News Highlights: குற்றால அருவிகளில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

Tamil News : ‘முட்டை கொள்முதல் விலை 40 காசு உயர்ந்து ரூ.4.80 ஆனது’

IIT chennai closed : பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த குற்றால அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மட்டுமல்லாது அங்குள்ள சிறு வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று – சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தல்

மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு.

மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன

விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், அந்த போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா என்றும் டெல்லி முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.19,955 கோடியில் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன .18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 26,509 பேருக்கு வேலை கிடைக்கும்

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


23:00 (IST)14 Dec 2020

கூகுள் செயலிகள் மீண்டும் செயல்பட்டது

கூகுள் நிறுவனத்தின் யூ டியூப் மற்றும் ஜிமெயில் செயலிகள் சில நிமிடங்களாக முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் செயலிகள் திங்கள்கிழமை மாலை உலகம் முழுவதும் முடங்கியது. சுமார் 15 நிமிடங்களாக கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யுடியூப், கூகுள் பே, கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கின. இதனால் உலகம் முழுவதுமுள்ள கூகுள் பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர். சில நிமிடங்களுகுப் பிறகு கூகுள் செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

22:31 (IST)14 Dec 2020

தமிழகத்தில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை; பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. அப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை, இடவசதி போன்ற விவரங்களை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

21:25 (IST)14 Dec 2020

மருத்துவக் கலந்தாய்வு நிறைவு

தமிழகத்தில் நவ.18ம் தேதி முதல் நடைபெற்று வந்த மருத்துவக் கலந்தாய்வு நிறைவு; அனைத்து MBBS இடங்களும் நிரம்பிய நிலையில் BDS பிரிவில் 921 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.

20:27 (IST)14 Dec 2020

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியது. தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

20:16 (IST)14 Dec 2020

மநீம ஆட்சியில் குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் – கமல் ஹாசன் ட்வீட்

மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். மநீம தலைவர் கமல்ஹாசன், “இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

18:25 (IST)14 Dec 2020

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 30 பேர் கைது

எல்லை தாண்டி வந்ததாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

18:19 (IST)14 Dec 2020

விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் – மத்திய வேளாண் அமைச்சர்

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

16:42 (IST)14 Dec 2020

ஹெச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளார். இந்த குழுவில் பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் கார்வேந்தன், மாநில தலைவர் விவசாய அணி ஜி.கே.நாகராஜ், பாஜக சிறுபான்மையினர் அணி மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.ஷா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறப்பு அழைப்பாளர் நாச்சிமுத்து என 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

16:30 (IST)14 Dec 2020

அடிப்படை வசதிகள் இருந்தால்தான் லே-அவுட் ஒப்புதல் வழங்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

சென்னையை தவிர்த்து மற்ற பகுதிகளில் மழைநீர் வடிகால், தார்சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இனி லே-அவுட்க்கு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

15:56 (IST)14 Dec 2020

சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் – தாய் விஜயா

சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா ஆர்.டி.ஓ. விசாரணையில் தெரிவித்தார். 

15:56 (IST)14 Dec 2020

சென்னை மெரினா கடற்கரை

15:47 (IST)14 Dec 2020

கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் – எல். முருகன்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார்! கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது!
என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன்வ தெரிவித்தார்.  

15:06 (IST)14 Dec 2020

குற்றால அருவியில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கோவிட்-19 ஊரடங்கால் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்ட குற்றால அருவியில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் அனுமதி அளித்துள்ளார்.

14:50 (IST)14 Dec 2020

குறைந்தபட்ச ஜனநாயக உணர்வு இல்லாதவராக பிரதமர் இருக்கிறார் – கே. எஸ் அழகிரி

அம்பானி, அதானிக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் மக்கள் விரோத அரசை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அதனால்தான் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 19 நாட்களாக போராடி வருகிற விவசாயிகளை அழைத்து பேசுகிற குறைந்தபட்ச ஜனநாயக உணர்வு இல்லாதவராக இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.   

14:48 (IST)14 Dec 2020

முதல்வரை மு.க.ஸ்டாலின் தேவையின்றி விமர்சிக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

முதல்வர் பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேவையின்றி கடுமையாக விமர்சிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

திமுக தலைவர் மு,க,ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

14:01 (IST)14 Dec 2020

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும், தந்தையும் தற்கொலை – ராமதாஸ் இரங்கல்

விழுப்புரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  

13:56 (IST)14 Dec 2020

அம்பானி-அதானி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் விடுதலைச்  சிறுத்தைகள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு  கோரிக்கைகளை ஆதரித்து தமிழ்நாடு,புதுவையில் இன்று விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியது. அம்பானி-அதானி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் ஆர்ப்பாட்டத்தில்  ரவிக்குமார் எம்.பி, தோழர்பொழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

13:38 (IST)14 Dec 2020

மாநகராட்சி விதிமுறைகளை மீறினால் நீதிமன்றம் தலையிடும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மெரினா கடற்கரை இன்று திறக்கப்பட்ட நிலையில், அங்கு புதிய கடைகள் ஒதுக்கீடு செய்வதில் மாநகராட்சி விதிமுறைகளை மீறினால் நீதிமன்றம் தலையிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

13:34 (IST)14 Dec 2020

பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் – இன்று தொடங்குகிறது

அடுத்த நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் இன்று தொடங்குகிறது.

13:34 (IST)14 Dec 2020

கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – ராமதாஸ்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.  இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள் அறிக்கையில், இந்த புதிய கல்லூரிகளில் முதல் பருவ தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

13:31 (IST)14 Dec 2020

பொருளாதார மறுசீரமைப்பில் தமிழகம் முன்னிலையில் உள்ளது – முதல்வர்

கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மறுசீரமைப்பில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

12:51 (IST)14 Dec 2020

டிசம்பர் 18ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் உண்ணாவிரத போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் & நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் 18.12.2020 அன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம்” – என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவிப்பு.

12:49 (IST)14 Dec 2020

ஒவ்வொருவரும் நேர்மையை முதலீடாக வைக்க வேண்டும்

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எனக்குள் இருக்கும் கோபம் உமதாகவும் மாற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நேர்மையை முதலீடாக வைக்க வேண்டும். அப்படி செய்தால் ஊழலை கண்டிப்பாக ஒழிக்க முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். “கமிஷன் அரசாங்கத்தை” துரத்தி விட்டு “mission அரசாங்கம்” அமைக்க  தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.   

12:48 (IST)14 Dec 2020

ரிலயன்ஸ் நிறுவன கடையின் முன்பு ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அம்பானி அதானியின் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சிபிஐஎம் சார்பில் கு.கணேசன் அவர்களின் தலைமையில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள ரிலயன்ஸ் நிறுவன கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12:15 (IST)14 Dec 2020

ஓபிஎஸ் அறிவிப்பு!

கொரோனா தடுப்பு செயல்பாடுகளை பிரதமரே வெகுவாக பாராட்டியதாக கூறியுள்ளார்.ஊரடங்கு மற்றும் தளர்வுகளை சரியாக கையாண்டு நோய்தொற்றை தமிழக அரசு குறைத்துள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.

12:14 (IST)14 Dec 2020

முதல்வர் பேட்டி!

தமிழகம் முழுவதும் 630 இடங்களில் மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகின்றன. முதற்கட்டமாக, 47 இடங்களில் அமைக்கப்படும் இந்த திட்டம், 20 இடங்களில் இன்று முதல் முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள் . விழா மேடையில் பேசிய முதலமைச்சர், நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். 

11:08 (IST)14 Dec 2020

630 மினி கிளினிக்குகள்!
தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி .  தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடக்கம். 

11:07 (IST)14 Dec 2020

ஸ்டாலின் உதவி!

கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்

10:06 (IST)14 Dec 2020

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது . மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை

Tamil News : 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்

நேற்றைய செய்திகள்

8 மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அணை உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news live today iit chennai closed mini clinic cm edappadi tamil news

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com