Advertisment

Tamil News Highlights: காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு; 60-க்கும் மேற்பட்டோர் பலி

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Taliban, Kabul, india, காபூல், ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையம், தலிபான்கள், இந்தியா, chaos at Kabul airport, afghanistan, Taliban takes Kabul


Advertisment

புதுவையிலும் பெட்ரோலுக்கான வரி குறைப்பு

Tamil Nadu news today live updates : தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் போது, பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பெட்ரோலின் விலையும் குறைக்கப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பெட்ரோல் மீதான வரி 3% குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல்

தமிழக சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ள நிலையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்கிறார்.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.20க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 93.52க்கும் விற்பனையாகி வருகிறது.

ind vs england

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (25/08/2021) ஆரம்பமானது. முதலில் பேட்டிங்க் செய்த இந்தியா 78 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து ஆட்டமிழக்காமல் 120 ரன்களை சேர்த்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:37 (IST) 26 Aug 2021
    காபூல் விமான நிலையம் அருகே திடீர் குண்டுவெடிப்பு

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே திடீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • 19:39 (IST) 26 Aug 2021
    ஆந்திராவில் கடல் 2 கி.மீ தூரத்திற்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்

    சமீபத்தில் வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் அருகே அந்தர்வேதி பகுதியில் கடல் 2 கி.மீ தூரத்திற்கு உள்வாங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



  • 19:36 (IST) 26 Aug 2021
    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2,07,838 பேர் பயனடைந்துள்ளதாக தகவல்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மேலும் 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்து. மேலும் ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2,07,838 பேர் பயனடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது



  • 18:30 (IST) 26 Aug 2021
    மம்முட்டி தொடர்ந்த வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

    தங்களது பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக நில நிர்வாக ஆணையர் அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி, மகன் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



  • 18:27 (IST) 26 Aug 2021
    கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் தள்ளுபடி - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

    புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் நிதி தட்டுப்பாடு உள்ள நிலையிலும் பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஆன்லைன் முலம் பட்டா மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.



  • 18:26 (IST) 26 Aug 2021
    கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் தள்ளுபடி - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

    புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் நிதி தட்டுப்பாடு உள்ள நிலையிலும் பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஆன்லைன் முலம் பட்டா மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.



  • 17:14 (IST) 26 Aug 2021
    கொரோனாவை தடுப்பதற்கு அல்ல; வீரியத்தை குறைக்கவே தடுப்பூசி - மத்திய அரசு

    கொரோனாவை தடுப்பதற்கு அல்ல; வீரியத்தை குறைக்கவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் உயிரிழப்பை தடுப்பதில் தடுப்பூசிகள் நல்ல பலனை தருவதாகவும் கூறியுள்ளது.



  • 16:42 (IST) 26 Aug 2021
    உணவுப் பொருட்களை கையாளுபவர்களுக்கு கையுறை கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு

    உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் கையுறைகள் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது மக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் கூடாது. வருமுன் காப்பதே நல்லது, என பார்சல் பேப்பர் பிரிக்க எச்சில் தொட்டு பயன்படுத்துவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.



  • 15:43 (IST) 26 Aug 2021
    தமிழ் வழியில் படிப்போருக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு

    தமிழ் வழியில் 6,7,8 படிப்போருக்கு, பள்ளி முடிந்த பிறகு அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 15:42 (IST) 26 Aug 2021
    தமிழ் வழியில் படிப்போருக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு

    தமிழ் வழியில் 6,7,8 படிப்போருக்கு, பள்ளி முடிந்த பிறகு அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 15:41 (IST) 26 Aug 2021
    நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடி

    நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரில் மோசடி நடந்துள்ளது. 2டி நிறுவனம் பெயரில் நடிகர், நடிகைகள் தேர்வுக்கு அழைப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • 15:39 (IST) 26 Aug 2021
    உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி - மநீம தலைவர் கமலஹாசன்

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிச்சயமாக போட்டியிடும் என்றும் உறுதி இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



  • 15:19 (IST) 26 Aug 2021
    தமிழ் படைப்புகள் நீக்கம் -மு.க.ஸ்டாலின் கண்டனம்

    டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் என்றும், பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மானுட மேன்மை குறித்த பல படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



  • 14:56 (IST) 26 Aug 2021
    தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

    தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.



  • 14:48 (IST) 26 Aug 2021
    புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் சட்டப்பேரவையில் அறிவிப்பு



  • 14:47 (IST) 26 Aug 2021
    குழந்தை எழுத்தாளர்களுக்கு விருது

    குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி விருது' வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு உட்பட்டோர்களில் ஆண்டுதோறும் 3 சிறப்பு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.



  • 14:23 (IST) 26 Aug 2021
    குழந்தை எழுத்தாளர்களுக்கு விருது

    குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி விருது' வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு உட்பட்டோர்களில் ஆண்டுதோறும் 3 சிறப்பு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.



  • 13:44 (IST) 26 Aug 2021
    அதிமுக வெளிநடப்பு

    விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு.



  • 13:30 (IST) 26 Aug 2021
    இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

    மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.



  • 13:27 (IST) 26 Aug 2021
    பெயர் வைக்கவே பல்கலைக்கழம் கொண்டு வந்தது அதிமுக - பொன்முடி

    நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது என்றும் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.



  • 13:25 (IST) 26 Aug 2021
    அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது - ஸ்டாலின்

    “ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்; அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது” என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 12:42 (IST) 26 Aug 2021
    8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 11:52 (IST) 26 Aug 2021
    போட்டியின்றி ராஜவேலு தேர்வு

    புதுச்சேரி சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவிக்கு ராஜவேலு மட்டுமே விண்ணப்பித்துள்ள காரணத்தால் அவர் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வாகி உள்ளார்.



  • 11:51 (IST) 26 Aug 2021
    வருமானவரி அபராதத்தை கைவிட முடியாது

    குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமானவரி அபராதத்தை கைவிட முடியாது என்றுகூறி வருமான வரி வழக்கு தொடர்பாக சசிகலா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதன் வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.



  • 11:20 (IST) 26 Aug 2021
    2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

    நடைபெறும் கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவோம் என்று பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 11:19 (IST) 26 Aug 2021
    அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி

    அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின்னணு உபகரணங்கள் மற்றும் தொழில்நுப்டங்கள் ஆகியவை இணைத்து அதிநவீனப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்



  • 11:00 (IST) 26 Aug 2021
    அரசின் நல்ல முடிவுகளுக்கு அஇஅதிமுக உறுதுணையாக இருக்கும்

    இன்று முதல்வர் தாக்கல் செய்த சட்டவரைவு மசோதாவை எதிர்க்கட்சியினர் முழு மனதாக வரவேற்பதாக கூறிய நிலையில், அரசின் நல்ல முடிவுகளுக்கு அஇஅதிமுக உறுதுணையாக இருக்கும் என்று சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.



  • 10:44 (IST) 26 Aug 2021
    தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

    தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருகின்ற காரணத்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 10:40 (IST) 26 Aug 2021
    தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

    தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருகின்ற காரணத்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 10:03 (IST) 26 Aug 2021
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 648க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ. 18 குறைந்து ரூ. 4,456க்கு விற்பனையாகி வருகிறது தங்கம்.



  • 09:47 (IST) 26 Aug 2021
    புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை துவங்கியது

    புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்கியது. இன்று மாலை முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார்.



  • 09:45 (IST) 26 Aug 2021
    கொரோனா தொற்று எண்ணிக்கை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 46,164 ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 607 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 3, 33, 725 ஆக உள்ளது.



  • 09:43 (IST) 26 Aug 2021
    திமுக எம்.பி. கௌதம் சிகாமணி மருத்துவமனையில் அனுமதி

    தமிழக அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்.பியுமான கௌதம் சிகாமணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 09:17 (IST) 26 Aug 2021
    கீழடி ஆய்வு

    கீழடி அகழ்வாராய்ச்சியில் தந்தத்தால் ஆன பகடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 கிராம் எடை கொண்ட இந்த தந்தத்தில் 1-6 புள்ளிகள் செதுக்கப்பட்டுள்ளது. தந்தத்தால் ஆன சீப்பு ஏற்கனவே முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 09:01 (IST) 26 Aug 2021
    கேரளத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 31,445 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகின்ற காரணத்தால் ஞாயிறு அன்று மீண்டும் முழு ஊராங்கு அமலுக்கு வருகிறது.



  • 08:55 (IST) 26 Aug 2021
    கொடைக்கானலில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு செல்ல தடை

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்ற காரணத்தால் கூக்கால், வட்டக்கானல் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வம், டாபின் நோஸ் மற்றும் பசுமை பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 08:32 (IST) 26 Aug 2021
    10% இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை

    மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகே இதனை செயல்படுத்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.



Tamil Nadu Chennai Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment