Advertisment

இன்றைய செய்திகள்: 'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal, , indian 2, director shankar, indian 2 shooting spot, accident, crane accident, lyca productions, chennai, evp film city, accident in kamala movie spot, Indian 2 accident

Tamil nadu news today updates : அரசு பணிகளுக்கான தேர்வுகள் அனைத்திலும் கேலிக்கூத்து நடப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. போலீஸ் மற்றும் சிறை வார்டன் உள்ளிட்ட, 8,888 பணிகளுக்கான தேர்வில் நடந்ததாக சொல்லப்படும் முறைகேடுகள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி, சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

Advertisment

நடிகர் தனுஷ்க்கு தலை இருக்காது - கொலைமிரட்டலால் பரபரப்பு

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஏப்ரல் மாதம், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து உலா வரும் நிலையில் அப்பதவிக்கு இருக்கும் ஒரே போட்டியாளராக ராகுல் பார்க்கப்படுகிறார். ஒட்டுமொத்த கட்சியும் அவரே தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புவதாக காங். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்., காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து கட்சித் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:29 (IST)21 Feb 2020

    'இந்தியன் 2' விபத்து குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

    "எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் நூலிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளரையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.

    அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

    இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன்.

    - சிம்பு

    22:03 (IST)21 Feb 2020

    சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

    ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    21:44 (IST)21 Feb 2020

    மது போதையிலா பள்ளிக்கு வருவது? தலைமையாசிரியருக்கு பாடம் கற்பித்த கிராம மக்கள்!

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வலைச்சேரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக் கூடத்தில், வெறும் 23 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

    3 ஆண்டுகளாக, இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் சரவணன், அடிக்கடி பள்ளிக் கூடத்திற்கு மதுபோதையில் வருவதாகக் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று, மிதமிஞ்சிய மதுபோதையில், தள்ளாடியபடியே வகுப்பறைக்கு வந்துள்ளார். இந்த தகவல் கிராமத்திற்குள் பரவியதும், பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த பொறுப்பற்ற ஆசிரியரை கிராமத்தினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக, கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரியிடமும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போதை தலைமையாசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    21:20 (IST)21 Feb 2020

    சென்னை அடையாற்றில் வேதியல் கழிவு - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

    சென்னை அடையாற்றில் வேதியல் கழிவுகளை வெளியேற்றுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    விமான நிலையத்திற்கு பின்புறம் ஓடும் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது குறித்து தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, நீர்நிலை மாசை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளபோதும் இது போன்ற நிலை தொடர்வதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    21:20 (IST)21 Feb 2020

    கடத்தல் குருவிகளுக்கு உடந்தை... சுங்க அதிகாரிகள் கைது..!

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த குருவிகளுக்கு உடந்தையாக இருந்த 3 சுங்கத்துறை அதிகாரிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

    21:00 (IST)21 Feb 2020

    குடியுரிமையை நிரூபிக்கும் தேவை இருக்காது

    தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மூலம் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் தேவை இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    20:58 (IST)21 Feb 2020

    விஜய் 65 படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா?

    நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜீ.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். சுதா கொங்கராவின் கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், மாஸ்டர் படத்தின் ரீலிஸ்க்கு பிறகு , விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:37 (IST)21 Feb 2020

    டிக்-டாக் தொந்தரவு

    புதுக்கோட்டை அருகே பொது இடங்களில் டிக்-டாக் செய்து பொதுமக்களுக்குத் தொந்தரவு அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    20:06 (IST)21 Feb 2020

    மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

    இந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, கிரேன் விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.

    19:49 (IST)21 Feb 2020

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

    பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாத, திருச்சி-கரூர்-அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்காத அரைக்கிணறு தாண்டும் #ProtectedAgriculturalZone மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது இவ்வரசு.

    மக்களை ஏமாற்றுவதே இவர்கள் கொள்கை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

    #TNBudget தொடரில், #CAA வை ஆதரித்ததற்கு பிராயச்சித்தம் தேடிட, தமிழகத்தில் #NPR நடக்காது என அறிவிப்பீர்களா என்ற என் கேள்விக்கு ஆளுவோரிடம் பதில் இல்லை.

    ஒட்டுமொத்தப் பாதிப்புகள் குறித்து பட்டியலிட்டும், #NPR நடக்காது என்ற உறுதியை அளிக்க ஆளும் தரப்பு தயாராக இல்லை

    -மு.க.ஸ்டாலின்

    19:33 (IST)21 Feb 2020

    மார்ச் 31-ம் தேதி விலகுவதாக அறிவிப்பு

    பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்ச் 31-ம் தேதி விலகுவதாக அறிவிப்பு. 

    19:07 (IST)21 Feb 2020

    மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்

    பணத்திற்கு பதில் இலவச அரிசி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி.

    18:52 (IST)21 Feb 2020

    ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு

    தமிழகத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் கட்ட ரூ.162 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    18:51 (IST)21 Feb 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் இடத்திற்கு அருகில் மணல் குவாரி நடத்தத் தடை கோரிய வழக்கில் நாகை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    18:51 (IST)21 Feb 2020

    காவல்துறை அதிகாரி ரமேஷ் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

    வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற சுரேந்தர் என்பவரை தாக்கிய காவல்துறை அதிகாரி ரமேஷ் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - மாநில மனித உரிமை ஆணையம்

    18:39 (IST)21 Feb 2020

    சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்

    சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக பொருளாளர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

    18:02 (IST)21 Feb 2020

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது - ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: “பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்கு வழங்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

    18:00 (IST)21 Feb 2020

    2.37 கோடி இழப்பீடு

    சென்னையில் கார் மோதி பலியான மேனகா குடும்பத்திற்கு ரூ. 2.37 கோடி இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு

    * ரூ. 5.85 கோடி இழப்பீடு கோரி தந்தை சுமந்த் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

    17:59 (IST)21 Feb 2020

    வேளாண் மண்டலம் அமைக்க முடியாது - ஸ்டாலின்

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது - ஸ்டாலின்

    பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்கு வழங்கப்பட்டது. - ஸ்டாலின்

    17:29 (IST)21 Feb 2020

    திமுக பிரமுகரின் வீட்டில் வருமானவரி சோதனை - நெல்லையில் பரபரப்பு

    நெல்லையில் திமுக பிரமுகரின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சொகுசு விடுதி கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர், சோதனையில் ஈடுபட்டிருப்பது, நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    17:26 (IST)21 Feb 2020

    திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

    திருமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    17:15 (IST)21 Feb 2020

    மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம் - ஸ்டாலின் தாய்மொழி தின வாழ்த்து

    தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மொழிப் பாதுகாப்பே இனப் பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம்” வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்!

    தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!

    மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்!

    அனைவர்க்கும் தாய்மொழி தின வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

    17:07 (IST)21 Feb 2020

    சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக தமிழக அரசு செயல்படும் - ஈபிஎஸ், ஓபிஎஸ்

    தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக தமிழக அரசு செயல்படும். தேசிய குடிமக்கள் பதிவேடு சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

    16:51 (IST)21 Feb 2020

    காதலிக்க மறுத்த திருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற நபர் கைது

    நெய்வேலி அருகே காதலிக்க மறுத்த திருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    15:51 (IST)21 Feb 2020

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 584 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.32,408க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    15:48 (IST)21 Feb 2020

    10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவிகளை சோதனை செய்ய தடை

    பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும். மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது. பெண் ஆசிரியர்களை கொண்டு தான் சோதனை செய்ய வேண்டும். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    15:42 (IST)21 Feb 2020

    காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் மனதார ஏற்போம் - கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் மனதார ஏற்போம். ஆனால், அழைப்பு ஏதும் விடுக்கவில்லை. நடிகர் விஜயை காங்கிரஸ் அழைக்கவில்லை; ஆனால், விஜய் வந்தால் ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

    15:40 (IST)21 Feb 2020

    கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    தமிழக அரசு கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    15:32 (IST)21 Feb 2020

    இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி: கிரேன் ஆபரேட்டர் கைது

    இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    14:57 (IST)21 Feb 2020

    தாய்மொழி தினத்தையொட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து

    தாய்மொழி தினத்தையொட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர்களை போற்றி, தமிழை பாதுகாத்து வளர்க்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

    14:28 (IST)21 Feb 2020

    மநீம 3-ம் ஆண்டு தொடக்கம்: தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றியை காட்டுவோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.” என்று தெரிவித்துள்ளார்.

    13:36 (IST)21 Feb 2020

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்குகளை சிபிஐ விசாரிக்கக்கோரும் மனு மீது டிஎன்பிஎஸ்சி தலைவர், சிபிஐ, தமிழக தலைமைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு  பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை மார்ச் 20க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது 

    12:59 (IST)21 Feb 2020

    இனி 2 ஆயிரம் ரூபாய் கிடையாது...

    இந்தியன் வங்கி ஏடிஎம்களில், மார்ச் 1ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    12:37 (IST)21 Feb 2020

    தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் - ஆர்.கே.செல்வமணி

    தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்: இயக்குனரும் ஃபெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

    12:33 (IST)21 Feb 2020

    உதவியாளரின் இல்ல திருமண விழாவில் நடிகர் அஜித் பங்கேற்பு

    நடிகர் அஜித், பெரும்பாலும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இதை அவர் கொள்கையாகவே வைத்துள்ளார். இந்நிலையில், தனது உதவியாளரின் இல்ல திருமண விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோ, சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    11:58 (IST)21 Feb 2020

    கடல் வணிகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது – முதல்வர் பழனிசாமி

    கடல் வணிகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னை கிண்டியில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கல்வி, கலாச்சாரம், மருத்துவம் உள்ளிட்டவைகளில் தமிழகம் சிறந்து விலங்குவதால் தான் சிறந்த மாநிலத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

    11:23 (IST)21 Feb 2020

    தங்கம் விலை சவரனுக்கு ரூ 32 ஆயிரத்தை தாண்டியது

    தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,012 ஆகவும், சவரனுக்கு ரூ. 32,096 ஆக உள்ளது.

    10:21 (IST)21 Feb 2020

    இந்தியன் 2 விபத்து – கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் திட்டம்

    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இய்க்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சென்னை போலீஸ் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    09:58 (IST)21 Feb 2020

    CAA எதிர்ப்பு போராட்டத்தில் ‘பாகிஸ்தான் வெல்க’ என்று கோஷம்... இளம்பெண்ணுக்கு 14 நாட்கள் காவல்

    கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.  

    பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் மேடையில் பேசும் போது, பாகிஸ்தான் வெல்க என்று பொருள் தரும் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து நிறுத்தி ஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அந்தப் பெண் மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் மேடையேறி அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கீழிறக்கி கைது செய்தனர்.

    09:47 (IST)21 Feb 2020

    காரைக்குடியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். வயது 47. இவர் சிங்கப்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்துள்ளார். இதனிடையே சந்திரனுக்கு தொடர் இருமல், சளி பாதிப்பு இருந்ததால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காரைக்குடி அரசு மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதால், சந்திரன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Tamil nadu news today updates : சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது உண்மையல்ல. சர்வதேச சந்தையின் நிலவரப்படி உயர்த்தப்பட்டது. இருப்பினும் அடுத்த மாதம் விலைகள் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன. குளிர்காலத்தில் சமையல் சிலிண்டரின் நுகர்வு அதிகரிக்கிறது. இந்தமாதம் விலை அதிகரித்தது. அடுத்த மாதம் விலை குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu Tnpsc Coronavirus Kamalhaasan
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment