Advertisment

Senthil Balaji Arrested : செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை அதிகாரிகள் பாதுகாப்பு

Tamil Nadu News, Tamil News Minister senthil balaji arrested, Enforcement Directorate– 14 JUNE 2023- தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Jun 14, 2023 10:28 IST
New Update
Senthil Balaji Arrested : செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை அதிகாரிகள் பாதுகாப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Advertisment

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா்.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் நண்பகலுக்கு பின்னா் சோதனை செய்தனா்.

மொத்தமாக சென்னையில் 4, கரூரில் 6, ஈரோடு ஒரு இடம் என மொத்தம் 11 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. காலை தொடங்கிய சோதனை, மாலை தாண்டியும் நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

பின் நள்ளிரவில் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 



  • 22:08 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்: புழல் அதிகாரிகள் வருகை

    அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு புழல் சிறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

    நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சிறை அதிகாரிகள் வந்தனர்.



  • 21:14 (IST) 14 Jun 2023
    சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை திரும்ப பெற்ற தமிழக அரசு

    தமிழகத்தில் இனி சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் என்று கூறி சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றது. மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானாவில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது



  • 21:11 (IST) 14 Jun 2023
    செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு

    பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஒருமுறை கூட ஆஜராகவில்லை. சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததற்காக ஆதாரம் கிடைத்ததனாலே சோதனை நடத்தப்பட்டது. சாட்சிகளை கலைக்கக்கூடும் என்பதால் தான் அவர் கைது செய்யப்பட்டார் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அமலாக்காத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 20:46 (IST) 14 Jun 2023
    துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டி

    சென்னை கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டியில் டிஜிபி சைலேந்திர பாபு சாம்பியன் பட்டம் வென்றார்! 2வது இடத்தை திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் பிடித்தார்; இருவருக்கும் கோப்பைகள் வழங்கி கெளரவிப்பு!



  • 20:45 (IST) 14 Jun 2023
    தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு மரணம்

    தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார். நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு மருத்துவ உதவிகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான் தகனம் செய்தார்



  • 19:54 (IST) 14 Jun 2023
    முற்போக்கு அரசியல் சக்திகளை அச்சுறுத்தும் பாஜக: அன்பில் மகேஷ்

    முற்போக்கு அரசியல் சக்திகளை பாஜக அச்சுறுத்துகிறது என கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 19:51 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜி கணக்கில் அதிக பணம்: அமலாக்கத்துறை

    வருமான வரித்துறை கணக்கில் காண்பித்ததை விட செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் அதிக பணம் இருந்துள்ளது.

    அவர் மனைவி மேகலா பெயரில் ரூ.25லட்சத்து 55 ஆயிரம் டொபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    பலமுறை விசாரணைக்கு அழைத்தும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.



  • 19:36 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு தாடி பாலாஜி ஆதரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் தாடி பாலாஜி, “அண்ணன் விரைவில் குணமாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



  • 19:28 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது - அமலாக்கத் துறை

    தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



  • 19:27 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது - அமலாக்கத் துறை

    தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



  • 19:09 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் நாளை உத்தரவு

    செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அந்த மனுக்கள், அமலாக்கத் துறை 15 நாள்கள் காவலில் எடுக்கக் கோரும் மனு, ஜாமீன் கோரும் இடைக் கால மனு மற்றும் காவிரி மருத்துவமனைக்கு மாற்ற கோரும் மனுக்கள் ஆகும்.



  • 18:39 (IST) 14 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய நடிகர் தாடி பாலாஜி வேண்டுதல்

    அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய நடிகர் தாடி பாலாஜி வேண்டுதல் நடத்தியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதியில் சென்று நடிகர் பாலாஜி வழிபாடு நடத்தினார்



  • 18:14 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியை 15 நாள் விசாரிக்க அனுமதி கேட்ட இ.டி: விசாரணையை ஒத்திவைத்த அமர்வு நீதிமன்றம்

    செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறை 15 நாள் அனுமதி கேட்ட நிலையில், விசாரணையை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது



  • 18:04 (IST) 14 Jun 2023
    அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர் - திமுக வழக்கறிஞர்

    2015 ஆம் ஆண்டு நடந்த வழக்கில் திடீரென கைது செய்வதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பினோம். அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 41ஏ விதியை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளனர். அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர் என திமுக வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்



  • 17:39 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது; அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு

    செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் ரிமாண்ட் உத்தரவு சரியானது. இடைக்கால ஜாமின் வழங்க சட்டத்தில் இடமில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் இன்று திடீர் உடல்நலக் குறைவு என்கிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை நாங்கள் வழங்குவோம் என ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது



  • 17:23 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜி கைதில் சட்டவிதிகள் பின்பற்றப்பட்டுள்ளன - அமலாக்கத்துறை

    செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்டவிதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து செந்தில் பாலாஜி மனைவிக்கும், அவரது சகோதரருக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது



  • 15:45 (IST) 14 Jun 2023
    ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் நீதிபதி அல்லி

    செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் நீதிபதி அல்லி

    ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உள்ளார் நீதிபதி அல்லி



  • 15:45 (IST) 14 Jun 2023
    ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் நீதிபதி அல்லி

    செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் நீதிபதி அல்லி

    ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உள்ளார் நீதிபதி அல்லி



  • 14:59 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்

    அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட நடவடிக்கைகள் வாயிலாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டம்

    செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உறவினர்கள் முயற்சி



  • 14:45 (IST) 14 Jun 2023
    வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும்

    செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும்

    இன்றே விசாரிப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது

    நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவிப்பு



  • 14:31 (IST) 14 Jun 2023
    மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் ஆய்வு நிறைவு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து 4 மூத்த மருத்துவர்களின் ஆய்வு நிறைவு

    சென்னை, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்

    4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இஎஸ்ஐ முதல்வரிடம் அறிக்கை வழங்கவுள்ளனர்



  • 14:30 (IST) 14 Jun 2023
    அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

    சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது பாஜக

    கைது நடவடிக்கைகள் மூலம் பாஜகவால் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்



  • 14:28 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜி மனு - நீதிபதி விலகல்

    செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி விலகல்

    அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகல்.

    நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அறிவிப்பு



  • 14:12 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடுகளுக்கு சீல்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ் என்பவரின் வீடுகளுக்கு சீல்

    சென்னை, அபிராமிபுரத்தில் உள்ள கோகுல்ராஜ்க்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வருமானவரி துறையினர் சீல் வைத்து நடவடிக்கை



  • 14:11 (IST) 14 Jun 2023
    சற்று நேரத்தில் ஐகோட்டில் விசாரணை

    சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த மனைவி மேகலா

    மருத்துவமனையில் இருந்து விசாரணைக்காக நீதிமன்றம் புறப்பட்டார் மேகலா

    செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது சற்று நேரத்தில் விசாரணை



  • 13:47 (IST) 14 Jun 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்

    “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்; அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறலாம் என நினைப்பது முட்டாள் தனமானது” - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்



  • 13:12 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் கடுகளவு கூட காழ்ப்புணர்ச்சி இல்லை

    செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் கடுகளவு கூட காழ்ப்புணர்ச்சி இல்லை. யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை பாயும் என்பது முன் கூட்டியே தெரிந்தது தான். உரிய ஆதாரங்கள் இருப்பதால் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது- அண்ணாமலை



  • 13:07 (IST) 14 Jun 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்; மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • 12:51 (IST) 14 Jun 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்; மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • 12:49 (IST) 14 Jun 2023
    மத்திய ESI மருத்துவக் குழு வருகை

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மத்திய ESI மருத்துவக் குழு வருகை



  • 12:22 (IST) 14 Jun 2023
    செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

    “அமைச்சர் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறது. திமுகவை பற்றி இன்னும் பாஜகவுக்கு தெரியவில்லை” - கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி



  • 12:19 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜி கைது: கண்டனப் பொதுக்கூட்டம்

    செந்தில் பாலாஜி கைதை கண்டித்து நாளை மறுநாள், கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!



  • 12:14 (IST) 14 Jun 2023
    ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வருகை

    சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வருகை அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த நிலையில் மீண்டும் அமைச்சர் உதயநிதி வருகை



  • 12:12 (IST) 14 Jun 2023
    விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை

    மருத்துவ பரிசோதனையில் முன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



  • 12:01 (IST) 14 Jun 2023
    அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக, அடுத்தக்கட்ட நடவடிக்கை : ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்பு



  • 11:57 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்

    ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 11:47 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கூறியது என்ன?

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-arrested-enforcement-directorate-nr-elango-695527/



  • 11:41 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

    ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்துள்ளது; ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 11:36 (IST) 14 Jun 2023
    கரூரில் போலீசார் பலத்த பாதுகாப்பு

    செந்தில் பாலாஜி கைதான நிலையில், அவரது சொந்த ஊரான கரூரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



  • 11:28 (IST) 14 Jun 2023
    விதிமுறைகளை பின்பற்றினரா அமலாக்கத்துறை அதிகாரிகள்?

    சட்டமன்ற விதிகள்படி, சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்றத்தால் சிறை தண்டணை விதிக்கப்பட்டாலும் அதை பற்றிய செய்தியை பேரவைத் தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    கைது செய்வதற்கு அல்லது காவலில் வைத்திருப்பதற்கு காரணங்களையும், விளக்கங்களையும் சபாநாயகருக்கு தெரியப்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட உறுப்பினர் எந்த இடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அல்லது சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரத்தையும் உரிய படிவம் மூலமாக பேரவைத் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பேரவைத்தலைவருக்கு செய்தி கிடைக்கப் பெறும் போது பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தால் அதனை பேரவையில் அறிவிப்பார். இல்லாத பட்சத்தில் செய்தித்தாளில் வெளியிடுமாறு பேரவைத்தலைவர் அறிவிப்பார்.

    ஆனால் செந்தில் பாலாஜியின் கைதில், இதுபோன்ற நடவடிக்கைகள் பின்பற்றவில்லை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.



  • 11:26 (IST) 14 Jun 2023
    நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி

    எந்த வழக்காக இருந்தாலும் சட்ட ரீதியாக செந்தில்பாலாஜி சந்திப்பார், அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனையை வெளிப்படுகிறது.

    விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • 11:24 (IST) 14 Jun 2023
    சட்ட நெறிமுறைகளை பின்பற்றாமல் செந்தில் பாலாஜி கைது

    ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு இருக்கிறது;

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பாஜக அரசு இறங்கியுள்ளது;

    எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது;

    ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும்- வைகோ அறிக்கை



  • 11:21 (IST) 14 Jun 2023
    ஆட்கொணர்வு மனு தாக்கல்

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.



  • 11:12 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கூறியது என்ன?

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-arrested-enforcement-directorate-nr-elango-695527/



  • 11:02 (IST) 14 Jun 2023
    தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

    செந்தில் பாலாஜியின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல பல வேலைகளை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.

    மேலும் அமைச்சர் பொன்முடி, ’பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் ஆட்சியை பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடாகாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசு இதை செய்திருக்கிறது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்வோம்’ என்றார்.

    நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க நெருக்கடிகளை கொடுத்துவருகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

    நள்ளிரவில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்க வந்த, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் மிரட்டல் அரசியலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று தெரிவித்தார்.



  • 11:01 (IST) 14 Jun 2023
    இதுவரை நடந்த வழக்குகளும், சோதனைகளும்

    2016 டிச. 10: அரசு வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார்

    2018 பிப். 12: செந்தில் பாலாஜி, அவர் சகோதரர் அசோக்குமார் உள்பட 4 பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு

    2018 மார்ச் 18: செந்தில் பாலாஜியிடம் மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை

    2019 ஆக. 8: சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை செந்தில்பாலாஜி மீது வழக்கு

    2019 செப். 17: செந்தில் பாலாஜியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

    2020 ஜன. 21: செந்தில்பாலாஜி வீடு உள்பட 14 இடங்களில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சோதனை

    2020 பிப். 14: செந்தில்பாலாஜியிடம் மத்தியக் குற்றப்பிரிவு மீண்டும் விசாரணை

    2022 அக்.31: செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

    2023 மே 16: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

    2023 மே 26: செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை

    2023 ஜூன் 13: செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை



  • 10:59 (IST) 14 Jun 2023
    இதுவரை நடந்த வழக்குகளும், சோதனைகளும்

    2016 டிச. 10: அரசு வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார்

    2018 பிப். 12: செந்தில் பாலாஜி, அவர் சகோதரர் அசோக்குமார் உள்பட 4 பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு

    2018 மார்ச் 18: செந்தில் பாலாஜியிடம் மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை

    2019 ஆக. 8: சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை செந்தில்பாலாஜி மீது வழக்கு

    2019 செப். 17: செந்தில் பாலாஜியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

    2020 ஜன. 21: செந்தில்பாலாஜி வீடு உள்பட 14 இடங்களில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சோதனை

    2020 பிப். 14: செந்தில்பாலாஜியிடம் மத்தியக் குற்றப்பிரிவு மீண்டும் விசாரணை

    2022 அக்.31: செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

    2023 மே 16: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

    2023 மே 26: செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை

    2023 ஜூன் 13: செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை



  • 10:58 (IST) 14 Jun 2023
    தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

    செந்தில் பாலாஜியின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல பல வேலைகளை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.

    மேலும் அமைச்சர் பொன்முடி, ’பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் ஆட்சியை பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடாகாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசு இதை செய்திருக்கிறது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்வோம்’ என்றார்.

    நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க நெருக்கடிகளை கொடுத்துவருகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

    நள்ளிரவில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்க வந்த, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் மிரட்டல் அரசியலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று தெரிவித்தார்.



  • 10:56 (IST) 14 Jun 2023
    மம்தா பானர்ஜி கண்டனம்

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்த ட்விட்டர் பதிவில், "பாஜகவின் அரசியல் பழிவாங்கும் இந்த செயல் கண்டனத்துக்குரியது. மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்கிறது. தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்திலும் அவரது அதிகாரபூர்வ இல்லத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பாஜகவின் மிக மோசமான நடவடிக்கை' என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 10:56 (IST) 14 Jun 2023
    மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

    மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சிகளை துன்புறுத்தும் மற்றும் மிரட்டும் மத்திய அரசின் முயற்சியே இதுவாகும். அரசியல் எதிர்ப்பாளர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவது மத்திய அரசின் அப்பட்டமான அடையாளமாகியுள்ளது. இதுபோன்ற தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. மாறாக எதிர்க்கட்சிகளின் உறுதிப்பாடும், மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டமும் வலுப்பெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 10:55 (IST) 14 Jun 2023
    நள்ளிரவில் என்ன நடந்தது?

    புதன் நள்ளிரவு 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனிடையே செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி, சேகர் பாபு வருகை தந்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தனர்.



  • 10:50 (IST) 14 Jun 2023
    மே அன்று நடந்த ஐ.டி.ரெய்டு

    கடந்த மே 26-ஆம்தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

    அப்போது அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் தடுத்ததாக திமுகவினா் 18 போ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

    இதேபோல திமுகவினா் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சரின் நண்பா்கள் வீடுகள், உணவகம் போன்ற இடங்களுக்கு சீல் வைத்துச் சென்றனா்.



  • 10:49 (IST) 14 Jun 2023
    நள்ளிரவில் என்ன நடந்தது?

    புதன் நள்ளிரவு 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனிடையே செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி, சேகர் பாபு வருகை தந்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தனர்.



  • 10:44 (IST) 14 Jun 2023
    எங்கெல்லாம் சோதனை நடந்தது?

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

    ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா். மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் நண்பகலுக்கு பின்னா் சோதனை செய்தனா்.

    இதேபோல, கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமார் வீடு, ராமேசுவரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு, செந்தில் பாலாஜியின் உதவியாளா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த கார்த்திக் வீடு, வெங்கமேட்டில் உள்ள அமைச்சரின் நண்பா் சண்முகம் செட்டியார் வீடு, லாலாப்பேட்டையில் உள்ள ஆடிட்டா் திருநாவுக்கரசு வீடு, ராயனூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் உறவினா் கொங்கு மெஸ் மணி வீடு, கரூா் செங்குந்தபுரத்தில் உள்ள ஆடிட்டா் சதீஸ்குமார் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

    ஈரோடு திண்டல் அருகே சக்தி நகா் மூன்றாவது வீதியை சோ்ந்த டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரா் சச்சிதானந்தம் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

    அனைத்து இடங்களிலும் துணை ராணுவப்படையினா் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்தனா். மொத்தமாக சென்னையில் 4, கரூரில் 6, ஈரோடு ஒரு இடம் என மொத்தம் 11 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.



  • 10:41 (IST) 14 Jun 2023
    எந்த வழக்கில் கைது?

    செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குகளைப் பதிவு செய்தனா்.

    இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் புதிதாக ஒரு வழக்கைப் பதிந்து, விசாரணை செய்தது.

    மத்தியக் குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயா்நீதிமன்றத்தில் முறையிட்டதால், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது.

    இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்திய குற்றப்பிரிவு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியும் அண்மையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    இந்த வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 10:35 (IST) 14 Jun 2023
    செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக மு.க.ஸ்டாலின் வருகை

    நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.



#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment