Advertisment

News Today Highlights: நெல்லை கண்ணன், சேலம் சிறையில் அடைப்பு: 13-ம் தேதி வரை காவல்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 78.20 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amit Shah,nellai kannan speech , tamilnadu BJp police complaint,tirunelveli news,Register case against Nellai Kannan,

nellai kannan

Tamil Nadu breaking news today live updates Tamil Nadu weather : தமிழகத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை வரும் 5-ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்களால் சென்னையில் குற்றங்கள் குறைந்திருப்பதாக, காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.

Advertisment

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் ஒரு பகுதியாக, வீடுகளில் கோலம் போட்டும், தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள் தமிழக மக்கள். முன்னதாக ‘சிஏஏ-என்ஆர்சி வேண்டாம் என கோலம் போட்டவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான 5 ஆய்வகங்களை இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.

Live Blog

Tamil Nadu breaking news today Live updates Tamil Nadu weather

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள



























Highlights

    18:16 (IST)02 Jan 2020

    கிஷான் சமான் நிதி யோஜனாவின் கீழ் 8000 விவசாயிகள் பலன்

    கிஷான் சமான் நிதி யோஜனாவின் கீழ் 8000 விவசாயிகள் பலன் - கர்நாடகாவில் மோடி பேச்சு

    17:42 (IST)02 Jan 2020

    சிறந்த தலைமைக்கான விருதினை பெற்றார் எடப்பாடி பழனிசாமி

    17:12 (IST)02 Jan 2020

    சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட நெல்லைக் கண்ணன்

    நெல்லை பாளையங்கோட்டியில் இருந்து, இடவசதி போன்ற நிர்வாகம் தொடர்பான காரணங்களால் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் நெல்லைக் கண்ணன்.

    16:26 (IST)02 Jan 2020

    சி.ஏ.ஏ குறித்து ரவீஷ் குமார் அறிவிப்பு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் அடைய இருக்கும் இலக்குகள் குறித்து பல்வேறு நாடுகளுக்கு எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அறிவித்துள்ளார்.

    16:04 (IST)02 Jan 2020

    வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த ரியா என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழி. மேலும் அவர் அதில் ”மாற்றத்திற்கு வித்திடுவதில், எப்போதும் தொடக்கப் புள்ளியாக திமுக திகழ்கிறது” என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.

    16:00 (IST)02 Jan 2020

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தாமதம் - திமுக மனுதாக்கல்

    ஊரக உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாக திமுகவினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    15:39 (IST)02 Jan 2020

    13ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    மோடி குறித்தும், அமித் ஷா குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனை வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

    15:14 (IST)02 Jan 2020

    நெல்லை கண்ணன் சிறையில் அடைப்பு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து கடுமையான விமர்சனங்களை  முன் வைத்த நெல்லை கண்ணன் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    15:04 (IST)02 Jan 2020

    உயர் நீதிமன்றத்தில் திமுக மனு

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இன்று அவசர வழக்காக இதனை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    14:36 (IST)02 Jan 2020

    மு.க.ஸ்டாலின் பேட்டி

    திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த பிறகு பேட்டியளித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ”திருடியபின் திருடன் திருடன் எனக் கத்துவதை விட திருடுவதற்கு முன்னே திருடப் போகிறான் என்று தான் கூறி வருகிறோம்." எனவும் அவர் குறிப்பிட்டார். 

    14:02 (IST)02 Jan 2020

    தேர்தல் ஆணையருடன் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு

    மாநில தேர்தல் ஆணையருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் என புகார் மனு அளித்துள்ளார். 

    13:04 (IST)02 Jan 2020

    நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தரப்பட்ட புகாரில் கைதான நெல்லை கண்ணன் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். 

    12:50 (IST)02 Jan 2020

    மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    ’பிரதமரை மகிழ்விக்க, பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள்!" என்று அதிமுக-வை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

    12:35 (IST)02 Jan 2020

    குடியுரிமை சட்ட திருத்த விவகாரம்

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.

    12:14 (IST)02 Jan 2020

    திருப்பதி லட்டு விலை உயர்வு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இலவச தரிசனத்திலும்,  மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் மட்டும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு  வழங்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சலுகை விலை லட்டுகளை ரத்து செய்து விட்டு, ஒரேயொரு இலவச லட்டை வழங்க முடிவு செய்திருக்கும் தேவஸ்தானம், கூடுதலாக பக்தர்கள் வாங்கும் லட்டு ஒன்றை ரூ.50-க்கும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    12:01 (IST)02 Jan 2020

    குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தம் - திமுக மனு

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். முன்னதாக, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோல போராட்டத்தை திமுக-வினர் தொடர்வது குறிப்பிடத்தக்கது. 

    11:51 (IST)02 Jan 2020

    ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

    நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா உள்ளிட்ட 311பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    11:33 (IST)02 Jan 2020

    முரசொலி நில விவகாரம் - திமுக முறையீடு

    முரசொலி நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    11:19 (IST)02 Jan 2020

    சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? - கே.எஸ்.அழகிரி கேள்வி

    நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். publive-image

    11:09 (IST)02 Jan 2020

    நெல்லை கண்ணனுக்கு உடல் நலக்குறைவு

    கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர் கடந்த இரண்டு நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு காரணமாக இவருக்கு வயிற்றிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் கோர்ட்டில் ஆஜர் செய்யும் முன் நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பெரும்பாலும் உடல் நலத்தை காரணம் காட்டி நெல்லை கண்ணன் இன்று பெயில் கேட்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜக பெயில் கிடைக்க விடாமல் செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    10:53 (IST)02 Jan 2020

    நெல்லை கண்ணனுக்கு பெயில் கிடைக்குமா?

    கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார். இவரை போலீசார் பெரும்பாலும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க  வைக்க வாய்ப்புள்ளது. 10 நாட்கள் வரை கண்ணனை கஸ்டடியில் வைக்க கூட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. பிரதமர் குறித்தும், கொலை குறித்தும் பேசியதால் இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் கண்ணனுக்கு பெயில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    10:45 (IST)02 Jan 2020

    ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReleaseNellaiKannan 

    `பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் படி அவர் நேற்று தங்கியிருந்த ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கு அரசியல் மற்றும் பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, #ReleaseNellaiKannan  என்ற ஹேஷ் டேக்கில் ட்விட்டரில், நெல்லை கண்ணனை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. 

    10:41 (IST)02 Jan 2020

    சென்னையில் மழை

    பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, மேடவாக்கம், வில்லிவாக்கம் அயனாவரம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    10:26 (IST)02 Jan 2020

    உள்ளாட்சித் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    Tamil Nadu News Today Live: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நெல்லை கண்ணன் பெரம்பலூரில் ஒரு தனியார் ஓட்டலில் இருந்தபோது பெரம்பலூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment