Tamil Nadu Weather Forecast Updates: தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் வெயில் கொளுத்தியது, வெப்பம் தகித்தது. ஆனால் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சுமூகமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களிலும் தமிழக உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.