/tamil-ie/media/media_files/uploads/2020/11/Sasikala-2.jpg)
Tamil news Today new year 2021 : சேலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை தொகுதி எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா உறுதியானது .கொரோனா உறுதியானதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
சென்னை கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர். 3வது டெஸ்ட் போட்டிக்கு தயார்: இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா.
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு. சிவனின் பதவிக்காலம் ஜன.14ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 2022 ஜனவரி 14 வரை நீட்டிப்பு
சிபிஎஸ்இ தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கவில்லை சிபிஎஸ்இ தேர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்.
ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.
Live Blog
Tamil News Today : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி எஸ்.முரளிதர் ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், கரூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய ஒருவருக்கு உருமாறிய கொரோனா இல்லை என தெரிவித்துள்ள தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், உருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல். "கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை" 67 ஆயிரமாக இருந்த வாக்குசாவடி மையங்களை, 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டம் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு திருச்சி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் பழனிசாமி
பொங்கல் பரிசு தொகையாக ரேசன் அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் என தமிழக அரசு அறிவித்திருந்தது. டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக சின்னம் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பிய திமுக, இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறினார். அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் சுற்றிறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினர். அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights