Advertisment

News Highlights: சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் இன்று தொடக்கம்

tamil news : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு சம்மன்.

author-image
WebDesk
New Update
cm palaniswami announced, separate commission for caste wise statistics, சாதிவாரி கணக்கெடுப்பு, முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, caste wise surway, pmk, pmk protest, தமிழ்நாடு, tamil nadu

news in tamil : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை சனிக்கிழமை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகையில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisment

கடந்த சில மாதங்களாக மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், தற்போது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

முன்னதாக, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் . வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம். திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்பு.

publive-image

தமிழகம் மீட்போம் என்ற 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொது கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அவற்றை 10 ஆண்டுகளாகியும் அதிமுக அரசு இதுவரை முடிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ’

லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற காவல் ஆய்வாளர் மனைவியை கொன்றுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:17 (IST)18 Dec 2020

    பேட்டரி டார்ச் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்த தடை கோரி மநீம வழக்கு

    பேட்டரி டார்ச் சின்னத்தை எம்ஜிஆர். மக்கள் கட்சி பயன்படுத்த தடைவிதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20:23 (IST)18 Dec 2020

    தடையை மீறி போராட்டம்; ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது ஸ்டாலின் உள்ளிட்ட 2,000 பேர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    19:27 (IST)18 Dec 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 1,134 பேருக்கு கொரோனா; 12 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,04,650 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனாவால் 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் என்ணிக்கை 11,954 ஆக அதிகரித்துள்ளது.

    19:22 (IST)18 Dec 2020

    மார்ச் 31ம் தேதிக்குள் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும் - மத்திய அரசு தகவல்

    “2021 மார்ச் 31ம் தேதிக்கு பின் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும்; தற்போது முன்வரைவு தயாரிப்பு பணிகள் நடைபெறுகின்றன” என்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மத்டிய அரசு தெரிவித்துள்ளது.

    19:18 (IST)18 Dec 2020

    சட்ட படிப்பு அரியர் தேர்வுகள் ஜனவரி 6 நடத்தப்படும் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

    சட்ட படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் ஜனவரி 6 முதல் பருவத்தேர்வுகளுடன் சேர்த்து நடத்தப்படும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    19:17 (IST)18 Dec 2020

    தேசிய வரைவு ரயில் திட்டத்தை வெளியிட்டது இந்திய ரயில்வே

    இந்திய ரயில்வே உள்கட்டமைப்புத் திறனை அதிகப்படுத்தி, ரயில்வே சேவைகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் திட்டமாக தேசிய வரைவு ரயில் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

    18:30 (IST)18 Dec 2020

    வேல் யாத்திரை மூலம் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம் - எல்.முருகன்

    பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “வேல் யாத்திரை மூலம் பாஜகவின் தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம்” என்று கூறினார்.

    17:28 (IST)18 Dec 2020

    உத்தரகாண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

    உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்வீட் செய்துள்ளார்.

    16:44 (IST)18 Dec 2020

    எடப்பாடியில் நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி

    சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நங்கவள்ளியில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு நாளை என்னுடைய எடப்பாடி தொகுதியில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

    16:34 (IST)18 Dec 2020

    பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை OLX-ல் விற்க முயன்றதாக 4 பேர் கைது

    பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசி அலுவலகத்தை OLX இணையதளத்தில் விற்பனை செய்ய முயன்றதாக 4 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    15:50 (IST)18 Dec 2020

    3-4 நாட்களில் சுதாகரன் விடுதலையாக வாய்ப்பு

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து அடுத்த 3 அல்லது நான்கு நாட்களில் அவர் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15:48 (IST)18 Dec 2020

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?

    2 ஆண்டுகளான நிலையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசிடம் கேள்வி. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா என்றும் கேள்வி.

    15:46 (IST)18 Dec 2020

    இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

    முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது இந்திய அணி. அதனை தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து திணறி வருகிறது.

    14:45 (IST)18 Dec 2020

    விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வேளாண் சட்டம் - பிரதமர்

    விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் வேளாண் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் விவசாயிகளையும் வியாபாரங்களையும் இணைக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் உள்ளன. காங்கிரஸ் விவசாயிகள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறது. எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே தருவார்களே தவிர ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும் என பிரதமர் பேச்சு.

    14:18 (IST)18 Dec 2020

    சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் பணியிடை நீக்கம்

    அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.37 கோடி பணம் உள்பட ரூ. 10 கோடி மதிப்பு சொத்துக்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு.

    14:15 (IST)18 Dec 2020

    பிரசாத் ஸ்டூடியோவில் ஏன் இளையராஜாவை அனுமதிக்க கூடாது?

    பிரசாத் ஸ்டூடியோவில் சில மணிநேரம் தியானம் செய்ய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஏன் அனுமதி வழங்க கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

    13:47 (IST)18 Dec 2020

    ரஜினி அரசியல் வருகை குறித்து ஹெச். ராஜா

    வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட போவதில்லை என்றும் ரஜினி அரசியல் குறித்து கேட்ட போது கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும் போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

    13:20 (IST)18 Dec 2020

    திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க அனுமதி

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    13:12 (IST)18 Dec 2020

    ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிய மனு தள்ளுபடி

    ஜாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் என்று ஜாதி வாரியாக கணக்கெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் பதில். மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

    13:09 (IST)18 Dec 2020

    அரையாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

    தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வுக்காக தனியாக கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படக் கூடாது என்றும் உத்தரவு.

    13:05 (IST)18 Dec 2020

    வானிலை அறிக்கை

    தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

    13:00 (IST)18 Dec 2020

    மினி க்ளினிக்கை திறந்த வைத்த முதல்வர்

    வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

    11:54 (IST)18 Dec 2020

    எல்.முருகன் சுற்றுப்பயணம்!

    விவசாயிகளை சந்திக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் டெல்டா மாவட்டங்களை நோக்கி. 

    11:48 (IST)18 Dec 2020

    வேல்முருகன் குற்றச்சாட்டு!

    புதிய வேளாண் சட்டத்தால் அதானியும், அம்பானியும் செயற்கையான விலைஏற்றத்தை உருவாக்கிவிடுவர் என த.வா.க தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

    11:48 (IST)18 Dec 2020

    முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரம்!

    புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினருடன் முதல்வர் நாராயணசாமி உண்ணாவிர போராட்டாம். 

    11:46 (IST)18 Dec 2020

    ஆளுநர் மாளிகை முற்றுகை!

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட செல்ல முயன்றோர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு. 

    11:28 (IST)18 Dec 2020

    கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு!

    கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் . அனைத்து கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு ."உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"

    10:22 (IST)18 Dec 2020

    திமுக போராட்டம்!

    ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் தோழமை கட்சிகளைன் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் ஒரு சேர கலந்து கொண்டு வருகின்றனர். 

    publive-image

    10:18 (IST)18 Dec 2020

    இந்திய அணி ஆல் அவுட்!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் . இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி - 74, புஜாரா - 43, ரகானே - 42 ரன்கள் எடுத்தனர் .

    09:27 (IST)18 Dec 2020

    அருவிகளில் குளிக்க தடை |

    தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க தடை |

    tamil news today: வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்.

    நேற்றைய செய்திகள்

    நடிகர் கவுதம் கார்த்தியிடம் மர்ம கும்பல் செல்போன் பறித்தது. இந்த சம்பவம் வெளியாகி திரையுலகிலும், மக்கள் மத்தியிலும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய மயிலாப்பூர் போலீசார், பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவரும், மயிலாப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனும் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டத்தை கண்டுபிடித்தனர்.2 பேரையும் அதிரடியாக கைது செய்த போலீசார்,

    திருட்டு செல்போன் எங்கே? என விசாரணை மேற்கொண்டனர்.

    Dmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment