இன்று மாலை உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு சிவாஜி பார்க்கில் விழா

Petrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.72 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.47 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

By: Nov 28, 2019, 8:18:35 AM

Tamil nadu news today updates : சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உத்தவ் தாக்ரே. இன்று மாலை, சிவாஜி பூங்காவில் நடக்க இருக்கும் பதவி ஏற்பு விழாவில்  மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார். சிவாஜி பூங்கா , சிவசேனாவின் மதிப்புமிக்க கோட்டையாக கருதப்படுகிறது. 1995 ம் ஆண்டில், சிவசேனா-பாஜக கூட்டணி முதல் முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, ​​சேனா தலைவர் மனோகர் ஜோஷி இந்த சிவாஜி பூங்காவில் தான் முதல்வராக பதவியேற்றார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47. கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்படுகிறது. புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க இந்த கார்டோசாட்-3 உதவும்.


அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில் அறிவித்தார். இட ஒதுக்கீட்டின் வரலாறு பற்றி அக்கறை இன்றி முதல்வர் பேசுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், குமரிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Live Blog
Tamil nadu news today live updates அரசியல், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட அனைத்து தமிழக செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்
22:02 (IST)27 Nov 2019
எனது மகள் மரணம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன் - பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப்

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா வழக்கு விசாரணைக்காக சென்னை வந்திருந்த அவரது தந்தை அப்துல் லத்தீஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன்” என்று கூறினார்.

21:41 (IST)27 Nov 2019
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து 4 சிறார்களை மீட்டுவர குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

குஜராத் உயர் நீதிமன்றத்தில் 4 சிறார்களின் பெற்றோர்கள் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து 14 முதல் 17 வயது வரை உள்ள 4 சிறார்களை மீட்டுவர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

21:37 (IST)27 Nov 2019
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து போராடியவர்களை விடுவிக்க வேண்டும் - டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு: கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மக்களையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி போராட்டக்காரர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தவேண்டும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினார்.

20:30 (IST)27 Nov 2019
கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வெளிநடப்பு; ஜனநாயகத்திற்கு நல்லதல்ல - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. விவாதம் நடத்த வேண்டுமென்று கூறும் எதிர்க்கட்சிகள் அதற்கு பதில் தரும்போது வெளிநடப்பு செய்வது சரியல்ல என்று கூறினார்.

20:04 (IST)27 Nov 2019
மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் மு.க.ஸ்டாலின்

மகாராஷ்டிராவில் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:51 (IST)27 Nov 2019
பதவி ஆசை வந்தால் பத்தும் பறந்துபோகும்; சிவசேனா உதாரணம் - பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
3 கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ அப்போது முதல் அவர்கள் கவுன்டவுன் ஆரம்பம் என்று கூறினார்.

19:36 (IST)27 Nov 2019
மா.சுப்பிரமணியன் நாளை நேரில் ஆஜராக உத்தரவு

கிண்டி சிட்கோவிற்கு சொந்தமான 2 தொழிலாளர் குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக வழக்கு : சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் நாளை நேரில் ஆஜராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

19:35 (IST)27 Nov 2019
பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசான முதல் மிதமான மழைப் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:47 (IST)27 Nov 2019
நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை

நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை, எப்போதும் அந்த நிலைக்கு செல்லாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2014-2019ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5% ஆக உள்ளது, 2009-2014ம் ஆண்டில் இது 6.4 சதவீதமாக இருந்தது - நிர்மலா சீதாராமன்

18:46 (IST)27 Nov 2019
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - விரைவில் விசாரணை.

18:46 (IST)27 Nov 2019
15 அமைச்சர் பதவிகள்

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு முதல்வர் மற்றும் 15 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்.

தேசியவாத காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் மற்றும் 13 அமைச்சர் பதவிகளும், காங்கிரசுக்கு சபாநாயகர் மற்றும் 13 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்.

18:45 (IST)27 Nov 2019
அரசியல் கட்சிகளுக்கு அப்படி பாதுகாப்பு வழங்க முடியாது

அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் அதை ஏற்கனவே வழங்கி வருகிறோம் - அமித்ஷா

ஆனால் பிரதமருக்கு வழங்குவது போன்ற பாதுகாப்பை அரசியல் கட்சிகளுக்கு வழங்க முடியாது - அமித்ஷா

17:31 (IST)27 Nov 2019
மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

எஸ்பிஜி பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

எஸ்பிஜி பாதுகாப்பு சட்டதிருத்த மசோதா வாக்கெடுப்பின்போது மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

17:25 (IST)27 Nov 2019
உள்ளாட்சி தேர்தலில் விவிபேட் பயன்படுத்தப்படாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 'விவிபேட்' இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு வாக்காளர் கல்விக்கு ழுழுவின் மண்டல பயிலரங்க கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிறோம் என கூறினார். முதியவர்கள் வாக்களிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை தமிழகத்தில் அமல்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

17:24 (IST)27 Nov 2019
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்

இந்தியாவின் கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது.

17:23 (IST)27 Nov 2019
அரசியல் சாசன தினத்தன்று கிடைத்த மிகப்பெரிய வெற்றி

அரசியல் சாசன தினத்தன்று கிடைத்த மிகப்பெரிய வெற்றி - மகாராஷ்டிரா நிகழ்வு குறித்து ப.சிதம்பரம் கருத்து

மகாராஷ்டிராவில் நள்ளிரவில் நடத்தப்பட்ட அரசியல் சாசன குளறுபடிகளுக்கு பிரதமர், குடியரசு தலைவர், ஆளுநர் உட்பட அனைவரும்தான் பொறுப்பு - ப.சிதம்பரம்

17:23 (IST)27 Nov 2019
அதிநவீன செயற்கைகோள்

அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-3 திட்டம் குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது - சிவன்

17:20 (IST)27 Nov 2019
13 பேரும் கிராமத்திற்குள் நுழைய கூடாது

மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய கூடாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

13 பேரும் பாஸ்போர்ட் வைத்திருந்தால், மதுரை எஸ்.பி.யிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவு

17:10 (IST)27 Nov 2019
வெளியானது தர்பார் முதல் சிங்கிள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்தின் முதல் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

16:50 (IST)27 Nov 2019
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வு வழங்க இயலாது - பள்ளிக் கல்வித் துறை

சம்பள உயர்வு கோரி கடலூரை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் செந்தில்குமார் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 177யின்படி பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவார்கள் என விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த விளக்கம் சம்பள உயர்வு கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

16:14 (IST)27 Nov 2019
உத்தவ் பதவியேற்பு - ஸ்டாலினுக்கு அழைப்பு

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்க உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

15:52 (IST)27 Nov 2019
ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி - முதல்வர் நன்றி

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது வரலாற்று சாதனை என தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தமிழக அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

15:51 (IST)27 Nov 2019
ஸ்டாலின் வாழ்த்து

மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கவுள்ள உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.

15:50 (IST)27 Nov 2019
தென்னிந்தியாவில் அமைக்க வாய்ப்பு இல்லை

இரண்டாவது தலைநகரை தென்னிந்தியாவில் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்.

15:49 (IST)27 Nov 2019
மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆங்கில வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாணவர்கள் முழுநேரமும் படித்து அதிக மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் விரும்புவதாக கூறினார். மேலும், பள்ளிகளை சுத்தப்படுத்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.

15:48 (IST)27 Nov 2019
பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேண்டுகோள்

பொள்ளாச்சி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக மகளிர் ஆணைய தலைவருக்கு, ஆந்திர மகளிர் ஆணையம் வேண்டுகோள்.

15:48 (IST)27 Nov 2019
ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு - அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்

15:47 (IST)27 Nov 2019
பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு

பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும் சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார்.

15:47 (IST)27 Nov 2019
ஜாமீன் கோரி 2-வது முறையாக தீட்சிதர் மனுத்தாக்கல் : காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென தகராறு செய்ததாகவும், தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளர். எனவே, இது தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15:45 (IST)27 Nov 2019
1,000 ரூபாயுடன், பச்சரிசி, வெல்லம், கரும்பு துண்டு, ஏலக்காய்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வரும் 29ஆம் தேதி தொடக்கம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 1,000 ரூபாயுடன், பச்சரிசி, வெல்லம், கரும்பு துண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

14:58 (IST)27 Nov 2019
பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கின்றது. பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டை ஒப்பிடும் போது கடுமையாக குறையத் தொடங்கியுள்ளது. 2014ல் ஜம்மு-காஷ்மீரில் பாஜக கூட்டணியாக  ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தர்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுவருகிறது.   

        

14:52 (IST)27 Nov 2019
தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட்டத்தில் அஜித் பவார்

நேற்று துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், இன்று மும்பையில் நடந்த தேசிய வாத காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒய் பி சவான் மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகாராஷ்டிரா என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான சாகன் பூஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.  

14:22 (IST)27 Nov 2019
தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை

ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

14:06 (IST)27 Nov 2019
பண்ணைகளில் திடீர் ஆய்வு

பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க பண்ணைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

13:48 (IST)27 Nov 2019
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

13:31 (IST)27 Nov 2019
தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு

அஜித் பவாருடன் கூட்டணி வைத்த‌து குறித்து சரியான நேரத்தில் விளக்கம் அளிப்பேன்; கவலைப்பட வேண்டாம்  என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

12:53 (IST)27 Nov 2019
டி.ஆர்.பாலு கோரிக்கை

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார். 

12:34 (IST)27 Nov 2019
3 புதிய மருத்துவ கல்லூரிகள்

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

12:03 (IST)27 Nov 2019
அஜித் பவாரை மன்னித்த சரத் பவார்

அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார் என்றும், அஜித் பவார் கட்சியின் பதவியில் தொடர்வார் என்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

11:42 (IST)27 Nov 2019
அரசாணை வெளியீடு

பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் பரிசு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில் ரூ. 2363 கோடி நிதி ஒதுக்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போல், எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார். 

11:33 (IST)27 Nov 2019
பிரதமர் வாழ்த்து

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

11:16 (IST)27 Nov 2019
பொங்கல் பரிசு வெற்றி பெறாது

பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த உள்நோக்கம் இருந்தாலும் அது வெற்றி பெறாது பொங்கல் பரிசை அதிமுக வழங்கியதாக நினைக்க மாட்டார்கள், அரசு பணமாக தான் மக்கள் நினைப்பார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

10:59 (IST)27 Nov 2019
விசாரணை ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 12.30 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

10:51 (IST)27 Nov 2019
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது, தேர்தல் ஆணையம். நாளை காலை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:41 (IST)27 Nov 2019
ப.சிதம்பரத்துடன் பிரியங்கா, ராகுல் சந்திப்பு

ப.சிதம்ரத்தின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை ராகுல்காந்தி, பிரியங்கா இருவரும் சந்தித்து பேசினர். 

10:35 (IST)27 Nov 2019
நடிகர் பாலாசிங் மரணம்

திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலாசிங்! சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் திரைப்படத்தில் கூட அரசியல் கட்சி தலைவராக நடித்திருந்தார்.  

10:29 (IST)27 Nov 2019
பிஎஸ்எல்வி சி-47

கார்டோசாட்-3 செயற்கைகோளை 509 கி.மீ. உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3ம் தலைமுறை தொலை உணர்வு செயற்கைகோள் தான் இந்த கார்டோசாட்-3. புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க  இந்த கார்டோசாட்-3 உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil nadu news today updates : பாஜக மகாராஷ்டிராவில் சட்டத்துக்குப் புறம்பாக பெரும்பான்மை இல்லாமல் அரசு அமைத்தது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி-க்கள் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மக்களவைப் பாதுகாவலர்கள் சாபநாயகர் இருக்கைக்கு அருகில் கூடி முழக்கமிட்ட எம்.பி.க்களை அப்புறப்படுத்தினர். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணியையும் எ.பி. ரம்யா ஹரிதாஸையும் பாதுகாவலர்கள் பிடித்து இழுத்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Web Title:Tamil nadu news today live updates maharashtra pslvc47

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X