Advertisment

Tamil News: தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 31st January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Live Highlights: பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த 'புத்தகப்பை இல்லா தின' நிகழ்ச்சி ரத்து

Tamil Nadu News Updates: 2022-23ஆம் ஆண்டுக்கான படஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

Advertisment

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 88ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட நகராட்சிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

"பா.ஜ.க செய்வது மத அரசியல் தான்" - Shalin Maria | Sathish | BJP | 

சாம்பியன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால்!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால். 21 ஆம் முறையாக பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:40 (IST) 31 Jan 2022
    மத்திய அரசு அலுவலகங்கள் பிப்.15 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

    மத்திய அரசு அலுவலகங்கள் பிப்.15 வரை 50% ஊழியர்களுடன் செயல்பட உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அலுவலகம் வருவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது



  • 21:43 (IST) 31 Jan 2022
    திமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், வேலூர், தஞ்சை, நெல்லை, உள்ளிட்ட மாநகராட்சியும், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மேல்விஷாரம், சோலிங்கள் உள்ளிட்ட மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. .



  • 21:39 (IST) 31 Jan 2022
    நகர்ப்புற தேர்தலில் போட்டியிட இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல்

    நகர்ப்புற தேர்தலில் போட்டியிட இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுளளது. இதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் - 241, நகராட்சி வார்டு உறுப்பினர் - 475, பேரூராட்சி வார்டு உறுப்பினர் - 752 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளது.



  • 20:38 (IST) 31 Jan 2022
    தமிழகத்தில் மேலும் 19,280 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 22,238ஆக இருந்த நிலையில் இன்று 19,280 ஆக குறைந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 37,564 ஆக அதிகரித்துள்ளது.



  • 20:21 (IST) 31 Jan 2022
    சென்னையில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னையில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல், செங்கல்பட்டில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் பலியாகியுள்ளனர். கோவையில் மேலும் 2,456 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் உயிரிழப்பு



  • 20:19 (IST) 31 Jan 2022
    நகர்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 8 மாநகராட்சிகளுக்கான பட்டியலை வெளியிட்டது



  • 18:56 (IST) 31 Jan 2022
    ராஜமவுலியின் 'RRR' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    ராஜமவுலியின் 'RRR' திரைப்படம் மார்ச் 25ல் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.



  • 18:55 (IST) 31 Jan 2022
    கொரோனா தடுப்பூசி கட்டாயத்துக்கு எதிரான வழக்கு; தமிழக அரசு சுப்ரிம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்

    கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு சுப்ரிம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தடுப்பூசி செலுத்தாவிடில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.



  • 18:51 (IST) 31 Jan 2022
    திமுகவுடன் 7 மாவட்டங்களில் இடப் பங்கீடு இறுதி - துரை வைகோ

    சென்னையில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6-7 மாவட்டங்களில் தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ள்து. சில இடங்களில் மதிமுக முக்கிய நிர்வாகிகள் சில வார்டுகள் வேண்டும் என்று கூறுகிறார்கள். பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.



  • 18:22 (IST) 31 Jan 2022
    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று குரல் எழுப்பினோம் - டி.ஆர். பாலு

    திமுக எம்.பி. டி.ஆர் பாலு: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று குரல் எழுப்பினோம். நீட் தேர்வு பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை அனுமதிக்க கோரினோம். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்பாக நீட் பிரச்சினையை எழுப்பினோம் என்று கூறினார்.



  • 17:47 (IST) 31 Jan 2022
    பல இந்தியர்கள், பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை - ராகுல் காந்தி

    டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை அக்கம் பக்கத்தினர் தாக்கும் வீடியோ வைரலானது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். “பல இந்தியர்கள், பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை; இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:36 (IST) 31 Jan 2022
    விழுப்புரம் மாவட்டம் 7 பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



  • 17:22 (IST) 31 Jan 2022
    சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.



  • 17:20 (IST) 31 Jan 2022
    எடப்பாடி நகராட்சி தேர்தலில் 30 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி தேர்தலில் 30 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



  • 17:05 (IST) 31 Jan 2022
    ஆளுநரை ட்விட்டரில் ப்ளாக் செய்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

    மேற்கு வங்க ஆளுநரை ட்விட்டரில் ப்ளாக் செய்தார் மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி. ஆளுநர் ஜக்தீஇப் தங்காரின் ட்வீட்கள் எரிச்சலைத் தருகிறது, அமைதியைக் குலைக்கிறார் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.



  • 16:51 (IST) 31 Jan 2022
    7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 16:23 (IST) 31 Jan 2022
    அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: டெல்லி தமிழ்நாடு இல்லம் முன் பாஜகவினர் போராட்டம்

    அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கோரி டெல்லியில், பாஜக அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்



  • 16:12 (IST) 31 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நிச்சயம் போட்டியிடும் - புஸ்ஸி ஆனந்த்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நிச்சயம் போட்டியிடும். பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்



  • 16:01 (IST) 31 Jan 2022
    5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

    5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • 15:34 (IST) 31 Jan 2022
    டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி

    டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பார் டெண்டரை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 15:17 (IST) 31 Jan 2022
    நாளை பள்ளிகள் திறப்பு; 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்றும், பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும், நோய் கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது



  • 14:58 (IST) 31 Jan 2022
    10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு!

    10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடப்பட்டு உள்ளது. அதன்படி 2 கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்புக்கு பிப்.9 முதல் 6 வரை மற்றும் மார்ச் 28- ஏப்.5 வரையிலும், 10ஆம் வகுப்புக்கு பிப்.9 -15 மற்றும் மார்ச் 28 - ஏப்.4 வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.



  • 14:36 (IST) 31 Jan 2022
    பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா!

    மத்திய பிரதேச மாநிலம், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 14:35 (IST) 31 Jan 2022
    10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு!

    10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடப்பட்டு உள்ளது. அதன்படி 2 கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்புக்கு பிப்.9 முதல் 6 வரை மற்றும் மார்ச் 28- ஏப்.5 வரையிலும், 10ஆம் வகுப்புக்கு பிப்.9 -15 மற்றும் மார்ச் 28 - ஏப்.4 வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.



  • 14:19 (IST) 31 Jan 2022
    தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடபட்டது. சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



  • 14:08 (IST) 31 Jan 2022
    அதிமுக உடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும்: அண்ணாமலை!

    உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே பாஜக தனித்துப்போட்டியிட உள்ளது. மற்றபடி, அதிமுக உடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்பதால் தனித்துப்போட்டியிடுகிறோம். மத்திய அரசின் திட்டங்கள் வீடுகள் தோறும் இருப்பதால் பாஜக தனித்து களம் காண்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 14:04 (IST) 31 Jan 2022
    கூட்டணி பேச்சுவார்த்தையில் சலசலப்பு.. ஜோதிமணி வெளியேற்றம்!

    கூட்டணி பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ், திமுக இடையே சலசலப்பு ஏற்பட்டது., திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டியுள்ளார்.



  • 13:38 (IST) 31 Jan 2022
    அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிவு: தனித்துப் போட்டி என அண்ணாமலை அறிவிப்பு

    தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, பாஜக தமிழக தலைமை முடிவு எடுத்துள்ளது. தமிழக பாஜகவின் முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது என அண்ணாமலை அறிவித்துள்ளார்.



  • 13:21 (IST) 31 Jan 2022
    மாணவி உயிரிழப்பு.. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

    தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறது.



  • 13:17 (IST) 31 Jan 2022
    தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:15 (IST) 31 Jan 2022
    2022 – 23ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல்!

    2022 – 23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.



  • 12:54 (IST) 31 Jan 2022
    “டான்“ திரைப்படம் மார்ச் 25ல் தியேட்டர்களில் வெளியாகிறது

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 25ம் தேதி அன்று வெளியாகிறது. எஸ்.ஜே. சூர்யா , பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்க சி.பி. சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 12:38 (IST) 31 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனை

    சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது.



  • 12:35 (IST) 31 Jan 2022
    AK 61 latest updates

    எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் 61வது படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பிரகாஷ் ராஜ், தபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.



  • 12:16 (IST) 31 Jan 2022
    வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது

    நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர் வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று கூறி திருக்குறளை மேற்கோள்காட்டினார் ராம்நாத் கோவிந்த்



  • 12:14 (IST) 31 Jan 2022
    நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்கள்

    நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்களை உள்நாட்டிலேயே இந்தியா உற்பத்தி செய்து வருகிறது என்றும் தேஜஸ் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் குடியரசு தலைவர் கூறியுள்ளார்.



  • 12:12 (IST) 31 Jan 2022
    தஞ்சை மாணவி தற்கொலை - சி.பி.ஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

    தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:10 (IST) 31 Jan 2022
    நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது - குடியரசுத் தலைவர்

    நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் 21 புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் ராம்நாத் கோவிந்த் பட்ஜெட் துவக்க உரையில் பேச்சு



  • 11:44 (IST) 31 Jan 2022
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி - கொலீஜியம் பரிந்துரை

    செனனி உயர் நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.



  • 11:41 (IST) 31 Jan 2022
    இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - எடப்பாடி எங்கே?

    இன்று பாஜக - அதிமுக இடையேயான உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த ஊரான சேலத்திற்கு பயணமாகியுள்ளார். இடப்பங்கீடு குறித்து தற்போது சர்ச்சை நிலவி வருகிறது.



  • 11:13 (IST) 31 Jan 2022
    அனைவரையும் வரவேற்கின்றேன் - குடியரசு தலைவர்

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வரவேற்கின்றேன் என்று தன்னுடைய பட்ஜெட் கூட்டத்தொடர் உரையை துவங்கினார் குடியரசு தலைவர். 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் நேரத்தில் ராணுவ வீரர்களை நினைவு கூர்கின்றேன் என்றும் பேச்சு.



  • 10:57 (IST) 31 Jan 2022
    2022 பட்ஜெட் கூட்டத்தொடர் - பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை எம்.பி.க்கள் முன்னெடுக்க வேண்டும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • 10:51 (IST) 31 Jan 2022
    2022 பட்ஜெட் கூட்டத்தொடர் - பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை எம்.பி.க்கள் முன்னெடுக்க வேண்டும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • 10:24 (IST) 31 Jan 2022
    திமுக கூட்டணிக் கட்சி இடஒதுக்கீடு - காங்கிரஸ் இன்று ஆலோசனை

    திமுகவுடனான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சந்திக்கின்றனர். முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத்துடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.



  • 10:09 (IST) 31 Jan 2022
    தஞ்சை பள்ளி மாணவி விவகாரம் - விசாரணை துவக்கம்

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.



  • 09:09 (IST) 31 Jan 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 2.09 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 2,09,918 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது . ஒரே நாளில் 2,62,628 பேர் குணமடைந்துள்ளனர். 959 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 08:28 (IST) 31 Jan 2022
    காங்கிரஸ் முன்னாள் எம்.பி கொரோனாவால் உயிரிழப்பு

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் (84) கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்



Tamilnadu Local Body Election Budget 2022 23 Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment