Advertisment

TN news updates : தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா; 25 பேர் உயிரிழப்பு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
covid 19 crisis, கோவிட் நெருக்கடி, உச்ச நீதிமன்றம், supreme court, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, கொரோனா வைரஸ், oxygen supply, coronavirus

Tamil Nadu news today updates : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு தற்போது ஊரடங்கு நடைமுறைகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வழக்கம் போல் தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே ஓசூரில் இருந்து இம்மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவும் அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

Advertisment

கமலா ஹாரீஸ் சிங்கப்பூர் வருகை

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது ஆசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ். அரசுமுறை பயணமாக தற்போது சிங்கப்பூர் வந்துள்ள அவரின் பயணத்தின் முக்கிய நோக்கம், சீனாவின் ஆதிக்கத்தை தெற்காசிய பிராந்தியத்தில் கட்டுப்படுத்துவதாகும் என்று அரசியல் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

weather updates

வளிமண்டல மேலடுக்கு காரணமாக நெல்லை, மதுரை, தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புதுவையின் பல பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி வரை தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 19:15 (IST) 23 Aug 2021
    தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா; 25 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 18:50 (IST) 23 Aug 2021
    பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

    உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 17:56 (IST) 23 Aug 2021
    பேனர் கலாச்சாரம் தொடர்வது வருத்தமளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வருத்தமளிக்கிறது. பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:54 (IST) 23 Aug 2021
    'தலைவி' திரைப்படம் செப். 10ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு - படக்குழுவினர் அறிவிப்பு

    இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தலைமை திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'தலைவி' படத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



  • 17:38 (IST) 23 Aug 2021
    கொடநாடு வழக்கு; எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிப்படை விசாரணை மேற்கொள்ளப் படவில்லை. என்றும் முக்கிய குற்றவாளிகளை புலன் விசாரணைக்குழு விட்டுவிட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிட்டது என்றும், மனுவில் தகவல்



  • 16:32 (IST) 23 Aug 2021
    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள்; கனிமொழி வாழ்த்து

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள் என்பதைக் குறிப்பிட்டு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிபிடுகையில், “தன் இளமைக் காலத்திலிருந்தே தலைவர் கலைஞர் அவர்களின் நிழலாகத் தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்தவருமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள். தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் அவர். என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றவர். கழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் எப்போதும் துணையாக நிற்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 16:20 (IST) 23 Aug 2021
    திரையரங்குகள் திறப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி

    இயக்குனர் பாரதிராஜா: “நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 16:17 (IST) 23 Aug 2021
    தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபா, தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு மீதான வழக்கில், அவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என எப்படிக் கூற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



  • 15:36 (IST) 23 Aug 2021
    கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.

    மேலும் பூங்காக்கள், படகு குழாம் திறக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.



  • 15:23 (IST) 23 Aug 2021
    ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

    தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி நிர்மல்குமார் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.



  • 14:34 (IST) 23 Aug 2021
    துரை ஆதின மடத்தின் 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு

    மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், மதுரை ஆதின மடத்தின் 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 14ஆம் தேதி நிமிக்கப்பட்ட இவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.



  • 14:27 (IST) 23 Aug 2021
    தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும் - துரைமுருகன்

    தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன் மிழகத்தில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.



  • 14:25 (IST) 23 Aug 2021
    ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து 26-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம்

    ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 13:51 (IST) 23 Aug 2021
    வலிமை' ஹேஷ்டேக் முதலிடம்

    டுவிட்டர் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் 'வலிமை' முதலிடத்தில் உள்ளது. இதில் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் ஹேஷ்டேக் 2-ம் இடத்திலும், 'அஜித்குமார்' என்ற ஹேஷ்டேக் 4-ம் இடத்திலும், 'தளபதி 65' ஹேஷ்டேக் 5-ம் இடத்திலும் உள்ளன



  • 13:29 (IST) 23 Aug 2021
    காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

    ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் மக்கள் விமான நிலையத்தில் அலைமோதும்போது, துப்பாக்கியால் சுடும் சப்தங்கள் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் போது உயிரிழப்புகளோ காயமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:24 (IST) 23 Aug 2021
    7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:21 (IST) 23 Aug 2021
    கோயில் நிலங்களை சரியாகப் பயன்படுத்தவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது என்று அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோயில் நிலத்தை கிராம நத்தமாக வகைமாற்றம் செய்து, 81 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.



  • 12:35 (IST) 23 Aug 2021
    90% திரையரங்குகள் இயங்கவில்லை

    தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதியளித்தாலும் மதுரை மாவட்டத்தில் 90% திரையரங்குகள் இயங்கவில்லை என்றும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் வந்தப்பின் திரையரங்குகள் வழக்கம் போல செயல்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



  • 12:34 (IST) 23 Aug 2021
    ஏன் ஜாமினில் வெளியே வந்தார்கள்?

    சயான், மனோஜ் ஆகிய இருவரும் ஏன் ஜாமினில் வெளியே வந்தார்கள் என்றும் ஜாமினில் வெளியே வந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏன் என்றும் கொடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் காங். எம்.எல்.ஏ செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 12:06 (IST) 23 Aug 2021
    24 மணி நேரமும் தடுப்பூசி

    மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ தடுப்பூசி மையத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தபடுகிறது. முன் பதிவு இல்லாமல் தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



  • 11:57 (IST) 23 Aug 2021
    20 சொகுசு கார்கள் பறிமுதல்

    இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரது கானாத்தூர் வீட்டில் 20 சொகுசு கார்கள் மற்றும் லேப்டாப், ரூ.60,000 பணம் உள்ளிட்டவற்றை டெல்லி அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.



  • 11:56 (IST) 23 Aug 2021
    10-ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியீடு

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டிருக்கிறது. http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



  • 11:21 (IST) 23 Aug 2021
    எஸ்.பி. கண்ணன் மனு

    பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.



  • 11:08 (IST) 23 Aug 2021
    உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் - துரைமுருகனுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு

    அனைவரிடத்திலும் பாசம் காட்டக் கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்ளும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் என்று எதிக்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • 10:57 (IST) 23 Aug 2021
    சட்டப்பேரவையில் பொன்விழா காணும் துரைமுருகன்

    சட்டப்பேரவை உறுப்பினராக 50 ஆண்டுகள் பதவி வகித்து வரும் துரைமுருகனை வாழ்த்தி சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் பேச்சு. கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார். 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அவர் அலங்கரித்துள்ளார் என்றும் முதல்வர் பேச்சு.



  • 10:48 (IST) 23 Aug 2021
    40% திரையரங்குகள் மட்டுமே திறப்பு

    தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 40% திரையரங்குகள் மட்டுமே இன்று செயல்படும். ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற தமிழ் மற்றும் பிறமொழிப்படங்கள் இன்று காட்சியாகின்றன.



  • 10:16 (IST) 23 Aug 2021
    அதிமுக ஆலோசனைக் கூட்டம்

    கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:14 (IST) 23 Aug 2021
    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

    கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் இதில் பங்கேற்பு



  • 10:06 (IST) 23 Aug 2021
    பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வலுக்கும் கோரிக்கை

    சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றூ கோரிக்கை பலரால் வைக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் சுமார் 2500 கோடிக்கு பல்வேறு ஒப்பந்தங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



  • 10:01 (IST) 23 Aug 2021
    தங்க நகை வியாபாரிகள் போராட்டம்

    புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிரான ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் கடைகளை அடைத்து தங்க நகை வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹால்மார்க் வழங்க போதிய மையங்கள் இல்லாத நிலையில், நகைகளை விற்க பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.



  • 09:37 (IST) 23 Aug 2021
    உதகையில் பூங்காக்கள் திறப்பு

    தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று காலை முதல் மீண்டும் திறப்பு



  • 09:34 (IST) 23 Aug 2021
    பாஜக நிர்வாகி மீது குண்டர் சட்டம்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ குட்கா பொருட்களை பதுக்கிய வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் இருக்கும் கெங்கவல்லி பாஜக வர்த்தக அணி பொருளாளர் பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • 09:01 (IST) 23 Aug 2021
    தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இன்று முதல் செயல்படும்.



  • 08:44 (IST) 23 Aug 2021
    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

    இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை tnresults.nic.in என்ற இணையத்தில் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



  • 08:41 (IST) 23 Aug 2021
    பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலில் எந்த மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.32-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 93.66-ஆகவும் உள்ளது.



  • 08:28 (IST) 23 Aug 2021
    4 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு

    ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்ற நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகள், பூங்காக்களில் 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.



  • 08:14 (IST) 23 Aug 2021
    ஆப்கான் நிலவரம்

    ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட அனைவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கத்தார், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் சிறப்பு விமானங்கள் மூலம் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.



  • 08:04 (IST) 23 Aug 2021
    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகள்

    சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 6 மேம்பாலங்கள் மீது உயர்மட்ட பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டுக்குள் சேவைகளை துவங்க முடிவு.



Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment