Advertisment

Tamil News : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

Tamil Nadu News, Tamil News Updates, IPL 2022 Latest News May 9 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamilnadu Board Exam 2023

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2023 | 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

Tamil Nadu News Updates: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்கிழமை புயல் மையம் கொள்ளும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Advertisment

ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

பெட்ரோல், விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனையாகிறது.

வீடுகளை இடிக்க எதிர்ப்பு - தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை ஆர் ஏ புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையன் உயிரிழப்பு. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கூலித் தொழிலாளி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை அணி வெற்றி

ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சேர்ப்பு. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்களை மட்டும் எடுத்து ஆல் அவுட்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:11 (IST) 09 May 2022
    இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 11ம் தேதி காலை 7 மணி வரை நீட்டிப்பு

    இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 11ம் தேதி காலை 7 மணி வரை நீட்டிப்பு, நாளை காலை 7 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு



  • 22:16 (IST) 09 May 2022
    இலங்கையில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைப்பு

    இலங்கையில் குருநாகலில் உள்ள ராஜபக்சவின் வீட்டை போராட்டக்காரர்கள் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சில ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஹம்பன்தோட்டா அருகே உள்ள வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தில், 2 பேர் பலி, 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



  • 20:07 (IST) 09 May 2022
    3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை

    3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்க்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.



  • 19:28 (IST) 09 May 2022
    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு

    12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு; நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என 3 மாணவர்கள் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 19:21 (IST) 09 May 2022
    இலங்கையில் வன்முறை... ராஜபக்ச ஆதரவாளர்கள் கார், பேருந்தை ஏரியில் தூக்கி வீசிஆவேசம்!

    இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, வன்முறை வெடித்தது. இதையடுத்து, ராஜபக்ச ஆதரவாளர்கள் பயணித்த கார், பேருந்தை ஏரியில் தூக்கி வீசி போராட்டக்காரர்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.



  • 18:21 (IST) 09 May 2022
    இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; ஆளும் கட்சி எம்.பி பலி

    இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 காய்ம் அடைந்துள்ளனர். மேலும், போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 17:59 (IST) 09 May 2022
    இலங்கை, கொழும்புவில் நடைபெறும் கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்ததாக தகவல்

    இலங்கை கொழும்புவில் நடைபெறும் கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 17:44 (IST) 09 May 2022
    இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

    இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



  • 17:04 (IST) 09 May 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதானது ஏன்? - முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

    இன்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர் சேகர்பாபு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளனர். ஜெயக்குமார் நரேஷ்குமாரை தாக்கியதால் கைது செய்யப்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.



  • 16:42 (IST) 09 May 2022
    மயிலாப்பூர் இரட்டை கொலை; பிரேத பரிசோதனை நிறைவு!

    சென்னை மயிலாப்பூரில் படுகொலை செய்யப்பட்ட தம்பதியரின் உடல் பிரேத பரிசோதனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. தற்போது அவர்களது உடலின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில், இருவரின் தலையிலும் கட்டையால் தாக்கிய காயமும், கழுத்தை கத்தியால் அறுத்த காயமும் உள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:16 (IST) 09 May 2022
    பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா!

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.



  • 15:54 (IST) 09 May 2022
    இணையதளங்கள் அதிகரிப்பதால், குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச்சு!

    இன்று பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இணையதளங்கள் அதிகரிப்பதால், குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்றும், எதிர் வரும் காலங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



  • 15:53 (IST) 09 May 2022
    இரட்டை கொலை வழக்கு - முதல்வர் விளக்கம்!

    சென்னை, மயிலாப்பூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பேரவையில் விளக்கமளித்து பேசியுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், "மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு,விசாரணை விரைவாக நடைபெற்றது. எந்தவித தாமதமும் இன்றி, குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர். புகார் பெறப்பட்ட 6 மணி நேரத்தில் வெளி மாநிலத்துக்கு தப்பிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாய கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.



  • 15:37 (IST) 09 May 2022
    இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்; நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து கொழும்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் தற்போது பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.



  • 15:36 (IST) 09 May 2022
    கொழும்பு வன்முறை; அதிபர் கோட்டபய ராஜபக்சே கண்டனம்!

    கொழும்புவில் நடந்த வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது என்று கூறியுள்ள அவர், பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், நிதானத்தை கடைப்பிடிக்கவும், நெருக்கடியை தீர்க்க ஒன்றாக வேலை செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 14:45 (IST) 09 May 2022
    ஜிப்மர் மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.ஜிப்மரில் இந்தி மொழி கட்டாயத்திற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடனும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.



  • 14:44 (IST) 09 May 2022
    போராட்டக்காரர்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல்

    இலங்கை, கொழும்புவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக காவல்துறை ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அதிபர் மாளிகை முன்பு நடைபெறும் மோதலால் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் இதில் போராட்டக்காரர்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.



  • 14:42 (IST) 09 May 2022
    கேபிள் டிவி திருத்த விதிகளுக்கும் எதிரான மனுக்களை விசாரிக்க தடை

    தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதிகளுக்கும், கேபிள் டிவி திருத்த விதிகளுக்கும் எதிரான மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 14:42 (IST) 09 May 2022
    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

    ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது" "மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளர்.



  • 13:42 (IST) 09 May 2022
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 11 முதல் 13ம் தேதி வரை வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது.



  • 13:18 (IST) 09 May 2022
    'சூப்பர்' மோப்ப நாய்க்கு, அதிபர் செலென்ஸ்கி வீர தீரபதக்கம்

    வெடிபொருட்களை கண்டறிந்து உக்ரைன் வீரர்களை காப்பற்றிய 'சூப்பர்' மோப்ப நாய்க்கு, அதிபர் செலென்ஸ்கி வீர தீரபதக்கம் வழங்கினார். உக்ரைன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்



  • 12:47 (IST) 09 May 2022
    வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும்.. ஓபிஎஸ்!

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் குடிசைப்பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும். எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!



  • 12:47 (IST) 09 May 2022
    கண்ணையா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

    சென்னை ஆர்.ஏ.புரத்தில், வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்தக் கோரி, தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 12:19 (IST) 09 May 2022
    பொறியியல் கலந்தாய்வு.. அமைச்சர் பொன்முடி தகவல்!

    ஆன்லைனுக்கு பதில், பொறியியல் மாணவர் கலந்தாய்வை 10 இடங்களில் வைத்து நடத்தலாமா என அரசு பரிசீலித்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.



  • 12:17 (IST) 09 May 2022
    திமுக பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றிய திமுக பிரமுகர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • 12:09 (IST) 09 May 2022
    வரலாற்றை அறிய தொல்லியல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது!

    அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புகள் தொல்லியல் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன. தமிழர்களின் வரலாற்றை அறிய தொல்லியல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்துகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன- முதல்வர் ஸ்டாலின்!



  • 11:40 (IST) 09 May 2022
    சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு!

    சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.



  • 11:19 (IST) 09 May 2022
    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.40-ஆக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.



  • 10:57 (IST) 09 May 2022
    ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு - மக்கள் போராட்டம்

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். நேற்று ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், தொடர்ந்து போராட்டம் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் சாலையில் அமர்ந்து உணவு சமைத்தும் போராட்டம்



  • 10:47 (IST) 09 May 2022
    இந்தி திணிப்பு; ஊசியில் ஒட்டகம் நுழையாது - வைரமுத்து

    கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம் இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம் ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும் சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.



  • 10:00 (IST) 09 May 2022
    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு என தகவல். 3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்



  • 09:48 (IST) 09 May 2022
    இந்தியாவில் மேலும் 3,207 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 3,207 பேருக்கு கொரோனா தொற்று. 29 பேர் உயிரிழப்பு.கொரோனாவில் இருந்து மேலும் 3,410 பேர் குணமடைந்தனர். கொரோனாவுக்கு 20,403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல்



  • 09:47 (IST) 09 May 2022
    இந்தி மொழியை கற்றுக் கொண்டு பேசினால் தவறில்லை - நிர்மலா சீதாராமன்

    ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி மொழியை கற்றுக் கொண்டு பேசினால் தவறில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு



  • 09:41 (IST) 09 May 2022
    தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ32 குறைந்து ரூ38,984க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ4,873க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 09:12 (IST) 09 May 2022
    பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

    சர்வதேச செஸ் தொடரில், தொடர்ச்சியாக 3வது முறையாக பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!



  • 09:12 (IST) 09 May 2022
    பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

    சர்வதேச செஸ் தொடரில், தொடர்ச்சியாக 3வது முறையாக பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!



  • 09:04 (IST) 09 May 2022
    லுஹான்ஸ்க் பள்ளி குண்டு வீச்சில் 60 பேர் பலி - செலன்ஸ்கி தகவல்

    உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லுஹான்ஸ்க் பள்ளியின் மீது நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல்



  • 08:43 (IST) 09 May 2022
    உக்ரைன் சென்ற ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் திடீரென்று உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும்; அமெரிக்க மக்கள் உக்ரைன் மக்களின் பக்கம் இருக்கிறார்கள் என ஜில் பைடன் தெரிவித்துள்ளார்.



  • 08:06 (IST) 09 May 2022
    லண்டன், அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம். ஜூன் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா செல்கிறார்.



  • 07:58 (IST) 09 May 2022
    முல்லை பெரியாறு அணையில் குழு ஆய்வு

    முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட்ட கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளனர் அணையில் கோடை காலத்தில் செய்யப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது



  • 07:52 (IST) 09 May 2022
    காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம்

    தமிழக சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் . காவல், தீயணைப்பு, உள்துறை குறித்த கேள்விகளுக்கு பதிலுரை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment