Advertisment

ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கம் : விசாரணை வட்டத்தில் 2 அதிமுக பிரமுகர்கள்

Tamilnadu News Update : ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுவிட கூடாது என்பதால், அவருக்கு கடந்த 23-ந் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது

author-image
WebDesk
New Update
former AIADMK minister Ranjendra Balaji

Tamilnadu Update For Former Minister Rajendra Balaji : ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது தலைமறவைாகிவிட்ட நிலையில், அவரது மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருந்த போது ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் ஆந்திராவில் மாறுவேடத்தில் சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜி குறித்து விசாரிக்க அவரின் உறவினர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று துன்புறுத்துவதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் அவரது உறிவனர் அளித்த புகார் மனு மீதான விசாரணையில், ராஜேந்திர பாலாஜி வழக்கில் அவர்களது உறவினர்களை துன்புறுத்த வேண்டாம் என்றும், ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுவிட கூடாது என்பதால், அவருக்கு கடந்த 23-ந் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து இன்று போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஷ்வரன், மற்றும் ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூரை சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் நகர செயலாளர் ஏழுமலை ஆகியோர் ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக கூறி போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

இவர்கள் இருவரும் ராஜேந்திரபாலாஜியுடன் அதிக நேரம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் இவர்கள் இருவரிடமும் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில், ராஜேந்திரபாலாஜியை நெருங்கியுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Rajendra Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment