Advertisment

Tamil Nadu News Today: 'என்னைப் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை' - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.68 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.54 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN local body election News Live Updates

TN local body election News Live Updates

Flash News in Tamilnadu Today Updates:  2017-18ம் ஆண்டின் நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு ( Consumer Expenditure Survey ) முடிவுகளை டேட்டாவின் தரம் சரியில்லை என்ற காரணத்தால் இந்த ஆண்டு வெளியிடப் போவதில்லை என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 40 அண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமபுறங்களில் மக்கள் குறைவாக செலவு செய்கின்றனர் என்ற செய்தி இந்த கணக்கெடுப்பில் இருப்பதால் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட மறுப்பதாக அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இது குறித்து தெரிவிக்கையில்,"டேட்டாவின் தரத்தை உயரத்தி 2021-22ம் ஆண்டில் பிதிய நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு ( Consumer Expenditure Survey ) முடிவுகளை அரசு வெளியிடும்" என்று தெரிவித்துள்ளது.

Advertisment

இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடை பெற்று வருகிறது .   இலங்கை பொதுசன முன்னணி (எஸ்.எல்.பி.பி) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்,  ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் (யு.என்.பி) சஜித் பிரமதாஸவுக்கும் இடையில் கடுமையான  போட்டி நிலவுகிறது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், அவரது கட்சி சார்பாக எந்த வேட்பாளரும் அதிபர்  தேர்தலில் களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற முக்கிய செய்திகளை இந்த  லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:03 (IST)16 Nov 2019

    கருணாநிதியின் குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் தலைவர் தான்

    கருணாநிதியின் குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் அவர்கள் தான் எங்களுக்கு தலைவர். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தினால் திமுகதான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் - திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

    22:02 (IST)16 Nov 2019

    ரூ.23 கோடி பறிமுதல்

    கரூர் மாவட்டத்தில் தனியார் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல்.

    22:02 (IST)16 Nov 2019

    6.31 லட்சம் பேருக்கு ரூ.4,520 கோடி பயிர்க்கடன்

    5 லட்சம் பேருக்கு கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 6.31 லட்சம் பேருக்கு ரூ.4,520 கோடி பயிர்க்கடன் கொடுக்கப்பட்டுள்ளது - செல்லூர் ராஜு

    20:54 (IST)16 Nov 2019

    காற்று மாசு அதிகம் கொண்ட உலகின் 10 நகரங்களின் பட்டியல் வெளியீடு

    தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ''ஸ்கை மேட்'' காற்று மாசு அதிகம் கொண்ட உலகின் 10 நகரங்களை காற்றின் தரக் குறியீட்டெண் விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளது. இதில் அதிக மாசு கொண்ட நகரங்கள் பட்டியலில், டெல்லி முதலிடத்தில் உள்ளது.

    பாகிஸ்தானின் லாகூர் 2வது இடத்திலும், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் 3-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரம் 4-வது இடத்திலும், கொல்கத்தா 5-வது இடத்திலும், சீனாவின் செங்டூ நகரம் 6-வது இடத்திலும் உள்ளன. 7-வது இடத்தில் வியட்நாமின் ஹானோய் நகரமும், 8-வது இடத்தில் சீனாவின் குவாங்சூ நகரும் உள்ளன.

    இந்தியாவின் தொழில் நகரமான மும்பை 9-வது இடத்திலும், நேபாளத்தின் காத்மாண்டு நகரம் 10-வது இடத்திலும் உள்ளன.

    20:52 (IST)16 Nov 2019

    என்னைப் பற்றி பேசக்கூடாது - மு.க.ஸ்டாலின்

    தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்னைப் பற்றி பேசக்கூடாது

    நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை; மக்கள் நலனுக்காக சிறை சென்றேன்

    20:26 (IST)16 Nov 2019

    சபரிமலை - 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

    சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு தரிசிக்க ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பம்பையில் தடுத்து நிறுத்திய கேரள போலீசார் சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்து கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.

    20:25 (IST)16 Nov 2019

    யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை

    உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார் - ஸ்டாலின்

    19:30 (IST)16 Nov 2019

    காய்த்த மரம்தான் கல்லடி படும் - மு.க.ஸ்டாலின்

    காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள்

    தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள்

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி; மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை

    -மு.க.ஸ்டாலின்

    19:13 (IST)16 Nov 2019

    விவேகத்தை விட வேகம் தான் தேவை - தமிழிசை

    'தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை'

    தேர்வு நடைபெறுவதற்கு முன்பு படித்தால் நன்மை இல்லை; அன்றன்றே பாடங்களை படிக்க வேண்டும்

    - மதுரை மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

    19:12 (IST)16 Nov 2019

    சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் தான் முதல்வர்

    மகாராஷ்டிராவில் அமையப்போகும் ஆட்சியில் சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக இருப்பார் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி

    19:11 (IST)16 Nov 2019

    தற்போதைய நிலையே தொடர உத்தரவு

    பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கும் 4 கல்லூரி முதல்வர்களின் நியமனத்தை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.

    தற்போதைய நிலையே தொடர பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

    19:10 (IST)16 Nov 2019

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த அரையிறுக்கு முன்னேறியுள்ளார், காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கை ஸ்ரீகாந்த் எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், காயம் காரணமாக சென் லாங் விலகினார்.

    18:24 (IST)16 Nov 2019

    டெங்கு - பெண் குழந்தை பலி

    சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேத்தரீன்(4) என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. 

    18:23 (IST)16 Nov 2019

    முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சி மணிமண்டபம் : அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் ஆய்வு

    கடலூரில் அமைக்கப்பட்டுள்ள ராமசாமி படையாச்சி மணிமண்டபத்தை அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சிக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.

    18:22 (IST)16 Nov 2019

    ஊர்கூடி தேர் இழுத்தால் மட்டும் உள்ளாட்சி தேர்தல் சாத்தியம் - தேர்தல் ஆணையர் பழனிசாமி

    உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் பணிகளை அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டும் உள்ளாட்சி தேர்தல் சாத்தியம் எனவும் பழனிசாமி கூறினார்.

    18:20 (IST)16 Nov 2019

    உள்ளாட்சி தேர்தல் : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

    தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், 2018ஆம் ஆண்டில் மறுவரையறை செய்தது நடைமுறையில் இருக்கும் என்பதால், தேர்தலை பாதிக்காது என்று கூறியுள்ளார். 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த முன்வந்தபோது, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி மறுவரை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்றது திமுக என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வார்டு மறுசீரமைப்பு மற்றும், இடஒதுக்கீடு குறித்து அரசாணைகள் வெளியிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார். 2020-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணி துவங்க இருப்பதால், அதன் பிறகு நிர்வாக அலகை மாற்ற முடியாது என்பதால், ஏற்கனவே மக்கள் கோரியபடி, மாவட்டங்களை பிரித்துள்ளதாக அமைச்சர் வேலுமணி அறிக்கை விடுத்துள்ளார்

    17:28 (IST)16 Nov 2019

    மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை

    இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் ஐயப்பன் கோவிலின் நடை தற்போது திறக்கப்பட்டுள்ளது

    17:20 (IST)16 Nov 2019

    ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளை முறையாக பராமரிக்க உத்தரவு

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள் எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தயாரித்து உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக ஆதி திராவிட நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    17:07 (IST)16 Nov 2019

    75% வாக்குகள் இலங்கையில் பதிவாகியுள்ளது

    8வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று இலங்கையில் நடைபெற்று வந்தது. காலை ஏழு மணிக்கு துவங்கிய இந்த தேர்தல் தற்போது நிறைவடைந்துள்ளது. 35 வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது வாக்குகள் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற திங்கள் கிழமையன்று அறிவிக்கப்படும். 

    16:58 (IST)16 Nov 2019

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில தலைவர்களை சந்தித்து வருகிறார் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி. இந்த நிகழ்வில் கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, கே.எஸ். அழகிரி, பிரியங்கா காந்தி, நாராயணசாமி, அசோக் கேலாட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    16:50 (IST)16 Nov 2019

    அனைத்து கட்சி கூட்டம் துவங்கியது

    18ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்ற நிலையில் ஓம்பிர்லா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    16:15 (IST)16 Nov 2019

    உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் - விஸ்வரூபம் எடுக்கும் பஞ்சமி நில விவகாரம்

    முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருக்கிறது என பலரும் புகார் அளித்திருக்கும் நிலையில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது.

    15:52 (IST)16 Nov 2019

    முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி

    வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தூரில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் ம்ற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

    15:36 (IST)16 Nov 2019

    நீலகிரியில் விதிமீறல் கட்டுமானங்கள் - நீதிமன்றம் எச்சரிக்கை

    நீலகிரியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் “சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதற்கு அதிகாரிகளின் மெத்தனபோக்கே காரணம்” என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் பதிவு செய்துள்ளது.

    15:33 (IST)16 Nov 2019

    நெல்லையில் தொடரும் கனமழை

    நெல்லையின் பல்வேறு பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் பாளையங்கோட்டையில் 100 எம்.எம். மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.

    15:29 (IST)16 Nov 2019

    சபரிமலைக்கு செல்ல முயன்ற 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் இருந்து சபரிமலைக்கு 6 பெண்கள் சென்றுள்ளனர். பம்பையில் அந்த இளம்பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் அனைத்தையும் மற்றொரு அமர்வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    15:23 (IST)16 Nov 2019

    உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

    ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் கடந்த ஆறு நாட்களாக வேலூர் மத்திய சிறையில் உண்ணா விரதம் மேற்கொண்டு வந்தார். வழக்கறிஞர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

    13:52 (IST)16 Nov 2019

    ரபேல் குறித்து பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் - பாஜக ஆர்ப்பாட்டம்

    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, கடந்த நவம்பர் 14ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர்கள்  பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கொல்கத்தா,மும்பை, டெல்லி போன்ற பல இடங்களில் போராட்டம்  நடத்தி வருகின்றனர். 

    கெஜ்ரிவால் அலுவலகம் முன்பு
    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகம் முன்பு 
    publive-image
    மும்பையில் நடந்த போராட்டம்
    publive-image
    கொல்கத்தாவில் நடந்த போராட்டம் 

    13:35 (IST)16 Nov 2019

    ஐந்து மாவட்ட ஆட்சியாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

    புதிதாகப் பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களும், எஸ்.பி-க்களும் நேற்று நியமிக்கப்பட்டனர்.  இன்று மரியாதை நிமித்தமாக ஐந்து மாவட்ட ஆட்சியாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

    நியமிக்கப்பட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள்: 

    publive-image   

    12:55 (IST)16 Nov 2019

    மகாராஷ்டிர மாநிலத்தில் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடுகிறது - சிவசேனா குற்றச்சாட்டு

    மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சிவசேனா இன்று தனது நாளிதழ் கட்டுரையில், " ஆரம்பித்தல் அரசமைக்க மாட்டோம் என்று  பின் வாங்கிய பாஜக தற்போது ஜனநாயக ஆட்சியை அமல்படுத்தி குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து உள்ளது, மேலும்    அரசியலை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்கரியின் கருத்தையும் சிவசேனா தாக்கியிருக்கிறது.  கிரிகெட்டில் தான் மேட்ச் பிக்ஸிங் நடைபெரும், அரசியலிலும் வணிகமாக பாஜக மாற்ற பார்க்கிறதா" என்று கேள்வி எழுப்பியுள்ளது.      

    மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வெள்ளிக்கிழமை கட்சி விரைவில் அரசாங்கத்தை அமைக்கும் என்று கூறினார். 

    12:08 (IST)16 Nov 2019

    இலங்கை அதிபர் தேர்தலில் துப்பாக்கி சூடு

    மன்னாருக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு.. 

    வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இனவாதிகளினால் தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள் - #ACMC#Srilanka

    — Rishad Bathiudeen (@rbathiudeen) November 16, 2019

    இன்று இலங்கைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  வட மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கும் அனுராதபுரம் மாவட்டம்  புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை ஏற்றி சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருகின்றனர். முதல் கட்ட தகவலில் இதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.  

    11:49 (IST)16 Nov 2019

    காவல் துறையினர் விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் - ஐஐடி மாணவி தந்தை லத்தீஃப்

    சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை லத்தீஃப் இன்று போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , " காவல்துறை விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றோம், விசாரணை முடிவில் எனது மகள் மரணத்தில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக, தந்தை லத்தீஃப் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட்டார் . இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! என்று ஸ்டாலின் ட்வீட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    11:38 (IST)16 Nov 2019

    இன்று மாலை சபரி மலையின் நடை திறக்கப்படுகிறது -

    இன்று மாலை சபரி மலையின் நடை திறக்கப்படவுள்ளது. பெண் போராளிகள் போராட்டம் நடத்துவற்கான தளம் சபரிமலை இல்லை என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க 10 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சபரி மலை வழக்கின் பின்னனி:

    2018 ம் ஆண்டு சபரிமலை தீர்ப்பில் பெரும்பான்மையான கருத்து, வழிபாட்டுத் தலங்கள் உள்பட பொது இடங்களை அணுகுவதில் பெண்களுக்கு சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை உண்டு என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது.

    11:11 (IST)16 Nov 2019

    இலங்கை அதிபர் தேர்தல் - சில லைவ் புகைப்படங்கள்

    இலங்கை  அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

    publive-imagepublive-imagepublive-image

    11:06 (IST)16 Nov 2019

    விடுதலை சிறுத்தைகள் அரசை குறை சொல்கிறது , இந்து சமூகத்தை அல்ல - தொல். திருமாவளவன்

    பாஜக அரசின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நான் கூறும் குற்றச்சாட்டுகள் இந்து சமூகத்தை  தாக்கி பேசுவதாக என்னை சித்தரிக்கிறார்கள். விடுதலை சிறுத்தை கட்சி எந்த சமூகத்திருக்கும் எதிரானது கிடையாது. என்னை பின் தொடர்பவர்களில் முக்கால் வாசி நபர்கள் இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை நான் இங்கு நியாபகப்படுத்த விரும்புகிறேன் என்று  தொல்.திருமாவளவன் தெரிவித்தார். ஐஐடி மாணவி லத்திப்பின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, உரிய விசாரணை கமிஷன் நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.       

    10:52 (IST)16 Nov 2019

    ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பி விட்டார் - வைகோ

    தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் காலியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார் என அழகிரியும் கூறியிருந்தார் . இந்நிலையில். மதிமுக பொதுச் செயலலாளர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், " கருணாநிதியின் மறைவுக்குப் பின் சமூகப் பணிகளை , தற்போதைய  ஸ்டாலின் செய்து வருகிறார், மக்கள் பணியின் மூலம் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி விட்டார்"  என்று தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக, திமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.             

    10:42 (IST)16 Nov 2019

    பன்னீர்செல்வம் ஹூஸ்டன் அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் -

    10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஹூஸ்டன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டினை திறந்து வைத்தார்.

    publive-imagepublive-imagepublive-image

    10:31 (IST)16 Nov 2019

    இலங்கையில் அதிபர் தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    இலங்கை நாட்டின் எட்டாவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இலங்கை பொதுசன முன்னணி (எஸ்.எல்.பி.பி) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர்  வேட்பாளர் (யு.என்.பி) சஜித் பிரமதாஸவும் இன்று முறைப்படி தங்கள் வாகுகளை செலுத்தினர். வட மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில், சில மர்ம நபர்கள் ஒட்டு போட வந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படதாக உறுதிபடுத்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் நேற்று செய்தியாளளை சந்தித்து ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

    Tamilnadu government servants(conditions of service) act 2016ன் கீழ் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு பணி மூப்பு வழங்கும் நடைமுறை விதிகளை சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்தது. மேலும், அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment