Advertisment

Tamil News Updates: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகிறது - முதல்வர் ஸ்டாலின்

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates : மாவட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம் - முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu news today updates: முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 90-வது பிறந்த நாள் இன்று.

Advertisment

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ. 102.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ. 98.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. *

உலகையே உலுக்கும் பண்டோரா பேப்பர்ஸ் என்றால் என்ன?

ஐ.பி.எல். இறுதிப் போட்டிகள்

ஐ.பி.எல். 14வது சீசனின் இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.

IPL 2021 Final: சென்னை- கொல்கத்தா இன்று மோதல்: 4-வது முறை சாம்பியன் ஆகுமா சிஎஸ்கே?

வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இனி வழக்கம் போல் வழிபாட்டு தலங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததால் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. அதே போன்று மழலையர், நர்சரி பள்ளிகளும் திறப்பதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி

வானிலை

தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:20 (IST) 15 Oct 2021
    பெரியார் குறித்து அவதூறு - யூடியூபர் தட்சிணாமூர்த்தி கைது!

    சென்னையில் பெரியார் குறித்து சமூக வலைத் தளங்களில் இழிவாக பேசியதாக புகாரில் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வந்த சீதையின் மைந்தன் என்கின்ற தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 20:12 (IST) 15 Oct 2021
    உலக பட்டினி குறியீடு: இந்தியாவின் தரவரிசையில் அதிர்ச்சி; அறிவியல் பூர்வமானது அல்ல - மத்திய அரசு

    2021ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இந்தியா அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திற்கு பின்னால் உள்ளது.

    உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தரவரிசைக்கு பயன்படுத்தப்படும் முறையை அறிவியல் பூர்வமானது அல்ல என்றும் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.



  • 19:02 (IST) 15 Oct 2021
    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகிறது; அனைவருக்கும் அடிப்படை கல்வி என்ற இலக்கை எளிதாக அடைந்துவிட்டோம்; தொழில் முனைவோர்களை உருவாக்கும் மேலாண்மை நிறுவனங்கள் பெருக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:25 (IST) 15 Oct 2021
    இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

    இலங்கை கடற்படை கைது செய்த 23 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் செயலுக்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.



  • 17:23 (IST) 15 Oct 2021
    தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டி அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், திருவண்ணாமலை, ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 16:42 (IST) 15 Oct 2021
    ஆப்கானிஸ்தானில் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்

    ஆப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றவர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு்ளளது. இந்த தாக்குதலில் 32 பேர் பலியாகியுள்ளனர்.



  • 16:16 (IST) 15 Oct 2021
    தூத்துக்குடியில் பிரபல குற்றவாளி சுட்டுகொலை

    தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவர் முள்ளகாடு அருகே போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். போலீசாரை தாக்க முயற்சித்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல்



  • 15:51 (IST) 15 Oct 2021
    தேவைப்பட்டால் மேலும் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் - அமித்ஷா

    கோவாவில் தேசிய தடை அறிவியில் கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த ஆட்சியில் இந்திய எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும், அப்போதைய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறினார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றதாக கூறிய அவர், சர்வதேச எல்லையில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையான்மையை நிலைநாட் தேவைப்பட்டால் மேலும் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.



  • 15:46 (IST) 15 Oct 2021
    அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது - ஜெயக்குமார்

    சசிகலாவால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர் எங்கு சென்றாலும் கவலையில்லை என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.



  • 14:54 (IST) 15 Oct 2021
    ஆட்கொல்லி புலி சிக்கியது

    *நீலகிரி" மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்த இன்னு வனத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டது.



  • 14:33 (IST) 15 Oct 2021
    ஜெய் பீம்' பட டீசர் வெளியீடு

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிரான சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 14:07 (IST) 15 Oct 2021
    தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா 4 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி தயாரான பட்டாசுகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 13:49 (IST) 15 Oct 2021
    தமிழக ஆளுநர் 5 நாள் ஊட்டி பயணம்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக குடும்பத்துடன் இன்று மாலை ஊட்டி செல்கிறார். ஊட்டியில், சுற்றுலா தளங்களை பார்வையிடும் ஆளுநர் அக்டோபர் 19-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.



  • 13:37 (IST) 15 Oct 2021
    கோயம்பேடு பாலத்தை திறக்க வேண்டும்

    சென்னை, கோயம்பேடு பாலத்தை போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



  • 13:25 (IST) 15 Oct 2021
    தேர்தல் நேர்மையாக இல்லை - ஜெயக்குமார்

    உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு இல்லை என்றும் தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி, தோல்வி சமமாக இருந்திருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



  • 13:18 (IST) 15 Oct 2021
    6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி ,கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:29 (IST) 15 Oct 2021
    39 பகுதிகளில் கொரோனா பரவல் குறைவு

    அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளித்த தகவலின் படி, அமெரிக்காவின் 39 பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதே சமயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 60 லட்சமாக குறைந்துள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளர்.



  • 12:24 (IST) 15 Oct 2021
    உள்ளாட்சி தேர்தல் - கட்சிகளின் வெற்றி விகிதம்

    மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக - 89.54%, காங்கிரஸ் - 5.23%, அதிமுக - 1.31%, மற்றவை - 1.96% இடங்களை கைப்பற்றியுள்ளது.



  • 12:24 (IST) 15 Oct 2021
    சூரசம்ஹாரம் நிகழ்வு

    புகழ் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது. பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வரும் பக்தர்கள், தங்கள் ஊர்களிலேயே நாளை காப்புகளை அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.



  • 12:19 (IST) 15 Oct 2021
    ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு

    ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வில் 1.41 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • 11:10 (IST) 15 Oct 2021
    இந்தியாவின் எதிரி என கலாம் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம் - முதல்வர் ட்வீட்

    இன்று முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினம். பலரும் அவருடைய நினைவுகளை போற்றி தங்களின் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து, தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் பெயர்பெற்று; பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்!

    — M.K.Stalin (@mkstalin) October 15, 2021


  • 10:05 (IST) 15 Oct 2021
    எரிமலை வெடிக்கும் பகுதியில் நிலநடுக்கம்

    ஸ்பெய்னில் உள்ள லா பால்மா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து 60 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4.5 என்ற அளவில் ரிக்டர் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் தற்பொது அந்த தீவுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.



  • 10:04 (IST) 15 Oct 2021
    எரிமலை வெடிக்கும் பகுதியில் நிலநடுக்கம்

    ஸ்பெய்னில் உள்ள லா பால்மா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து 60 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4.5 என்ற அளவில் ரிக்டர் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் தற்பொது அந்த தீவுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.



  • 09:58 (IST) 15 Oct 2021
    தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அனுமதி அளிக்கிறது ஆஸ்திரேலியா

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு வரலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எந்தவிதமான தனிமைப்படுத்தலும் தேவையில்லை என்றும் அறிவிப்பு



  • 09:20 (IST) 15 Oct 2021
    வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு

    வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் விஜயதசமி நாளான இன்று சென்னை மற்றும் இதர பகுதிகளில் இருக்கும் கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.



  • 09:17 (IST) 15 Oct 2021
    காச நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 லட்சம் - WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

    கொரோனா தொற்று நோய் காரணமாக, காசநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காசநோய் உயிரிழப்புகளைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது என்று WHO அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் ஊரடங்கின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 08:32 (IST) 15 Oct 2021
    மயக்க ஊசி செலுத்திய நிலையில் புலி தப்பி ஓட்டம்

    கூடலூர் பகுதியில் மனிதர்களை தாக்கிய டி23 புலியை தேடும் பணி 21வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2 முறை மயக்க ஊசி செலுத்தியும் நேற்று இரவு மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடியது அந்த புலி.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment