Advertisment

News Highlights: திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

Tamil Nadu news today updates : தீபாவளி அன்று காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பலரும் பட்டாசு வெடித்தனர். இது தொடர்பாக நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 2020ம் ஆண்டு 428 வழக்குகளும், 2019ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

ஓய்வு பெறுகிறார் ட்வைன் ப்ராவோ

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ட்வைன் ப்ராவோ அறிவித்துள்ளார். அபுதாபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 91.43க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு கச்சாப்பொருட்களின் கலால் வரியை குறைத்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு பாஜகவின் இடைத் தேர்தல் தோல்வியே காரணம்: ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:32 (IST) 05 Nov 2021
    மலர்க்கொத்து பொன்னாடை பரிசுகள் வேண்டாம்... தொண்டர்களின் அன்பு மட்டும் போதும் - சசிகலா

    அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் மலர்க்கொத்து, பொன்னாடை, பரிசுகள் வழங்குவதை தவிர்க்கவும்; உங்களையெல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.



  • 21:47 (IST) 05 Nov 2021
    ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கம்

    நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதான போதைப்பொருள் வழக்கின் விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து சமீர் வான்கடே நீக்கம்; இந்த வழக்கை டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் எனவும் அறிவிப்பு



  • 21:45 (IST) 05 Nov 2021
    அதிமுக முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

    நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் மது போதையில், மற்றொருவரின் வீட்டுக்குள் நிர்வானமாக புகுந்ததாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 20:05 (IST) 05 Nov 2021
    ஆபரேஷன் ஜாப் ஸ்கேம்: மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை - டிஜிபிக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    ஆபரேஷன் ஜாப் ஸ்கேம்: வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை டி.ஜி.பி.க்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.



  • 19:52 (IST) 05 Nov 2021
    தமிழ்நாட்டில் இதுவரை உருமாறிய AY.4.2 கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சு

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்: “தமிழ்நாட்டில் இதுவரை உருமாறிய AY.4.2 கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவிற்கு விரைவில் புதிய ஆளுநர் சட்ட ஒப்புதல் வழங்குவார்; தமிழ்நாட்டில் இதுவரை 71% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.” என்று கூறினார்.



  • 17:59 (IST) 05 Nov 2021
    சென்னையில் 138 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

    இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் 138 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.



  • 17:57 (IST) 05 Nov 2021
    ஜெய்பீம் படத்திற்கு சீமான் வாழ்த்து

    பேசாப் பொருளை பேசத்துணிந்து ஆதி குடியான இருளர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளை உண்மையாக பதிவு செய்து உலகமறிய வழங்கி இருக்கிற என் உயிர் தம்பி சூர்யா அவரது இணையர் ஜோதிகா மனதாரா பாராட்டுகிறேன் வாழ்ததுகிறேன் என்று ஜெய்பீம் படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 16:02 (IST) 05 Nov 2021
    வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களை தேடும் பணி தீவிரம்

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வேத பாடசாலையில், வேதம் படிக்க வந்த மாணவர்கள் வராக ஆற்றில் வேடிக்கை பார்க்க சென்ற போது 2 மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தேடி அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களை தேடி வருகினறனர்.



  • 15:59 (IST) 05 Nov 2021
    இபிஎஸ் ஓபிஎஸ்க்கு தார்மீக உரிமை இல்லை - துரைமுருகன்

    கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக பொதுப்பணித்துறை அமைச்சர் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்லை என்று கூறியுளள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியாறு குறித்து பேசுவதற்கு இபிஎஸ் ஓபிஎஸ்க்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.



  • 15:02 (IST) 05 Nov 2021
    அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடை

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில், பார்வையாளர் ஒருவர் இறந்த நிலையில், 100 பேர் காயமடைந்ததால், வட்டாட்சியர் பிரவினா மேரி போட்டியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.



  • 14:46 (IST) 05 Nov 2021
    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்பநலநீதிமன்றத்தை நாட எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது



  • 13:58 (IST) 05 Nov 2021
    10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.



  • 13:07 (IST) 05 Nov 2021
    நடிகர் சூர்யா அஞ்சலி

    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.



  • 12:46 (IST) 05 Nov 2021
    சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

    சென்னையில் இன்று காலை வரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் நாளை வரை பட்டாசு கழிவுகள் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • 12:10 (IST) 05 Nov 2021
    பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

    முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8-ம் தேதி பாஜக சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • 11:22 (IST) 05 Nov 2021
    முல்லைப் பெரியாறு விவகாரம்: அதிமுகவின் போராட்ட அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது - துரைமுருகன்

    நீட் தேர்வுக்கு எதிராக எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்காத அதிமுக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா? அதிமுகவின் போராட்ட அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.



  • 11:01 (IST) 05 Nov 2021
    இரண்டு நாட்களில் ரூ. 431 கோடிக்கு மது விற்பனை

    தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் ரூ. 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ. 98.89 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து அதிகபட்சமாக ரூ. 79.84 கோடிக்கு சென்னையில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது



  • 10:59 (IST) 05 Nov 2021
    வானிலை அறிவிப்பு

    தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 10:14 (IST) 05 Nov 2021
    தங்கத்தின் விலை ஏற்றம்

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 424 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 36 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 10:07 (IST) 05 Nov 2021
    கொரோனா தடுப்பூசி முகாம் 14ம் தேதிக்கு மாற்றம்

    தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 8வது மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற 14ம் தேதிக்கு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:11 (IST) 05 Nov 2021
    சென்னையில் காற்றின் தரம்

    பட்டாசு புகையால் அபாயகரமான நிலையில் சென்னையின் காற்றின் தரம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று தரக் குறியீட்டில் அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 ஆக பதிவாகியுள்ளது. மணலியில் 578 ஆக காற்றின் தரக்குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இயல்பு நிலையைக் காட்டிலும் 20 மடங்கு அதிகம்.



  • 09:10 (IST) 05 Nov 2021
    கேதர்நாத் செல்கிறார் மோடி

    ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சமாதி திறப்பு விழாவிற்காக கேதர்நாத் செல்ல இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தற்ஓது உத்தரகாண்ட் சென்றுள்ளார். அவரை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குர்மித் சிங் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்

    Prime Minister Narendra Modi arrives at Dehradun airport, to proceed to Kedarnath to offer prayers at the shrine and inaugurate Shri Adi Shankaracharya Samadhi



    The PM was received by Uttarakhand Governor Lt Gen Gurmit Singh (Retd) and CM Pushkar Singh Dhami



    (Pic source: CMO) pic.twitter.com/wA1HFgZquz

    — ANI (@ANI) November 5, 2021


  • 09:10 (IST) 05 Nov 2021
    மாநகராட்சியானது ‘தாம்பரம்’

    தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம். தாம்பரத்தை மையமாக கொண்டு அதன் அருகில் உள்ள பகுதிகளையும் இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் மாநகராட்சி குறித்து அறிவிப்பு வெளியானது.



  • 09:10 (IST) 05 Nov 2021
    கொரோனா உயிரிழப்பு - WHO எச்சரிக்கை

    2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் கொரோனா தொற்றால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக தளர்வுகள், தடுப்பூசி பற்றாக்குறை ஆகியவையே இதற்கு காரணமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.



Tamil Nadu Chennai Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment