Advertisment

Tamil Nadu News Today : தமிழகத்தின் ஒருநாள் மின் பயன்பாடு புதிய உச்சம்; பூர்த்தி செய்தது மின்வாரியம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Latest News Updates 28 March 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Today : தமிழகத்தின் ஒருநாள் மின் பயன்பாடு புதிய உச்சம்; பூர்த்தி செய்தது மின்வாரியம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Petrol and Diesel Price: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: வேலைநிறுத்தத்தால் சென்னை உட்பட தமிழகம் முழவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

India news update: நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்பு

கோவா முதல்வராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார். பனாஜியில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பத்ம விருதுகள் விழா

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் 2வது கட்டமாக இன்று வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீதமுள்ள 64 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார்.

World News update: துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Corona Update: தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு 394 பேர் சிகிச்சை பெற்று வருவரும் நிலையில் புதிதாக உயிரிழப்பு ஏதுவும் பதிவாகவில்லை. இந்திய அளவில் 1,421 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 00:15 (IST) 29 Mar 2022
    தமிழகத்தின் ஒருநாள் மின் பயன்பாடு புதிய உச்சம்; பூர்த்தி செய்தது மின்வாரியம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று மட்டும் 17,106 மெகாவாட் மின்தேவையை மின்வாரியம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



  • 22:29 (IST) 28 Mar 2022
    பள்ளி வேன் மோதி மாணவன் பலி: சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னையில் பள்ளி வேன் மோதி பலியான சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்ட் “மாணவன் இறப்பு டிரைவரின் கவனக் குறைவால் நடந்துள்ளது. ஓட்டுநர், பணிப்பெண், பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் போலீசார் விசாரணை வளையத்தில் உள்ளனர். இதில், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.



  • 22:05 (IST) 28 Mar 2022
    நீதிமன்றத்தையும், காவல் துறையையும் மட்டுமே நம்பி உள்ளேன். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது - நடிகர் சூரி

    நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி பண மோசடி புகார் அளித்திருந்தார்; அந்த வழக்கிற்காக சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான பின் நடிகர் சூரி பேட்டி அளித்தார். அப்போது, நீதிமன்றத்தையும், காவல் துறையையும் மட்டுமே நம்பி உள்ளேன். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று நடிகர் சூரி கூறினார்.



  • 22:02 (IST) 28 Mar 2022
    பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச்செல்ல வேண்டாம் - சென்னை போக்குவரத்து துறை

    பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச்செல்ல வேண்டாம். ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.



  • 21:51 (IST) 28 Mar 2022
    நிலமோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகர் சூரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜர்

    நிலமோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகர் சூரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.



  • 20:55 (IST) 28 Mar 2022
    8 மாநிலங்களில் பந்த் போன்ற சூழல் நிலவுகிறது - தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

    அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 8 மாநிலங்களில் பந்த் போன்ற சூழல் நிலவுவதாக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது. இரண்டு நாள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, அசாம், ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பந்த் போன்ற சூழல் நிலவுகிறது என தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு கருத்தின்படி, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல தொழில்துறை பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • 20:49 (IST) 28 Mar 2022
    பஞ்சாபில் விரைவில் வீடு தேடி ரேஷன் திட்டம் அறிமுகம் - முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பஞ்சாபில் விரைவில் வீடு தேடி ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.



  • 19:54 (IST) 28 Mar 2022
    தமிழுக்கும், தமிழ் நலனுக்கும் எதிரானவர்களுக்கு நம்முடைய உணர்வுகள் புரியாது - மு.க. ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “வெளிநாட்டுப் பயணத்தில் நான் பெற்ற வெற்றியை ஒரு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். தமிழுக்கும் தமிழ் நலனுக்கும் எதிரானவர்களுக்கு நம்முடைய உணர்வுகள் புரியாது” என்று கூறியுள்ளார்.



  • 19:37 (IST) 28 Mar 2022
    வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது; கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு

    தொழிற்சங்கங்களின் மார்ச் 22-ம் தேதி நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்தன.

    இந்த நிலையில், இரண்டு நாள் நாடு தழுவிய பாரத் பந்த் வேலைநிறுத்தத்தில் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.



  • 19:04 (IST) 28 Mar 2022
    பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழப்பு - பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

    சென்னையில் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறுவனின் உடல் வாகனம் மூலம் ஆழ்வார்திருநகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.



  • 18:06 (IST) 28 Mar 2022
    சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தனியார் பள்ளிக்கு சி.இ.ஓ நோட்டீஸ்

    சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி மாணவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



  • 17:54 (IST) 28 Mar 2022
    உக்ரைனுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை செவ்வாய்கிழமை துருக்கியில் நடைபெறும் - ரஷ்யா

    ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் செவ்வாய்கிழமை துருக்கியில் நடைபெறலாம் என்றும், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் இல்லாததால், அவை நேருக்கு நேர் நடப்பது முக்கியம் என்றும் ரஷ்யா கூறியது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் அவரது துருக்கிய பிரதிநிதி தையிப் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி அழைப்பில் இஸ்தான்புலில் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டனர், இது உக்ரேனில் போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று அங்காரா நம்புகிறது.

    திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று துருக்கி கூறியது, ஆனால் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தையாளர்கள் திங்கட்கிழமை மட்டுமே துருக்கிக்கு வருவார்கள் என்பதால் அது சாத்தியமில்லை என்றார்.

    "பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் பற்றி எங்களால் பேச முடியாது மற்றும் பேச மாட்டோம் என்றாலும், அவை தொடர்ந்து நேரில் நடைபெறுவது முக்கியம்,," என்று பெஸ்கோவ் ஒரு மாநாட்டு அழைப்பில் செய்தியாளர்களிடம் கூறினார். "பேச்சுவார்த்தை பற்றிய எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என்ற கொள்கையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம், இது பேச்சுவார்த்தை செயல்முறையை மட்டுமே பாதிக்கக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம்." பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை, அல்லது புதினுக்கும் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சாத்தியமான சந்திப்பின் யோசனையில் பெஸ்கோவ் மேலும் கூறினார். "துரதிர்ஷ்டவசமாக, இதுவரை எந்த கணிசமான சாதனைகளையும் முன்னேற்றங்களையும் (பேச்சுவார்த்தையில்) காண முடியவில்லை," என்று அவர் கூறினார்.

    தனித்தனியான கருத்துக்களில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இப்போது நடத்தப்பட்டால் அது எதிர்மறையாக இருக்கும் என்று கூறினார். செர்பிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் லாவ்ரோவ் கூறுகையில், "அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு விரைவில் புதினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையே ஒரு சந்திப்பு தேவைப்படுகிறது. (ராய்ட்டர்ஸ்)



  • 17:39 (IST) 28 Mar 2022
    டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா

    டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2 வது கட்ட விழாவில் 64 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி வருகிறார்



  • 17:23 (IST) 28 Mar 2022
    மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

    பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பள்ளி பேருந்து மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோர் கூறியுள்ளனர்



  • 17:14 (IST) 28 Mar 2022
    ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது - காவல்துறை எச்சரிக்கை

    பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது



  • 17:00 (IST) 28 Mar 2022
    இலங்கை சிறையிலிருக்கும் 68 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை; வெளியுறவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

    இலங்கை சிறையிலிருக்கும் 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முடிவில்லாமல் நீளும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது



  • 16:49 (IST) 28 Mar 2022
    வளசரவாக்கத்தில் உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு அமைச்சர் தொலைபேசியில் ஆறுதல்

    வளசரவாக்கம் பள்ளியில் பேருந்து மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்



  • 16:41 (IST) 28 Mar 2022
    வளசரவாக்கத்தில் உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு அமைச்சர் தொலைபேசியில் ஆறுதல்

    வளசரவாக்கம் பள்ளியில் பேருந்து மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்



  • 16:29 (IST) 28 Mar 2022
    உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம் தேவை - புதுச்சேரி தேர்தல் ஆணையம்

    புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம் வேண்டும் என புதுச்சேரி தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் மனு மீதான விசாரணையை 6 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது



  • 16:17 (IST) 28 Mar 2022
    தாலிக்கு தங்கம் திட்டத்தை தமிழக அரசு நிறுத்திவிட்டது - மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

    பட்ஜெட்டில் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு தவறி விட்டது. மேலும், தாலிக்கு தங்கம் திட்டத்தையும் தமிழக அரசு நிறுத்திவிட்டது என மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்



  • 16:13 (IST) 28 Mar 2022
    நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - ஆ.ராசா

    நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். நீலகிரியில் உள்ள படுகர் சமூகத்தையும், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்



  • 16:08 (IST) 28 Mar 2022
    காஷ்மீர் மக்களின் நலனில் அக்கறை இல்லை - டெல்லி துணை முதல்வர்

    காஷ்மீர் மக்களின் நலனில் அக்கறை இல்லை. 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் மீதே பாஜகவுக்கு கவனம் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்



  • 15:45 (IST) 28 Mar 2022
    மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை -டி.கே.எஸ் இளங்கோவன்

    மத்திய பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை என நிதி மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்



  • 15:31 (IST) 28 Mar 2022
    சென்னை; பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு; பள்ளி தாளாளர், உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னை, வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர், வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 15:19 (IST) 28 Mar 2022
    உக்ரைன்- ரஷ்யா; துருக்கியில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

    உக்ரைன் ரஷ்யா இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • 14:58 (IST) 28 Mar 2022
    சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

    NSE முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு. தேசிய பங்குச்சந்தை ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:47 (IST) 28 Mar 2022
    தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 வருட ஆயுள் சிறை

    புதுக்கோட்டை மருதான்மலையில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு எந்த சலுகையும் அரசு வழங்கக் கூடாது. தவறை உணர்ந்து திருந்த சந்தோஷை 3 மாதம் தனிமை சிறையில் அடைக்க வேண்டும் என புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மது அருந்த பணம் தர மறுத்த தாய் லீலாவதியை கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.



  • 14:43 (IST) 28 Mar 2022
    பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்தார் மோடி - டி.ஆர்.பாலு

    தேர்தல் பிரசாரத்தின்போது பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி; ஆனால், கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 4 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. மத்திய அரசு செய்வது எந்த வகையிலும் நியாயமானது அல்ல என டி.ஆர்.பாலு எம்.பி குற்றச்சாட்டு.



  • 14:37 (IST) 28 Mar 2022
    ஐஐடி பாலியல் வழக்கு - விசாரணை அதிகாரி மாற்றம்

    ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் நியமனம். உதவி விசாரணை அதிகாரியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி விசித்திரா செயல்படுவார் என சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு



  • 14:10 (IST) 28 Mar 2022
    10 மாதத்தில் ரூ2200 கோடி சேமிப்பு - செந்தில்பாலாஜி

    கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 98,187 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு 6 மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.



  • 13:56 (IST) 28 Mar 2022
    மேற்குவங்க பாஜக எம்.எல்ஏ 5 பேர் சஸ்பெண்ட்

    மேற்குவங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மோதிய 5 பாஜ எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.பிர்பும் வன்முறைச் சம்பவம் தொடர்பாக விவாதிக்க கோரி பாஜக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டபோது மோதல் ஏற்பட்டது.



  • 13:50 (IST) 28 Mar 2022
    3,500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    அபுதாபியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



  • 13:35 (IST) 28 Mar 2022
    மேற்குவங்க பாஜக எம்.எல்ஏ 5 பேர் சஸ்பெண்ட்

    மேற்குவங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மோதிய 5 பாஜ எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.பிர்பும் வன்முறைச் சம்பவம் தொடர்பாக விவாதிக்க கோரி பாஜக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டபோது மோதல் ஏற்பட்டது.



  • 13:24 (IST) 28 Mar 2022
    மார்ச் 31ல் பிரதமருடன் முதல்வர் சந்திப்பு

    டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி இழப்பீடு தொகை உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1இல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் சந்திப்பார் என தெரிகிறது.



  • 13:22 (IST) 28 Mar 2022
    ரோஹித் சர்மாவுக்கு ரூ12 லட்சம் அபராதம்

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 13:10 (IST) 28 Mar 2022
    6 வீரர், வீராங்கனைகள் பிரேசில் செல்ல தமிழ்நாடு அரசு நிதியுதவி

    பிரேசிலில் நடைபெறும் காது கேட்காத மாற்றுத்திறனாளிகளுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகளுக்கு விமான கட்டணமாக தலா ரூ30 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 13:06 (IST) 28 Mar 2022
    நாளை பேருந்துகள் இயக்கப்படும் - தொழிற்சங்க கூட்டமைப்பு

    தமிழகத்தில் நாளை 60 முதல் 80 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்படும். அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



  • 12:48 (IST) 28 Mar 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    குமரி, நெல்லை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றூம் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:47 (IST) 28 Mar 2022
    35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தொடும் சென்னை

    சென்னையில் இன்று அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:13 (IST) 28 Mar 2022
    சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் வெற்றி - பி.வி. சிந்துவுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்

    சிவிஸ் ஓப்பன் பேட்மிண்டன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துகள் கூறியுள்ளார். சுவிஸ் தொடரை வென்று மீண்டும் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார் பி.வி.சிந்து என ட்வீட்



  • 11:53 (IST) 28 Mar 2022
    தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 5,195 பேருந்துகள் இயக்கம்

    தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 5,195 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 31.88% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு



  • 11:49 (IST) 28 Mar 2022
    பஞ்சாபில் வீடு தேடி ரேசன்

    பஞ்சாபில் பொதுமக்களுக்கு வீடு தேடி ரேசன் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு



  • 11:32 (IST) 28 Mar 2022
    வளசரவாக்கத்தில் 2ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

    வளசரவாக்கம் அருகே அமைந்திருக்கும் பள்ளி ஒன்றின் வளாகத்தில், ரிவர்ஸ் வந்த வேன் அங்கே நின்று கொண்டிருந்த மாணவன் மீது மோதி விபத்து ஏற்பட்டத்தில் 2ம் வகுப்பு மாணவன் சம்ப இடத்திலேயே உயிரிழப்பு.



  • 11:22 (IST) 28 Mar 2022
    பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு

    கோவா மாநிலத்தின் 14வது முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்



  • 11:08 (IST) 28 Mar 2022
    மதுரையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மின்சார சட்டத் திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து மதுரையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



  • 10:58 (IST) 28 Mar 2022
    கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

    சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர்; 2 ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு 2 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.



  • 10:51 (IST) 28 Mar 2022
    சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிவு

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 56,935 புள்ளிகளில் வர்த்தகம்; தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் குறைந்து 17,036 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.



  • 10:48 (IST) 28 Mar 2022
    நகைச்சுவை நடிகரை கன்னத்தில் அறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

    நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை ஆஸ்கர் மேடையில் அறைந்தார் வில் ஸ்மித். மனைவி ஜடா பின்கெட் ஸ்மித் தலைமுடி குறித்து கேலி செய்த நிலையில் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அவர் அறை விட்டார்.



  • 10:29 (IST) 28 Mar 2022
    மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார் எம்.பி. திருச்சி சிவா

    எரிபொருட்களின் விலையேற்றம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.



  • 10:17 (IST) 28 Mar 2022
    சிறந்த ஆவணப் படத்துக்கான விருது

    சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'சம்மர் ஆஃப் சோல்' வென்றது இந்தியாவின் 'ரைட்டிங் வித் ஃபயர்' சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது



  • 10:05 (IST) 28 Mar 2022
    ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- கொல்கத்தாவில் ஒருவர் கைது

    சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கிங்சோ தெப்சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்கத்தை சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவரை கொல்கத்தாவில் கைது செய்தது மயிலாப்பூர் தனிப்படை போலீஸ்.



  • 10:00 (IST) 28 Mar 2022
    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.38,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 09:59 (IST) 28 Mar 2022
    6 ஆஸ்கர் விருது வென்ற படம்

    அமெரிக்க திரைப்படமான DUNE 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது.



  • 09:54 (IST) 28 Mar 2022
    தாம்பரத்தில் அலை மோதும் கூட்டம்

    சென்னை தாம்பரத்தில் வழக்கமாக இயங்கும் 180 பேருந்துகளில் 4 பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.



  • 09:51 (IST) 28 Mar 2022
    மதுரையில் 40 சதவீத பேருந்துகள் இயக்கம்

    பொது வேலை நிறுத்தம் காரணமாக மதுரையில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.



  • 09:41 (IST) 28 Mar 2022
    சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான ஆஸ்கர் விருது

    சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக 'கென்னித் பிரனாக்' வென்றார்.



  • 09:28 (IST) 28 Mar 2022
    பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்-பொதுமக்கள் அவதி

    வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



  • 09:21 (IST) 28 Mar 2022
    சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: சிந்து சாம்பியன்

    சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்து இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியனானார்.



  • 09:19 (IST) 28 Mar 2022
    சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றவர்!

    சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்.

    கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.



  • 09:18 (IST) 28 Mar 2022
    ஆஸ்கர் வென்ற நடிகை

    சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை “தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்“ திரைப்படத்திற்காக “ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன்“ வென்றார்.



  • 08:57 (IST) 28 Mar 2022
    லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது

    லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'தி லாங் குட்பை' வென்றது.



  • 08:50 (IST) 28 Mar 2022
    நிதி நெருக்கடியில் சென்னை பல்கலைக்கழகம்

    தமிழக அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதியைக் கோரியது சென்னைப் பல்கலைக்கழகம். ரூ.100 கோடி நிதிப் பற்றாக்குறையால் ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நிதி நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.



  • 08:28 (IST) 28 Mar 2022
    சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர்

    சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'டிரைவ் மை கார்' வென்றது.



Tamil Nadu Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment