Tamil Nadu news today updates: சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் சேலத்தில் 19ம் தேதி முதல்வர் துவக்கிவைப்பு

Tamil News Today Latest Updates: தமிழ்நாடு அரசியல், வானிலை, கல்வி, விளையாட்டு, தங்கம்- வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல் விலை தொடர்பான முக்கிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: தமிழ்நாடு மற்றும் இந்தியா தொடர்பான உடனடிச் செய்திகளின் தமிழ் தொகுப்பாக இந்தப் பகுதி அமைகிறது. அரசியல் மற்றும் இதர நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த ‘லைவ் ப்ளாக்’கில் தெரிந்து கொள்ளலாம்.

*மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து, கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

*சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு விலை ரூ.192 உயர்ந்து ரூ.28,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ74.78-க்கும், டீசல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ69.08-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

*அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அளித்த பேட்டியில், ‘சினிமாவில் வேண்டுமானால் கமல் முதலமைச்சர் ஆகலாம். முழுநேர அரசியல்வாதி எனக்கூறியவர் மீண்டும் சினிமா, தொலைக்காட்சியில் நடிக்கிறார். நடிகராக உள்ள கமலுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என்றார்.

*சென்னை மெட்ரோ ரயில் சேவையில் டிக்கெட் இயந்திர கோளாறால் இன்று காலையில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இப்படி இலவசமாக அனுமதிக்கபட்டனர். பின்னர் இயந்திரம் சரியானதும் டிக்கெட் கட்டணம் வசூல் தொடங்கியது.

*சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குடிநீர் பஞ்சத்தை போக்க இந்த மழை உதவும் என்பதால் சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி. அதேசமயம் திடீர் மழையால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்கிறவர்கள் அவஸ்தைப்பட்டனர்.

ஈரோடு, தருமபுரி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய பகுதிகளிளும் பரவலாக மழை பெய்தது. கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறினார்.

*முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழ்நாடு அரசியல், வானிலை, கல்வி, விளையாட்டு, தங்கம்- வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல் விலை தொடர்பான முக்கிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

21:41 (IST)17 Aug 2019
சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் சேலத்தில் 19ம் தேதி முதல்வர் துவக்கிவைப்பு

சேலத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை வரும் 19ம் தேதி  முதல்வர் பழனிசாமி துவங்கி வைக்கிறார் . ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் இத்திட்டம் மூலம் அதிகாரிகள் மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று மனுக்களை பெற்று தீர்வு காண்பார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20:30 (IST)17 Aug 2019
பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை – அமைச்சர் தங்கமணி

பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

19:44 (IST)17 Aug 2019
விரைவில் மயிலாடுதுறை தனிமாவட்டம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை பரிசீலித்து அடுத்த ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

18:59 (IST)17 Aug 2019
பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

18:58 (IST)17 Aug 2019
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு, நாளை மறுநாள்( 19ம் தேதி)  முதல் அமலுக்கு வருகிறது. எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.  பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

18:25 (IST)17 Aug 2019
திருச்சி – சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சி - சென்னை எழும்பூர் இடையே நாளை (18ம் தேதி)  இரவு 9.10 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதேரயில், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருச்சி இடையே நாளை மறுநாள் (19ம் தேதி)  நண்பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

17:09 (IST)17 Aug 2019
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

எந்த முதல்வரும் படைக்காத சாதனையை முதலமைச்சர் படைத்து வருகிறார், அவர்மீது உள்ள ஆதங்கத்தில் முதல்வரின் அமெரிக்க பயணத்தை ஸ்டாலின் குறை கூறுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், கமலின் கட்சி மழையில் முளைத்த காளான் போன்றது அந்த கட்சிக்கு கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை  என்றும் அவர் கூறியுள்ளார். 

16:48 (IST)17 Aug 2019
அத்தி வரதர் உற்சவ சந்திப்பு!

அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளும் முன் அத்திவரதரின் கடைசி தரிசனம் தொடங்கியது.    கடந்த 48 நாட்கள் மக்கள்ளுக்கு காட்சியளித்த அத்தி வரதர் இன்று விடை பெறுகிறார். இதோடு 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் தரிசனத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவார். 

15:56 (IST)17 Aug 2019
விநாயக சதுர்த்தி!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இப்போதே களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், தெருக்கள். பொது இடங்களில்   விநாயகர் சிலைகளை வைக்க உரிய அதிகாரியிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகே நிறுவ வேண்டும் - என்று காவல்துறை உத்தரவு  பிற்பித்துள்ளார். 

15:20 (IST)17 Aug 2019
அணை திறப்பு!

கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிற்பித்துள்ளார்.  முதல்வர் பழனிசாமியின் இந்த அறிவிப்பால டெல்சா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

14:37 (IST)17 Aug 2019
வீட்டை காலி செய்ய உத்தரவு!

ஆந்திரா வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டில் வெள்ள நீர் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டை காலி செய்ய வலியுறுத்தி  சந்திரபாபு நாயுடுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 

14:29 (IST)17 Aug 2019
அத்தி வரதர் தரிசனம்!

கடந்த 48 நாட்களாக விஷேசமாக நடந்து வந்த அத்தி வரதர் தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்தது.இந்நிலையில், இன்று  காலை செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அத்திவரதர் தரிசனத்தில் தங்களுடன் பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். மேலும், 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்  என்றார்.

துப்புரவு பணியாளர்கள் மேலும் 2 நாட்களுக்கு துப்புரவு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்,  அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளதாகவும் அவர் கூறினார். 

14:22 (IST)17 Aug 2019
நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ப்பூர் பயணம்!

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

14:19 (IST)17 Aug 2019
முரசொலி மாறன் பிறந்த நாள்!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முரசொலி அலுவலக வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்கும் அவர், மலர்தூவி மரியாதை செய்தார். 

12:58 (IST)17 Aug 2019
Vellore MK Stalin Meeting Postponed: வேலூர் வெற்றி- நாளை மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) வாணியம்பாடியில் நடைபெறுவதாக இருந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்பதாக இருந்தது.

தற்போது தொடர் மழையின் காரணமாக இந்தப் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் அதே வாணியம்பாடியில் வரும் 25.08.19 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Nadu news today live updates: காஞ்சிபுரத்தில் கோலாகலமாக 48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. இன்று மாலை மீண்டும் அனந்த சரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர். இதையொட்டி காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில், ‘அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடக்க உதவிய காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’ என்றார்.

ஆட்சியர் பொன்னையா மேலும் கூறுகையில், ‘துப்புரவு பணியாளர்கள் மேலும் 2 நாட்களுக்கு துப்புரவு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது. 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்’ என்றார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

*டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நேற்று இரவு பாஜக முக்கியத் தலைவர்கள் சென்று பார்த்தனர்.

 

Web Title:

Tamil nadu news today live weather news in tamil athivaradhar last date chennai news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close