கொரோனா: தமிழ்நாடு சட்டமன்றம் ஒத்திவைப்பு இல்லை- முதல்வர் உறுதி

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Mar 18, 2020, 7:14:58 AM

Tamil nadu news today updates : கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து பேசிய அவர், ”கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு இருக்கிறது. உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்வதால், சட்டமன்றம் ஒத்தி வைக்கப்படுவதில்லை” எனக் கூறியிருக்கிறார்.

நான் கொஞ்ச நாட்களுக்கு முன், அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது. இந்த சுழலை தடுக்க முடியாது. அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும்,” என, நடிகர் ரஜினி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

திமுக பொதுக்குழு கூட்டம் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால், வரும் 29ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 29ம் தேதி நடைபெறவிருந்த கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:57 (IST)17 Mar 2020
மலேசியாவில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க விரைகிறது 2 விமானங்கள்

மலேசியாவில் கோலாலம்பூரில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க ஏர் ஏசியாவின் 2 விமானங்கள மூலம் அழைத்து வர வெளியுறவுத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

21:09 (IST)17 Mar 2020
கொரோனா எதிரொலி: டெல்லி போலீஸ் மக்களை வீட்டுக்குள்ளே இருக்குமாறு வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும், ஓய்வுக்காக வெளியே வரக்கூடாது என்றும் தில்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

21:02 (IST)17 Mar 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு உதவ குழு அமைத்தது உள்துறை அமைச்சகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக உள்துறை அமைச்சகம் இணைச் செயலாளர்கள் அந்தஸ்தில் 30 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

20:58 (IST)17 Mar 2020
பிலிப்பைன்ஸில் படிக்க சென்ற மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிப்பு

பிலிப்பைன்ஸில் படிக்க சென்ற மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸில் கடைசி நேரத்தில் விமான சேவையை ரத்து செய்ததால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

பிலிப்பைன்ஸுக்கு தனி விமானம் அனுப்பி மீட்க வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

19:49 (IST)17 Mar 2020
தெலங்கானாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தெலங்கானாவில் 59 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
58 வயதான இந்தோனேசிய நபர் ஒருவர் ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் சோதனை செய்யதில் கொரோனா பாதிப்பு உறுதி. “இந்த நொடி வரை, எந்த தெலங்கானா வாசியும் தெலங்கானா மண்ணில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், பாதிக்கப்பட்ட பின்னர் வந்தவர்கள், நேர்மறை சோதனை செய்தனர். இதனால், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்படவில்லை" என்று அம்மாநில சுகாதார அமைச்சர் இ.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

19:22 (IST)17 Mar 2020
கொரோனா: மக்கள் அதிக அளவில் ரயில் நிலையம் வருவதை தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு

கொரோனா எதிரொலியால் மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த நடைமேடை கட்டண உயர்வு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தகவல்.

19:14 (IST)17 Mar 2020
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளிர்சாதன பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை; திரைச்சீலைகளும் அகற்றப்படும். கால்டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

18:56 (IST)17 Mar 2020
ஆர்.டி.ஒ. அலுவலகங்களில் புதிதாக லைசென்ஸ் வழங்குவது மார்ச் 31 வரை நிறுத்திவைப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக போக்குவரத்து துறை, “தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஒ. அலுவலகங்களில் புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்குவது மார்ச் 31ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.

17:48 (IST)17 Mar 2020
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் நிறுத்தம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவைகள் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரிட்டன், துருக்கி மற்றும், ஐரோப்பிய நாடுகளுக்கும் நிறுத்தப்பட்டுள்ளன. மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை பயணிகள் செல்வதற்கும், இந்தியாவுக்கு வருவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்கள் துபாய் மற்றும் அபுதாபி வழியாக அழைத்து வரப்படுவார்கள் என்றும், அவர்கள்14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் இந்தியா தடை செய்துள்ளது.

17:28 (IST)17 Mar 2020
23 ரயில்கள் ரத்து

கொரோனா எதிரொலி : போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

17:03 (IST)17 Mar 2020
ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு

ஈரானில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு

* கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர் உயிரிழப்பு - 16,169 பேருக்கு கொரோனா தொற்று

16:50 (IST)17 Mar 2020
ரூ.2 கோடி செலவில் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்

சென்னை காட்டுப்பாக்கத்தில் ரூ.2 கோடி செலவில் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும்

* 2,500 விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.4 கோடி செலவில் பசுந்தீவனம் அறுவடை செய்யும் கருவிகள் வழங்கப்படும் - அமைச்சர் ராதாகிருஷ்ணன்

16:37 (IST)17 Mar 2020
1,200 பள்ளிகளில் சுற்றுச்சுவர்

"7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், 1,200 பள்ளிகளில் சுற்றுச்சுவர்" - பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

16:11 (IST)17 Mar 2020
மூடப்படும் நினைவுச் சின்னங்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

16:02 (IST)17 Mar 2020
கமல் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு

இந்தியன்-2 விபத்து - இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேர் நேரில் ஆஜராக உத்தரவு

* விபத்து நடந்த இடத்திற்கு, காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு

* நடிகர் கமல் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது

15:52 (IST)17 Mar 2020
50-க்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் இந்தியாவில் தவிப்பு

இந்தியாவிற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

* கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மலேசியாவிற்கு விமானப் போக்குவரத்து இல்லாததால், மலேசியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை.

15:25 (IST)17 Mar 2020
புதுச்சேரியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா

புதுச்சேரி மாஹேவில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் மூலம் மாஹே வந்த மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு

15:12 (IST)17 Mar 2020
மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 200 இந்திய மாணவர்கள்

பிலிப்பைன்ஸில் இருந்து இந்தியா திரும்ப முயன்ற 200 இந்திய மாணவர்கள் மலேசிய விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்களின் தாமதத்தாலும் அவர்கள் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். 

இதில் சிக்கல் என்னவெனில், மலேசியாவில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய தடை விதித்திருக்கும் நிலையில், இந்திய மாணவர்களே மலேசிய விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். 

இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. 

15:02 (IST)17 Mar 2020
தங்கம் விலை சரிவு!

ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்தது

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.30,960க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.73 குறைந்து ரூ.3870க்கு விற்பனை

14:52 (IST)17 Mar 2020
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டும் அனுமதி: மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அதிரடி

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களை தவிர நாடு முழுவதும் உள்ள மற்ற பயிற்சி முகாம்களை மூட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி முகாம் மூட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். எனினும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களுக்கான முகாம் தொடர்ந்து இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

14:52 (IST)17 Mar 2020
3 நாட்களுக்கு அரசு விடுமுறை - இலங்கை அரசு அறிவிப்பு

கொரோனா தாக்கம் காரணமாக, இலங்கையில் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை அரசு மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை அறிவித்துள்ள அந்நாட்டு அரசு, அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், வங்கி, போக்குவரத்து உள்ளிட்டவை மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே, கொழும்புவில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள், முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

14:52 (IST)17 Mar 2020
18 பேர் கொண்ட குழு

கொரோனா தடுப்பு பணிக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அறிவிப்பு

14:51 (IST)17 Mar 2020
கொரோனா - ஸ்பெயினில் 21 வயது கால்பந்து வீரர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கியதில் ஸ்பெயினை சேர்ந்த 21 வயது கால்பந்து வீரர் உயிரிழந்தார். Atletico Portada அணியை சேர்ந்த பயிற்சியாளாரும், வீரருமான Francisco Garcia ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் விளையாட்டு உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

14:51 (IST)17 Mar 2020
தமிழ் மொழி தொடர்பாக துணை கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

நாடாளுமன்ற நடவடிக்கையை புறக்கணித்து வெளியேறிய ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் பேசும் போது, இது தமிழக மக்கள் மற்றும் அவர்களின் மொழி சார்ந்த பிரச்சனை என்றும், தங்கள் மொழியை பாதுகாக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் மொழியை நம்புவதும் அதற்கும் குரல் கொடுப்பதையும் யார் தடுத்தாலும் அதனை ஏற்க முடியாது என்றும் ராகுர்காந்தி தெரிவித்துள்ளார்.

14:49 (IST)17 Mar 2020
பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால், குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ​தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜவுளி பூங்காவிற்கு தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தர தயாராக இருப்பதாக கூறினார்.

14:14 (IST)17 Mar 2020
ரூ.1 கோடி பரிசு

கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு.

14:07 (IST)17 Mar 2020
வீட்டில் இருந்தே...

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியக்கூடிய நடைமுறையை தொடங்கி உள்ளன

14:06 (IST)17 Mar 2020
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை

புதுக்கோட்டையில் மார்ச் 31 வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம்

14:06 (IST)17 Mar 2020
சுற்றுலாதளங்கள் மூடல்

கொரோனா : நீலகிரி மாவட்டம் மற்றும் ஊட்டியில் உள்ள சுற்றுலாதளங்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மூடல்

13:28 (IST)17 Mar 2020
கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி

முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தார் கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக முரளிதரன்.

முரளிதரனுக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது

13:07 (IST)17 Mar 2020
எஸ்.ஐ தேர்வு முடிவில் குளறுபடியா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு தொடர்பான விமர்சனங்களுக்கு, அந்த துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளிக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

13:01 (IST)17 Mar 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

12:36 (IST)17 Mar 2020
கொரோனா வைரஸ் பீதி - முதுமலை புலிகள் காப்பகம் மூடல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, முதுமலை புலிகள் காப்பகம், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:26 (IST)17 Mar 2020
அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

எஸ் வங்கியில் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு வரும் 19 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி வேறு தேதி கோரி விண்ணப்பித்திருந்ததால், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பபட்டுள்ளது.

12:14 (IST)17 Mar 2020
இந்தியன் 2 விபத்து விவகாரம் – போலீசார் மீது கமல் பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் அவசர முறையீடு செய்துள்ளார். சம்பவ இடத்தில் நடித்துக்காட்டும்படி  தொடர்ந்து வலியுறுத்துவதாக போலீசார் மீது கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

11:58 (IST)17 Mar 2020
கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் - கோழிகளை கொல்ல உத்தரவு

கரநாடக மாநிலம் மைசூரில் 2 கோழிகளுக்குபறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மைசூரு பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் உள்ள அனைத்து கோழிகளையும் கொல்ல அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

11:34 (IST)17 Mar 2020
ம.பி., உடனடி நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில், பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், கமல்நாத், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (18ம் தேதி) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

11:12 (IST)17 Mar 2020
தமிழக சிறைகளில் கைதிகளை, குடும்பத்தினர் சந்திக்க தடை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை, பார்வையாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் சந்திக்க இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக்கு புதிதாக வரும் கைதிகளை பரிசோதனை செய்ய பிரத்யேக அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

11:01 (IST)17 Mar 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனையோடு இணைந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் குறித்து அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் தெரிவித்துள்ளார்.

10:54 (IST)17 Mar 2020
தொடரும் கொரோனா சோகம் : மகாராஷ்டிராவில் 3வது நபர் பலி

கொரோனா நோய்க்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் 3வது நபர் பலியாகியுள்ள நிகழ்ச்சி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 64 வயது முதியவர், கடந்த 8ம் தேதி தனது மனைவி மற்றும் மகன் உடன் துபாயில் இருந்து திரும்பியிருந்தார். அவர்களுக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த முதியவர் தற்போது உயிரிழந்துள்ளார். இவரிவ் மரணத்தை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

10:34 (IST)17 Mar 2020
கொடைக்கானலுக்கு செல்ல வாகனங்களுக்கு தடை

மாரச் 18ம் தேதிமுதல் நாள்தோறும் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை கொடைக்கானலுக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10:16 (IST)17 Mar 2020
மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

தொற்று நோய்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழக அரசு மருத்துவர்களிடம் உள்ளது; தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை; அரசின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

09:43 (IST)17 Mar 2020
ஸ்பெயின் நட்சத்திர கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனாவால் பலி

ஸ்பெயின் கிளப் கால்பந்து பயிற்சியாளரும, நட்சத்திர வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21), கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

09:36 (IST)17 Mar 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – கமல் கட்சி நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவைகள், மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil nadu news today updates : கொரோனாவால் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார்.

தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியை, ராஜினாமா செய்தார். பொருளாளர் பதவிக்கு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், போட்டியில் உள்ளனர். தி.மு.க., பொதுச்செயலராக இருந்த அன்பழகன், 97, உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக, கடந்த, 7ல் காலமானார். அவர் வகித்து வந்த பொதுச்செயலர் பதவிக்கு, தி.மு.க., முன்னணி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

Web Title:Tamil nadu tamil newscoronavirus rajinikanth dmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X