Tamil Nadu News Today Live Updates : இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 651 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் புதிதாக 5,560 பேருக்கு நோய் கண்டுபிடிப்பால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,138 ஆக உயர்வு. புதிதாக அமெரிக்காவில் 8,576, ஸ்பெயினில் 3,107, ஜெர்மனியில் 2,509 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, சில மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற நிலையில், 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது போன்ற சூழலில் இப்படித்தான் பொறுப்பே இல்லாம நடந்துக்குவீங்களா – எரிச்சலான அகமதாபாத் ஏர்போர்ட்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான நடவடிக்கையை முடுக்கிவிடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப குறைந்த அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆதரவற்றவர்களுக்கு உணவு… உள்ளூர்காரர்களுக்கு காய்கறிகள் – மனித நேயம் போற்றிய கரூர் மக்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
“கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27.03.2020 முதல் 13.04.2020 வரை நடைபெறுவதாக இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படும். இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு, அதாவது 15.04.2020 அன்று தொடங்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Web Title:Tamil nadu news today live updates coronavirus chennai kanchipuram erode
“அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் மளிகைக் கடைகள், காய்கறி, பழக் கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்” - தமிழக முதல்வர்
நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக தடை
உச்சநீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ள உத்தரவு
- உச்சநீதிமன்றம்
ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து நாளை மாலை வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கொரோனா தாக்கத்தினை அடுத்து, பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்க நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதையடுத்து இணைய சேவைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப புதிய டேட்டா திட்டத்தினை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. வொர்க் ப்ரம் ஹோம் என்கிற இந்த புதிய திட்டத்தின் கீழ் 251 ரூபாய்க்கு தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் 51 நாட்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்செக்ஸ் 3,934 புள்ளிகள் சரிந்து 25,981 புள்ளிகளுடனும், நிஃப்டி 1,135 புள்ளிகள் சரிந்து 7,610 புள்ளிகளுடனும் நிறைவு
வர்த்தக ரீதியில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து
ஏற்கனவே இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் நாளை இரவு 12 மணிக்குள் தரையிறக்க வேண்டும்.
எனது முந்தைய தயாரிப்பான “சின்ன மாப்ள” படத்தின் படப்பிடிப்பில், நடித்த முதல்நாள், எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. முதல் நாளே படப்பிடிப்பை அரை நாள் ஒத்திப்போட சொன்னார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியானோம். அப்படத்தில் அவரது பாத்திரம் தான் முன்னிலையில் இருக்கும் ஹீரோவை விட அவரது பாத்திரத்திற்கு வலு அதிகம், ஆனால் அவர் அப்படி செய்ய வேண்டாம் எனக்கூறி, படக்குழுவுடன் கலந்தாலோசித்து ஹீரோ பாத்திரத்திற்கு மேலும் வலு சேரும்படி கதையை மாற்றியமைத்தார். படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக அது அமைந்தது. தன்னை விட அவருக்கு திரைப்படத்தின் வெற்றியே எப்போதும் முக்கியம்.
- விசு மரணத்திற்கு டி.சிவா இரங்கல்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 குறைந்தது: ஒரு சவரன் தங்கம் ரூ.31,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காவல் நிலையம் வருவோர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும். 31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம் - டி.ஜி.பி.
காவல் நிலையத்தில் கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம். காவலர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடையையும் அறிமுகம் - டி.ஜி.பி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒருபகுதியாக ரேஷன் கடைகளில், ஒரு மீட்டருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டு, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு வருவதற்கு முன்பாக வெளியில் வைக்கப்பட்டுள்ள சோப்பின் மூலம் கைகளை நன்கு கழுவிக் கொண்டு உள்ளே வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா பாதிப்பு - உரிமம் இல்லாத அனைத்து குடிநீர் ஆலைகளை ஜூலை 31ம் தேதி வரை இயக்க அனுமதி
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
உற்பத்தி செய்யும் குடிநீரில் 15% தமிழக அரசுக்கு இலவசமாக வழங்க குடிநீர் ஆலைகளுக்கு நிபந்தனை
மதுரை: அண்ணாநகரில் புதிய கடை திறப்பு விழாவையொட்டி ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை
புதிய உணவகம் திறப்பு விழாவுக்காக முன்பதிவில் டோக்கன் வாங்கியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை
கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக நகைக்கடைகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடல்.
"11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையம் செல்ல சிறப்பு பேருந்துகளை இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை மனதில் கொண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளையுடன் நிறைவு பெறுவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க, ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.