53, இடங்களில் சோதனை… எம்எல்ஏக்கள் விடுதியில் விசாரணை… அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை தீவிரம்

Tamil News Update : வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Former Minister S,P,Velumani Tamil News : அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாகவும், அமைச்சராக இருந்த போது தனது நெருக்கமான உறவினர்களுக்கு ஒப்பந்த பணிகள் வழங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகினறனர்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். ஆனால் இவர் அமைச்சராக இருந்த போது மாநிலத்தின் ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் போது மோசடியில் ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை குனிமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை திண்டுக்கல் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் கோவை அதிமுக தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணியில் வீட்டில் குவிந்துள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுட்டுள்ளனர். இதன் காரணமாக அதிமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனையின் போது எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, 800 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை தனது நெருக்கமானவர்களுக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்ததால், அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த விசாரணை குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து எம்எல்ஏக்கள் விடுதி முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷம் போட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இதனையறிந்து பாதுகாப்புக்காக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்ருடன், அதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வேலுமணியிடம் விசாரணை நடப்பது குறித்து அறிந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் எம்எல்ஏ விடுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இவர்களை உள்ளே விட மறுத்தால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் காவல்துறையினருடன் வெகுநேர வாக்குவாதத்திற்கு பின்னர் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தாங்கள் வந்திருப்பதாக இவர்கள் கூறியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. எம்எலஏக்கள் விடுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்க காவல்துறை ஆணையர் உத்தவிட்டுள்ளனார். இதனிடையே வேலுமணி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் சேர்த்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது ஆடிட்டர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 53 இடங்களில் சோதனை எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை, அதிமுக தொண்டர்களுடன் போலீசார் வாக்குவாதம் என தமிழகம் முழுவதும் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news update for former minister sp velumani home raid

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com