Advertisment

Tamil news today : அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

பெட்ரோல் – டீசல்  விலை

Advertisment

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 -க்கும் டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் சேவை நிறுத்தம்

பீகாரில் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.  தீவிர போராட்டங்கள் காரணமாக இன்றிரவு 8 மணி வரை மாநிலமெங்கும் ரயில் சேவை நிறுத்தம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக போராட்டம் : 2 வது நாளாக பலத்த பாதுகாப்பு

ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் தொடரும் போராட்டம்.  சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- ராகுல்காந்தி

தனது பிறந்தநாளான இன்று எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம்  என்று தொண்டர்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொது மக்களுக்கு உதவுமாறு ராகுல்கந்தி வலியுறுத்தி உள்ளார்.



  • 20:38 (IST) 19 Jun 2022
    தமிழகத்தில் மேலும் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - உயிரிழப்பு இல்லை

    தமிழகத்தில் மேலும் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; உயிரிழப்பு இல்லை; கொரோனா பாதிப்புக்கு 3,522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 20:16 (IST) 19 Jun 2022
    அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

    அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்: அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும்; தமிழக மக்களுக்கு 4 ஆண்டு நல்லாட்சியை கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.



  • 18:28 (IST) 19 Jun 2022
    செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

    டெல்லியில் உள்ள் இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்; ஜோதியை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார்.



  • 18:20 (IST) 19 Jun 2022
    அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையே தீர்வு - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை ஏற்படுவதே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.

    மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் மாற்றம் வரவேண்டும் என்று கருத்து கூறினார்கள். ஏனென்றால், என்றைக்குமே அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அன்றைக்கு ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக, பொதுக்குழுவில் தற்காலிகமாக இரண்டு தலைமை என்று முடிவு செய்யப்பட்டது. இரண்டு தலைமை என்று வரும்போது பல்வேறு பிரச்னைகள் வருகின்றது. ஒரு தலைமையாக இருக்க வேண்டும் என்று பல மாவட்ட செயலாளர்கள் ஜனநாயக முறைப்படி கருத்து கூறினார்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறோம். ஒற்றைத் தலைமைதான் சரியான தீர்வு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 30 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுதான் என்னுடைய முடிவும். அவர்களிடமே கேளுங்கள்” என்று கூறினார்.

    அப்போது அவருடன் இருந்தவர்கள் எல்லாருடைய ஆதரவும் எடப்பாடிக்குதான் என்று கூறினார்.



  • 16:51 (IST) 19 Jun 2022
    தளபதி - 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் - தயாரிப்பு நிறுவனம்

    விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி - 66 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது



  • 16:27 (IST) 19 Jun 2022
    இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க சின்னாபின்னமாகிவிட்டது – புகழேந்தி

    இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க சின்னாபின்னமாகிவிட்டது என்றும், இ.பி.எஸ் காழ்ப்புணர்வு கொண்டவர் என்றும் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பின்னர் மூத்த அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்



  • 16:16 (IST) 19 Jun 2022
    முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம்

    முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம். அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என மூத்த ராணுவ அதிகாரி அனில் பூரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அக்னிபத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது என்றும், முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெற்றிருந்தால் ராணுவத்தில் சேர முடியாது என்றும் அனில் பூரி தெரிவித்துள்ளார்



  • 15:48 (IST) 19 Jun 2022
    அக்னிபத் திட்டம்; ஜூன் 24 முதல் விண்ணப்பம் ஆரம்பம்

    அக்னிபத் திட்டத்தில் சேர வரும் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 24 முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும். முதல் தொகுப்பு அக்னிவீரர்களுக்கு இந்தாண்டு இறுதியில் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன என ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா அறிவித்துள்ளார்



  • 15:21 (IST) 19 Jun 2022
    நாகர்கோவில் - கச்சிகுடா இடையே வாராந்திர ரயில் மீண்டும் இயக்கம்

    நாகர்கோவில் - கச்சிகுடா இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஜுலை 2ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும். இந்த ரயில், மதுரை, திருச்சி, சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது



  • 15:10 (IST) 19 Jun 2022
    குடியரசுத் தலைவர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

    டெல்லி, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்



  • 14:44 (IST) 19 Jun 2022
    தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது



  • 14:13 (IST) 19 Jun 2022
    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • 14:06 (IST) 19 Jun 2022
    அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்: காலத்தின் கட்டாயம் - ஓ.எஸ்.மணியன்

    அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம். அது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்



  • 13:56 (IST) 19 Jun 2022
    விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் தீ விபத்து

    பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் தீ விபத்து ஏற்பட்டது. விமானம் அவசரமாக மீண்டும் பாட்னா விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்



  • 13:40 (IST) 19 Jun 2022
    ஸ்டாலினுக்கு காய்ச்சல்: 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது



  • 13:37 (IST) 19 Jun 2022
    அண்ணாமலை பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - ராமதாஸ்

    அண்ணாமலை பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். வரும் 25ம் தேதி நடைபெற உள்ள காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்



  • 13:29 (IST) 19 Jun 2022
    வேலையில்லாத் திண்டாட்டத்தின் 'நெருப்புப் பாதையில்' இளைஞர்கள்; பிரதமரே காரணம் - ராகுல் காந்தி

    நாட்டின் இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்டத்தின் 'நெருப்புப் பாதையில்' நடக்க பிரதமர் வற்புறுத்தி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்கான 16 கோடி வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாட்டின் இந்த நிலைக்கு பிரதமர் மட்டுமே முழு பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.



  • 13:23 (IST) 19 Jun 2022
    ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மையமாக்குவதே அக்னிபத் திட்டத்தின் நோக்கம் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

    ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மையமாக்க வேண்டும் என்பதே அக்னிபத் திட்டத்தின் நோக்கம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள ரவுடிகளை பாஜகவில் சேர்த்துள்ளனர். அதிமுக உடைந்தால் அதற்கு பாஜகதான் காரணம் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்



  • 13:21 (IST) 19 Jun 2022
    அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கான 100 நாள் வேலை திட்டமா? - தேஜஸ்வி யாதவ்

    அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கான 100 நாள் வேலை திட்டம் போன்றதா? என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்



  • 13:15 (IST) 19 Jun 2022
    உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்வபர் தந்தையர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்வபர் தந்தையர். அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை, வளத்தைத் தந்தால் அவர் தந்தையர். தந்தையர் தினத்தன்று என் தந்தை கருணாநிதியை வணங்குகிறேன். எல்லா தந்தையரையும் வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • 13:04 (IST) 19 Jun 2022
    அதிமுகவில் இரு தரப்பினரும் ஒற்றுமை உணர்வோடு செயல்பட மூத்த நிர்வாகிகள் முயற்சி - வைகைச் செல்வன்

    அதிமுகவில் இரு தரப்பினரும் ஒற்றுமை உணர்வோடு செயல்பட மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர். பேச்சுவார்த்தை தொடரும், சுமூக நிலை எட்டும் என எதிர்பார்க்கிறோம் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்



  • 12:59 (IST) 19 Jun 2022
    தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு இ.பி.எஸ்-க்கே - முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன்

    தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே. ஒற்றை தலைமை வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறியுள்ளார்



  • 12:54 (IST) 19 Jun 2022
    நிர்வாகிகள் உடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை

    சென்னையில் அதிமுக நிர்வாகிகள் உடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் இருவரிடமும் மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்



  • 12:47 (IST) 19 Jun 2022
    அதிமுகவில் ஒற்றை என்பது காலத்தின் கட்டாயம் - முன்னாள் எம்.பி., ப.குமார்

    அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என பல்வேறு தரப்பு நிர்வாகிகள் விருப்பம். இது காலத்தின் கட்டாயம். செயல்படாத நிர்வாகிகளை வெளியேற்ற வேண்டும். அதிமுகவில் தகுதியானவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார் கூறியுள்ளார்



  • 12:34 (IST) 19 Jun 2022
    ஒற்றை தலைமை முடிவை ஓ.பி.எஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் - முன்னாள் அமைச்சர் சிவபதி

    ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும், இளைஞரணி சார்பில் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்



  • 12:26 (IST) 19 Jun 2022
    ஓ.பி.எஸ் உடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு

    சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்திய நிலையில் ஓபிஎஸ் உடனும் தம்பிதுரை ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்



  • 12:24 (IST) 19 Jun 2022
    இ.பி.எஸ் இல்லத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வருகை

    சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இ.பி.எஸ் இல்லத்திற்கு அதிமுக மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடன் இ.பி.எஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்



  • 11:39 (IST) 19 Jun 2022
    எடப்பாடி பழசாமிக்குத்தான் எனது ஆதரவு- முன்னாள் அமைச்சர் சம்பத்

    ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் எனது ஆதரவு என்று முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். ஈபிஎஸ்க்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் அந்த பக்கதான் நானும் என்று அவர் தெரிவித்துள்ளார்



  • 11:34 (IST) 19 Jun 2022
    அக்னிபத் திட்டம்; முப்படைகளின் சார்பில் இன்று 2 மணிக்கு பேட்டி

    அக்னிபத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் முப்படைகளின் சார்பில் பேட்டி அளிக்க உள்ளனர்.



  • 10:14 (IST) 19 Jun 2022
    ஒற்றை தலைமை - ஈபிஎஸ் ஆலோசனை

    சென்னையில் உள்ள ஈபிஎஸ் வீட்டில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



  • 08:11 (IST) 19 Jun 2022
    மின் புகார்களுக்கு உடனடித் தீர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது . ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும், அதை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment