Advertisment

Tamil Nadu news today updates : ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை கூட்டுமாறு விசிக வலியுறுத்தல்

Breaking News in Tamil : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates : இலங்கையில் ஈஸ்டர் சண்டே அன்று நடைபெற்ற தொடர் தற்கொலைப்படை  தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெஹ்ரான் ஹாஷிம் என்பவர் பல முறை தமிழகத்திற்கு வந்து சென்றதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர்ந்து என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற சோதனையில் கோவையை சேர்ந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, Political events : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள



























Highlights

    20:57 (IST)13 Jun 2019

    விசிக தீர்மானம்

    பெரம்பலூரில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

    கால நீட்டிப்பு செய்யாமல் குறிப்பிட்ட மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

    மக்கள் தொகை அடிப்படையில் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும்

    ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளவும், போராட்டங்களை திட்டமிடவும் கூட்டணி கட்சிகளை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஆகியவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    20:03 (IST)13 Jun 2019

    மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை - பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்

    அந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் தனக்கு சொந்தமான மலாச்சி என்ற 34 வயது யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்குவதற்காக இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் அந்த யானையை கோவிலுக்கு வழங்காமல், பிச்சை எடுக்கச் செய்தும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தும் துன்புறுத்துவதாக கூறி, யானையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, யானையை இந்திரா துன்புறுத்தியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அதை முகாமிலோ, மிருக காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் எனவும் வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

    18:55 (IST)13 Jun 2019

    எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி

    டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 4 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    18:30 (IST)13 Jun 2019

    ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள் : கவர்னருக்கு ராமதாஸ் கடிதம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும், ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

    17:46 (IST)13 Jun 2019

    பா.ஜ. தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்வார்

    பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    17:25 (IST)13 Jun 2019

    9,400 லாரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம்

    சென்னையின் குடிநீர் தேவைக்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் கூறியுள்ளார்.  கழிவுநீரை சுத்திகரித்து நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் ஜூலையில் அமலுக்கு வருகிறது 9,400லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

    16:52 (IST)13 Jun 2019

    Latest Tamil News : ரஞ்சித்தை வரும் 19ம்தேதி வரை கைது செய்ய தடை

    இயக்குனர் பா.ரஞ்சித்தை, வரும் 19ம்  தேதி வரை கைது செய்ய போலீசாருக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.  அன்றைய தினம், திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    16:22 (IST)13 Jun 2019

    பா. ரஞ்சித் மீதான வழக்கு : முன் ஜாமீன் தர அரசு தரப்பு எதிர்ப்பு

    பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் போது மக்களால் கொண்டாடப்படும் ஒரு மன்னரைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    15:48 (IST)13 Jun 2019

    கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்

    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் 5ம் கட்ட அகழாராய்ச்சி பணிகள் இன்று துவங்கியுள்ளது. அதற்காக இன்று பூமி பூஜை தொடங்கியது. மாஃபா பாண்டியராஜன், பாஸ்கரன், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் அந்த பூமி பூஜையில் பங்கேற்றனர்.

    15:32 (IST)13 Jun 2019

    World Cup Cricket 2019 : வெற்றிக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் ?

    திமுக பொருளாளர் துரை முருகன் தான் எப்படி கிரிக்கெட் ரசிகனாக மாறினேன் என்று ஒரு ஸ்வாரசியமான பேட்டி ஒன்றை புதிய தலைமுறை சேனலின் நேர்காணலின் போது கூறியுள்ளார். 

    15:27 (IST)13 Jun 2019

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

    ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதால் சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது அவரின் கருத்து. தினப்பனந்தாள் காவல்துறை ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் ரஞ்சித். தலித் காங்கிரஸ் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவு தரும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

    14:32 (IST)13 Jun 2019

    NITI AYOG : 15ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர்

    வருகின்ற 15ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக நாளை டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவினை சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  17ம் தேதி நாடாளுமன்ற மக்களவை கூட இருப்பதை முன்னிட்டு 16ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    14:00 (IST)13 Jun 2019

    Tamil Nadu Weather : மேலும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று

    வட தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    13:57 (IST)13 Jun 2019

    தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்

    தமிழகத்தில் நடைபெறும்  முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமா ? 

    மேலும் படிக்க : Chennai Live News Updates: Annual fishing ban to end on June 15; Goods train derails between Tondiarpet and Korukupettai

    13:31 (IST)13 Jun 2019

    சுவாமி சங்கரதாஸ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு : பாக்யராஜ்

    வரும் 23ம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர்களின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

    விஜயகாந்தை சந்தித்த பின் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பேட்டியளித்ததாவது, எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக விஜயகாந்த் கூறியுள்ளார், எங்கள் அணி வெற்றிபெறும் என விஜயகாந்த் தெரிவித்ததாக  பாக்யராஜ் கூறியுள்ளார்.

    12:28 (IST)13 Jun 2019

    TNPSC : குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

    TNPSC : குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று கூறிய நீதிமன்றம் 17ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    12:22 (IST)13 Jun 2019

    புதிய பள்ளிக்கூடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்

    தமிழகத்தின் 84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. எஸ்.சி/எஸ்,டி மாணவர்களுக்கான விடுதிகளையும் திறந்து வைத்தார் முதல்வர்.

    12:19 (IST)13 Jun 2019

    கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார் மோடி

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று கிர்கிஸ்தான் சென்றுள்ளார் மோடி.   இதே மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இன்று கிர்கிஸ்தான் செல்ல உள்ளார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

    PM @narendramodi leaves for Bishkek, where he will join the SCO Summit. 

    12:17 (IST)13 Jun 2019

    பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் துவங்கியுள்ளது. தமிழகம் சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர்.  பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    11:31 (IST)13 Jun 2019

    36 எம்.பிக்களும் தங்களின் சொத்தை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழக மக்களின் கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன்களை திமுக காங்கிரஸ் எம்.பிக்கள் 37 பேரும் 6 மாத காலத்திற்குள் அடைக்க வேண்டும் என்றும், மக்களின் குடிநீர் பிரச்சனையை தங்களின் சொத்துக்களை விற்று தீர்க்க வேண்டும் என்று முன்னாள் கன்னியாகுமரி எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மதவாத அரசியல் மற்றும் பொய்பரப்புரைகள் மூலமாகவே தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

    11:27 (IST)13 Jun 2019

    தமிழக சட்டமன்றத்தை உரிய காலத்தில் கூட்ட வேண்டும் - சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன்

    தமிழக சட்டமன்றத்தை உரிய காலத்தில் கூட்ட வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக பேசிய அவர் ராஜராஜா சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என்றும் கூறியுள்ளார். 

    11:11 (IST)13 Jun 2019

    24ம் தேதி மீண்டும் காவிரி ஆணையம் ஆலோசனைக் கூட்டம் .. என்ன விவாதிக்கப்படும்?

    இந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் துவக்கத்தில் 4.5 டி.எம்.சி நீர் தமிழகம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 1 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி விவாதிக்க ஜூன் 24ம் தேதி டெல்லியில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் அழைப்பு

    11:00 (IST)13 Jun 2019

    New Education Policy : புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனை

    புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தொடர்பாக, சென்னை டிபிஐ வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள், இணைய் இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    10:57 (IST)13 Jun 2019

    Cauvery Management Board : 24ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

    காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் அடுத்த காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் ஜூன் மாதம் 25ம் தேதி கூடுகிறது.

    10:54 (IST)13 Jun 2019

    Cyclone Vayu Landfall Updates : இன்று மதியம் குஜராத்தில் கரையை கடக்கிறது வாயு

    குஜராத்தில் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது வாயு புயல். வாயு புயல் காராணமாக 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான முழுமையான அப்டேட்டினை உடனுக்குடன் அறிந்து கொள்ள 

    10:49 (IST)13 Jun 2019

    முல்லை பெரியாறின் குறுக்கே புதிய அணை - கேரள அரசு திட்டம்

    முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட ஆய்வு பணியை துவங்கியது கேரளா. தமிழக அரசு மற்றும் மக்களின் எதிர்ப்பினையும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது கேரள அரசு 

    10:44 (IST)13 Jun 2019

    NIA Raid in Coimbatore - ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது

    தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஐ.ஏ ஏழு இடங்களில் சோதனை நடத்த உள்ளூர் காவல்துறையினர் சிலர் 3 இடங்களில் தங்களின் சோதனைகளை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக என்.ஐ.ஏ வெளியிட்டு வருகிறது.

    Tamil Nadu news today updates :  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் சரிவினை சந்தித்தது அதிமுக. இதனைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமை அதிமுகவில் நீடித்தால் தான் அதன் எதிர்காலத்திற்கு நல்லாது என்று மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து ஒன்றை வெளியிட்டார். இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.  அதில் சில முக்கியமான முடிவுகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நீட், மும்மொழிக் கொள்கை, மத்திய ஆட்சி பங்கு..! அமைச்சர் ஜெயகுமார் சிறப்புப் பேட்டி

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment