Advertisment

Tamil Nadu news updates : 'எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்' - ஸ்டாலினுக்கு மமதா பானர்ஜி கடிதம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.58 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news updates

Tamil Nadu news updates

Tamil Nadu news updates : தமிழகத்தில் இன்று எதிர்கட்சி தலைவர்கள் மத்திய அரசின் என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ப.சிதம்பரம், கி.வீரமணி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.  இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க இந்த இணைப்பை காணுங்கள்

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியல் வெளியீடு!

ஜார்கண்ட் மாநில தேர்தல்

ஐந்து கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றும் 20ம்  தேதியோடு நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி  வருகிறது. வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இதுவரை காங்கிரஸ் கூட்டணியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். மகாராஷ்ட்ராவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் ஆட்சியை இழக்கும் அபாயத்தை எட்டியுள்ளது  பாஜக. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் இந்த இணைப்பில் காணுங்கள்.



























Highlights

    22:28 (IST)23 Dec 2019

    1.5 லட்சம் பக்தர்கள் காத்திருப்பு

    சபரிமலை : மண்டல பூஜையை முன்னிட்டு பம்பையில் சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பு - பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.

    22:06 (IST)23 Dec 2019

    தங்கப்பதக்க‌த்தை ஏற்க மறுப்பு

    குடியரசுத் தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ராபிஹா என்ற மாணவி தனது தங்கப்பதக்க‌த்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்‌‌.

    21:35 (IST)23 Dec 2019

    சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானது

    சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நியாயமான இந்த கோரிக்கையைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.

    - ராமதாஸ் அறிக்கை

    21:28 (IST)23 Dec 2019

    குடியுரிமை சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது - அமைச்சர் செல்லூர் ராஜு

    இந்திய இறையாண்மைக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை, இந்தியாவில் வாழும் அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமை சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது - அமைச்சர் செல்லூர் ராஜு.

    21:27 (IST)23 Dec 2019

    தேர்தலுக்கான பரப்புரை டிச. 25,28ல் ஓய்கிறது

    டிசம்பர் 27,30ஆம் தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை டிச. 25,28ல் ஓய்கிறது

    தேர்தல்பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும்

    விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

    -மாநில தேர்தல் ஆணையம்

    21:11 (IST)23 Dec 2019

    அமைதியான, ஆழமான போராட்டங்கள் அவசியம்

    'எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்'

    ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்க வர வேண்டும். குடிமக்கள் பதிவேடு,குடியுரிமை சட்டம் மூலம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த கடுமையான ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இந்தியாவின் ஜனநாயக ஆன்மாவை காப்பாற்ற அமைதியான, ஆழமான போராட்டங்கள் அவசியம். 

    - மம்தா பானர்ஜி

    20:26 (IST)23 Dec 2019

    குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள்

    நாட்டின் எதிரிகள் செய்ய முடியாததை தற்போது பிரதமர் மோடி செய்து வருகிறார்

    போராடுபவர்களை சுடுவது, தடியடி நடத்துவதன் மூலம் நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள்

    - ராகுல்காந்தி

    19:43 (IST)23 Dec 2019

    பணியிடை நீக்கம்

    கிருஷ்ணகிரி : விடுதி மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்காத காரணத்தால் தளி பகுதியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகாதேவம்மா பணியிடை நீக்கம்.

    மதகொண்ட பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கனிகா ஜெசி கிறிஸ்டி சரியாக பள்ளிக்கு வராத காரணத்தால் பணியிடை நீக்கம் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

    தளி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேசன் புகாரின் பேரில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவியிறக்கம்.

    19:42 (IST)23 Dec 2019

    மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம் - பிரதமர் மோடி

    ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி, தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம் - பிரதமர் மோடி

    19:18 (IST)23 Dec 2019

    காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் வாழ்த்துகள்

    ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் மாநிலம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

    - மு.க.ஸ்டாலின்

    19:09 (IST)23 Dec 2019

    ஆந்திரா ஆதரிக்காது

    தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆந்திர அரசு எந்த நிலையிலும் ஆதரிக்காது - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

    19:08 (IST)23 Dec 2019

    நீதிபதிகள் 3 பேர் நீக்கம்

    ஊழல், திறமையின்மை காரணமாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை பணிநீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    19:07 (IST)23 Dec 2019

    ஜனவரி 4, 5, 11, 12ம் தேதிகளில்...

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் ஜனவரி 4, 5, 11, 12ம் தேதிகளில் நடைபெறும் - தேர்தல் ஆணையம்

    19:07 (IST)23 Dec 2019

    1,329 வாக்காளர்கள்

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் ஆணையம்

    * ஆண் வாக்காளர்கள் - 2,96,46,287 பெண் வாக்காளர்கள் - 3,03,49,118, மூன்றாம் பாலினத்தவர்கள் - 5,924.

    19:04 (IST)23 Dec 2019

    10 ஆண்டுகள் சிறை தண்டனை

    சென்னையிலிருந்து மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

    19:03 (IST)23 Dec 2019

    கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

    மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.

    பம்பாய், கல்கத்தா உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    17:36 (IST)23 Dec 2019

    3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவுக்கு பின், அடுத்த மாதம் (ஜனவரி ) மூன்றாம் தேதி பள்ளிகள் துவங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.    

    16:27 (IST)23 Dec 2019

    ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: சிவசேனா கருத்து

    ஜார்கண்ட் சட்டமன்ற வாக்கெடுப்பு நிலவரங்கள் ,,  தேசிய குடிமக்கள்  பதிவேடு போன்ற உணர்ச்சி பிரச்சினைகளின் அடிப்படையில் அடிப்படையில் அரசியல் செய்யும் அமித் ஷா தலைமையிலான கட்சியின் அரசியலை மக்கள் விரும்பவில்லை என்று சிவசேன கருத்து தெரிவித்துள்ளது.  

    16:24 (IST)23 Dec 2019

    ஜார்கண்ட் வாக்காளர்கள் மோடி, அமித் ஷா 'ஆணவத்தை' புரம்தள்ளினர் -  என்.சி.பி.

    ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணிக்கு சாதகமாகி வரும் நிலையில்,  ஜார்கண்ட் மக்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆணவத்தை தூக்கி எரிந்து விட்டதாக தேசிய வாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது 

    15:46 (IST)23 Dec 2019

    குடியரசு தலைவர் கையில் தங்க பதக்கத்தை பெற மறுத்த மாணவி

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் தங்க பதக்கம் பெற வந்த ரபிஹாவின் புர்காவை அகற்ற மறுப்பு தெரிவிக்கபட்டதால் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டு வெளியேறினார் ரபிஹா.

    14:30 (IST)23 Dec 2019

    புதுவை மண் கவிஞர்களால் நிறைந்தது

    புதுவை கவிஞர்கள், தேச பக்தர்கள் மற்றும் தெய்வ பக்தர்கள் அதிகம் நிறைந்தவர்களின் நிலம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுவை பல்கலைக்கழகத்தில் பேச்சு. தமிழ் மற்றும் பிரெஞ்ச் கலாச்சாரத்தின் சிறந்த சேர்க்கையாக புதுவை விளங்குகிறது எனவும் புகழாரம்.

    14:00 (IST)23 Dec 2019

    பட்டங்களை வழங்கினார் குடியரசு தலைவர்

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் குடியரசுத் தலைவர். தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த குடியரசு தலைவர் தற்போது புதுவையில் உள்ளார்.

    13:53 (IST)23 Dec 2019

    சி.ஏ.ஏவுக்கு எதிராக கொச்சியில் போராட்டம்

    கேரள மாநிலம் கொச்சியின் இரண்டு இடங்களில் போராட்டங்கள் நடைபெற உள்ளது. 3 மணி அளவில் கேரள திரைப்படத்துறையினர் போராட்டம் நடத்த உள்ளனர். 

    12:53 (IST)23 Dec 2019

    வானிலை ஆய்வு அறிக்கை

    தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், காற்றின் வேகம் காரணமாக குமரி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    12:46 (IST)23 Dec 2019

    தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு

    தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் திரைத்துறையினருக்கு டெல்லியில் இன்று அவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு அவ்விருதுகளை தற்போது வழங்கி வருகிறார். மகாநடி திரைப்படத்தில் நடித்ததிற்காக நடிகை கீர்த்தி சுரோஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    12:30 (IST)23 Dec 2019

    சிவகங்கை மாவட்ட ஆட்சியரை பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அம்மாவட்டத்தின் 90% நீர்நிலைகளில் நீர் சேமிக்கப்பட்டுள்ளது என்று மதுரை உச்ச நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது.

    11:56 (IST)23 Dec 2019

    தங்கத்தின் விலை உயர்வு

    சென்னையில் தங்கத்தின் விலை ரூ.56 அதிகரித்து, ரூ. 29,152க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    11:45 (IST)23 Dec 2019

    தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். 

    11:26 (IST)23 Dec 2019

    யானைகள் புத்துணர்வு முகாம்

    தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து யானைகளின் புத்துணர்வுக்காக கோவை மாவட்டத்தில் 48 நாட்களுக்கு யானைகள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் மொத்தம் 28 யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    11:16 (IST)23 Dec 2019

    சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடியவர்கள் 16 பேர் இதுவரை மரணம்

    உத்திர பிரதேச மாநிலத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 15 நபர்களின் உடல், பிரேதபரிசோதனைக்கு பிறகு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    11:08 (IST)23 Dec 2019

    ராஜ்காட்டில் ஒரு சத்தியாகிரகம்

    சி.ஏ.ஏவுக்கு எதிராக ராஜ்காட் பகுதியில் இன்று சத்தியாகிரகம் செய்ய இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். மாலை சரியாக 3 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு.

    10:48 (IST)23 Dec 2019

    Rural local body elections : 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

    27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு. 

    10:39 (IST)23 Dec 2019

    நெல்லை வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை

    வினாத்தாள் கசிவு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுகளில் மாற்று வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. வினாத்தாள்கள் வெளியானதாக வந்த தகவல்களை அடுத்து தேர்வு மையங்களுக்கு மாற்று விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது

    Tamil Nadu news today updates : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

    27ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு 25ம் தேதி மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 28ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கி 30ம் தேதி மாலை 5 மணி வரை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள்ளது.. வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment