ராணி 2ம் எலிசபெத் இறுதிச்சடங்கு : திருச்சியில் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி

96வது வயதில் மரணமடைந்த ராணி 2ம் எலிசபெத் இறுதிச்சடங்கு இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது.

96வது வயதில் மரணமடைந்த ராணி 2ம் எலிசபெத் இறுதிச்சடங்கு இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
ராணி 2ம் எலிசபெத் இறுதிச்சடங்கு : திருச்சியில்  சமூக ஆர்வலர்கள்  அஞ்சலி

க. சண்முகவடிவேல்

பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் பதவியில் இருந்த 2ம் எலிசபெத் கடந்த 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல்நிலை குறித்து கண்காணித்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக செப்டம்பர் 8ம் தேதி இரவு மகாராணி 2ம் எலிசபெத் மரணமடைந்தார். தனது 96வது வயதில் மரணமடைந்த ராணி 2ம் எலிசபெத் இறுதிச்சடங்கு இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள அரசியல தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ராணி எலிசபெத்க்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தற்போது எலிசபெத்தின் உடலுக்கு நம் நாட்டின் சார்பில் ஜனாதிபதி முர்மு மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இதனிடையே திருச்சி கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பொதுமக்கள் அருள் ஜோசப் நண்பர்கள் சண்முகம், ராஜா, தங்கராஜ், பன்னீர், தன பர்ஷ ராஜா, துரை, சுரேஷ் ஆழ்வார், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: