Advertisment

நாங்க எதிர்க்கட்சிதான்... ஒரே அறிக்கையில் உறுதி செய்த திருமா!

Tamil nadu School Education : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து விசிக கட்சி தலைவர் திருமாவளவன் மாற்றுக்கருத்தை கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
நாங்க எதிர்க்கட்சிதான்... ஒரே அறிக்கையில் உறுதி செய்த திருமா!

நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிகபட்ச இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சரவை அமைத்த முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறையை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கினார்.

Advertisment

தற்போது இந்த துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான திமுகவின் கூட்டணி கட்சியும் கடந்த சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எதிர் கருத்தை தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த யாரும் திமுகவின் நடவடிக்கைக்கு இதுவரை எதிர்கருத்து தெரிவிக்காத நிலையில், திருமாவளவனில் கருத்து திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான திருப்பதை ஏற்படுத்தியுள்ளது.

1854-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர் பதவி முக்கியமாக பார்க்க்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்வது இயக்குநரின் முக்கிய கடமையாகும். பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த பதவிக்கு இணையாக கடந்த அதிமுக ஆட்சியில், பள்ளிக்கல்வி ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இதில் இயக்குநரின் அதிகாரம் குறைக்கப்பட்டு ஆணையருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் முழு அதிகாரத்தையும் ஆணையரே கவனிப்பார் என்று தமிழக அரசு அதிகாரப்பூவமான அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்து விமாசனங்கள் எழுந்துள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளக் யாரும் இது தொடர்பாக எந்த கருத்தும் கூறவில்லை.  ஆனால்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக ஆணையராக, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழகக் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே, அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று, தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளின் ஒன்றான இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் முதல் கூட்டணிகடசிகளை வரை எவரும் மாற்றுக்கருத்து தெரிவிக்காத நிலையில், கூட்டணி கட்சியில் இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக அரசின் நடவடிக்கைக்கு தனது நேரடியான மாற்றுக்கருத்து கூறியள்ளர். ஏற்கனவே இருந்து ஆணையரை நீக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த தற்போது நிலையில், நீங்கள் இயக்குநர்களை நீக்கி விட்டீர்கள் என்று திருமாவளவன் தனது நேரடி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

திருமாவளவனின் இந்த நிலைபாடு, திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றாலும் கூட அரசின் முடிவுகள் குறித்து விமர்சிக்கவும், மாற்றுக்கருத்தை வெளியிடமும் தயங்கமாட்டோம் என்று திருமாவளன் தனது நிலைபாட்டின் மூலம் உறுதியாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற விமர்சனங்கள் மற்றும் எதிர்கருத்துக்களை சொல்ல தங்களுக்கு ஏதும் இடைஞ்சல்கள் வரக்கூடாது என்பதற்காகத்தால் வெற்றியை பற்ற கவலைப்படாமல் விசிக கடந்த சின்னத்தில் தனி சின்னத்தில் போட்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருமானவளவனின் நிலைபாட்டை தெளிவுபடுத்தக்கூடிய அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment