Tamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Tamil nadu latest news : தமிழக முக்கியச் செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu News today updates

Tamil nadu latest news : தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் தண்ணீர் பிரச்சனை காரணமாக அரசு கழிப்பிடங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க.. நேற்று தமிழகத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்.

அதுமட்டுமில்லாமல் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கழிப்பறைகள் தண்ணீர் பற்றாக்குறையால மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, politics and water scarcity தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!

19:14 (IST)19 Jun 2019
திமுக கவன ஈர்ப்பு போராட்டம்

தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

18:34 (IST)19 Jun 2019
இந்தியாவை ஒரே நாடாக கற்பனை செய்வதே தவறு - கே.எஸ்.அழகிரி

ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் உள்பட பல முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "இந்தியாவை ஒரே நாடாக கற்பனை செய்வதே தவறானது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் பாஜக தனது முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

17:27 (IST)19 Jun 2019
முதல்வர் பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் மேத்யூ தொடர்ந்த வழக்கில் ஜூலை 4 ஆம் தேதிக்குள் முதல்வர் பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தியதால் முதல்வர் பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

16:34 (IST)19 Jun 2019
சென்னையில் வெப்பம் குறைய வாய்ப்பு

அடுத்த 2 நாட்களில் வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் சென்னையில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

16:24 (IST)19 Jun 2019
நாடு முழுவதும் ஒரே தேர்தல் - அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

15:43 (IST)19 Jun 2019
chennai water scarcity : லாரியில் தண்ணீர் பிடிக்க டோக்கன்!

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெருக்களில் வந்து தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகளில் தண்ணீர் பிடிக்க பொதுமக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக லாரியில் தண்ணீர் பிடிக்க டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

15:25 (IST)19 Jun 2019
pa ranjith case : பா. ரஞ்சித்தை கைது செய்ய தடை!

ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை பேச்சு விவகாரத்திl இயக்குனர் பா.ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில்  தொடர்ந்து  வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிற்பித்துள்ளார். 

15:12 (IST)19 Jun 2019
Nadigar sangam election : ஐசிரி கணேஷ் செய்தியாளர் சந்திப்பு!

நடிகர் சங்க தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஐசரி கணேஷ் “நடிகர் சங்க தேர்தல் தள்ளிப்போகிறதே என்ற வருத்தம் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் மீது நம்பிக்கை இல்லை, விஷால் சொல்வதை மட்டுமே பத்மநாபன் செய்கிறார். நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

14:29 (IST)19 Jun 2019
latest tamilnadu news : ஓபிஎஸ் டெல்லி பயணம்!

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 21 ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் துணை முதல்வர், அன்றைய தினம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

13:51 (IST)19 Jun 2019
direction sangam election : திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்!

சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வான நிலையில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்  தற்போது இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

12:23 (IST)19 Jun 2019
Nadigar sangam election : நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்!

வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நடிகர் சங்க தேர்தலை நிறுத்த  தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிற்பித்துள்ளது. இந்த அறிவிப்பு  தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார் . மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்திருந்தது. இந்நிலையில், தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. 

12:01 (IST)19 Jun 2019
Nadigar sangam election :ஆளுநருடன் விஷால் அணியினர்!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் அணியினர், ஆளுநருடன் சந்திப்பு நடத்தியுள்ளனர். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த  சந்திப்பு நடைபெற்று வருகிறது .  விஷாலுடன் கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோரும் ஆளுநரை சந்திக்க உடன் சென்றுள்ளனர்.   இந்த சந்திப்புக்கு பிறகு பாண்டவர் அணியினர் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

11:26 (IST)19 Jun 2019
latest news upates : ரவீந்தர் நாத் முன்மொழிவு!

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் முன்மொழிந்தார் . திமுக சார்பில் டி.ஆர் பாலு முன்மொழிந்தார். மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

11:15 (IST)19 Jun 2019
latest news : ரவுடி பினு கைது!

ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஃபேமஸான ரவுடி பினு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான  ரவுடி பினுவை காவல் துறையினர் பொரி வைத்து பிடித்துள்ளனர். 

10:58 (IST)19 Jun 2019
latest tamilnadu news : வைகோர் ஆஜர்!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, சென்னை சிறப்பு நீதிமன்றதில் வைகோ  இன்று ஆஜர். அவருடன்  மதிமுக உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்  வந்திருந்தனர். 

10:53 (IST)19 Jun 2019
Tamilnadu latest news : போராட்டத்தில் திமுகவினர்!

குடிநீர் பிரச்னை காரணமாக கோவை மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

10:45 (IST)19 Jun 2019
News in tamil : முதல்வர் ஆலோசனை!

தாகத்தில் தவிக்கும் தமிழகத்தை தண்ணீர் பிரச்சனையில் இருந்து விடுப்பிப்பது எப்படி? என முக்கிய விவாதங்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துக்கிறார். 

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம் காங்கிரஸ் இன்று முடிவு என தகவல், சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.64க்கும், டீசல் லிட்டர் 67.52க்கும் விற்பனை, திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் பாதிப்பால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி . இன்றும் நாளையும் தமிழகத்தில் சில பகுதிகளில் அனல் காற்று நீடிக்க வாய்ப்பு. இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் இந்த வெயிலின் தாக்கம்! - சென்னை வானிலை அறிக்கை

இவை தான் இன்றைய நாளின் டாப் செய்திகளாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் லைவ்வாக உங்கள் பார்வைக்கு..இன்றைய நாளில் தமிழகத்தில் அதிகம் பேசப்படும் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், மக்கள் கருத்துக்கள், தண்ணீர் பிரச்சனை போன்ற அனைத்து தொடர்பான செய்திகளையும் இங்கே உடனுக்குடன் படிக்கலாம். அதே போல் லைவ்வாகவும் சுருக்கமாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்கு வழங்குகிறது.

ஆங்கிலத்தில் இன்றைய தமிழ்நாடு செய்திகளை படிக்க..

Web Title:

Tamil nadu news today live updates politics weather sports entertainment water scarcity dmk duraimurugan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close