இன்றைய செய்திகள்: ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர்; பேராசிரியர் – துரைமுருகன்

தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu news today updates coronavirus death tolls rise 2 in India : இந்தியாவில் கொரொனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றிற்கும் மக்கள் வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளது. மேலும் படிக்க :  கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? – ஆ.ராசா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Jammu Kashmir  Former Chief Minister Farooq Abdullah released

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “இன்று எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன். இப்போது, நான் டெல்லிக்குச் சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உங்களுக்காக பேச முடியும்” என்றும் “தடுப்புக்காவலில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் தான் அது முழுமையான சுதந்திரம்” என்றும் அவர் கூறினார். முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog

Tamil Nadu news today updates : ரஜினி அரசியல் வருகை, தமிழகத்தின் வானிலை, அரசியல் நிலவரங்கள், கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அப்டேட்களையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள்.


21:09 (IST)14 Mar 2020

பேராசிரியர் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு – மு.க.ஸ்டாலின் உருக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் படத்தை திறந்துவைத்து பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தனிப்பட்ட முறையில் எனக்கு தனிப்பட்ட இழப்பு; எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்தவர் பேராசிரியர் அன்பழகன். அவர்
வழிகாட்டியாக மட்டுமல்ல தந்தையாகவும் பேராசிரியர் இருந்தார் என்றால் அது மிகையல்ல.” என்று உருக்கமாக பேசினார்.

20:56 (IST)14 Mar 2020

ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர்; பேராசிரியர் – துரைமுருகன்

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “தி.மு.க எனும் மாபெரும் இயக்கத்தின் இரட்டைக் கோபுரமாக கலைஞரும், பேராசிரியரும் விளங்கினார்கள். அந்தக் கோபுரங்களை அடுத்தடுத்து காலன் சாய்த்துவிட்டான். நாங்கள் கலங்கி நிற்கிறோம். ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர்; பேராசிரியர்” என்று கூறினார்.

20:38 (IST)14 Mar 2020

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சார்க் தலைவர்கள் நாளை காணொலியில் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் நாளை மாலை 5 மணிக்கு காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

19:41 (IST)14 Mar 2020

செல்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி 18%ஆக உயர்த்த முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 18%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 12%-ல் இருந்து 18%ஆக உயர்த்தப்படும் என்று கூறினார்.

19:37 (IST)14 Mar 2020

கொரொனாவை தொற்று நோய்; அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா வைரஸை தொற்று நோய் என அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இதன் மூலம், பொது சுகாதார சட்டத்தின் கீழ் தொற்று நோய்கள் பட்டியலில் கொரோனா வைரஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

19:07 (IST)14 Mar 2020

மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார் – திருமாவளவன் பேட்டி

விசிக தலைவர் திருமாவளவன்: “தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார். சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்; திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

18:47 (IST)14 Mar 2020

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம் – ஜவாஹிருல்லா

சிஏஏ தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். என்பிஆர்-ல் சில அம்சங்களை நீக்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று கூறினார்.

18:42 (IST)14 Mar 2020

ரஜினி கட்சி தொடங்காத நிலையில் அவர் பேசியதற்கு கருத்து கூறவேண்டிய அவசியமில்லை – முதல்வர்

முதல்வர் பழனிசாமி: ரஜினி இன்னும் கட்சியே தொடங்காத நிலையில் அவர் பேசியது பற்றி கருத்து கூறவேண்டிய அவசியமில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

18:02 (IST)14 Mar 2020

அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் படத்தை திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் படத்தை திறந்து வைத்தார்.

17:58 (IST)14 Mar 2020

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை – முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் – முதல்வர்

எல்கேஜி, யூகேஜிக்கு விடுமுறை நிறுத்திவைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி: எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை தான். முறையான அறிவிப்பு நாளை வெளியாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

17:29 (IST)14 Mar 2020

கொரோனா எதிரொலி: ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு

கொரோனா எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஏப்.3 ஆம் தேதி நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

17:04 (IST)14 Mar 2020

கொரோனா எதிரொலி; அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களையும் ரத்து செய்த‌து பிசிசிஐ

நாவல் கொரோனா வைரஸ் (COVID-19) பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவோ ஐபிஎல் 2020 போட்டிகள் ஏப்ரல் 15 வரை நிறுத்தப்பட்டுள்ளது.

16:55 (IST)14 Mar 2020

தெலங்கானாவில் மேலும் ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி

தெலங்கானா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் இன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி சென்று வந்துள்ள அந்த நபருக்கு தெலங்கானா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளித்து ககண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளது.

16:28 (IST)14 Mar 2020

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைய தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 43 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர், ஹஜ் கமிட்டியின் அபுபக்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்ற்றுளனர்.

15:54 (IST)14 Mar 2020

ஹீரோ I லீக் கால்பந்து போட்டிகள் மார்ச் 15 முதல் நிறுத்தம் – ஏஐஎஃப்எஃப் அறிவிப்பு

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்): அனைத்து ஹீரோ – 1 லீக் போட்டிகளையும் மார்ச் 15 முதல் நிறுத்தியுள்ளது. மேலும், அனைத்து ஹீரோ 2 வது பிரிவு, ஹீரோ யூத் லீக்ஸ், கோல்டன் பேபி லீக்ஸ் மற்றும் தேசிய போட்டிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

15:19 (IST)14 Mar 2020

கொரொனா பாதிப்புக்கு 4 லட்சம் நிவாரணம்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு கொரொனாவை தேசிய பேரிடராகவும் அறிவித்தது. 

14:48 (IST)14 Mar 2020

கோயில்களில் கூட்டம் குறைவு

கொரோனா எதிரொலியாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டவர், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படியும், அரசு அறிவுறுத்தி இருந்தது. சனிக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, குறைவான பக்தர்களே வருகை புரிந்தனர்.

14:09 (IST)14 Mar 2020

பள்ளி விடுமுறை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கும் கேரளாவை ஒட்டிய 7 மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரையிலும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறையை செயல்படுத்த வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

13:47 (IST)14 Mar 2020

தயாநிதி மாறன் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலை என்று சொன்னவரை விட்டு விடுங்கள் என்றும், திரும்ப திரும்ப தொந்தரவு படுத்த வேண்டாம் என்றும் கூறியதோடு,  ரஜினி எங்கே இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் தயாநிதி மாறன் கூறினார். 

12:09 (IST)14 Mar 2020

39வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது.

12:08 (IST)14 Mar 2020

ரஜினியின் அரசியல் வருகை : உங்களைப் போலவே நானும் காத்திருக்கின்றேன்

ரஜினியின் அரசியல் வருகை குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பிய போது “உங்களைப் போலவே நானும் காத்திருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

11:28 (IST)14 Mar 2020

ரஜினி நன்றி

அரசியல் மாற்றம் குறித்து கூறிய கருத்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி என நடிகர் ரஜினி ட்வீட் 

11:10 (IST)14 Mar 2020

திண்டுக்கல்லில் இன்று புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவிழா

திண்டுக்கல்லில் ரூ. 340 கோடி மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

11:05 (IST)14 Mar 2020

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து தொடர்கள் ஒத்திவைப்பு

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற இர்நுத கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

11:04 (IST)14 Mar 2020

தங்கத்தின் விலை குறைவு

தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 632 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 31, 472க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:56 (IST)14 Mar 2020

Corona Virus : Virat Kohli Tweet

கொரொனாவை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வென்றிடுவோம். அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருங்கள். வருமுன் காப்பதே சிறந்தது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.

10:49 (IST)14 Mar 2020

ஜி.எஸ்.டி. கவுன்சில்

62 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து வலியுறுத்தப்படும் என்றும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வரி விலக்கு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

10:20 (IST)14 Mar 2020

பவானி சாகர் நீர் மட்டம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் – 93.12 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 23.6 டிஎம்சி, நீர்வரத்து – 759 கன அடி, நீர் வெளியேற்றம் – 800 கன அடி ஆகும்.

10:11 (IST)14 Mar 2020

coronavirus

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது

10:00 (IST)14 Mar 2020

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

உலகம் முழுவதும் கச்சாப் பொருட்களின் விலை குறைவாக இருக்கின்ற நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை ரூ. 3 வரை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 

09:54 (IST)14 Mar 2020

Yes Bank Crisis

யெஸ் வங்கியில் கௌதம் தப்பார் என்பவருக்கு சொந்தமான அவந்தா ரியாலிட்டி நிறுவனத்திற்கு நிபந்தனைகளை தளர்த்தி ரூ.2000 கோடியை கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து மற்றும் அவந்தா ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் தப்பார் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.

09:52 (IST)14 Mar 2020

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் – முதலமைச்சர். மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

09:45 (IST)14 Mar 2020

Petrol diesel price

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் குறைந்து ரூபாய் 72.57 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் 17 காசுகள் குறைந்து ரூபாய் 62.02 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tamil Nadu news today updates : இதுபோன்ற அறிவிப்புகள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சர்ச்சையாகியுள்ளது. அதில், “நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates coronavirus death tolls rise 2 in india farook abdullah

Next Story
எல்.முருகனுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும் வகையில் ட்வீட்டா? எஸ்.வி.சேகர் புகார்!SV Sekar Twitter account hacked and posted against L.Murugan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com