Advertisment

News Highlights: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு- 16.14 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
News Highlights: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு- 16.14 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழில் குடமுழுக்கு - நீதிமன்றம் உத்தரவு

Advertisment

தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவு

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகள் - அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து கடந்த 18 ஆண்டுகளாக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை

ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க உத்தரவு

கொரோனா மூன்றாம் அலை உருவாகக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:09 (IST) 11 Sep 2021
    10,11-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

    10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • 19:15 (IST) 11 Sep 2021
    தமிழகத்தில் மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,32,231 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35, 146 ஆக உயர்ந்துள்ளது.



  • 18:18 (IST) 11 Sep 2021
    நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம்

    நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் (செப்டம்பர் 13) தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 17:43 (IST) 11 Sep 2021
    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் தங்க நாணயம்: காஞ்சிபுரம் நகராட்சி

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் முதல் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என காஞ்சிபுரம் நகராட்சி அறிவித்துள்ளது.



  • 17:27 (IST) 11 Sep 2021
    "பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை"; தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றிகள் - எல்.முருகன்

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைத்தற்காக தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றிகள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



  • 17:15 (IST) 11 Sep 2021
    சூர்யா, ஜோதிகாவின் 15ம் ஆண்டு திருமண நாள்; ரசிகர்கள் வாழ்த்து மழை!

    நட்சத்திரத் தம்பதியான சூர்யாவும் ஜோதிகாவும், தங்கள் 15ம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு, இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.



  • 17:12 (IST) 11 Sep 2021
    பாரதியாரின் எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும் - அமித்ஷா தமிழில் டுவீட்

    நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், 'புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் & சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்! பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும்.' என பதிவிட்டுள்ளார்.



  • 16:57 (IST) 11 Sep 2021
    பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைக்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு

    மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாள் இன்று கொண்டுபட்டு வரும் நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் பேசுகையில், "பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், ‘சுப்பிரமணிய பாரதி’ பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கலைகள் புலத்தில் தமிழ்படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும். மனிதநேய ஒற்றுமை மற்றும் இந்திய ஒற்றுமையை, சுப்பிரமணிய பாரதியார் எப்போது சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். அவரது கொள்கைகள் இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.



  • 16:42 (IST) 11 Sep 2021
    ஆரணியில் அசைவ ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு எதிரொலி!

    ஆரணியில் அசைவ ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு எதிரொலிப்பாக ஆரணி மார்க்கெட் சாலையில் 12 உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இதில் 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.



  • 16:34 (IST) 11 Sep 2021
    விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் உரிழப்பு!

    திருவள்ளூர் கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவர்கள் விக்னேஷ் (13) மோனிஷ்(11) தவறி நீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்



  • 16:20 (IST) 11 Sep 2021
    136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 47 மனநல மருத்துவமனைகள் போதுமானதல்ல: நீதிமன்றம்!

    ”நாடு முழுவதும் 47 மன நல மருத்துவமனைகள் உள்ளன. 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் 47 மனநல மருத்துவமனைகள் என்பது போதுமானதல்ல. நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். மன நல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை நல ஆலோசகர்கள் அதிகளவில் பற்றாக்குறையில் உள்ளனர்.

    மனநல சுகாதார சட்டப்படி மனநல சிகிச்சை இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சாதாரண மக்களும் இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.



  • 16:17 (IST) 11 Sep 2021
    குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா

    குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.



  • 15:05 (IST) 11 Sep 2021
    மனநல சிகிச்சை திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    சிறைச்சாலைகளில் கைதிகளின் மனநல சிகிச்சைக்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரிய வழக்கில், மனநல சிகிச்சை திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 14:10 (IST) 11 Sep 2021
    காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா வரும் 15-ம் தேதி முதல் செயல்படும்

    கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா வரும் 15-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையை காஞ்சிபுரம் பெறவுள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.



  • 13:55 (IST) 11 Sep 2021
    அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினர் ஜோகோவிச்

    அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியின் அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவை எதிர்கொண்ட ஜோக்கோவிச் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்த்து ஜோக்கோவிச் இறுதி போட்டியில் விளையாட உள்ளார்.



  • 13:33 (IST) 11 Sep 2021
    வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

    வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், வடமேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 13:05 (IST) 11 Sep 2021
    சென்னை திரும்பினார் விஜயகாந்த்

    உடல் நல குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 30ம் தேதி அன்று துபாய் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார். மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் மற்றும் உதவியாளர்களுடன் துபாய் சென்ற அவர் சிகிச்சை முடிந்த நிலையில் இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.



  • 12:48 (IST) 11 Sep 2021
    பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை

    வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றூ பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.



  • 12:27 (IST) 11 Sep 2021
    தீபாவளிக்கு வெளியாகிறது மாநாடு

    நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படம் நவம்பர் மாதம் 4ம் தேதி அன்று வெளியாக உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



  • 12:25 (IST) 11 Sep 2021
    சர்தார் பவனை திறந்து வைத்தார் மோடி

    குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்ட சர்தார் பவனை காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார் பிரதமர் மோடி



  • 12:23 (IST) 11 Sep 2021
    முதல்வரை பலே பாண்டியா என்று பாராட்டிய வைரமுத்து

    பாரதியின் நினைவுநாளை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வரை பாரதி மொழியில் பலே பாண்டியா என்று பாராட்ட வேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.



  • 11:56 (IST) 11 Sep 2021
    பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு- உணவக உரிமையாளர் கைது

    ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 7 ஸ்டார் ஹோட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி கைது செய்யப்பட்டனர்.



  • 11:07 (IST) 11 Sep 2021
    அர்ச்சகர்ளுக்கு மாத ஊக்கத்தொகை திட்டம் தொடக்கம்

    அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை தரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 11:04 (IST) 11 Sep 2021
    பாரதியார் சிலைக்கு மலர் தூவி முதல்வர் மரியாதை

    பாரதியாரின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



  • 11:03 (IST) 11 Sep 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 11:01 (IST) 11 Sep 2021
    நாளை மெகா தடுப்பூசி முகாம்

    கொரோனா தடுப்பூசி முகாம்கள் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் எனவும், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்தறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.



  • 10:23 (IST) 11 Sep 2021
    சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும், 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு திகழ்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



  • 10:14 (IST) 11 Sep 2021
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா; 308 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 308 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 09:52 (IST) 11 Sep 2021
    பாரதி நினைவுதினம் - பிரதமர் தமிழில் ட்வீட்

    சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.



  • 09:43 (IST) 11 Sep 2021
    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் பலத்த காற்று வீசும் என்பதால் வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 08:37 (IST) 11 Sep 2021
    உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்

    உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமாத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.



Tamil News Live Update Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment