Advertisment

Tamil News Today: வீட்டிற்கு ஒருவருக்கு வேலை - டிடிவி தினகரன் தேர்தல் வாக்குறுதி

Tamil News : கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை எதிர்த்து மார்க்சிஸ்ட் களம் காண்கிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Today:  வீட்டிற்கு ஒருவருக்கு வேலை - டிடிவி தினகரன் தேர்தல் வாக்குறுதி

Tamil Nadu news updates : முக்கியச் செய்திகளின் தொகுப்பை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். அரசியல், விளையாட்டு, சமூகம் சார்ந்த செய்திகளின் பதிவுகளை அறிய இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள். தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் முடிவாகி, வேட்பாளர் அறிவிப்பு மும்முரமாக நடக்கிறது. அது தொடர்பான தகவல்களையும் காணலாம்.

Advertisment

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் வியாழன் இரவில் அறிவிக்கப்பட்டன. அதன்படி அக்கட்சி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளன. கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை எதிர்த்து மார்க்சிஸ்ட் களம் காண்கிறது. டிடிவி தினகரனுக்கு கோவில்பட்டியில் திமுக.வை நேரடியாக எதிர்க்கும் சூழல் இல்லை.

திமுக அணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் வியாழக்கிழமை இரவில் அறிவிக்கப்பட்டனர். கடையநல்லூர் எம்.எல்.ஏ அபுபக்கர் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார். வாணியம்பாடி - முகமது நயீம், சிதம்பரம் - அப்துல் ரகுமான் போட்டியிடுகிறார்கள்.

திமுக அணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மதுராந்தகத்தில் மல்லை சத்யா நிற்கிறார். சாத்தூர் - ரகுராமன், வாசுதேவநல்லூர் - சதன் திருமலைக்குமார், பல்லடம் - முத்துரத்தினம், அரியலூர் - சின்னப்பா, மதுரை தெற்கு - பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சாத்தூரில் வைகோ மகன் துரை வையாபுரி களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வானூர்(தனி), காட்டுமன்னார்கோவில்(தனி), செய்யூர்(தனி), அரக்கோணம்(தனி), நாகை, திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவற்றில் 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் ஆகும்.

அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக கோவில்பட்டியில் போட்டியிடும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, “கோவில்பட்டி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை. பல்வேறு நேரங்களில் பல்வேறு பிரச்னைகளை தாண்டி அதிமுக வெற்றிபெற்றுள்ளது.’ என்றார். இங்கு டிடிவி தினகரன் போட்டியிடுவது பற்றிய கேள்விக்கு இந்தப் பதிலை அளித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil



  • 23:48 (IST) 12 Mar 2021
    ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் போட்டி; கொ.ம.தே.க வேட்பாளர்கள் அறிவிப்பு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திருச்செங்கோடு தொகுதியில் போட்டி

    பெருந்துறை - கே.கே.சி.பாலு, சூலூர் - பிரீமியர் செல்வம் ஆகியோர் கொ.ம.தே.க. சார்பில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டி



  • 23:45 (IST) 12 Mar 2021
    வீட்டிற்கு ஒருவருக்கு வேலை - அமமுக டிடிவி தினகரன் தேர்தல் வாக்குறுதி

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - அமமுக வாக்குறுதி

    விவசாயிகளுக்கு வீடு தேடி இடுப்பொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்

    அரசு வேலைகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்

    காவல்துறையில் பெண் காவலர்களுக்கு தனி பிரிவு உருவாக்கப்படும் - டிடிவி தினகரன்

    மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும்முறை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை - அமமுக வாக்குறுதி



  • 23:43 (IST) 12 Mar 2021
    நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

    மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

    நாடு முழுவதும் 11 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு



  • 21:27 (IST) 12 Mar 2021
    ஜவாஹிருல்லா பாபநாசத்தில் போட்டி; மமக வேட்பாளர்கள் அறிவிப்பு

    திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடுகின்றனர். ஜவாஹிருல்லா மமக 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.



  • 19:31 (IST) 12 Mar 2021
    சென்னையில் டிடிவி தினகரனுடன் ஒவைசி சந்திப்பு

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில், ஒவைசி கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.



  • 17:48 (IST) 12 Mar 2021
    10% இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்னேறிய வகுப்புக்கான 10% இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:21 (IST) 12 Mar 2021
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திரு.வி.க.நகர் (தனி) - கல்யாணி

    பட்டுக்கோட்டை - ரங்கராஜன்

    ஈரோடு கிழக்கு - யுவராஜா

    தூத்துக்குடி - விஜயசீலன்

    லால்குடி - தர்மராஜ்

    கிள்ளியூர் - ஜூட் தேவ்

    ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



  • 17:17 (IST) 12 Mar 2021
    எழுத்தாளர் இமயத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

    எழுதாளர் இமயம் எழுதிய செல்லாத பணம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் இயமம் கோவேறு கழுதைகள், செடல், ஆறுமுகம், உள்ளிட்ட நாவல்களையும் பெத்தவன் என்ற குறு நாவலையும் எழுதியுள்ளார். மேலும், வீடியோ மாரியம்மன், மண்பாரம், கொலை சேவல் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

    மத்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனம் தமிழ் மொழியில் எழுத்தாளர் இயமத்திற்கு அவருடைய செல்லாத பணம் நாவலுக்கு 2020ம் ஆண்டுகான சாகித்ய அகாடமி விருது அறிவித்துள்ளது.



  • 15:57 (IST) 12 Mar 2021
    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு தயாரா? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.



  • 15:56 (IST) 12 Mar 2021
    பெண் எஸ்.பி. பாலியல் வழக்கு : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

    சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை மார்ச் 16ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு்ளளது.



  • 15:55 (IST) 12 Mar 2021
    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு தயாரா? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.



  • 15:53 (IST) 12 Mar 2021
    போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் - ஓபிஎஸ்

    அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் எனறு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.



  • 15:52 (IST) 12 Mar 2021
    பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல்

    நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே வேட்பு மனு தாக்கல் வேட்பு மனு தாக்கல் செய்தார்



  • 14:04 (IST) 12 Mar 2021
    மக்கள் நீதி மய்யம் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையாவும், மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியாவும் போட்டியிடுகின்றனர்.



  • 14:01 (IST) 12 Mar 2021
    கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன்

    தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:39 (IST) 12 Mar 2021
    காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக துரைமுருகன்

    திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.



  • 12:54 (IST) 12 Mar 2021
    15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் முக ஸ்டாலின்

    173 தொகுதிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் முக ஸ்டாலின். பின்னர் 15ம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல், ஜனநாயகத்திற்கான போர் என்று கூறிய அவர். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 12:47 (IST) 12 Mar 2021
    திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    சட்டப்பேரவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

    சட்டப்பேரவைத் தேர்தல் 2021: தி.மு.கழக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! https://t.co/X031mCQw13

    — M.K.Stalin (@mkstalin) March 12, 2021


  • 12:43 (IST) 12 Mar 2021
    கோவை திமுக வேட்பாளர்கள்

    கோவை வடக்கில் வமா. சண்முகசுந்தரம், சிங்கநல்லூர் தொகுதியில் நா. கார்த்திக், கவுண்டம்பாளையத்தில் பையா ஆர். கிருஷ்ணன், மேட்டுப்பாளையத்தில் டி.ஆர். சண்முகசுந்தரம், தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாதிபதி, கிணத்துக்கடவு பகுதியில் குறிச்சி பிரபாகரன், மற்றும் பொள்ளாச்சியில் டாக்டர் வரதராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



  • 12:41 (IST) 12 Mar 2021
    திமுக வேட்பாளர்கள் பட்டியல் (2)

    குன்னம் தொகுதியில் எஸ்.எஸ். சிவசங்கர், பாளையங்கோட்டையில் அப்துல் வஹாப், பட்டுக்கோட்டையில் அண்ணாதுரை, நன்னிலத்தில் ஜோதிராமன், ஒரத்தநாட்டில் ராமச்சந்திரன், நெல்லையில் சபா ராஜேந்திரன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, கம்பத்தில் ராமகிருஷ்ணன், போடியில் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



  • 12:38 (IST) 12 Mar 2021
    திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    பத்மநாபபுரம் தொகுதியில் மனோ தங்கராஜ் போட்டியிடுகிறார். ஆலங்குளத்தில் பூங்கோதை, சங்கரன்கோவிலில் ராஜா, நாகர்கோவிலில் சுரேஷ் ராஜன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் கீதா ஜீவன், முதுகுளத்தூரில் ராஜ கண்ணப்பன், மதுரை மத்திய தொகுதியில் பழனிவேல் தியாகராஜன், திருமயம் தொகுதியில் ரகுபதி, ராதாபுரம் தொகுதியில் அப்பாவு, கன்னியாகுமரி தொகுதியில் ஆஸ்டின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



  • 12:24 (IST) 12 Mar 2021
    வெளியாகிறது திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல்

    12 கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன . அந்த கட்சியினருக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. தற்போது திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. அந்த பட்டியலை தற்போது வெளியிட உள்ளார் முக ஸ்டாலின்.



  • 12:00 (IST) 12 Mar 2021
    அமமுகவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமூக முடிவை எட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:32 (IST) 12 Mar 2021
    அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

    கோபாலபுர இல்லத்திற்கு சென்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய முக ஸ்டாலின் தற்போது மெரினாவில் அமைக்கப்பட்டிருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி வருகிறார்.

    பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை - நேரலை. https://t.co/vP1LzrT30W

    — M.K.Stalin (@mkstalin) March 12, 2021


  • 11:29 (IST) 12 Mar 2021
    கருணாநிதி புகைப்படத்திற்கு முக ஸ்டாலின் மரியாதை

    சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு திமுக தலைவர் மரியாதை செலுத்தினார். இன்று வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முக ஸ்டாலின் மரியாதை.



  • 11:27 (IST) 12 Mar 2021
    வேட்புமனு தாக்கல் துவக்கம்

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் இன்று முதல் துவங்கலாம். 19ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது என்று அறிவிப்பு. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்வது மற்றும் டெபாசிட் தொகையை செலுத்துவது போன்ற செயல்முறைகளை செய்து கொள்ளலாம்.



  • 11:25 (IST) 12 Mar 2021
    வேட்புமனு தாக்கல் துவக்கம்

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் இன்று முதல் துவங்கலாம். 19ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது என்று அறிவிப்பு. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்வது மற்றும் டெபாசிட் தொகையை செலுத்துவது போன்ற செயல்முறைகளை செய்து கொள்ளலாம்.



  • 10:42 (IST) 12 Mar 2021
    169 நாட்களுக்கு பிறகு துவங்கிய ரயில் மறியல் போராட்டம்

    169 நாட்கள் நீடித்த ரயில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் பஞ்சாபில் ஆரம்பமாகியுள்ளது. ஜண்டியாலா குரு ரயில் நிலையத்தில் நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது பயணிகள் போக்குவரத்து துவங்கியுள்ளது. கோதுமை அறுவடை செய்வதற்காக விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தினர்.



  • 10:39 (IST) 12 Mar 2021
    புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு

    உத்தரகாண்ட் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்று அம்மாநில பாஜக பொறுப்பாளர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். டெல்லியில் இருந்து வரும் உத்தரவுப்படி அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும். அவர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 10:16 (IST) 12 Mar 2021
    கத்தார் ஓப்பன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய ரோஜர்

    அமெரிக்க, பிரெஞ்ச் மற்றும் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளில் பங்கேற்காத முன்னால் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் ரோஜர் பெடரர் தற்போது கத்தார் ஓப்பனில் விளையாடி வருகிறார். நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் வாய்ப்பை பெற்ற ரோஜர் 7-6, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி டேன் இவான்சை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



  • 10:13 (IST) 12 Mar 2021
    மாநில கைப்பந்து தலைவர் ஏ.கே. சித்திரை பாண்டியன் மரணம்

    திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கைப்பந்து வீரரும், தமிழக மாநில கைப்பந்து சங்க தலைவருமான ஏ.கே. சித்திரை பாண்டியன் காலமானார்.



  • 09:46 (IST) 12 Mar 2021
    முதல்வர் வேட்புமனு தாக்கல்

    மார்ச் 15ம் தேதி அன்று எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்குதல் செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே மார்ச் 15ம் தேதி அன்று மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 09:12 (IST) 12 Mar 2021
    சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

    சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11 க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 09:09 (IST) 12 Mar 2021
    கொரோனா தடுப்பூசி

    அமெரிக்காவில் அனைவருக்கும் வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.



  • 08:55 (IST) 12 Mar 2021
    இன்று டி20 கிரிக்கெட்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது.

    5 போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment