Advertisment

News Highlights: திமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம்- ஸ்டாலின்

Today : தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,152 ஆக உயர்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk, mk stalin conduct grama sabha meeting, mk stalin grama sabha meeting in violation of ban, கிராம சபைக் கூட்டம், திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு, police fir registered on mk stalin, தடையை மீறி கிராம சபை கூட்டம், thiruvallur, korattur, grama sabha meeting, gandhi jayanthi

Tamil News : திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ அதிமுக அரசு ஆதரித்து, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த சுதந்திரத்தின் விளைவால் பருப்பு, சமையல் எண்ணெய், உருளைக் கிழங்கு என அனைத்தும் விலையேறி விட்டன.

அதிமுக கொண்டு வரவில்லை என்றால் திமுக ஆட்சி காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்வோம். இது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு உயிரழந்ததை அடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்துறை ஒதுக்கீடு.

நாடு முழுவதும் அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வருவாயாக ரூ.1.05 லட்சம் கோடி வசூல் மத்திய நிதியமைச்சகம் தகவல்.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,113 கனஅடியில் இருந்து 6,324 கனஅடியாக குறைவு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.07 அடியாகவும், நீர் இருப்பு 63.64 டிஎம்சியாகவும் இருக்கிறது.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி நேற்று ஆலோசனை நடத்தினார் .ரஜினியின் உடல்நலம், அரசியல் சூழல், அரசியல் செயல்திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்.

தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு திமுக பொதுக் கூட்டம், நேற்று ஈரோட்டில் தொடங்கியுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்க விடமாட்டோம் என்று கூறிய எடப்பாடியின் ஆட்சியில், 11 ஆயிரம் பேர் உயிரிழந்தாக கூறியுள்ளார். நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் விரோத அதிமுக ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுவது ஏற்புடையதல்ல என்று ஸ்டாலின் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:56 (IST)02 Nov 2020

    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு - தமிழக அரசு உத்தரவு

    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    22:55 (IST)02 Nov 2020

    தமிழகத்திற்கு ரூ.116.5 கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சகம்

    தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய நிதி அமைச்சகம் ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னைக்கு ரூ.90.5 கோடியும் மதுரைக்கு ரூ.15.5 கோடியும் திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    20:40 (IST)02 Nov 2020

    சாதாரண பெண் பாஜகவில் முன்னேற முடியும் என்பதற்கு நானே சான்று - வானதி சீனிவாசன்

    பாஜகவின் மகளீர் பிரிவு தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், “33% இட ஒதுக்கீட்டை பின்பற்றும் ஒரே கட்சி பாஜகதான். எந்த ஒரு சாதாரண பெண்ணுக்கும் அரசியல் என்பது ஒரு கனவு; சாதாரண பெண்ணும் பாஜகவில் முன்னேற முடியும் என்பதற்கு நானே சான்று.” என்று தெரிவித்துள்ளார்.

    19:48 (IST)02 Nov 2020

    காலாவதியான நடிகர்கள்தான் பாஜகவில் இணைகின்றனர் - திருமாவளவன்

    செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டுவதற்கு பாஜக, சங்பரிவார் தீவிரமாக முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் பாஜகவில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களை வைத்துக்கொண்டு மிக இழிவான செயலில் சமூக வலைதளங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் குடிநீர், சாலை அடிப்படை பிரச்னைகளில் போராடாமல் மதவெறியை தூண்டும் வேளையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போக்குக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கருத்துக்கு எதிரானது. காலாவதியான நடிகர்கள் எல்லாம் பாஜகவில் இணைந்துகொண்டு 30-40 ஆண்டுகள் அரசியலில் தொண்டு செய்து வரும் தலைவர்கள் மீது அநாகரிகமாக பேசுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று கூறினார்.

    18:40 (IST)02 Nov 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா; 31 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிபால் இன்று 31 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:51 (IST)02 Nov 2020

    2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி - கமல்ஹாசன் அறிக்கை

    சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடான கலந்துரையாடலில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “கூட்டணி என்பது என் வேலை; வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி.” என்று கூறியுள்ளார்.

    17:41 (IST)02 Nov 2020

    தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை ஊழியர்களுக்கும் 10 விழுகாடு போனஸ் கருணைத் தொகை வழங்கப்படும். சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவார்கள். போனஸ் பெற தகுதியான சம்பள உச்ச வரம்பு 21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர சம்பள உச்ச வரம்பு ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,91,9775 தொழிலாளர்களுக்கு ரூ.210.48 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    17:28 (IST)02 Nov 2020

    நவம்பர் 10, 11 தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு முதல்வர் மீண்டும் சுற்றுப் பயணம்

    தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் நலத்திட்டங்களை வழங்குவதற்காகவும் நம்பவர் 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    17:17 (IST)02 Nov 2020

    பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

    நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா எனக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

    17:14 (IST)02 Nov 2020

    ஊழல் அதிகாரிகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    சென்னையைச் சேர்ந்த சூரியப் பிரகாசம் என்பவர் நேல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இது அனைத்து அதிகாரிகளுக்கும் பொருந்தாது. லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளைக் கண்டித்து இந்த கருத்தை பதிவு செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    17:07 (IST)02 Nov 2020

    கொரோனா அச்சத்தால் டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை - பி.வி.சிந்து

    இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, கொரோனா அச்சத்தால் டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனா, ஆசிய ஓபனில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    17:03 (IST)02 Nov 2020

    ஜி.எஸ்.டி. இழப்பீடாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு

    ஜி.எஸ்.டி. இழப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய, மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு 2 வது தவணையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    16:11 (IST)02 Nov 2020

    கடைந்தெடுத்த ஆணாதிக்க அரசியல் - உ.வாசுகி கருத்து

    சுயமரியாதை உள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கேரள மாநில காங். தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தனி IPCயை முன்னெடுக்கிறார். இது கடைந்தெடுத்த ஆணாதிக்க அரசியல் என்று தோழர் உ.வாசுகி தெரிவித்தார். 

     

    16:04 (IST)02 Nov 2020

    204.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

    காரீப் சந்தை காலம் 2020-21-ல், உணவு தானியங்களை அரசு தொடர்ந்து குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் குஜராத்தில் 31.10.2020 வரை, 204.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 168.87 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டடது. இந்த கொள்முதல் மூலம், சுமார் 17.23 லட்சம் விவசாயிகள்,  ரூ.38,627.46  கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்தது.  

    15:59 (IST)02 Nov 2020

    மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது

    தமிழகத்தில் நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்துச் சொல்லப்படாத கருத்துக்களைச் சொல்லியதாக திரித்து, அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்று கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.   

    14:28 (IST)02 Nov 2020

    நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

    2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து    கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்

    13:57 (IST)02 Nov 2020

    திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் - மு. க ஸ்டாலின்

    வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்க - பொருட்களின் விலையோ எகிறிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி தமிழகம் மீட்போம். இது உறுதி! என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.

    13:30 (IST)02 Nov 2020

    கமல் ஆலோசனை!

    சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஹோட்டலில், தொடங்கிய இந்த கூட்டம், இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்றைய தினம் 3 அமர்வுகளாக சுமார் 100 க்கும் மேற்பட்ட  நிர்வாகிகளை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரசார யுக்திகள்,  வரக்கூடிய நாட்களில் எந்தெந்த பணிகளை முன்னெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்பது குறித்தும் கமல்ஹாசன் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்க இருக்கிறார். 

    13:30 (IST)02 Nov 2020

    பள்ளிகள் திறப்பு!

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வரும்16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளன. 2 வார காலமே அவகாசம் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இரு துறைகளின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளுடன், இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    13:28 (IST)02 Nov 2020

    பேரணியில் ராகுல்!

    தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ஏர் கலப்பை பொருத்தி நடக்கும் பேரணியின் இறுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கிறார் .  காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

    13:27 (IST)02 Nov 2020

    சுகாதாரத் துறை தகவல்!

    தமிழகத்தில் வரும் 18-ம் தேதிக்கு முன்பாக முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தகவல் .ஓரிரு நாட்களில் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு .  

    12:26 (IST)02 Nov 2020

    VPF கட்டணம்!

    VPF கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது . தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவிப்பு. 

    11:40 (IST)02 Nov 2020

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைகோரி முறையீடு . மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒப்புதல்

    11:03 (IST)02 Nov 2020

    ரிசர்வ் வங்கி உத்தரவு!

    வட்டி சலுகைத் தொகையை நவ. 5க்குள் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

    09:58 (IST)02 Nov 2020

    ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு!

    பீகார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

    Tamil News Today : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியது. ஆனால் இம்முறை கோயிலுக்குள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இரண்டாயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் நவம்பர் 14 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    நேற்றைய முக்கிய செய்திகள்

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment