News Highlights: ஜன.10 வரை மக்கள் கிராம சபைக் கூட்டம் தொடரும்- ஸ்டாலின்

Tamil News Today : அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை தொடரும் – ஸ்டாலின்

Tamil News : இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு .  2004-ம் ஆண்டு இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவு, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.

நவ.25 முதல் டிச.23 வரை பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்.104 தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு. தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை அறிவுறுத்தல்.

மூத்த எழுத்தாளரும், மானுடவியலாளருமான தொ.பரமசிவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 2 நாட்களுக்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் அதிகாரிகளின் ஐஏஎஸ் பதவியை பறிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.

விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.

Live Blog

Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்


21:58 (IST)26 Dec 2020

திமுக கூட்டங்களை அனுமதிக்க வேண்டும் – தொல். திருமாவளவன்

திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான அடாவடி போக்காகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திமுக கூட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   

21:54 (IST)26 Dec 2020

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி 31-ம் தேதி அறிவிக்கப்படும்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை வரும் 31-ம் தேதி அறிவிக்க உள்ளதாக மத்திய கல்வியமைச்சர் தெரிவித்தார்.  

21:54 (IST)26 Dec 2020

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி 31-ம் தேதி அறிவிக்கப்படும்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை வரும் 31-ம் தேதி அறிவிக்க உள்ளதாக மத்திய கல்வியமைச்சர் தெரிவித்தார்.  

21:12 (IST)26 Dec 2020

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் – அமித் ஷா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குவஹாத்தியில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.  

20:03 (IST)26 Dec 2020

அதிமுக மூத்த தலைவர் கடம்பூர் ஜனார்த்தனன் மரணம்

முன்னாள் மத்திய இணையமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவர் கடம்பூர் ஜனார்த்தனன் இன்று காலமானார்

20:01 (IST)26 Dec 2020

திமுக மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை தொடரும் – மு. க ஸ்டாலின்

”அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி” என்று மு. க ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.  

18:42 (IST)26 Dec 2020

ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்

ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அச்சம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. மேலும், சில மருத்துவ அறிக்கை முடிவுகள் வர வேண்டியுள்ளன. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது தொடர்பான முடிவை நாளை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.         

18:24 (IST)26 Dec 2020

நிதி ஆயோக் அமைப்பின் CEO அமிதாப் காந்த் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது – பழனிவேல் தியாகராஜன்

”அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் அதிக சலுகைகள் வழங்கி – அவர்கள் வளர்ந்தால் தான் மக்கள் முன்னேற முடியும் என நிதி ஆயோக் அமைப்பின் CEO அமிதாப் காந்த் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

   

17:46 (IST)26 Dec 2020

அதிமுக தேர்தல் பிரச்சாரம் நாளை தொடக்கம்

அதிமுக தேர்தல் பிரச்சாரம் நாளை தொடக்கம் : 

சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நாளை (27-ம் தேதி ) சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடக்க விருக்கிறது.

17:40 (IST)26 Dec 2020

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவை : டிசம்பர் 28 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்

இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை தில்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), விமான நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 அன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பார்.

17:32 (IST)26 Dec 2020

ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு தொடங்கி வைத்தார்

ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் அனைவருக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

17:24 (IST)26 Dec 2020

முதல்வர் பழனிசாமி 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வருகிற 28- ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

15:39 (IST)26 Dec 2020

அசாமில் அமித் ஷா

போடோ பழங்குடியினருக்காக பிராந்திய உடன்படிக்கை ஏற்படுத்தியதால் மோடி அரசு அசாமில் அமைதியை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. ஆயுதங்களை தூக்கிய போடோ இளைஞர்கள் இன்று இயல்பு வாழ்விற்கு திரும்பியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

14:50 (IST)26 Dec 2020

பொங்கலுக்கு வெளியாகிறது பூமி

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

14:45 (IST)26 Dec 2020

மன் கி பாத்

டிசம்பர் 27ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வருடத்தில் நடைபெறும் மன் கி பாத் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

14:19 (IST)26 Dec 2020

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் புதுவையில் தேர்தல்கள் நடைபெறவில்லை – மோடி

ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள் தான் புதுவையை ஆளுகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படவில்லை என மோடி குற்றச்சாட்டு

13:33 (IST)26 Dec 2020

திமுகவின் கிராமசபை கூட்டங்களை கண்டு அஞ்சுகிறது அதிமுக

திமுகவின் கிராமசபை கூட்டங்களை கண்டு அஞ்சும் அதிமுக பொறாமைப்பட்டு விதிமுறையை மீறி எங்களை தடுக்கிறார்கள். ஆனால் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேட்டி.

13:33 (IST)26 Dec 2020

ரஜினியை நலம் விசாரித்த முக அழகிரி

நடிகர் ரஜினியின் உடல் நலம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தொலைபேசியில் ரஜினியிடம் பேசியுள்ளார்.

13:33 (IST)26 Dec 2020

ரஜினி விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

அன்பு சகோதரர் ரஜினி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

13:32 (IST)26 Dec 2020

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள்

மெல்பர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது.

13:32 (IST)26 Dec 2020

விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை

சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்திரவாதம்.

13:12 (IST)26 Dec 2020

கேரள ஐயப்பன் கோயில் டிசம்பர் 30ஆம் தேதி திறப்பு!

சபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றது இன்று சாத்தப்பட்ட நடை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படுகிறது. 

13:09 (IST)26 Dec 2020

ரஜினிகாந்திடம் நலம் விசாரித்த எடப்பாடி!

ரஜினிகாந்திடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தேன்  என  முதலமைச்சர் தகவல்.  ரஜினிகாந்த் விரைவில் முழு குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் எடப்பாடி ட்வீட். 

13:07 (IST)26 Dec 2020

7 பேர் மீது வழக்கு பதிவு!

கிராம சபை கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால், மக்கள் கிராம சபை என பெயர் மாற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டம் நடத்தினார். இந்த நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் உள்பட  நகர செயலாளர், அமைப்பாளர், நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது கொரோனா விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

12:24 (IST)26 Dec 2020

மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம்!

ஜனவரி 3ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு தீவிரம் . ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு . முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலருக்கு மு.க.அழகிரி அழைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

12:22 (IST)26 Dec 2020

முதலமைச்சருக்கு, ஸ்டாலின் கடிதம்!

மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம் .தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை  நடைப்பெறவுவுள்ளது. ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் . 

12:20 (IST)26 Dec 2020

ரஜினிகாந்த் ஹெல்த் அப்டேட்!

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்  ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை புதிய அறிக்கையில் தகவல் . ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது . ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை  ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

12:00 (IST)26 Dec 2020

மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்திற்கு 1 கோடி!

தமிழகத்தில் பேரிடர் மீட்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் -. தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

10:47 (IST)26 Dec 2020

புதிய வகை கொரோனா வைரஸ்!

காய்ச்சல், ஜலதோஷம், தொண்டை வலி, நாவில் சுவையின்மை உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்பட்டுள்ளது. இவற்றுடன், சேர்ந்து சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மன குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முன்பை விட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:39 (IST)26 Dec 2020

சுனாமி நினைவஞ்சலி!

16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். 

10:39 (IST)26 Dec 2020

பொங்கல் டோக்கன்!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. டிசம்பர் 31ம் தேதி வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்

09:07 (IST)26 Dec 2020

ஆயுதப்படை காவலர் தற்கொலை!

சென்னையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    விஷம் அருந்திய நிலையில் சுரேஷ் இறந்துகிடக்க, அவர் அருகில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில்  தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tamil News : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்புரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் இடம்பெற்றுள்ளனர்

நேற்றைய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாட்டின் வளர்ச்சியை எட்டமுடியாத உயரத்திற்கு வாஜ்பாய் அழைத்து சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சக்திவாய்ந்த வளமான இந்தியாவை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை என்றும் மறக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news live rajinikanth health condition updates tsunami news corona symtomps tamil news

Next Story
3-ம் தேதி முன்னோட்டம்… 30-ம் தேதி கட்சி அறிவிப்பு? கூட்டணி திட்டத்தில் மு.க.அழகிரி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com