முதல்வர் பழனிசாமி ஆட்சியிலிருந்து இறங்கியதும் ரஜினி கட்சி தொடங்குவார் – தமிழருவி மணியன்

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Tamil Nadu news updates : ஐ.என்.எக்ஸ்., மீடியா’ முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும்படி, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார். தலைமை நீதிபதியின் இந்த பரிந்துரையை, சட்ட அமைச்சகம், பிரதமரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். இதைத்தொடர்ந்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, பிரதமர், அதை அனுப்பி வைப்பார். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு நடக்கும்.

கோவை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..

களைகட்டுது மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பிற்கு பின் அங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் துவங்கினர். இந்நிலையில் தற்போது அங்கு வெளிநாட்டு பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளனர். மாமல்லபுரத்தில் கட்டப் பட்டுள்ள, கி.பி., 7 – 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால சிற்பங்களை காண, பயணியர் வருகின்றனர்.இங்குள்ள கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரைகளை, உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:14 (IST)19 Oct 2019

ரஜினி கட்சி தொடங்குவது எப்போது? – தமிழருவி மணியன் பதில்

முதல்வர் பழனிசாமி ஆட்சியிலிருந்து இறங்கியதும் ரஜினி கட்சி தொடங்குவார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

21:50 (IST)19 Oct 2019

பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன்

புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

39-34 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.

20:38 (IST)19 Oct 2019

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், மழை படிப்படியாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20:12 (IST)19 Oct 2019

4 தனியார் பள்ளிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

தர்மபுரி : டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 4 தனியார் பள்ளிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் உத்தரவு

20:12 (IST)19 Oct 2019

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

சென்னையில் பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்க்ஷிதா(7) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

19:59 (IST)19 Oct 2019

கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு…. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் திருப்பூர் அணைப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் நேற்றிரவு நீரில் மூழ்கியது. நீர்வரத்து குறைந்து காலை போக்குவரத்து தொடங்கினாலும், மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் 2-வது முறையாக தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், வாகன ஓட்டிகள் 14 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 7ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் உள்ள சஞ்சீவிராயன் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் வளையபாளையம், எரங்காட்டூர், கரும்பாறை உள்பட 5 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19:19 (IST)19 Oct 2019

ஆவிகளை விரட்டி அடிக்கும் சக்தி நாங்கள் – கே.எஸ்.அழகிரி

ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல, ஆவிகளை விரட்டி அடிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு என நாங்குநேரியில் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பிரசாரம் செய்த போது தெரிவித்தார்.

19:17 (IST)19 Oct 2019

ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – நிர்மலா சீதாராமன்

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18:39 (IST)19 Oct 2019

அரியானா, மகாராஷ்டிராவிலும் பிரசாரம் நிறைவு

அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு

இரண்டு மாநிலங்களிலும் 21ம் தேதி வாக்குப்பதிவு. 24ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை

18:02 (IST)19 Oct 2019

இடைத்தேர்தல் பரப்புரை நிறைவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகரில் இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவுப் பெற்றது. வரும் 21ம் தேதி வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

17:50 (IST)19 Oct 2019

முதலமைச்சர் திரித்து சொல்கிறார் – ஸ்டாலின்

1996-ம் ஆண்டு ஜெயல‌லிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போட்டவர் சுப்பிரமணிய சாமிதான், அதை முதலமைச்சர் திரித்து சொல்கிறார் – ஸ்டாலின்

17:49 (IST)19 Oct 2019

தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது – ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. தமிழகத்தில் கொலை – கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது – விக்கிரவாண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்

17:48 (IST)19 Oct 2019

கன்னியாகுமரியில் கனமழை

கன்னியாகுமரி : மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

17:05 (IST)19 Oct 2019

ஸ்டாலின் பதிலடி!

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் தொடர்பாக ராமதாஸ் கேட்கும் நிலப்பதிவு மற்றும் மூல ஆதாரங்களை அளிக்க தயார்  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று காலை முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும்  இடத்தில் இதற்கு முன்பு ஆதிதிராவிடர் மாணவர்களின் விடுதி இருந்ததாக பாமக தலைவர் ராமதாஸ்  ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

17:00 (IST)19 Oct 2019

ஸ்டாலின் சூளுரை!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் குறித்து யாரும் பேசவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்  என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள மு. க ஸ்டாலின் கூறியுள்ளார். 

16:09 (IST)19 Oct 2019

விஜயகாந்த் பிரசாரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை பார்த்த அவரின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோஷங்களை எழுப்பினர். 

15:08 (IST)19 Oct 2019

தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

விக்கிரவாண்டி மற்றும்  நாங்குநேரி  தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு  முடிவடைவடையவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பிவைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

14:32 (IST)19 Oct 2019

ரோகித் சதம்!

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்தார்.  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 6வது சதத்தை விளாசினார் ரோகித். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

14:29 (IST)19 Oct 2019

ரஜினிகாந்த் ஆறுதல்!

செ.கு.தமிழரசனின் தாயார் தவமணி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.  நேற்று மாலை சென்னை திரும்பிய அவர்,  இதுக் குறித்து செய்தி கேட்டவுடனே தமிழரசனை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

14:26 (IST)19 Oct 2019

டெல்டா மாவட்டங்களில் மழை!

கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்துள்ளது என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  எனவும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 

14:23 (IST)19 Oct 2019

ராமதாஸ் ட்வீட்!

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க, 1985ஆம் ஆண்டு வாங்கிய பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாக காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். 

12:55 (IST)19 Oct 2019

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இன்றுமுதல் கட்டணம்

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று(19ம் தேதி)முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.  பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்த நிலையில் ரூ.40 கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

12:06 (IST)19 Oct 2019

ராமதாஸ் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார் – கனிமொழி

முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகின்றனர், ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு, கனிமொழி எம்.பி. பதில் அளித்துள்ளார்.

11:43 (IST)19 Oct 2019

தோல்வி பயத்தினால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை – ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.  அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதியளித்தனர், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்று விக்கிரவாண்டி ஈச்சங்குப்பம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின்  கூறினார்.

11:02 (IST)19 Oct 2019

தமிழக மக்களுக்கு எதிரியாக திமுக உள்ளது – ஜி.கே வாசன்

இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க ஒத்துழைப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்து வீணான குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருப்பதாக விமர்சித்தார்.

10:33 (IST)19 Oct 2019

பருவமழையை எதிர்கொள்ள தயார் – காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதிக்கும் 511 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

10:09 (IST)19 Oct 2019

இடைத்தேர்தல் உடன் அதிமுக வீட்டுக்குப் போய்விடும் – ஸ்டாலின்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் உடன் அதிமுக வீட்டுக்கு போய்விடும்.  திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுகவினர் சிறைக்கு போவது உறுதி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

09:38 (IST)19 Oct 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று பிரசாரம் ஓய்வு

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளில் களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம், இன்று(அக்.,19) முடிகிறது. யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க, வரும், 21ல், இரு தொகுதி மக்களும் வாக்கு அளிக்க உள்ளனர்; 24ல் முடிவு தெரியும். 

தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட, 23 பேர் களத்தில் உள்ளனர்.

09:04 (IST)19 Oct 2019

மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34,722 கனஅடியிலிருந்து 27,985 கனஅடியாகக் குறைந்தது .  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.27 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 87.64 டிஎம்சியாக உள்ளது.

08:39 (IST)19 Oct 2019

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.76.09 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.69.96 ஆகவும் உள்ளது.

08:29 (IST)19 Oct 2019

இமயமலை பயணம் நன்றாக இருந்தது – நடிகர் ரஜினிகாந்த்

தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 5 நாள்கள் ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் கடந்த 13 ஆம் தேதி இமயமலை சென்றார். ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அவர் வழிபாடு செய்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு  நள்ளிரவு 12 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறினார்.

Tamil Nadu news today updates : திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி இருக்கும் இடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்ன புகாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார். சீமானின் இந்த சர்ச்சை பேச்சு, அஜித், விஜய் ரசிகர்களிடம் சமூக உணர்வு இல்லாதது போலவும், அவர்கள் சமூக பிரச்னைகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது போலவும் இவருக்கு மட்டுமே அவை இருப்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் ரசிகர்களின் ‘சிறப்பு அர்ச்சனையில்’ சீமான் சிக்கியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live updates northeast monsoon modi rajinikanth cricket rainfall bypoll

Next Story
கோவை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..Weather Today Chennai, Tamil Nadu Rain News, வானிலை, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com