Advertisment

Tamil News Today : ''கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்'' : சூர்யா

VK Sasikala Returns: அப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்புக்கு போலீஸார் மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : ''கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்'' : சூர்யா

Tamil News Live, Tamil Nadu Political- Crime News: முக்கிய செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் நீங்கள் காணலாம். தமிழ்நாடு, இந்தியா, உலக அளவிலான செய்திகள், அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.

Advertisment

ஞாயிற்றுக் கிழமை காலைச் செய்திகள் சிலவற்றை இங்கே தருகிறோம்...

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திக்காயட் தெரிவித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் ஒரு முடிவுக்கு வராமல், தொடர்ந்து நீடித்து வருகிறது.

திங்கட்கிழமை சசிகலா சென்னை திரும்புவதையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொள்கின்றனர். இன்னொரு அமைப்பு பெயரில் கலவரத்தை தூண்ட முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்புக்கு போலீஸார் மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சசிகலா சென்னை திரும்பவிருக்கும் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை இரவில் உயர்மட்ட நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். இதன்பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘ஜெயலலிதா கனவுப்படி அதிமுக ஆட்சி தொடர அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என கேட்டுக்கொண்டனர். ஒற்றுமையோடு, விழிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

சென்னையில் பணிபுரிந்த கடற்படை அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு, மகாராஷ்டிரா காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil Nadu News Today Live: அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























Highlights

    20:36 (IST)07 Feb 2021

    உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு - பிரதமர் உள்துறை அமைச்சர் ஆறுதல்

    உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆறுதல்

    20:35 (IST)07 Feb 2021

    வங்கதேசத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

    வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ் அசத்தலாக விளையாடி இரட்டை சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

    20:31 (IST)07 Feb 2021

    சுதாகரன் மற்றும் இளவரசியின் ஆறு சொத்துகள் அரசுடைமை

    2017-ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியான இறுதி தீர்ப்பு அடிப்படையில் சுதாகரன் மற்றும் இளவரசியின் ஆறு சொத்துகள் அரசுடைமையாக அறிவிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    18:50 (IST)07 Feb 2021

    சசிகலாவின் வருகையால் குறித்து கருணாஸ் கருத்து

    "சசிகலாவின் வருகையால் பதட்டம்"அதிகரித்துள்ளதாக திருவாடனை தொகுதி மெ்எல்ஏ கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    17:35 (IST)07 Feb 2021

    தனி சின்னத்தில் போட்டி, இல்லை என்றால் தனித்து போட்டி - பாரிவேந்தர்

    தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம், இல்லை என்றால் தனித்து போட்டியிடுவோம் என்று  பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    17:33 (IST)07 Feb 2021

    இந்திய இங்கிலாந்து முதல் டெஸ்ட் அப்டேட்

    சென்னையில்நடைபெற்று வரும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

    17:31 (IST)07 Feb 2021

    உத்தராகண்ட் முதல்வர் ராவத்துடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

    உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் குறித்து நிலைமையை கண்காணித்து வருவதாக உத்தராகண்ட் முதல்வர் ராவத்துடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    17:29 (IST)07 Feb 2021

    உத்தரகாண்ட் பனிசரிவு பலி எண்ணிக்கை 150 பேர் வரை இருக்கலாம் என தகவல்

    உத்தரகாண்ட்டில் பனிச்சரிவால் இதுவரை "100 முதல் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

    17:28 (IST)07 Feb 2021

    சென்னை 2-வது டெஸ்ட் : டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

    சென்னையில் நடைபெற உள்ள இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

    16:27 (IST)07 Feb 2021

    எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'கூட்டணி' -

    திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சிதான் தேமுதிக. நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் கூட்டணி என்ற நிர்பந்தத்திற்குள் கொண்டு சென்றுவிட்டனர். கேப்டன் விஜயகாந்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு', எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'கூட்டணி' என்று பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்தார்.  

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

    16:16 (IST)07 Feb 2021

    தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - ராஜேஷ் பூஷன்

    கோவிட் - 19 தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    15:53 (IST)07 Feb 2021

    உத்தரகாண்ட் வெள்ளப்பேருக்கு துயரம் - ராகுல் காந்தி வருத்தம்

    ராகுல் காந்தி தனது ட்விட்டரில், " உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் ரெய்லி கிராமத்தில் நிகழ்ந்த பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கு சம்பவம் மிகவும் துயரமானது. உத்தரகண்ட் மக்களுடன் எனது இரங்கல். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாநில அரசு உடனடி உதவிகளை வழங்க வேண்டும். நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் சகாக்களும் கைகோர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    15:36 (IST)07 Feb 2021

    வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி

    உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.   

    இன்று அசாம் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    15:34 (IST)07 Feb 2021

    உத்தரகாண்ட் வெள்ளம் நிவாரணம் - அமித் ஷா உறுதி

    உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்ய தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.  

    15:22 (IST)07 Feb 2021

    தாய்மொழியில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

    ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் நடைபெற்ற அசாம்மாலா என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்து இவ்வாறு பேசினார்.

    14:23 (IST)07 Feb 2021

    உத்தரகண்ட் சேதம்; 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணவில்லை

    உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிஷிமாத் பகுதியில் நந்தா தேவி பனிப்பாறை உருகியது. அலக்நந்தா ஆற்றில் கட்டப்பட்ட ரிஷிகங்கா அணை சேதமடைந்தது. 

    ரிஷிகங்கா மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிந்து வந்த 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மாநில பேரிடர் டி.ஐ.ஜி ரிதிம் அகர்வால் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

    14:07 (IST)07 Feb 2021

    முன்கள பணியாளர்கள் உயிரை பணயம் வைத்தும் பணியாற்றி வருகின்றனர் - குடியரசுத் தலைவர்

    கோவிட்-19க்கு எதிரான போரில் மருத்துவர்களும் முன்கள பணியாளர்களும் பல்வேறு சவால்களை சமாளித்தும் தங்களது உயிரை பணயம் வைத்தும் பணியாற்றி வருவதாகவும் அவர்களது தன்னலமற்ற சேவையை கண்டு பெருமிதம் கொள்வதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்ற 23வது பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.  

    13:28 (IST)07 Feb 2021

    சசிகலா வருகை, அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - ஜி.கே.வாசன்

    சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “சசிகலா வருகை, அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மாணவர்களின் கல்விக்கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

    13:22 (IST)07 Feb 2021

    டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி மரணம்

    டெல்லி எல்லையில் உள்ள டிக்கிரி பகுதியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாப்பை சேர்ந்த 60வயது விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

    13:20 (IST)07 Feb 2021

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    13:18 (IST)07 Feb 2021

    சசிகலாவுக்கு சென்னையில் 32 இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டம் - அமமுக

    பிப்ரவரி 8ம் தேதி சென்னை திரும்பும் சசிகலாவுக்கு சென்னையில் மட்டும் 32 இடங்களில் வரவேற்பு அளிக்க அமமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    12:20 (IST)07 Feb 2021

    பழனிசாமி ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    சங்கரன்கோயிலில் திமுக கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் முதல்வர் பழனிசாமி. விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போதுதான் அவருக்கு தெரியவந்ததா? ஆட்சி முடியும் நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக மட்டுமே அறிவித்துள்ளார். இன்னும் ரத்து செய்யப்படவில்லை” என்று விமர்சித்துப் பேசினார்.

    12:06 (IST)07 Feb 2021

    சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மட்டுமே நோக்கம் - டிடிவி தினகரன்

    பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்”என்று கூறினார். 

    11:30 (IST)07 Feb 2021

    ‘சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைச் சந்திக்கும்’ - மு.க.ஸ்டாலின்

    தென்காசியில் பேசிய மு.க.ஸ்டாலின், “3 மாதத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களிடம் பெற்றுள்ள கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு காணப்படும். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனி ஒப்புகைச் சீட்டுடன் கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

    11:00 (IST)07 Feb 2021

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்னுக்கு ஆல் அவுட்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா - 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, நதீம், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் - 218 ரன்கள், டாம் சிப்லி - 87 ரன்கள் ஸ்டோக்ஸ் - 82 ரன்களும் எடுத்தனர்.

    10:11 (IST)07 Feb 2021

    சென்னையில் பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் மாநாடு - கமல்ஹாசன் அறிவிப்பு

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் பிப்ரவரி 21ம் தேதி மநீம மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மநீம 4ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் பிப்ரவரி 21ம் தேதி மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மண்ணையும் மொழியையும் மக்களையும் காப்பாற்ற தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று கடிதம் மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    10:03 (IST)07 Feb 2021

    ‘ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை’ - முதல்வர் பழனிசாமி  

    சென்னை போரூர் சந்திப்பில் தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் பழனிசாமி: “ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை. நான் சொல்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது” என்று கூறினார். 

    09:15 (IST)07 Feb 2021

    சசிகலா வருகை: அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர்

    சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    08:28 (IST)07 Feb 2021

    அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு 

    திங்கட்கிழமை சசிகலா சென்னை திரும்புவதையொட்டி அவருக்கு வரவேற்பு பேரணி நடத்த அமமுக முடிவு செய்திருக்கிறது. சென்னை கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் சசிகலா அங்கு செல்ல வாய்ப்பு குறைவு.

    இதற்கிடையே சசிகலா பேரணியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்தப் பின்னணியில் சனிக்கிழமை இரவு முதல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

    08:27 (IST)07 Feb 2021

    பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றமில்லை

    சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.89.39-க்கும், டீசல் லிட்டர் ரூ.82.33-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    News In Tamil Live: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் வரவேற்பு பேரணி நடத்த போலீஸ் அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்கிடையே அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் அடுத்தடுத்து இருமுறை டிஜிபி-யை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்கள்.

    அதிமுக பெயரைப் பயன்படுத்தி சசிகலா, தினகரன் ஆகியோர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர். அதேபோல அமைச்சர்கள் கலவரத்திற்கு முயற்சிப்பதாக டிடிவி தினகரனும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment