Advertisment

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Flash News in Tamilnadu Today: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்து கடவுளான ராமருக்கு கோவில் கட்டும் பணி, அடுத்தாண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமியில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள அறக்கட்டளையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெற மாட்டார். அமைச்சர்கள் யாரையாவது அவர் நியமிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சன்னி வக்ப் வாரியத்துக்கு அளிப்பதற்காக, 5 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisment

அயோத்தி வழக்கில், இந்துக்களின் நம்பிக்கைக்கு, நீதிபதிகள் மதிப்பளித்துள்ளனர். தீர்ப்பில், 'ராமபிரான், அயோத்தியில் தான் அவதரித்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில், எந்த சந்தேகமும் இல்லை. 'இதை, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை, உச்ச நீதிமன்றம் மதிக்கிறது' என, ஒருமித்த கருத்தில், நீதிபதிகள் கூறியுள்ளனர். அயோத்திக்கு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோரே, சபரிமலை வழக்கிலும் தீர்ப்பளிக்க உள்ளனர்.

இந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை. எனவே, ஹிந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை பரிசீலிக்குமா அல்லது பாலின சமத்துவம் என்ற அடிப்படையில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவே செல்லும் என அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அயோத்தி தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து, சபரிமலைக்கும் தீர்ப்பு கிடைக்கும் என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:39 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் துரதிர்ஷ்டவசமானது - தேவேந்திர ஃபட்னாவிஸ்

    மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2019 சட்டமன்றத் தேர்தலில், பாஜக, சிவசேனா, ராஷ்டிரிய சமாஜ் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, ரியாத் கிரந்தி மற்றும் சிவ் சங்கிராம் ஆகியோர் அடங்கிய மஹா யுத்திக்கு மக்கள் தெளிவான ஆணை வழங்கினர். ஆணை இருந்தபோதிலும், ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. அரசியல் நிகழ்வுகள் ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுத்தது. இது துரதிர்ஷ்டவசமானது. இன்று, மகாராஷ்டிரா மாநிலம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. பருவம் தப்பிய மழையால் பெரும் பயிர் சேதத்தால் விவசாயிகள் கவலையில் உள்ளது முக்கிய பிரச்னையாக உள்ளது. அரசாங்கம் இல்லாத நிலையில், மாநிலத்தின் அன்றாட செயல்பாடு பாதிக்கப்படும். இது இறுதியில் மக்களின் நல்வாழ்வை பாதிக்கும். எனவே, இந்த முன்னேற்றங்களை அவர்கள் தீவிரமாக பரிசீலித்து, அரசுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை வழங்குவதில் பணியாற்ற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தீவிர வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    21:54 (IST)12 Nov 2019

    வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா ஒன்றாக பணியாற்றும்: உத்தவ் தாக்கரே

    செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சேனா ஆகியவை வெவ்வேறு சித்தாந்தங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் ஒன்றாக வேலை செய்வதற்கான வழியைக் கண்டடைவார்கள். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதில், நாங்கள் 48 மணிநேரம் கேட்டோம். ஜனாதிபதி எங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு காங்கிரஸ்-என்.சி.பி அவர்களின் ஆதரவை நேற்று முறையாக நாங்கள் கோரியுள்ளோம். எங்களுக்கு 48 மணிநேரம் தேவை. ஆனால், ஆளுநர் எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை” என்று கூறினார்.

    21:47 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி எதிர்பார்க்கவில்லை - பாஜக

    பாஜக கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் சுதிர் முகந்திவார் கூறுகையில், “ஜனாதிபதி ஆட்சி நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. மக்கள் ஆணையை உறுதிப்படுத்த நாங்கள் நிச்சயமாக முயற்சிப்போம். நிலையான அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்போம். நாங்கள் மாநில மக்களுக்கு ஆதரவாக நிற்போம்” என்று கூறினார்.

    20:58 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி; மத்திய அரசு சட்டத்தை பின்பற்றவில்லை - காங்கிரஸ் அஹமது பட்டேல்

    மும்பை சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஹமது படேல், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியதை விமர்சித்தார்.

    மும்பையில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய அஹமது படேல்: அரசமைக்க ஏன் காங்கிரஸ் அழைக்கப்படவில்லை; மத்திய அரசு சட்டத்தைப் பின்பற்றவில்லை. சிவசேனா முதல்முறையாக நவம்பர் 11 அன்று காங்கிரசுக்கும் என்சிபிக்கும் அழைப்பு விடுத்தது. இது போன்ற ஒரு முக்கியமான விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்தாலோசிக்க வேண்டும். சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்படும்” என்றுஅஹமது படேல் கூறினார்.

    சரத் பவார் கூறுகையில், “நாங்கள் ஒன்றாக தேர்தலை சந்தித்துள்ளோம். நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் சிவசேனாவுடன் பேச முடியும்” என்று கூறினார்.

    19:39 (IST)12 Nov 2019

    சிவசேனாவுக்கு ஆளுநர் அவகாசம் வழங்க மறுத்ததை நாளை விசாரணையில் குறிப்பிடுங்கள்: உச்ச நீதிமன்றம்

    என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆதரவு கடிதங்களைப் பெறுவதற்கு ஆளுநர் கால அவகாசம் வழங்க மறுத்ததை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் இன்று இந்த விசாரிக்காது என்று தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை குறிப்பிடுமாறு உச்ச நீதிமன்றம் சிவசேனா மனுதாரரிடம் கூறியுள்ளது.

    சிவசேனா வழக்கறிஞர் அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்.

    18:43 (IST)12 Nov 2019

    டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

    செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் டிச.16 முதல் விருப்பமனு விநியோகம். டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று கூறினார்.

    18:27 (IST)12 Nov 2019

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

    6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

    தேர்வு முடிவுகளை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளங்களில் காணலாம்.

    18:07 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிரா சட்டமன்றம் சஸ்பெண்ட் - உள்துறை அமைச்சகம்

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர், மாநில சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஜனாதிபதியிடம் கூறினார். ஆனால், அரசாங்கம் அமைப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் அவரால் காண முடியவில்லை. எனவே ஜனாதிபதி ஆட்சிக்காக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    18:02 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றதில் முறையிடும் என எதிர்பார்ப்பு

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது மனு தாக்கல் செய்யக்கூடும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக சிவசேனா இன்று இரண்டாவது மனுவை தாக்கல் செய்யும் என்று சிவசேனா சார்பாக முதல் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

    17:49 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    17:14 (IST)12 Nov 2019

    வெற்றிடம் என்று ரஜினி எதை சொல்கிறார் என தெரியவில்லை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க அகழிகள் அமைக்கப்படும். கொடைக்கானல் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

    ரஜினி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறியது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் திண்டுகல் சீனிவாசன், வெற்றிடம் என்று ரஜினி எதை சொல்கிறார் என தெரியவில்லை என்று கூறினார்.

    17:03 (IST)12 Nov 2019

    மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி - முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

    மத்திய ஜவுளித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி உடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் சந்திப்பு.

    இந்த கூட்டத்தில் ஜவுளித்துறை மேம்பாடு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    16:58 (IST)12 Nov 2019

    நடிகர் அதர்வா மீது திரைப்பட விநியோகஸ்தர் புகார்

    நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    16:02 (IST)12 Nov 2019

    "சிவசேனா நிச்சயம் ஆட்சி அமைக்கும்" - ஹிந்தி கவிதையை சுட்டிக்காட்டி சஞ்சய் ராவத் பதிவு

    அலையை பார்த்து அச்சப்படுபவன் , கடலை நீந்தி கடக்க முடியாது என்ற ஹிந்தி கவிஞர் சோகன்லால் துவிவேதி, எழுதிய பாடலை மேற்கோள்காட்டி, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் ராவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் கக்தா சாண்ட்யா பத்வி கூறியுள்ளார்.

    16:01 (IST)12 Nov 2019

    காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு : சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட மீனவ மக்கள்

    சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலைபார்த்து வந்தவர் சிதம்பரம் முருகேசன். இவரை அம்பத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்த அப்பகுதி மீனவ மக்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    15:36 (IST)12 Nov 2019

    குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

    மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் சட்டப்படி ஆட்சியை அமைக்க இயலவில்லை என்று ஆளுநர் பகத்சிங் அறிக்கை

    மகாராஷ்டிரா தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானதால் நடவடிக்கை

    15:36 (IST)12 Nov 2019

    சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

    ஆலோசனையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

    புயல் பாதிப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை.

    15:13 (IST)12 Nov 2019

    உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுத் தாக்கல்

    மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் போதுமான கால அவகாசம் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுத் தாக்கல் செய்துள்ளது.

    சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

    15:02 (IST)12 Nov 2019

    பிரேசில் புறப்பட்ட பிரதமர் மோடி

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி

    15:02 (IST)12 Nov 2019

    வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பாறையில் மோதி விபத்து

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, காலை 8 மணியளவில் திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி , சாலையோரத்தில் உள்ள பாறையில் மோதி நகர முடியாமல் நின்றது. இதனால், இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் அணிவகுத்து நிற்கின்றன. தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரியை கிரேன் மூலம் நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் பழுது ஏற்பட்டு நிற்பதும், விபத்துக்கும் உள்ளாகி வருகின்றன. இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    15:01 (IST)12 Nov 2019

    தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன : உதகை மலை ரயில் சேவை ரத்து

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக ஷில்குரோ மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சென்றது.

    15:00 (IST)12 Nov 2019

    நாளை வெளியாகும் முக்கிய தீர்ப்பு

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

    14:46 (IST)12 Nov 2019

    செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன்

    இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்ற செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன்

    14:45 (IST)12 Nov 2019

    'பாலிகீட்ஸ்' புழுக்களை ஏற்றுமதி செய்ய முயன்றவர்கள் கைது

    ராமநாதபுரம் : மண்டபம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் 'பாலிகீட்ஸ்' புழுக்களை சென்னைக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற 8 பேர் கைது.

    14:35 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - அமைச்சரவை பரிந்துரை?

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    14:16 (IST)12 Nov 2019

    சுப்ரீம் கோர்ட்டை நாட சிவசேனா திட்டம்

    மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என சிவசேனா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    14:13 (IST)12 Nov 2019

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசியல் வெற்றிடம் பற்றி ரஜினியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் வீர பிள்ளைகளான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாக வெற்றிடத்தை நிரப்பிவிட்டதாக கூறினார்.

    தொடர்ந்து சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலாவை ஏற்றுக் கொள்வது குறித்து முதலமைச்சரும் , துணை முதலமைச்சரும் என்ன முடிவு எடுத்தாலும் அதனை தாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

    14:04 (IST)12 Nov 2019

    மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க ஆளுநர் பரிந்துரை?

    மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க இன்றிரவு 8.30 மணி வரை ஆளுநர் கால அவகாசம் அளித்திருந்த நிலையில், ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில், ஜனாதிபதி ஆட்சி குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:46 (IST)12 Nov 2019

    உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்

    பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

    உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது.

    மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக் கல்லூரிகளின் தேர்வு அட்டவணைகளும் கோரப்பட்டுள்ளன.

    அதன்படி தேர்வுகள் முடிந்த பின்னர் உள்ளாட்சித்தேர்தலை நடத்தலாம் என திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்வுக்கு பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் அட்டவணைகளை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    13:44 (IST)12 Nov 2019

    வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் போட்டியிடலாம்

    உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் - தமிழக அரசு அரசாணை

    வரும் உள்ளாட்சி தேர்தல் முதல் இதனை அமல்படுத்தப்படுத்த அதிகாரிகள் திட்டம்.

    13:19 (IST)12 Nov 2019

    பாஜக உறுதியளித்த வேலைவாய்ப்புகள் எங்கே? – ஸ்டாலின் கேள்வி

    பாஜக உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கே?  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறைவு, பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    12:51 (IST)12 Nov 2019

    அமெரிக்காவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு கவுரவம்

    அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன், ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நெபர்வில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

    12:26 (IST)12 Nov 2019

    திமுக தலைவர் ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு

    உள்ளாட்சி தேர்தல் தேதி  விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.

    திமுக தலைமையிலான கூட்டணியிலேயே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்வதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    11:36 (IST)12 Nov 2019

    உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்ப மனு ஏன்? – முதல்வர் விளக்கம்

    கால அவகாசம் குறைவு என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்ப மனு பெறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

    அதிமுக கொடி கம்பம் விழுந்து, பெண் படுகாயமடைந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை என்று பதிலளித்துள்ளார்.

    11:25 (IST)12 Nov 2019

    பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன்,  ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார். தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் பரோல் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu news today updates : காற்று மாசை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். காற்று மாசு அதிகரித்துள்ளது தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று, அமைச்சர் உதயகுமார் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், வருவாய் துறை பொறுப்பு செயலர் ககன்தீப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆய்வு கூட்ட முடிவில், அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: ஒரு வாரமாக, சென்னையில் அதிகாலையில் மேக மூட்டமாக இருப்பதற்கான காரணம் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.

    கர்நாடகாவைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, காங்., மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, 17 பேர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment