார்.

    16:21 (IST)09 Jul 2020

    சாத்தான்குளம் சம்பவம்: விசாரணை நடத்த டெல்லியில் இருந்து நாளை சிபிஐ அதிகாரிகள் வருகை

    சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். இதையடுத்து, சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது. சாத்தான்குளம் வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    15:57 (IST)09 Jul 2020

    பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை – ரமேஷ் பொக்ரியால்

    கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடச்சுமையைக் குறைக்கும் விதமாக, 2020-21-ஆம் கல்வி ஆண்டில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ திருத்தியமைத்தது. 

    அதில், குறிப்பாக 11ம் வகுப்பு அரசியல் அறிவியியல்  புத்தகத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவம் , குடியுரிமை, தேசியவாதம்,  மதச்சார்பின்மை ஆகிய பகுதிகளை சிபிஎஸ்இ நீக்கியது .

    இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வந்தனர். இந்த கூற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மறுத்துள்ளார்.       

    15:20 (IST)09 Jul 2020

    சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிகின்றன - சென்னை உயர் நீதிமன்றம்

    கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சித்த மருத்துவர்கள் கண்டறியும் மருந்தை சந்தேக கண்களோடு பார்ப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியது.   

    14:44 (IST)09 Jul 2020

    இந்தியர்கள் இயற்கையாகவே சீர்திருத்தவாதிகள்! - நரேந்திர மோடி

    பிரதமர் நரேந்திர மோடி தற்போது #IndiaGlobalWeek2020 நிகழ்ச்சியில் பேசி வருகிறார்  .

    இந்தியாவின் பல்வேறு புதிய தொழில் துறைகளில், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. விவசாயத்தில் நமது சீர்திருத்தங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் விவசாய தளவாடங்கள் ஏற்படுத்துவதில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன. இந்தியர்கள் இயற்கையாகவே சீர்திருத்தவாதிகள்! சமூகம் அல்லது பொருளாதாரமாக இருக்கட்டும், ஒவ்வொரு சவாலையும், இந்தியா வென்றுள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது

    14:27 (IST)09 Jul 2020

    மதுரையில் காய்ச்சல் முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது

    மதுரையில் கொரோனாவைத் தடுக்க நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால் தினசரி காய்ச்சல் பரிசோதனை முகாமை 155 இடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது. மதுரை மக்கள் இதனை பயன்படுத்தி தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார்.  

    13:42 (IST)09 Jul 2020

    மத்திய அரசின் உயர்நிலைக்குழு இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சென்னை வந்த மத்திய அரசின் உயர்நிலைக்குழு இன்று மாலை மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.   

    13:32 (IST)09 Jul 2020

    பல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டு எண் மாற்றம் - அஞ்சல் துறை அறிவிப்பு

    விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீட்டு எண்ணும் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை வெளியிட்ட செய்தி குறிப்பில், " கிருஷ்ணா நகர் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவின்யு, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2-வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் – 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது என்றும், இந்தப் பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13-ந் தேதியிலிருந்து மடிப்பாக்கம் 600091 அஞ்சலகம் செய்ய உள்ளது"  என்றும் தெரிவிக்கப்பட்டது  

    எனவே மேற்குறிப்பிட்ட பகுதிவாழ் பொதுமக்கள் இனி 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    13:29 (IST)09 Jul 2020

    மத்திய அரசின் உயர்நிலைக்குழு அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சென்னை வந்த மத்திய அரசின் உயர்நிலைக்குழு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

    13:24 (IST)09 Jul 2020

    11 நாட்களுக்கு பட்டாசு ஆலைகள் இயங்காது - பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் 11 நாட்களுக்கு பட்டாசு ஆலைகள் இயங்காது என்றும், பட்டாசு கடைகளும் திறக்காது என்றும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

    13:22 (IST)09 Jul 2020

    ஜம்மு காஷ்மீரில் ஆறு பாலங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார்

    ஜம்மு காஷ்மீரில் எல்லை சாலைகள் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறு பாலங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இன்று புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    13:21 (IST)09 Jul 2020

    சமுத்திர சேது திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் தவிக்கும் 3,992 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்

    கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்ட சமுத்திர சேது திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் தவிக்கும் 3,992 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்தது 

    13:19 (IST)09 Jul 2020

    தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்

    வாரணாசியில் கொரோனா நிவாரண முயற்சிகள் குறித்து தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். தொற்று ஏற்பட்டபோது, எல்லோரும் பயந்தனர். அதிக மக்கள் தொகை, அதிக சவால்கள் உள்ள இந்தியா பற்றி நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்; 24 கோடி மக்கள் உள்ள உ.பி மாநிலம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், உங்கள் ஆதரவு மற்றும் கடின உழைப்பால் அந்த சந்தேகங்கள் தகர்க்கப்பட்டன என்று தெரிவித்தார்.  

    12:50 (IST)09 Jul 2020

    சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை

    நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு

    கல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம்

    - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

    12:37 (IST)09 Jul 2020

    361 பேருக்கு கொரோனா

    திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,868ஆக உயர்வு

    12:36 (IST)09 Jul 2020

    10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    - வானிலை ஆய்வு மையம்

    12:19 (IST)09 Jul 2020

    மேற்கூரை இடிந்து விழுந்தது

    மத்திய நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

    * 2 வது மாடியின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

    12:07 (IST)09 Jul 2020

    நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழக் காரணம் கே.பி.சார்தான் - ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து செய்தியை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார்.

    அதில் பேசிய அவர், இன்று என் குருவான கே.பி அவர்களின் 90வது பிறந்தநாள். கே பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன்.

    ஆனால், இன்று நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் அவர்கள் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

    என் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி இருக்கிறார்.

    12:06 (IST)09 Jul 2020

    3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு

    தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு

    * தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை பதில் மனு

    * சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை பதில் மனு

    11:52 (IST)09 Jul 2020

    புதிய மருத்துவக் கல்லூரி

    நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

    ஏற்கனவே 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

    நீலகிரியில் அமையவுள்ளது 11வது புதிய மருத்துவக் கல்லூரி

    11:38 (IST)09 Jul 2020

    புதிய மாற்றங்கள் என்னென்ன?

    வரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

    பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை

    முதலமைச்சருக்கு அளிக்கவுள்ள பரிந்துரையை இறுதி செய்ய ஆலோசனை

    டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கல்வித்துறை இயக்குநர்கள் பங்கேற்பு

    11:37 (IST)09 Jul 2020

    வட்டாட்சியருக்கு கொரோனா

    திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளள்து.

    11:22 (IST)09 Jul 2020

    சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும்

    மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலனை காக்கும்; சமூகம், கல்வி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கபட வேண்டும்; பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும்

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    11:15 (IST)09 Jul 2020

    49 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    * பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

    * சிகிச்சை பெறுவோர் - 565, குணமடைந்தோர் - 619, உயிரிழப்பு - 16

    11:15 (IST)09 Jul 2020

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவர் உயிரிழப்பு

    கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

    கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் உயிரிழப்பு

    18 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்

    இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு

    11:04 (IST)09 Jul 2020

    மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கோடம்பாக்கம் - 2,657,அண்ணாநகர் -2,511, தேனாம்பேட்டை - 2,118, திரு.வி.க. நகர் -1,778

    ராயபுரம் - 1,741, தண்டையார்பேட்டை - 1,628, அடையார் - 1,412, அம்பத்தூர் - 1,306

    வளசரவாக்கம் -,1049, திருவெற்றியூர் - 979, பெருங்குடி -798, ஆலந்தூர் -799

    மாதவரம் -778, சோழிங்கநல்லூர் -463, மணலி - 429

    11:00 (IST)09 Jul 2020

    காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு

    தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்

    காணொலி காட்சி மூலம் மனு விசாரணைக்கு வர உள்ளது.

    10:58 (IST)09 Jul 2020

    சவரனுக்கு ரூ.208 உயர்வு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.37,744க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    10:48 (IST)09 Jul 2020

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.வேலூரில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொட்டிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உண்டானது.

    திருப்பத்தூரில் விடிய விடிய மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    10:21 (IST)09 Jul 2020

    விழுப்புரத்தில் நகருக்கு வரும் பாதைகள் அடைப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு வரும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டன

    10:17 (IST)09 Jul 2020

    மத்திய குழு ஆய்வு

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்திய குழு ஆய்வு

    * மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 5 பேர் குழு ஆய்வு செய்கிறது

    10:17 (IST)09 Jul 2020

    தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது

    பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது

    12ஆம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்; விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்

    - அமைச்சர் செங்கோட்டையன்

    10:17 (IST)09 Jul 2020

    2,23,724 பேருக்கு கொரோனா

    கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,192 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9,448 பேர் உயிரிழந்துள்ளனர்

    - சுகாதாரத்துறை

    10:16 (IST)09 Jul 2020

    ரவுடி விகாஷ் துபே கைது

    உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஷ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.

    உ.பி.யில் இருந்து தப்பிய விகாஷ், ம.பி மாநிலம் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கான்பூர் என்கவுன்டர் வழக்கின் முக்கிய குற்றவாளி விகாஷ் துபே என்பது குறிப்பிடத்தக்கது.

    10:15 (IST)09 Jul 2020

    டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்

    "தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை - டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்"

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மறுப்பு

    10:15 (IST)09 Jul 2020

    பாதிப்பு எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,67,296ஆக உயர்வு

    ஒரே நாளில் 24,879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 21,129 பேர் பலி

    சிகிச்சையில் இருப்பவர்கள் 2,69,789. நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,76,377

    10:14 (IST)09 Jul 2020

    139 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,439 ஆக அதிகரித்துள்ளது.

    10:14 (IST)09 Jul 2020

    காலை வரை 18 பேர் பலி

    சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் பலி

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர் பலி

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேர்

    ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 18 பேர் பலி

    10:13 (IST)09 Jul 2020

    மதுரையில் மேலும் 310 பேருக்கு கொரோனா

    மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்துள்ளது.

    10:12 (IST)09 Jul 2020

    விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி சுட்டுக்கொலை

    உத்தர பிரதேச மாநிலத்தில், பிரபல ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டார்.

    10:12 (IST)09 Jul 2020

    40 பேருக்கு தொற்று

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இதுவரை 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

    10:11 (IST)09 Jul 2020

    புதுக்கோட்டையில் மேலும் 41 பேருக்கு கொரோனா

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு.

    10:11 (IST)09 Jul 2020

    மதுரை சிறைக்கு மாற்றம்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 பேரில் 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்

    ஏற்கனவே கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரும் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

    Chennai News Latest Updates :

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கையில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக மத்திய அரசு அனுப்பி உள்ளது. முதல் குழு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், அதன்பின்னர் 2-வது குழுவும் சென்னையில் ஆய்வு செய்தது.

    தற்போது 3-வது முறையாக மத்திய குழு நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்று உள்ளனர். 2 மருத்துவ நிபுணர்களும் உள்ளனர்.

    அதன்படி பெங்களூருவில் இருந்து மத்திய குழு தலைவரான மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா வந்தார். அவருடன் மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா வந்தார். இவர்கள் சென்னை வந்த உடன், ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அதேபோல் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசு இணை செயலாளர்கள் ராஜேந்திர ரத்னு, சுஹாஸ் தந்துரு ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இந்த குழுவினருடன் மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.

    பின்னர் சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்கின்றனர். அதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பகல் 2.30 மணிக்கு சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் பரிசோதனை மையங் களை பார்வையிடுகின்றனர். மாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கிண்டி கிங் நிலையத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிடுகின்றனர்.

    மாலை 4.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையத்தை ஆய்வு செய்கின்றனர். பின்னர் புளியந்தோப்பு பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து எழும்பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை செய்கின்றனர்.

    Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment