Advertisment

6வது நாளை எட்டிய போராட்டம்... தண்ணீர் இன்றி தவிக்கும் சென்னைவாசிகள்!

பலரோ, வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தி தண்ணீரை வீட்டிலேயே சுத்தகரித்து பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தையும் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Packaged Drinking Water Manufacturers Association strike enters 6th day

Packaged Drinking Water Manufacturers Association strike enters 6th day

Tamil Nadu Packaged Drinking Water Manufacturers Association strike enters 6th day : தமிழக அரசின் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து  தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மதுரை உட்பட நகரங்களில் இந்த போராட்டத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளாது. சென்னையின் குடிநீர் தேவையில் 20-30% குடிநீர் தேவையானது கேன் தண்ணீர் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்த போராட்டத்தினால் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடைகளில் இருக்கும் ஸ்டாக்குகளும் மொத்தமாக விற்றுத் தீர்ந்துவிட்டது. எனவே மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். சென்னையைக் காட்டிலும், சென்னை புறநகர் பகுதிகளில் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

Advertisment

இந்த அமைப்பு கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், வாட்டர் ரீசோர்ஸ் டிப்பார்ட்மெண்ட் துறையிடம் முறையாக அனுமதி வாங்காத, குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூடக் கோரி உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இதுவரை 103 ஆலைகளை மூடியுள்ளது. ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளும் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் காஞ்சிபுரத்தில் ஒரு ஆலையும் மூடப்படவில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 1600 வாட்டர் யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. அதில் சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டும் 420 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 2.5 கோடி லிட்டர் குடிநீர் கேன்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

ரூ. 80க்கு தண்ணீர் கேன்கள்

பல்வேறு இடங்களில் கேன் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிக விலை கொடுத்து, ப்ராண்டட் நிறுவனங்களின் கேன்களை வாங்கிச் செல்கின்றனர். சாதாரண நாட்களில் வெறும் ரூ. 30க்கு கிடைக்கும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை ப்ராண்டட் நிறுவனங்களில் ரூ. 80 கொடுத்து வாங்கிச் செல்கின்றனர் பொதுமக்கள். பலரோ, வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தி தண்ணீரை வீட்டிலேயே சுத்தகரித்து பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தையும் தெரிவிக்கின்றனர்.

கதிர்ஆனந்த் ஆலைக்கும் சீல் வைப்பு

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் எடுப்பதற்கு முறையான உரிமம் பெறாத ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 40 குடிநீர் ஆலைகளில் நிலத்தடி நீர் எடுக்க உரிமம் பெறாத ஆலைகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 3 ஆலைகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளை மூடி சீல் வைக்கும் படி உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர். காட்பாடி அருகே இருக்கும் உள்ளிப்புதூரில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்தது. அந்த ஆலைக்கும் பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர்.

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment