Advertisment

நாங்குநேரி, விக்கிரவாண்டி: தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகளில் அதிமுக முன்னிலை

Chennai fuel price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.04 ஆகும். டீசல் ரூ.69.83க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

Advertisment

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

நேற்று நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குப்பதிவு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற 24ம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் மற்றும் அப்டேட்களை தெரிந்து கொள்ள

Live Blog

Tamil Nadu news today live updates Chennai weather, petrol diesel price, by election exit poll results : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள  இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    22:30 (IST)22 Oct 2019

    விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - யாருக்கு வெற்றி வாய்ப்பு?

    விக்கிரவாண்டி, நாங்குேநரி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்தியது

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

    அதிமுக கூட்டணி - 46-52%

    திமுக கூட்டணி - 44-50%

    நாம் தமிழர் - 2 -5%

    மற்றவை - 2-5%

    நாங்குநேரி இடைத்தேர்தல் 

    அதிமுக கூட்டணி  - 46-52%

    காங்கிரஸ் கூட்டணி - 42-48%

    நாம் தமிழர் - 4-7%

    மற்றவை - 2-5%

    காமராஜ் நகர் (புதுச்சேரி) 

    காங்கிரஸ் கூட்டணி - 47-53%

    என்ஆர் காங்கிரஸ் கூட்டணி - 39-45%

    நாம் தமிழர் - 4-7%

    மற்றவை - 4-7%

    21:47 (IST)22 Oct 2019

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்

    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கலில் மிக அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மிக கனமழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டார். இதேபோல், சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    20:43 (IST)22 Oct 2019

    காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

    20:00 (IST)22 Oct 2019

    பஞ்சமி நிலம் ஒப்படைக்கப்படாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பொன்.ராதாகிருஷ்ணன்

    முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    19:43 (IST)22 Oct 2019

    உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

    ஆசிரியர் தேர்வு வாரியம் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இம்மாதம் இறுதியுடன் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    19:39 (IST)22 Oct 2019

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

    இந்திய வானிலை மையம் அறிவிப்பு: மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

    சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு.

    19:10 (IST)22 Oct 2019

    கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - தேவகவுடா

    செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா: கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி தனித்தே போட்டியிடும்; எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.

    19:06 (IST)22 Oct 2019

    முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன்

    செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார்; அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்று கூறினார்.

    15:53 (IST)22 Oct 2019

    மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் பாதிப்பு இல்லை - நீதிமன்றம்

    மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை - நீதிபதி கருத்து

    காஷ்மீரைப் போல தமிழகத்தை பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது - நீதிபதி

    15:50 (IST)22 Oct 2019

    தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

    15:50 (IST)22 Oct 2019

    கனமழை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் குளச்சல்,முட்டம், புதூர், குறும்பனை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதியிலேயே மீண்டும் கரைக்கு திரும்பியுள்ளன.

    15:48 (IST)22 Oct 2019

    பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு

    10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. தற்போதுள்ள இரண்டரை மணி நேர தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு - தமிழக அரசு.

    15:04 (IST)22 Oct 2019

    தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

    மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தேங்கிய நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

    15:04 (IST)22 Oct 2019

    பிகில் விவகாரம் - மீண்டும் வழக்கு தொடர இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி

    பிகில் கதைக்கு காப்புரிமை கோருவது தொடர்பாக மீண்டும் வழக்கு தொடர இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    14:30 (IST)22 Oct 2019

    டெங்கு காய்ச்சல்: மருத்துவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

    சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

    பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்றும், மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் டெங்கு குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    14:08 (IST)22 Oct 2019

    பணியாளர்கள் விடுப்பின்றி பணியாற்ற வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    வடகிழக்கு பருவமழை மற்றும் பண்டிகை காலத்தையொட்டி கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பின்றி பணியாற்ற வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ.

    13:42 (IST)22 Oct 2019

    அமித்ஷா அதிரடி உத்தரவு

    7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

    13:41 (IST)22 Oct 2019

    1,620 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை

    நடிகர் கார்த்தி நடித்து வெளியாக உள்ள கைதி திரைப்படத்தை 1,620 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

    13:40 (IST)22 Oct 2019

    பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை - கடம்பூர் ராஜூ

    தீபாவளி அன்று பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர், "இதுவரை தீபாவளிக்கு வெளியாகும் எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. அனுமதி கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

    13:15 (IST)22 Oct 2019

    பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை

    பிகில் உட்பட எந்த திரைப்படத்திற்கும் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு. தீபாவளிக்கும் இது வரை எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    13:07 (IST)22 Oct 2019

    அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசிய மோடி

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜீயை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினேன். மனித வாழ்வின் மேம்பாட்டிற்காக அவர் காட்டும் ஆர்வம் வெளிப்படையானது. பல்வேறு விசயங்கள் குறித்து இருவரும் உரையாடினோம். இந்தியா அவருடைய சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறது. அவருடைய வருங்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.

    12:52 (IST)22 Oct 2019

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இது குறித்த அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக கூறிய நீதிமன்றம் அக்டோபர் 30ம் தேதி விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

    12:31 (IST)22 Oct 2019

    வானிலை அறிக்கை

    அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூறைக்காற்று வீச வாய்ப்புகள் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    11:57 (IST)22 Oct 2019

    தமிழகத்தில் 3900 பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை அமைச்சர்

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3900 பேர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் விரைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.

    11:55 (IST)22 Oct 2019

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம்

    டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார் முக ஸ்டாலின்.

    11:36 (IST)22 Oct 2019

    7 பேர் விடுதலை நிராகரிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை மனுவை ஆளுநர் நிராகரித்து அறிவித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை அரசுக்கு வரவில்லை என அவர் கூறியுள்ளார்.

    11:33 (IST)22 Oct 2019

    வெளிநாடு செல்ல தடை மேலும் ரூ. 1 லட்சம் பிணைத்தொகை

    ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் சி.பி.ஐ வழக்கில் இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் பிணைத் தொலையாக ரூ. 1 லட்சம் செலுத்தவும் உத்தரவு. ஆனாலும் அமலாக்கத்துறையின் வழக்கில் அக்டோபர் 24ம் தேதி காவலில் இருக்க வேண்டிய சூழல் ப. சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    11:16 (IST)22 Oct 2019

    புதுவையிலும் 28ம் தேதி பொதுவிடுமுறை

    தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு என்று இருந்த நிலையில் திங்கள் கிழமை சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர பொதுவிடுமுறை வழங்கி உத்தரவிட்டது தமிழக அரசு. தற்போது அதே போன்று புதுவையிலும் 28ம் தேதி பொதுவிடுமுறை வழங்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் நாராயணசாமி.

    10:49 (IST)22 Oct 2019

    ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஐ.என்.எக்ஸ் - சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்.

    10:39 (IST)22 Oct 2019

    சாலைகளை சீரமைக்க மாநில அரசு முடிவு

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருக்கும் 484 சாலைகளை மேம்படுத்த ரூ. 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    10:22 (IST)22 Oct 2019

    Mrs India universe earth beauty pageant

    மொரீசியஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்கான திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற அழகி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் பட்டம் வென்றார். இவருடைய வயது 38 ஆகும். 41 பேர் பங்கேற்ற இப்போட்டியில் மகுடம் சூட்டிய இவருக்கு உற்சாக வரவேற்பினை அளித்தினர் அவருடைய குடும்பத்தினர்.

    10:17 (IST)22 Oct 2019

    கேரளாவிலும் தொடரும் கனமழை : ரயில்கள் ரத்து

    தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Tamil Nadu news today live updates : IndVsSA 3rd match இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஃபாலோ ஆன் பெற்று தொடந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. 202 ரன்கள் வித்தியாசத்திலும், இன்னிங்க்ஸ் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.
    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment