போலி வருகைச் சான்று அளித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை!

வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் தவறு செய்பவர்கள் மீது பார்கவுன்சில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கும் - தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்

By: Updated: January 25, 2020, 05:04:24 PM

Tamil Nadu Puducherry bar council takes severe actions : போலி வருகைச் சான்று அளித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ். அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய படியே, கடந்த 2015 – 18ம் ஆண்டுகளில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஸ்ரீமதி.பசவ ராமா தாராகம் நினைவு சட்டக் கல்லூரியில் படித்து, போலி வருகைச் சான்று பெற்று அதனடிப்படையில் வழக்கறிஞராக விபின் என்பவர் பதிவு செய்ய முயற்சித்தது தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் காவல்துறைக்கு புகார் அளித்தது.

அதன் அடிப்படையில் விபின் மற்றும் ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லூரியின் முதல்வர் ஹிமவந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கல்லூரியில் படித்தவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், போலி வருகை பதிவு சான்று கொடுத்து வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், போலி வருகைப் பதிவு சான்று அளித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  போலி வருகைப்பதிவு அளித்து வழக்கறிஞராக பதிவு செய்தவர்கள், உடனடியாக தங்கள் பதிவுச் சான்றை பார்கவுன்சில் திருப்பி ஒப்படைத்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், தவறினால் குற்ற நடவடிக்கையுடன் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊதிய பலன்கள் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் படித்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் பதிவு செய்துள்ள 1 லட்சத்து 5 ஆயிரம் வழக்கறிஞர்களில் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு வழக்கறிஞராக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், மீதமுள்ள வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு காலக்கெடு விதிக்கப்படும், அதன்பிறகு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களின் பட்டியல், பார் கவுன்சில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதே போல் வழக்கறிஞர் வாகனங்களில் பார்கவுன்சில் அளிக்கும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் கடைகளில் விற்கபடும் என ஸ்டிக்கர் ஓட்டினால் அது தவறு என தெரிவித்தார்.  வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் தவறு செய்பவர்கள் மீது பார்கவுன்சில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், போலி வழக்கறிஞர்கள் ஒழிக்க பார் கவுன்சில் முதன்மையாக நிற்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு, எவ்வாறு நடைபெற்றது?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:164773

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X