Advertisment

Tamil Nadu News Updates: தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் - தேர்தல் ஆணையம்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Updates

Tamil Nadu News Updates

Flash News in Tamil Nadu Today Updates : குடியுரிமை திருத்தம்  சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 140க்கும் மேற்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குடியுரிமை சட்டத்தை அரசியலமைப்பு வழிமுறையின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதை  ஆராயும். குடியுரிமை திருத்தம் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிராக நிற்கிறது  என்றும் சட்டவிரோதமானது என்று மனுக்கள் வாதிடுகின்றன.  சில மனுக்கள் ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்த அறிவிப்பானையை திரும்பப் பெறவும் கோரியுள்ளன.

Advertisment

                                       தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குடியுரிமை சட்ட திருத்தம், 2019 மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில், குறிப்பிடும் படியாக அசாமில் மிகவும் தீவிரமாகவும் இருந்தது. குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று இன்னர் லைன் பெர்மிட் மூலம் பாதுகாக்கப்பட்ட மாநிலங்கள், மற்றொன்று அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள். அசாமின் பெரும்பகுதி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் கீழ் வருகிறது.

 

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:28 (IST)22 Jan 2020

    தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும்

    ஜன.30ம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில், நீதிமன்றத்தின் உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும் - தேர்தல் ஆணையம்.

    தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் - தேர்தல் ஆணையம்

    22:05 (IST)22 Jan 2020

    நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது

    இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் உள்ள செல்வமானது, இங்கு வசிக்கும் 95.3 கோடி ஏழை மக்களிடம் இருக்கும் செல்வத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    21:59 (IST)22 Jan 2020

    விவகாரத்தில் இழப்பீடு கோரிய வழக்கு

    ராமநாதபுரம் : உச்சிப்புளியில் பிரசவத்தின்போது ரம்யா என்பவரின் உடலில் ஊசியை வைத்து தைத்த விவகாரத்தில் இழப்பீடு கோரிய வழக்கு

    சுகாதாரத்துறை இணை இயக்குநர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    21:32 (IST)22 Jan 2020

    அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்

    அதிமுக இயக்கம் ஒரு காலமும் அழியாது, அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    * சாலையில் இறங்கி போராடியாவது பொது மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் கட்சி அதிமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    21:11 (IST)22 Jan 2020

    பிச்சைக்கனி, அமீர், முகமது அலி கைது

    சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் பணப் பரிவர்த்தனைக்கு உதவியதாக ராமநாதபுரம், தேவிபட்டினத்தை சேர்ந்த பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகிய 3 பேர் கடலூரில் கைது.

    ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடிய நிலையில், 3 பேரும் ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைப்பு.

    21:08 (IST)22 Jan 2020

    அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்

    தஞ்சை பெரிய கோவிலில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, வரும் 28ம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் - தஞ்சை பெரிய கோவில் மீட்புக் குழு

    20:53 (IST)22 Jan 2020

    கோலியை புகழ்ந்த ஸ்மித்

    கோலி வியக்கதக்க வீரர். அவரது பேட்டிங் வரிசை அவரைப் பற்றி பேசும். மூன்றுவிதமான ஆட்டங்களிலும் அவர் நம்பமுடியாத வீரராக திகழ்கிறார். மேலும் அவர் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நான் நினைக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்

    20:21 (IST)22 Jan 2020

    மூவரையும் கைது செய்தது காவல்துறை

    எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் பணப் பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்த பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகிய 3 பேர் கைது

    ஐ.எஸ் அமைப்பு ஆதரவாளர் ஷேக் தாவூத் தப்பியோடிய நிலையில், மற்ற மூவரையும் கைது செய்தது காவல்துறை

    20:20 (IST)22 Jan 2020

    ராஜேஷ்-க்கு ஜாமீன் மறுப்பு

    சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ராஜேஷ்-க்கு ஜாமீன் மறுப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

    20:20 (IST)22 Jan 2020

    வாடகையாக மாதம் ரூ.5 ஆயிரம் நிர்ணயம்

    மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக மாதம் ரூ.5 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

    20:19 (IST)22 Jan 2020

    உள்ளூர் விடுமுறை

    தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பிப். 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

    20:19 (IST)22 Jan 2020

    ஓ.பி.எஸ் நல்ல கடவுள் பக்தர்

    ஓ.பி.எஸ் நல்ல கடவுள் பக்தர், அவரைக்கூட திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது உண்மையில் அவர் பெரியார் கொள்கை கொண்டவர் அல்ல - அர்ஜுன் சம்பத் பேட்டி

    ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத்

    16:53 (IST)22 Jan 2020

    1.98 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    தமிழகத்தில் 18,884 இலங்கை தமிழர்கள் உட்பட 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று  தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது. 

    16:06 (IST)22 Jan 2020

    தலைநகராக இயங்க உள்ள டாமன்

    டாமன் டையூ, தாத்ரா, நாகர் ஹவேலியை உள்ளடக்கிய யூனியன் பிரதேசத்திற்கு தலைநகராக டாமனை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    16:04 (IST)22 Jan 2020

    நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்

    தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தாவுக்கு எதிராக குஜராத் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று ப்ளூகார்னர் நோட்டீஸை பிறப்பித்தது இண்டெர்போல்.

    15:20 (IST)22 Jan 2020

    ராசிபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

    2016ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி வழக்கு தொடர்ந்தார். வி.பி.துரைசாமி கூறிய புகார்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி துரைசாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சரோஜா வெற்றி செல்லும் என்றும் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    15:04 (IST)22 Jan 2020

    ஆசிரியர் தகுதித் தேர்வு - உத்தேச பட்டியல் வெளியீடு

    இந்த ஆண்டில் ஆசியர் தகுதித் தேர்வு வருகின்ற ஜூன் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறலாம் என்று உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    15:02 (IST)22 Jan 2020

    மஞ்சுவிரட்டில் பட்டியல் இனத்தவர்கள் : பதில் அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு

    தேவப்பட்டு பகுதியில் நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு விழாவில் பட்டியல் இனத்தவர்களை சேர்க்க வேண்டும் என்று சிவகங்கையில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உடனடியாக பதில் அளிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    14:15 (IST)22 Jan 2020

    மறைமுக தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் தேர்தல்

    நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் மறைமுக தேர்தல்கள் சில இடங்களில் நடைபெறவில்லை. இவ்விடங்களில் வருகின்ற 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    14:03 (IST)22 Jan 2020

    டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களுக்கு மழை

    டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    13:49 (IST)22 Jan 2020

    விண்வெளிக்கு செல்லும் ரோபோ இது தான்... இஸ்ரோவின் லேட்டஸ்ட் அப்டேட்

    ககன்யான் திட்டம் மூலமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ. மனிதர்களுக்கு முன்பு ஆளில்லா ராக்கெட் மூலம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக வயோம் மித்ரா என்ற ஹூயுமனாய்ட் ரோபை தயாரித்துள்ளது இஸ்ரோ.

    13:26 (IST)22 Jan 2020

    பாஜக உடனான அதிமுக  கூட்டணியை பிரிக்க முடியாது - பேச்சை மாற்றிய அமைச்சர் ஜி.பாஸ்கரன்

    பாஜக உடனான அதிமுக  கூட்டணியை பிரிக்க முடியாது  என்று கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இன்று காலை பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்  என்று  ஜி.பாஸ்கரன்  தெரிவித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.  

    முன்னதாக,  ஜி.பாஸ்கரன் கருத்துக்கு பதில்கூறிய ஜெயக்குமார்,  ஜி.பாஸ்கரனின் கருத்து தனிப்பட்டது என்றும், இது கட்சியின் கருத்து இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.    

    12:05 (IST)22 Jan 2020

    அந்தந்த பள்ளிகளிலே பொதுத் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் - சுற்றறிக்கை

    5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது . 

    12:01 (IST)22 Jan 2020

    பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் - தமிழக அமைச்சர்

    பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்  என்று  கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஜி,பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.  

    முன்னதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து கலகத்தை சேர்ந்த உடன்பிறப்புகள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொது வெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்வதாக அதிமுக தலைமை அறிக்கை விடுத்து இருந்தது  என்பதும் குறிபிடத்தக்கது.  

    10:52 (IST)22 Jan 2020

    சிஏஏ வழக்கு - வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு

    உச்சநீதிமன்ற இன்று குடியுரிமை திருத்தம் சட்டத்தை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்  நிலையில் , அசாம் மற்றும் வடகிழக்கில் உள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கின்றனர்.  திப்ருகார் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், கவுஹாட்டி பல்கலைக்கழகம், காட்டன் கல்லூரி, நாகாலாந்து பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். 

    10:44 (IST)22 Jan 2020

    சென்னையில் இயங்கும் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக் கூடாது - ஸ்டாலின்

    சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை  மாற்றும் திட்டம் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவத்தார்.

    மாநில நலன்களுக்கு எதிராக இருக்கும் இது போன்ற முடிவுகளை கைவிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தை  கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.   

    10:33 (IST)22 Jan 2020

    ஸ்டாலின் தலைமயில் வரும் 24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

    குடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவைகள் தொடர்பான ஆலோசிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.  

    10:30 (IST)22 Jan 2020

    தேர்வு மையம் குறித்து டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

    இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விண்ணப்பிக்கும் போது, வெளி மாவட்டங்களை தேர்ந்தெடுத்தால் அதற்கான முறையான காரணங்களை தெரியபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி )தெரிவித்துள்ளது. 

    நடந்து முடிந்த குரூப் -4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றனர். இதை அடுத்து  வந்த புகாரை அடுத்து டிஎன்பிஎஸ்சி இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது 

    10:23 (IST)22 Jan 2020

    உச்சநீதிமன்றத்தில் இன்று சிஏஏ வழக்கு விசாரணை :

    குடியுரிமை திருத்தம்  சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 140க்கும் மேற்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குடியுரிமை சட்டத்தை அரசியலமைப்பு வழிமுறையின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதை  ஆராயும். குடியுரிமை திருத்தம் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிராக நிற்கிறது  என்றும் சட்டவிரோதமானது என்று மனுக்கள் வாதிடுகின்றன. 

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates :  தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பும் நடிகர் ரஜினிகாந்த் மீதான புகாரில் வழக்கு பதியக்கோரி திராவிட விடுதலை கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment