Advertisment

தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் பாடப்பிரிவுகளுக்கான கட்டணத்தை தானே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

100 ஏக்கர் நிலம், 50 கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ள அறக்கட்டளை பசுமை பல்கலைக்கழகம் அமைக்க

அரசிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாநில அரசு பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 6 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று (அக்டோபர் 12) தெரிவித்தார்.

Advertisment

பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதி பெற்ற 6 பல்கலைக்கழகங்களில் சவீதா மற்றும் ஜேப்பியார் ஆகியவையும் அடங்கும்.

பசுமை பல்கலைக்கழகம் என்றால் என்ன?

பசுமை பல்கலைக்கழகம் என்பது ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019-இன் கீழ் இது நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத்தின் முதல் பசுமை பல்கலைக்கழகமாக உள்ள சென்னையில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர் சேர்க்கையை தொடங்கி நடத்தி வருகிறது.

உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் கூறுகையில், "மாநில அரசு கடந்த ஓராண்டில் 31 புதிய கல்லூரிகளை நிறுவியுள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, தொழில்துறையின் தேவைகளை அறிய தமிழகம் முழுவதும் வழிகாட்டுதல் பணியகத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். வழக்கமான படிப்புகளுக்கு பதிலாக, உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் புதிய படிப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். உதாரணமாக, கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேதியியல் பட்டதாரிகளுக்கான தேவைகள் இருக்கிறது" என்றார்.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளுக்கான பிஎட் கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி பொன்முடி கூறியதாவது, "21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்களுக்கு, இந்த ஆண்டு 5,138 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டம் குறித்து கேட்டபோது, ​​4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் போது, ​​அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவத்திற்கு ஏற்ப 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment