Tamil Nadu Weather Updates in Tamil: அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கடற்கரை ஒட்டிய பகுதிகள், அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என போக்குவரத்து துறை கூறியுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக 10 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுவைக்கு அடுத்த சில மணி நேரம் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலி – கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரிப்பு கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் வீசும் காற்று கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
செம்பரம்பாக்கம்-புழல் ஏரிகள் இன்று திறப்பு செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரு ஏரிகள் மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறப்பு சென்னையில் மழை தொடர்வதால்,ஏரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டம் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்தும் தலா 100 கனஅடி உபரி நீரை வெளியேற்ற முடிவு
தீவிர புயலாக உள்ள மாண்டஸ், சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவில் உள்ளது; அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் இப்புயல், இன்று நள்ளிரவு – நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் .
சென்னையில் இருந்து 7 விமானங்கள் ரத்து; கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து காற்றின் வேகத்தை பொறுத்து விமான போக்குவரத்து இருக்கும் என தகவல்.
நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் மாண்டஸ் புயலால், கடல் கொந்தளிப்பு கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்; 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம்
தீவிர புயலாக உள்ள மாண்டஸ், அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் – வானிலை ஆய்வு மையம்
mandous update pic.twitter.com/9czGizdHHJ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 9, 2022
புயல் எச்சரிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு தடை. தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு இதே போல் மாநகராட்சி பூங்காக்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 09) விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம், பொன்னேரியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆவடியில் 3 செ.மீ, பூவிருந்தவல்லி, சோழவரம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
புயல் எச்சரிக்கையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு
வங்க கடலில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
மாண்டஸ் புயல் – டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளைய தினம் செனையில் கடல் அலைகள் 14 அடி உயரம் வரை எழும்பும் என்று கூறப்படுகிறது. மேலும் புயல் கரையை கடக்கும்போது கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுக்கள் எச்சரக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் நாளை(9.12.2022) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மாண்டஸ் புயல் – சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பல்கலைகழக நிர்வாகம் கூறியுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (9.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது எனவும், போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை(9.12.2022) சென்னை, திருவள்ளூர்,கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர்,செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம். புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தயார் நிலை வைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து சென்னையை நோக்கி வருவதனால், தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மாலை வலுபெறக்கூடும் புயலின் காரணமாக, நாளை (டிசம்பர் 8) அன்று கடலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
சென்னையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வரவிருப்பதால், கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு 770 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருவதால், இன்று மாலை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வரவிருக்கும் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் பெய்ய கனமழையினால், மழைநீர் தேங்கிய இடங்களுக்கு மோட்டார்கள் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.
தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் டிசம்பர் 08ஆம் தேதி, பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து, நாளை புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் இயல்பை விட மூன்று அடி கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.