Advertisment

Tamil Nadu News Today: மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

Flash News in Tamilnadu Today Updates:  பாராளுமறத்தில் நடந்து வரும் குளிர் கால கூட்டத்தொடரில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மஹாராஷ்டிரா ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டதற்கான பிரகனடத்தை தாக்கல் செய்கிறார். மேலும், பிரிவு 356ன் விதியின் கீழ் மகாராஷ்டிர மாநில ஆளுநர் இந்தியா ஜனாதிபதிக்கு அனுப்பிய அறிக்கையையும் தாக்கல் செய்ய விருக்கிறார்.  மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவடைந்த எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால், கவர்னர் கோஷ்யாரின் பரிந்துரையின்படி, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது.

Advertisment

ஷஹாதத் ஹுசைன்,  வங்கதேச அணியின்  வேகப்பந்து வீச்சாளாரான இவர், உள்ளூர் லீக் போட்டியில் சகவீரரை மைதானத்தில்  அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஷஹாதத் ஹுசைன் செயலைக் கண்டிக்கும் வகையில், அவர் ஐந்து ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளில் தடைவிதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தண்டனை கொடித்திருக்கிறது

இதுபோன்ற, மேலும் சில முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:54 (IST)20 Nov 2019

    திமுக பயப்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ

    உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக பயப்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், எந்த வகையில் தேர்தல் வந்தாலும் சந்திக்கக்கூடிய கட்சியாக அல்லவா திமுக இருக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு

    21:31 (IST)20 Nov 2019

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    ’கக்கூஸ்’ ஆவணபடத்தை எதிர்த்து ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது, ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    21:30 (IST)20 Nov 2019

    சென்னையில் கனமழை

    சென்னை தரமணி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    21:30 (IST)20 Nov 2019

    1.90 கோடி நபர்களுக்கு இலவச அரிசி

    வரும் காலங்களில் 1.85 கோடி பேருக்கு பதிலாக 1.90 கோடி நபர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    21:29 (IST)20 Nov 2019

    ஞானவேல் ராஜாவுக்கு எதிரான பிடிவாரண்ட் திரும்பப் பெறப்பட்டது

    வருமான வரி வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்பப் பெறப்பட்டது

    ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து பிடிவாரண்டை திரும்பப் பெற்றது எழும்பூர் நீதிமன்றம்.

    20:02 (IST)20 Nov 2019

    சர்வாதிகார முறையில் தேர்தல் - மு.க.ஸ்டாலின்

    மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது

    திமுக ஆட்சியில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது; உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முறை மாற்றப்பட்டது - மு.க.ஸ்டாலின்

    20:02 (IST)20 Nov 2019

    அவசரச் சட்டம் கண்டனத்திற்குரியது - காங்கிரஸ்

    மேயரை மறைமுகமாக தேர்வு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை அதிமுக அரசு மீறுவது அவமதிக்கும் செயலாகும். கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி மேயர் பதவிகளை கைப்பற்றலாம் என்ற முயற்சியை முறியடிப்போம் - காங்கிரஸ்

    20:00 (IST)20 Nov 2019

    மறைமுகத் தேர்தல் - தலைவர்கள் கருத்து

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு குழப்பம் செய்கிறது - மா.சுப்பிரமணியன்

    ஏற்கனவே ஆட்சி செய்த கட்சிகளும் மறைமுக தேர்தல் முறையை பின்பற்றியுள்ளார்கள் - ஜி.கே.வாசன்

    19:59 (IST)20 Nov 2019

    நேரடித் தேர்தல் முறை வேண்டும் - முத்தரசன்

    ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் எனில் நேரடித் தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும்

    அதிமுக அரசு தங்களை தற்காத்துக்கொள்ளவே மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளார்கள்  - முத்தரசன்

    19:12 (IST)20 Nov 2019

    பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ஷே?

    இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நாளை காலை பதவியேற்க உள்ளதாக தகவல்

    பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்த நிலையில் ராஜபக்சே பதவியேற்கிறார்

    கோத்தபய ராஜபக்சே அதிபரான நிலையில் அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சே பிரதமராகிறார்.

    18:56 (IST)20 Nov 2019

    சட்டத்திற்கு புறம்பானது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

    ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை. மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; சட்டத்திற்கு புறம்பானது அல்ல. மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

    18:43 (IST)20 Nov 2019

    குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்

    மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

    18:42 (IST)20 Nov 2019

    1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை...

    1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், மறைமுக தேர்தல் முறையும் இருந்தது

    மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது.

    18:33 (IST)20 Nov 2019

    பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி

    பொன்.மாணிக்கவேல் விசாரணை விவரங்களை கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை - தமிழக அரசு

    சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது"

    பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

    18:24 (IST)20 Nov 2019

    மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : தமிழக அரசு அரசாணை

    மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

    17:43 (IST)20 Nov 2019

    இன்சூரன்ஸ் தவணைகளுக்கு ஜி.எஸ்.டி.- வாபஸ் பெற ஊழியர் அமைப்பு வற்புறுத்தல்

    இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதை, பாலிசிதாரர்கள் பெரும் சுமையாக கருதுகிறார்கள். இதனால் பாலிசிதாரர்கள் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கிறது. எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்’ என ரமேஷ் கண்ணன் வலியுறுத்தினார்.

    17:30 (IST)20 Nov 2019

    கோவா விழாவில் தமிழில் பேசிய ரஜினிகாந்த்

    கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கிலத்தில் பேசிய ரஜினி, ‘என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி’ என தமிழிலும் குறிப்பிட்டார். ‘என் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

    இந்த விழாவில் ரஜினிக்கு, ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு விருதை வழங்கினர்.

    16:22 (IST)20 Nov 2019

    ரஜினி, கமல், விஜய் மாய பிம்பங்கள்- அமைச்சர் ஜெயகுமார்

    அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ரஜினி, கமல், விஜய் ஆகியோர் மாய பிம்பங்கள். அவர்களை நம்புகிறவர்கள், வீணாகி விடுவார்கள். அஜித் தொழில் பக்தி மிகுந்தவர்’ என்றார் அவர்.

    16:09 (IST)20 Nov 2019

    ராமதாஸை சந்தித்த முதல்வர்

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

    15:17 (IST)20 Nov 2019

    7 மாவட்டங்களில் கன மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்’ என குறிப்பிட்டிருக்கிறது.

    14:52 (IST)20 Nov 2019

    துணை முதல்வர் பேட்டி

    பல அரசியல் கட்சிகள் வந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது. அமெரிக்க முதலீட்டார்களை ஈர்க்க சென்ற பயணம் முழுமையாக வெற்றியடைந்தது. பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

    14:50 (IST)20 Nov 2019

    தூத்துக்குடியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் - கனிமொழி வேண்டுகோள்!

    குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி “தூத்துக்குடி கடற்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

    14:43 (IST)20 Nov 2019

    பி.எஸ்.என்.எல் ரூ. 27,690 கோடி நஷ்டம்

    கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ. 27,690 கோடி வரை நஷ்டமடைந்துள்ளது. எம்.டி.என்.எல். ரூ. 9,340 கோடி வரை நஷ்டமடைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:40 (IST)20 Nov 2019

    துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை

    திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஆவடியில் அமைந்திருக்கும் போர் தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அறிவித்துள்ளார்.

    14:37 (IST)20 Nov 2019

    ரயில்வே இணையதளங்களில் மாநில மொழிகளில் தகவல்கள் இல்லை

    ரயில்வே இணையதளங்களில் மாநில மொழிகளில் தகவல்கள் வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

    14:33 (IST)20 Nov 2019

    கமல் - ரஜினி குறித்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து

    பாலும் மோரும் கலந்தால் தான் தயிராகும். ஆனால் முறிந்த பால், மோருடன் இணைந்தால் தயிர் ஆகாது என கமல் மற்றும் ரஜினி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் பதில் அளித்துள்ளார்.

    14:28 (IST)20 Nov 2019

    ரஜினி கமல் விஜய் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்

    நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் மாய பிம்பங்கள், கானல் நீரைப் போன்று காணாமல் சென்றுவிடுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு. மேலும் அவர் அஜித் குமார் திரையுலக பக்தியும் நல்ல பண்பும் கொண்டவர் என்று கூறியுள்ளார் அவர். உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவினர் அச்சத்தில் இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

    14:15 (IST)20 Nov 2019

    சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் இல்லை

    முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் இல்லை என சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

    14:12 (IST)20 Nov 2019

    ஜனவரி 15ம் தேதி மீண்டும் துவங்குகிறது கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்

    கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகணை உள்ளிட்ட இடங்களில் ஜனவரி மாதம் 15ம் தேதி மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கும் என மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

    13:48 (IST)20 Nov 2019

    உள்ளாட்சித் தேர்தல் அதிமுக தனித்து போட்டியிடத் தயார் - ராஜேந்திர பாலாஜி

    தமிழகத்தில் நடக்க விருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 'அதிமுக தனித்து போட்டியிடத் தயார்' என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் தான் ஒவ்வொரு கட்சிகளுக்கும் அதன் பலம்  புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.     

    13:45 (IST)20 Nov 2019

    பேராசிரியர்கள் நியமனம் முறைகேடு - உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள்  நியமனம் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு  நடந்து வருகிறது.   இந்த நடைமுறைகேடு தொடர்பான முழுமையான விசாரணை நடத்த தற்போது நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.    

    12:45 (IST)20 Nov 2019

    கூடங்குளம் அணுமின் கழிவுகள் தரமான முறையில் புதைக்கப்படுகின்றன

    கூடங்குளம் அணுக்கழிவுகள் பற்றிய போதிய வெளிப்படைத்தன்மை இல்லாமல இருந்து வந்தது. திமுக எம்.பி ஞானதிரவியம் கேள்விக்கு, இன்று பாராளுமன்றத்தில் பதில் அளித்த ஜித்தேந்திர சிங் , கூடங்குளத்தில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகள் தரையில் இருந்து 15மீ அடியில், விஞ்ஞான ரீதியில் சேமிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தை தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.      

    12:33 (IST)20 Nov 2019

    ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நவம்பர் 26க்கு ஒத்திவைப்பு

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின்  ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 26ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், ப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக உரிய விளக்கம் கொடுக்கவேண்டும்  என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.        

    12:27 (IST)20 Nov 2019

    ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்புக் விலக்கில் அரசியல் இல்லை - பா.ஜ.க

    சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு   சிறப்பு பாதுகாப்புக் குழு விலக்கப்பட்டதைக் கண்டித்து இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி தனது கருத்தை முன்வைத்தார். அப்போது, நாட்டில் உள்ள  தலைவர்கள் காப்பாற்றுவது ஒரு அரசின் கடமையென்றும், காங்கிரஸ்  ஆட்சிக் காலத்தில் வாஜ்பாய் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஜே.பி.நாட்டா  இதில் எந்த அரசியலும் இல்லை என்று, நெறிமுறையின் படி உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.     

    12:08 (IST)20 Nov 2019

    எலக்ட்ரானிக் சிகரெட் முழுமையாக நடைமுறைப் படுத்துங்கள்

    எலக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயன்பாடு என அனைத்திற்கும் முழுமையாக தடை விதித்து இந்திய அரசு. இந்த தடையை மாநில அரசு முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுருத்தியுள்ளது. எந்தவொரு அரஸ்ட் வாரண்ட் இல்லாமல் தடைசெய்யப்பட்ட பொருட்களை ' தேடவும், கைப்பற்றவும்' துணை ஆய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

    11:15 (IST)20 Nov 2019

    விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் இந்தியா- இலங்கைத் தமிழர்கள் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி

    விழுப்புரம் தொகுதி நாடுளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டிசை வழங்கியுள்ளார். அதில், இலங்கையின் உள்நாட்டு போர் மனித உரிமை மீறல் குறித்து தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு என்ன? வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரின் இலங்கையின் சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்ன? என்பதை பாராளுமன்றத்தில் விளக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.        

    11:08 (IST)20 Nov 2019

    சென்னை வானிலை மையம் அறிவிப்பு:

    தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    கன்னியாகுமரி, கர்நாடக கடலோர பகுதிகளில்  மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் தகவல் . 

    11:02 (IST)20 Nov 2019

    ரஜினி, கமல் படத்தில் இனைந்து நடித்தால் நல்லாயிருக்கும் - முத்தரசு

    தமிழக மக்களுக்கு நன்மை பயக்குமானால் கமலுடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று ரஜனிகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்து இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கமல், ரஜினி, திரைக்கதையில் ஒன்றாக நடித்தால் நன்றாக இருக்கும்  என்று கருத்து தெரிவித்துள்ளார்.         

    10:41 (IST)20 Nov 2019

    ப.சிதம்பரம் ஜாமீன் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. இந்த வழக்கில் , கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து  ப.சிதம்பரம் திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட போதிலும், அமலாக்கத்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கில்   டெல்லி உயர்நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

    10:32 (IST)20 Nov 2019

    சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், காங்கரஸ் கட்சி ட் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது . இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருக்கிறார். என்.சி.பி கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக் இது குறித்து தெரிவிக்கையில், " விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்வது தொடர்பாக இந்த சந்திப்பு நடக்க இருக்கின்றது என்று தெரிவித்தார்.

    இதற்கு கருத்து தெரிவித்த சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத், சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் என்று கூறினார்.

    Tamil Nadu news today updates : ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 2,105 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 961 வார்டுகளிலும், பாஜக 737 வார்டுகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மற்ற இடங்களில், பகுஜன் சமாஜ் கட்சி 16 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வென்றுள்ளது . அரசின் சிறந்த செயல்பாட்டுக்கு மக்கள் அளித்த தீர்ப்பாகவே இதைப் பார்க்கிறேன் என காங்கரஸ் கட்சியின் வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து இருக்கிறார்.

    மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்ற அடிப்படையில், சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலான அரசு விரைவில் அமைய உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment